ரங்கராஜ் பாண்டே – தமிழருவி மணியன் …. இன்னொரு சுவாரஸ்யமான பேட்டி….!!!


ரஜினிகாந்த் அவர்களைப்பற்றிய
பல தகவல்களை வெளியே கொண்டு வருகிறது இந்த பேட்டி…

“சில முக்கியமான விஷயங்களை சொல்லத்தவறி விட்டார்…”

என்கிற தலைப்பில் 30/05/2018 அன்று இதே தளத்தில் ரஜினியின் தூத்துக்குடி பயணத்தையொட்டி, அவர் வெளியிட்ட கருத்துகளைப்பற்றி – ஒரு இடுகை வெளிவந்தது. அதிலும், அதன் பின்னூட்டங்களிலும் பல கருத்துகள் சொல்லப்பட்டன…

சென்னை விமான நிலையத்தில் அவர் கொடுத்த 3-வது பேட்டிக்கு முன்னதாகவே,

தூத்துக்குடியில் அவர் கொடுத்த பேட்டியை வைத்தே
எழுதப்பட்டது மேற்கண்ட இடுகை. அதில் –

—–

வன்முறையாளர்களை அடையாளம் கண்டு, சட்டத்தின் முன் நிறுத்தி
தண்டிப்பதை விட்டு விட்டு, அப்பாவி மக்களின் மீது அடக்குமுறை
பாய்ந்தது அரசின் இயலாமை – முதிர்ச்சியின்மை…..

இந்த பிரச்சினையை கையாள்வதில் அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி என்பதை சுட்டிக் காட்டி இருக்க வேண்டும்….

——

– அதே போல், தூண்டுதல் என்னவாக இருந்தாலும் கூட – பொது
மக்களை குறிபார்த்து போலீஸ் சுட்டது மனிதத்தன்மையே இல்லாத
மன்னிக்கவே முடியாத ஒரு குற்றம்.

இதற்கு காரணமானவர்கள் யாராக
இருந்தாலும், எந்த பதவியில் இருப்பவராக இருந்தாலும் சரி –
அவர்களை அரசு மூடி மறைத்து பாதுகாக்காமல், அவர்கள் சட்டத்தின்
முன் நிறுத்தப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்…

——

மற்ற எல்லா அரசியல்வாதிகளையும் போல, அவரும் தூத்துக்குடி
போனபோது, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, உதவிகளைச் செய்துவிட்டு,
அரசாங்கத்தின், போலீசின் அராஜகங்களை கண்டிப்பதாகச் சொல்லி விட்டு வந்திருக்கலாம். அவர் அதைச் செய்யவில்லை.

மாறாக, தனக்கு சரியென்று தோன்றுவதை, தான் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்று தெரிந்திருந்தும் கூட – தைரியமாகச் சொல்லி இருக்கிறார்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு, தான் unpopular ஆவோம்
என்று நிச்சயமாகத் தெரிந்திருந்தும், தன் மனதுக்கு பட்ட உண்மையை தைரியமாகச் சொல்லும் ஒரு நேர்மையான மனிதராகவே நான் அவரைப் பார்க்கிறேன்..

—–

அவர் பாஜகவின் Team B தான். அவர்கள் என்ன வார்த்தைகளை பேசினார்களோ அதையே இவரும் பேசுகிறார். Direction,script, Dialogue handled by Auditor Gurumurthy.

———–

போராட்டமே கூடாது என்று சொன்னால்….?
போராடுவது மக்கள் தானே…?
அவர் வெளிட்ட ‘காலா’ பட ட்ரைலரில் போராட மக்களை கூட்ட சொல்கிறார்.
ஏன் இந்த முரண்பாடு…?

———–

ஒரே நாளில் ரஜினிக்கு எதிராக, இத்தனை தலைப்புகளில் வேண்டுமென்றே ஒரு செய்தி தளம் மூட்டி விடுவது ஏன் ? யாரிடம் பெட்டி வாங்கினார்கள் ?

—–
If Rajini enters politics he will spoil many people’s aspirations esp DMK cong and thiruma. Tamilnadu needs some change. WHY CAN”T IT BE RAJINI?

———

நமது மேற்படி இடுகை மிகவும் ஆக்கபூர்வமாகவும், அர்த்தமுள்ளதாகவும்
இருந்தது என்பதற்கான அத்தாட்சியாக இந்த பேட்டி அமைந்திருப்பதாக
நான் உணர்கிறேன்.

நாம் பேசிய பல கருத்துகளுக்கான விளக்கமும், இன்னும் பல புதிய செய்திகளையும் உள்ளடக்கியதாக இந்த “கேள்விக்கென்ன பதில்” பேட்டி அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்….

தொலைக்காட்சியில் பேட்டியை பார்க்க இயலாதவர்களுக்காக அந்த பேட்டியை கீழே பதிந்திருக்கிறேன்…

பேட்டியை முதலில் பாருங்களேன்… பிறகு பின்னூட்டங்களின் மூலம்
பேசுவோம்.

————————————————————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ரங்கராஜ் பாண்டே – தமிழருவி மணியன் …. இன்னொரு சுவாரஸ்யமான பேட்டி….!!!

 1. Pingback: ரங்கராஜ் பாண்டே – தமிழருவி மணியன் …. இன்னொரு சுவாரஸ்யமான பேட்டி….!!! – TamilBlogs

 2. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  நேர்மையான,துணிச்சலான பேச்சு.
  நிறைய எழுத விசயங்கள் மனதுக்குள் வருகிறது.ஆனால் எழுத்து வடிவில் கொண்டு வர இயலவில்லை.
  வாழ்க வளமுடன்

 3. Mani சொல்கிறார்:

  விமான நிலைய பேட்டியில், ரஜினி வேகமாகப் பேசியபோது தெறித்து வந்த
  வார்த்தைகளை வைத்துக்கொண்டு, அவரைப் பிடிக்காத, அவர் வரவினை
  பிடிக்காத , அத்தனை பேரும் அவரை தாக்க அதை ஆயுதமாக பயன்படுத்திக்
  கொண்டார்கள். தமிழருவியின் விளக்கமான பதில் வெளியானவுடன்
  வாயடைத்துப் போயிருக்கிறார்கள். தமிழருவி ரஜினிக்கு கிடைத்த ஒரு
  நல்ல பொதுஜன தொடர்பாளர்.

 4. BVS சொல்கிறார்:

  தமிழருவி கூறுவது போல, 4 அணிகளோ அதற்கு மேலுமோ போட்டியிட்டாலும் கூட, அடுத்த தேர்தலில் உண்மையான போட்டி ரஜினிக்கும், திமுகவுக்கும் இடையே தான் இருக்குமென்று தோன்றுகிறது.

 5. அறிவழகு சொல்கிறார்:

  தமிழருவி மணியன் சிறந்த‌ சிந்தனையாளர். அவரே அங்கங்கே தடுமாறுவதும் ஊகத்தையே தன்னுடைய பதிலாக தருவதும்…! ம்.

  சரி, இது நம் ஊகம்.

  பாஜகவை இன்றைய ஆட்சியாளர்களை தாக்கி பேசுவதாக காலாவில் சித்தரிக்கப்பட்டிருப்பதை அறிந்த ஏதோ ஒரு மேலிட சக்தி தலைவரை மிரட்டியிருக்குமோ…!? அதுதான் டிவிட்டரில் காலாவில் சொல்லபட்டதற்கு இயைந்து தன் கருத்தை தெரிவித்து இருந்தும் தூத்துக்குடியில் வாங்கிய பல்பை பயன்படுத்தி சென்னையில் அதற்கு எதிராக முரனாக ஆவேசப்பட்டாரோ…!

  போராட்டம் என்பது புனித போராட்டம் என்று சொன்ன ரஜினியை தூத்துக்குடி சென்று வந்து போராட்டம் தமிழகத்தை சுடுகாடாக்கிவிடும் என்று சொல்லவைத்தது எது. இடையில் என்ன நடந்தது.

  கடவுளுக்கே வெளிச்சம்.

  எது எப்படியோ முன்னுக்கு பின் முரண் தொடர்கிறது.

  ஆமாம், தமிழருவி மணியன் எப்போது இன்னும் தொடங்கப்படாத கட்சியின் கொ.ப.செ.வானார்.

  அப்படி அவர் ஆகியிருந்து, தமிழருவி மணியன் மாதிரியானவர்களை ரஜினி அதிகம் கண்டரிந்து அவர்களை தன் அருகில் சேர்த்துக்கொண்டு கொலைகார கூட்டத்திடமிருந்தும் அதன் ஆலோசகர்களிடமிருந்தும் தான் முற்றிலும் விலகியிருக்கிறேன் என்று ஆனித்தரமாக‌ நாட்டு மக்களுக்கு அறிவித்தால் நமக்கென்ன வந்தது.

  மேலும், வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாலும் ஒன்னும் ஆகப்போவதில்லை என்ற புரிதலும் அவருக்கு வேணும்.

  அதற்கு இந்த மாதிரி ஒரு பேட்டியை நேர்காணலை ரஜினி கொடுக்க வேணும்.
  அப்போது தான் ரஜினிக்காக ரஜினி பேசுவதை கேட்க முடியும்.

 6. அறிவழகு சொல்கிறார்:

  காலா படம் குறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தன் கருத்தை முக நூலில் தெரிவித்துள்ளார்.

  அதில் அவர்,

  /// ரஜினியை அவர் மாஸ் ஹீரோ என்றோ, சூப்பர் ஸ்டார் என்றோ பார்க்காமல்…தான் எழுதிய கதைக்கான ஒரு ஹீரோ என்று மட்டுமே கையான்டிருக்கிறார்.

  அதைப் புரிந்தும், உணர்ந்தும் அதற்கு ஒப்பி ரஜினி நடித்திருப்பதால்…ரஞ்சித் சொல்லும் வர்க்க பிரச்சனை, அதிகாரத் திமிர், தொடர்பான கருத்துகளுக்கும், தீர்வுகளுக்கும் அவரும் உடன் படுகிறார் என்று தானே அர்த்தம் கொள்ள வேண்டும்?

  நிஜத்தில் தொட்டதற்கெல்லாம் போராடக் கூடாது என்றவர் படத்தில் போராட்டத்தைத் தான் தீர்வாக முழக்கமிடுகிறார். பிரச்சனைகளுக்கு நீதி மன்றங்களை அணுகி தீர்வு காண வேண்டும் என்று பேசியவர் படத்தில் வன்முறைத் தீர்வையே பேசுகிறார். காவல்துறையினரை பொது மக்கள் அடிப்பதை ஏற்க மாட்டேன் என்பவரின் படத்தில் காவல்துறையினர் தாக்கப்படுகின்றார்கள்.

  இப்படியான முரண்கள் காரணமாக…ரஜினி இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார், அந்தக் காட்சிகளில் அவருக்கு உடன்பாடில்லை, அது பாத்திரம் பேசுவது என்று நாம் சமாதானப் படுத்திக் கொண்டோமென்றால்…ஏழைகளுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அவர் பேசும் போதெல்லாம் இதுவும் பாத்திரம் தானே என்று நினைத்துக் கொள்ள வேண்டுமா என்று குழப்பம் ஏற்படுகிறது. ///

  என்று அருமையாக அலசியிருக்கறார்.

  அதில் நான் இட்டுள்ள கடைசி பத்தியில் சொல்லி யிருப்பது தான் highlights.

  ஆக,

  தூத்துக்குடிக்கு முன்பு, பின்பு ரஜினியின் முரணான பேச்சுக்களுக்கு இடையில் என்ன நடந்தது என்பதை அவர் தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

  இல்லை, அது தான் அவரின் இயல்பாக இருக்கும் என்றால்… தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்…வர்க்க பிரச்சனைகளை மக்களின் அன்றாட அத்தியாவசிய பிரச்சனைகளின் பக்கம் நிற்க தான் தயாரில்லை, Corporate-களின் பக்கம் தான்…என்று. அப்படி எதாவது பேசினாலும் உடனே மாற்றிக் கொள்வேன் என்று.

  நல்ல தலைமை, மாற்றம் கொண்டு வரப் போகின்ற தலைமை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s