சொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …


..

“பிபிசி செய்தியில் வெளிவந்திருக்கும் ஒரு மானக்கேடான செய்தி ”

நேற்று காலையில் வெளியான இடுகை குறித்து சில நண்பர்கள்
தனிப்பட்ட முறையில் எனக்கு எழுதி இருக்கிறார்கள்… புள்ளி விவரங்களை
இந்த அளவிற்கு திரித்து அரசாங்கம் விளம்பரம் செய்யுமா..?
என்று பலத்த சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்கள்…

40 ஆண்டுகள் மத்திய அரசுப் பணியில் குடித்தனம் நடத்தியவன்
என்கிற முறையில், அரசில், போலியான புள்ளி விவரங்களை தயாரிப்பது எப்படி என்கிற வித்தைகள் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். பாஜக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு இந்த வித்தை பலமடங்கு பலப்படுத்தப்பட்டு, புதிய யுக்திகள் வேறு புகுத்தப்பட்டுள்ளன.

இந்த விளம்பரங்கள், புள்ளி விவரங்கள் பொய் சொல்லாது என்று நம்பும், அந்த நண்பர்களுக்காகவும், அவர்களைப் போன்றே பல போலியான விளம்பரங்களை உண்மையென்று நம்பும் மற்ற நண்பர்களுக்காகவும் –

BBC செய்தியில் வெளிவந்திருக்கும் ஒரு தகவலை இங்கே பதிவு
செய்கிறேன்…. ” மின்னுவதெல்லாம் பொன்னல்ல “…. செய்யப்படும்
விளம்பரங்கள் அனைத்தும் உண்மையாகி விடாது என்பதை இத்தகைய
செய்திகளின் மூலம் உணரலாம்.

—————————————————————————-
https://www.bbc.com/tamil/global-42068449

மோதியின் சொந்த கிராமத்திற்கு சென்றடையாத “தூய்மை இந்தியா” திட்டம்

பிரியங்கா துபே
பிபிசி செய்தியாளர்
23 நவம்பர் 2017

குஜராத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த நகரமான வாட்நகரை அடைந்தபோது, இந்திய அரசு தன்னுடைய லட்சிய திட்டமாக செயல்படுத்துகின்ற ‘ஸ்வச் பாரத் அபியான்’ அல்லது “தூய்மை இந்தியா”
திட்டத்தின் செயல்பாடு மந்தமாக இருப்பதை உணர முடிந்தது.

..

..

மெக்சனா மாவட்டத்திலுள்ள வாட்நகர் நகராட்சியில்தான், பிரதமர் நரேந்திர மோடி பிறந்து, தன்னுடைய வாழ்க்கையின் தொடக்க நாட்களை கழித்தார்.

பிரதமரின் சொந்த கிராமமாக இருப்பதால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாக வளர்க்கப்பட்டு வருகிறது.

வாட்நகரில் தலித்துக்கள் வாழும் ரோஹித் வாஸ் என்ற இடத்திற்கு பிபிசி செய்தியாளர் சென்றபோது, “நீங்கள் வாட்நகர் வைஃபை மண்டலத்தில் நுழைந்துள்ளீர்கள்” என்ற செய்தி அவருடைய திறன்பேசியில் காட்டியது.

அரசால் அளிக்கப்படும் பொது வைஃபை வசதி சிறப்பாகவே வேலை செய்தது. ஆனால், பக்கத்திலுள்ள கழிவறைப்பற்றி அவர் கேட்டபோது,

திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு பயன்படுத்தும் அருகிலிருந்த மைதானத்தை உள்ளூர்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

..

..
சுமன், ஹெட்வி, மோனிகா, பிஸ்வா, அன்கிதா மற்றும் நேஹா ஆகியோர் வாட்நகரின் ரோகித் வாஸ் மோஹால்லாவைச் சேர்ந்த பள்ளி செல்லும் மாணவிகள்.

அவர்களிடம் கழிவறை வசதிகள் பற்றி கேட்டபோது, இந்த மாணவிகள், தினமும் காலையில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் மைதானத்திற்கு பிபிசி செய்தியாளரை அழைத்து சென்றனர்.

வாட்நகரிலுள்ள ரோஹித் வாஸில் சாக்கடைகள் எல்லாம் திறந்தே
காணப்படுகின்றன என்கிறார் 30 வயதான தான்ஷா பென்.

..

..

“சிறிய குழந்தைகளும், இளம் பெண்களும் மைதானத்திற்கு சென்று
திறந்தவெளியில்தான் மலம் கழிக்க வேண்டும். எங்களுக்கு வாழ்வதற்கு
வீடு இல்லை. எங்களுக்கு யாரும் வீடுகள் வழங்கவில்லை.

கழிவறைகள் பற்றியும் யாரும் கேட்பதில்லை. தினமும் நாங்கள்
திறந்தவெளியில்தான் மலம் கழித்து வருகின்றோம்” என்று அவர் மேலும்
கூறினார்.

தான்ஷா பென்னுக்கு அடுத்தாக வாட்நகரவாசியும், இல்லத்தரசியுமான நிர்மலா பென் வாழ்ந்து வருகிறார்.

வாட்நகரவாசிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை மோதி அரசாங்கம்
நிறைவேற்றவில்லை என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

“எங்களுடைய வீடுகள் கூரையுடனும், நல்ல கழிவறையுடனும் இருக்கும் என்று எங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், எங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

..

..

அக்டோபர் 8ஆம் தேதி வாட்நகருக்கு பிரதமர் வந்ததை பற்றி குறிப்பிடுகையில், அவர், “தற்போது தேர்தல் வருவதால், அவர்களுக்கு எங்களையும் பழைய சொந்த கிரமமான வாட்நகரும் நினைவுக்கு வந்துள்ளது. ஆனால், இத்தனை ஆண்டுகளாக எங்களுடைய பிரச்சனைகளை கேட்க யாரும் வரவில்லை. எங்களுக்கு யாரும் செவிமடுக்கவும் இல்லை.

வாட்நகரவாசிகளின் கூற்றுப்படி, சுமார் 30 ஆயிரம் மக்கள் தொகை உள்ள இந்த நகரில் 500 வீடுகளில் கழிவறை வசதி இல்லை.

இந்த 500 வீடுகளும் ரோஹித் வாஸ், ஓட் வாஸ், போய்வாஸ், தாக்குர் வாஸ் மற்றும் தேவிபூஜாக் வாஸ் உள்பட பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் தலித் மெஹல்லாஸ் பிரிவினருக்கு சொந்தமானவை ஆகும்.

திறந்த சாக்கடை, அடைபட்ட வடிகால்கள் மற்றும் உடைந்த சாலைகளுக்கு நடுவில், பிபிசி செய்தியாளர் நடந்து, ரோஹித் வாஸின் குறுகலான சந்துகளில் முன்னேறி சென்றபோது, ஓர் அறையுடைய தங்களுடைய வீடுகளுக்கு முன்னால், பெண்கள் துணிகளை துவைத்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

..

..

நவீன மருத்துவ மற்றும் தொழிற்நுட்ப வசதிகளோடு, வாட்நகரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாக வளர்ப்பதற்காக ரூபாய் 550 கோடி நிதி வழங்கப்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
(REPEAT – தெரிவித்திருக்கிறது …!!! )

இந்த நிதியில்தான், ரூபாய் 450 கோடியில் வாட்நகரில் பல்சிறப்பு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியை கட்டியமைப்பதற்கான லட்சிய திட்டமும் உள்ளடங்குகிறது.

இந்த அறிவிப்புக்கள் எல்லாம் –

சிவப்பு தகர டப்பாவில் தண்ணீரை
கொண்டு சென்று, தினமும்
காலையில் திறந்தவெளியில்
மலம் கழிக்கும் 70 வயதான
மணி பென்னின் வாழ்க்கையில்
எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை.

ரோஹித் வாஸ் மொஹல்லாவில் ஆண்களுக்கும்,
பெண்களுக்கும் என்று மலம் கழிப்பதற்காக இருக்கும்
இரண்டு திறந்தவெளி மைதானங்கள்,

‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் ஊரக இந்தியாவில்
கழிவறைகளை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதி,
பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த கிராமத்தை
சென்றடையவில்லை என்பதற்கான தெளிவாக
சாட்சியமாக உள்ளது.

..

..

அட்கி பென், லக்ஷ்மி பென் மற்றும் அமி பென் ஆகிய மொஹல்லாவின் மூத்த பெண்களின் குழு மணி பென் அருகிலேயே நிற்கிறது.

வாட்நகர் பற்றி ஊடகங்கள் வெளியிட்டுள்ள திகைப்பூட்டும் அரசாங்கத்
திட்டங்கள் பற்றிய எந்தவொரு தகவல்களும் இவர்களுக்கு தெரியவில்லை.

இந்த பெண்கள் தங்களுடைய வீடுகளில்,
காங்கிரீட்டால் கட்டப்பட்டு
செயல்படும் கழிவறைக்காக
இன்னும் காத்திருக்கின்றனர்.

அவர்களின் மண்ணின் மைந்தரான இந்திய பிரதமர் நரோந்திர மோடிக்கு என்ன செய்தி வழங்க எண்ணுகிறீர்கள் என்று ரோஹித் வாஸ் மெஹல்லா பெண்களிடம் பிபிசி செய்தியாளர் கேட்டபோது, எல்லோரும் –

கழிவறை
கட்டித்தர வேண்டும்
என்று கோரினர்.

பிபிசி செய்தியாளர் புறப்பட தயாரானபோது, அவரை நெருங்கி வந்த லக்ஷமி பென், திறந்தவெளியில் மலம் கழிக்க செல்வது என்பது பெண்களை அவமதிப்பதும், அவமானப்படுத்துவதும் ஆகும்.(என்றார்…? )

..

..

பின் குறிப்பு – 10 நிமிடம் முன்பு டெல்லி ஆங்கில தொலைக்காட்சிகளில்
செய்தி பார்த்தேன்….

யோகா தினத்தை முன்னிட்டு, டேராடூனில் பிரதமர் – 40,000 பேர் கொண்ட குழுவுடன் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்று ஒரு சேனலும்,

50,000 பேர் கொண்ட குழுவுடன் என்று இன்னொரு சேனலும்,

60,000 பேர் கொண்ட குழுவுடன் என்று மூன்றாவது சேனலும்

– கூறிக்கொண்டிருக்கிறது… புள்ளி விவரங்களைப்பற்றி சந்தேகப்படும் நண்பர்கள், இப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த செய்திகளைப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

——————————————————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to சொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …

 1. Pingback: சொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் … – TamilBlogs

 2. புதியவன் சொல்கிறார்:

  புள்ளிவிவரங்களுக்காக கட்டப்படுகிற கழிவறைகள் எந்த நிலைல இருக்கும்னு தெரியலை. ஒரு குறிப்பிட்ட கிராமம் என்று எடுத்துக்கொள்ளாமல் (உதாரணம், இவர் பிறந்த மண்ணிலேயே.. என்று சொல்ல நம் நாட்டில் ஆயிரக்கணக்கான கிராமங்கள், நகரங்கள் இருக்கின்றன. ஒருவேளை இந்தக் கிராமத்தில் கட்டியிருந்தால், பிபிசி நிருபர், பிரதமர் வாழ்ந்த அல்லது கல்வி பயின்ற ஏதாவது ஊரை எடுத்துக்கொண்டு, ‘இவர் வாழ்ந்த ஊரிலேயே’ கழிவறைகள் கட்டப்படவில்லை என்று சொல்லலாம்.

  இப்படி ரிப்போர்ட் செய்வதைவிட, அரசிடம் எத்தனை கழிவறைகள், எந்த எந்த மாவட்டங்களில் கட்டப்பட்டிருக்கு என்ற புள்ளிவிவரத்தை வாங்கி, அதில் 10 கிராமங்களை ரேண்டமாக செக் செய்து ரிப்போர்ட் செய்தால் சரியான நிலவரம் தெரியவரும் (கட்டடம் மோசமாக இருக்கு, அல்லது கட்டினமாதிரி பேர் பண்ணியிருக்கிறார்கள் என்பது போன்று)

  //ஆனால், இத்தனை ஆண்டுகளாக எங்களுடைய பிரச்சனைகளை கேட்க யாரும் வரவில்லை. எங்களுக்கு யாரும் செவிமடுக்கவும் இல்லை.//

  இத்தனை ஆண்டுகளாக இவங்கள்லாம் தேர்தலின்போது வாக்களித்தார்களா இல்லையா? பிரச்சனையை யாரும் கேட்க வராதபோது வாக்களிக்கக் காரணம் என்ன? (எதுக்கு எழுதறேன்னா, இதைத்தான் எந்த ஊரிலும், எந்தக் கிராம மக்களும் சொல்றாங்க, இந்தியா முழுவதும்)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   உங்கள் பின்னூட்டம் இடுகைக்கு நியாயம் சேர்க்கிறது என்று எண்ணுகிறீர்களா…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Mani சொல்கிறார்:

  புதியவன்,

 4. Mani சொல்கிறார்:

  புதியவன்,

  கே.எம்.சார் சொன்ன குற்றத்தை பற்றி தொடாமலே,
  பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்த மத்திய அரசை பற்றி
  குறை சொல்லாமலே, உலக வங்கிக்கு தண்ட வட்டி கட்டுவதைப் பற்றியும்
  பேசாமலே, பிபிசி வேறு எப்படி ரிப்போர்ட் கொடுத்திருக்கலாம் என்று ஆலோசனை
  கொடுக்கிறீர்களே; மக்கள் இவர்களுக்கு ஏன் ஓட்டு போட்டார்கள் என்று அவர்களையே குற்றம் சாட்டுகிறீர்கள்.
  திறந்தவெளியில் மலஜலம் கழிக்கவா யாராவது ஓட்டு போடுவார்கள் ? உங்களைப்போன்ற சாமர்த்தியசாலிகளால் தான் மக்கள்
  முட்டாளாக்கப்பட்டு இவவ்ர்களுக்கு ஓட்டு போட்டார்கள். எவ்வளவு சாமர்த்தியமாக பாஜகவுக்கு ஆதரவாக உழைக்கிறீர்கள் ?

 5. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  தலைப்பு :
  கடன்களை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிய நாடு இந்தியா …

  என்ற விமர்சனத்தை சுக்குநூறாக்கிய
  அரசு நரேந்திர மோடியின் அரசு,

  நமது நாட்டில் முதன் முறையாக கடனை வாங்காமல்
  நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த அரசு
  எதுவெனக் கேட்டால்

  டக்கென அனைவரும் பதில் சொல்ல முடியும் அது திரு.மோடி அரசு என்று.

  நமது நாட்டில் இது எப்படி சாத்தியம் ஆயிற்று?

  உங்களுக்கு நான் கொடுக்கும் தகவல் உண்மையானது.
  நீங்களும் இணையத்தில் தேடி இந்த தகவல்களை ஊர்ஜித படுத்திக்கொள்ளலாம்… … …

  இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தேங்கி இருக்கும் இந்திய மக்களின் கருப்பு பணத்தை மீட்க,
  நடவடிக்கைகள் எடுக்க,

  ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு (Special Investigation Team ) உச்ச நீதிமன்றம் 2011 லேயே உத்தரவிட்டது.

  அந்த உத்தரவை செயல்படுத்தாமல் இன்று நேர்மையாளர்களை போல பேசும் மன்மோகன் சிங்கும்,
  சிதம்பரமும் 2014 வரை கிடப்பில் போட்டார்கள்.

  ஆனால்,
  திரு மோடி அவர்கள் பிரதமரான பிறகு போட்ட முதல் கையெழுத்து இதுதான்… …
  ஆமாம் ,
  மோடி அரசுதான் ஒரு சிறப்பு விசாரணை குழுவை (SIT) அமைத்தது … … …

  இதற்கு பிறகு படிப்படியாக
  கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் தகவல்களை சேகரித்து வந்தது.

  பிறகு 2016ல், தாமாக முன்வந்து வரி பாக்கியை செலுத்துங்கள், வெறும் அபராதம் மட்டும் விதித்து விட்டுவிடுகிறோம், நாங்களாக பிடித்தால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்று எச்சரித்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார் மோடி.

  அதன் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்கு தாமாக முன்வந்து வரி காட்டினார் பல பணக்காரர்கள்.
  அதன் அடிப்படையில் இந்திய அரசுக்கு ரூ. 73,920 கோடிகள் வரி கிடைத்தது.

  அதாவது ,
  அவ்வளவு கருப்பு பணம் அழிக்க பட்டது.

  ஆனாலும்,
  வாய்ப்பு கொடுத்தும் பலர் திருந்தவில்லை.
  ஆகையால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக demonetization பாய்ந்தது. இதனால் வங்கிகளுக்கு வராத பணம் என்னவோ 16,000 கோடிகள் தான்.
  நமது நாட்டின் பெரும் பகுதி 80% சதவீதப் பணம் சுமார் 6.5 கோடி பேர்களிடம்
  அதாவது 5% சதவீதப் பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது.

  அந்த கருப்பு பணக்காரர்களுக்கு
  பல கோடி மக்களும்
  டி மானிட்டேசன் காலத்தில் எப்படியெல்லாம் அவர்களுக்கு உதவினார்கள் என்பதையும் தேசத்தை நேசிப்பவர்கள் அறிவார்கள்.

  அந்த வாய்ப்பை பயன்படுத்தியத
  மக்களும், அரசும் வேடிக்கை தான் பார்க்க முடிந்ததே தவிர
  வேறொன்றும் அப்போது செய்ய இயலவில்லை.

  இதற்கு கேள்வி எழுப்பினாலும்
  உண்மை இதுதான் என்பதற்கு வெட்கம் இல்லாமல் நாம் ஒத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.

  இருப்பினும்,
  கை கட்டி வேடிக்கைப் பார்க்காமல்
  மோடியின் அரசு அடுத்த அடுத்த நடவடிக்கைகளை எடுத்தது.

  அவையாவன என்பதை பார்ப்போம் நண்பர்களே!

  ஏதோ 16,000 கோடிகள் மட்டுமே கருப்பு பணம் அழிக்கப்பட்டதாக பரப்பப்படும் விஷயம் ஒரு பெரும் பொய்…

  பணம் வங்கிகளுக்கு வந்துவிட்டாலே அது வெள்ளை பணமாக மாறிவிட்டது என்கிற தகவல் மிகவும் தவறானது. ஏனென்றால் ,
  அந்த பணத்திற்கு அதின் சொந்தக்காரர் கணக்கு காண்பிக்க வேண்டும்.

  இந்திய மக்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கு பெரிய லாபம் கிடைக்க துவங்கி உள்ளது. ஆமாம்.

  Demonetization க்கு பிறகு செய்யப்பட
  Raidகளினால் கிட்டத்தட்ட மட்டுமே ரூ.25,000 ஆயிரம் கோடிகள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.

  மொத்தம் பிரதமர் மோடியின் முதல் மூன்றாண்டுகளில்,
  ரூ. 1 லட்சத்து37 ஆயிரம் கோடிகள் வருமானவரித்துறை raid மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது…

  இப்பொழுது இந்த Demonetization மூலம் , கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கு மேல் போலி நிறுவனங்கள் (shell companies) கண்டுபிடிக்கப்பட்டன. இது ஏழைகளின் நிறுவனங்கள் இல்லை.

  பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் நிறுவனங்கள்
  அவை அனைத்தையும் தடை செய்து, அதின் முதலாளிகளை மற்ற நிறுவனங்களுக்கு தலைமை தாங்க தடை செய்தது.

  அதில் சில முக்கியமான புள்ளிகள் சசிகலா, முன்னாள் காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி போன்றவர்கள். இப்பொழுது இந்த நிறுவனங்கள் டெபாசிட் செய்யப்பட தொகை
  ரூ. 37,500 கோடிகள்….

  இந்த பணத்தை உரிமை கோரி இதுவரை யாரும் வரவேயில்லை.
  ஆகையால் ,
  இந்த பணமும் இப்பொழுது அரசாங்கத்துக்கு போகிறது.

  இதை தவிர, மேலும் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் கோடிகளுக்கு ஒழுங்காக கணக்கு காண்பிக்கவில்லை. அதற்கும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

  இதுவும் அரசாங்கத்திற்கு வரப்போகும் பணம். ஆனால் இதுவரை பிரதமர் மோடியால் மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு என்று பார்க்கலாம்.

  1,37,000 கோடிகள் (ரெய்டுகள் மூலம்) + 16,000 கோடிகள் (வங்கிக்கு வராத பணம்) + 73,920 கோடிகள் (Voluntary disclosure ) + 37,500 கோடிகள் – மொத்தம் 2,64,020 கோடிகள்.

  மேலும் 3 லட்சம் கோடிகள் இதில் சேர வாய்ப்புள்ளது.

  இதை தவிர, ஆதாருடன் மானியங்களுடன் இணைத்ததில் அரசாங்கம் சேமித்த பணம் (இடைத்தரகர்கள் வாங்கும் கமிஷன்களை தவிர்த்ததனால்) 85,000 கோடிகள்.

  Give it Up
  என்று திரு .மோடி மக்களிடம் ஒரே ஒரு
  வேண்டுகோளுக்கு
  மக்கள் கேஸ் மானியம் வேண்டாம் என்று மனமுவந்து விட்டுக் கொடுத்தது
  வருடத்திற்கு 65 ஆயிரம் கோடிகள்.

  அடுத்து ரேசன் கடைகள் மூலம் மக்களின் வரிப்பணம் கொள்ளைப்போவதை தடுக்க
  அத்தனை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
  அதன் மூலம் மட்டுமே வருடம் ஒரு லட்சத்து முப்பத்து எட்டாயிரம் கோடிகள் வரும் நாட்களில் சேமிக்க முடியும்.

  பதுக்கல்காரர்களின் பிடியில் இருந்து ரேசன் கடைகள் மீட்கப்படும்.

  Make in India மூலம், வெளிநாடுகளிலிருந்து இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் இறக்குமதியை குறைத்து, உள்ளூரில் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தியதான் சேமித்த பணம் 1 லட்சம் கோடிகள்.

  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

  இதெல்லாம் யார் பணம்?

  நம்முடைய பணம்.
  இந்த பணமெல்லாம் இப்பொழுது எங்கே என்று கேட்கலாம். எந்த அரசும் நேரடியாக பணத்தை கொடுத்து மக்களை சோம்பேறியாக்காது.

  மாறாக ,
  தொழில் முதலீடுகள், உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை உண்டாக்கும். அப்படி செய்ததால்தான் இந்த முத்ரா திட்டத்தின் கீழ் பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிகிறது.
  இதுவரை முத்ரா திட்டத்தின் மூலம் 13 கோடி பேர்கள் கடன் பெற்று தொழில் துடங்கி உள்ளனர்.

  இதன் மூலம் 13 கோடி x 2 பேர்களுக்கு வேலை என்றால்
  நான்கு ஆண்டுகளில் இதன் மூலம் மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றவர்களின் எண்ணிக்கை 26 கோடி பேர்கள்.

  இன்னும் பல இடங்களில் புதிய சாலைகள் அமைப்பது,
  மின்சார வசதி ஏற்படுத்தி தருவது போன்ற விஷயங்களை செய்ய முடிகிறது. இந்திய அரசு ஏற்கனவே பற்றாக்குறை பட்ஜெட் மட்டுமே போட்டுக் கொண்டிருந்தது.

  மோடி வந்த பொழுது பட்ஜெட்டில் இருந்த பற்றாக்குறை 4.5 % ஆக இருந்தது.அது இப்பொழுது 3.3 % ஆக குறைந்திருக்கிறது.

  இதனால் நமக்கென்ன நன்மை?

  இந்திய அரசாங்கம் மேலும் கடன் வாங்குவது, ரூபாய் நோட்டடிப்பது குறையும். இதனால் விலைவாசியும் உயராது.

  காங்கிரஸ் அரசின் கீழ் லட்சம் கோடிகள் ஊழல்களைத்தான் கேள்விப்பட்டு இருக்கிறோம், இப்பொழுது லட்சக்கணக்கான கோடிகள் மக்கள் பணம் மிச்சமாவதை பார்க்கிறோம். இதற்கு பெயர்தான் நல்ல நிர்வாகம் மக்களே.

  இதன் பலன் உங்களுக்கு தெரிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.

  ஆனால் ,
  நம் தேசம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி.
  ஊடகங்களின் போலி செய்திகளையும், மீம்ஸ் பக்கங்களையும் நம்பி உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள்.

  உண்மைகளை விவரமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
  உங்களுக்கு உண்மையாகவே இந்தியாவின் மீது அக்கறை இருந்தால் இதை சாமானியருக்கு புரியவையுங்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   அஜீஸ்,

   இதே மெஸ்ஸேஜ் எனக்கு ஏற்கெனவே இரண்டு வெவ்வேறு நண்பர்கள் மூலம் வந்திருந்தது.

   2014-ல் பாஜக வேறு மாதிரி பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தது. “குஜராத் மாடல்” என்று ஒன்றை முன்வைத்து, உலகத்தில் இல்லாத அத்தனை வளங்களையும் மோடிஜியின் ஆட்சியில் குஜராத் பெற்று விட்டது போலும்,
   அவர் டெல்லிக்கு வந்து விட்டால், அகில இந்தியாவும் அதே வளங்களையும், வளர்ச்சியையும்
   பெற்று விடும் என்றும் தீவிர டிஜிடல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. நம்மில் பலரும் அதை நம்பினார்கள்.

   உண்மையில் குஜராத் எப்படி என்று இப்போது எல்லாருக்கும் புரிந்து விட்டது. 12 வருடங்கள் முதலமைச்சராகவும்,
   4 வருடங்கள் பிரதமராகவும் உள்ள ஒருவரின் பிறந்து வளர்ந்த ஊரின் லட்சணம் மேலே சந்தி சிரிக்கிறது.

   இந்த தடவை பாஜக வேறு மாதிரி பிரச்சாரத்தை தூண்டி விட்டிருக்கிறது…. மேலே நீங்கள் பதிந்திருப்பது அவற்றில் ஒன்று…!!!

   இன்னும் ஒரு வருடம் இருக்கிறதே… இந்த மாதிரி இன்னும் பல செய்திகளை எதிர்பார்க்கலாம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  மேலே இருக்கும் செய்தி உண்மைதானா என்று கூகுள் செய்து பார்த்தபோது கிடைத்த பதில்தான் இந்த லிங்க்.

  https://www.altnews.in/world-bank-loans-india-2017-2017-modi/

 7. அறிவழகு சொல்கிறார்:

  சார் நீங்க ரொம்ப அவசரப் படுறீங்க.

  இப்ப தான BBCயில் செய்தி வந்திருக்கு. நாங்க அத சரி பண்ண அடுத்த முறையும் 2019 தேர்தல்லயும் எங்கள கொண்டு வாங்க. அதுக்குப் பிறகு கேளுங்க செஞ்சோமா இல்லயா என்று.

  60 வருஷம் காங்கிரஸ் என்ன கிழித்தது. பெருசா கேட்க வந்தீட்டீங்க.

  எங்களுக்கும் ஒரு 60 வருஷம் கொடுங்க.

  காங்கிரஸ விட நாங்க இந்த நாட்டை நாசமாக்குறோமா இல்லையா என்று பாத்துட்டு அப்ப கேளுங்க.

  சும்மா எல்லாத்திற்கும் குறை பட்டுக்கிட்டு .

  என்ன புதியவன்…!?

  நான் கேக்கறது சரி தானே…!

  • அறிவழகு சொல்கிறார்:

   //நவீன மருத்துவ மற்றும் தொழிற்நுட்ப வசதிகளோடு, வாட்நகரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாக வளர்ப்பதற்காக ரூபாய் 550 கோடி நிதி வழங்கப்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
   (REPEAT – தெரிவித்திருக்கிறது …!!! )

   இந்த நிதியில்தான், ரூபாய் 450 கோடியில் வாட்நகரில் பல்சிறப்பு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியை கட்டியமைப்பதற்கான லட்சிய திட்டமும் உள்ளடங்குகிறது.//

   அப்ப ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போனது.

   உஸ்ஸ்ஸ்ஸ………..!

   நானும் துன்ன மாட்டேன். (என் கட்சி அல்லாத) வேறு யாரையும் துன்ன உடமாட்டேன்.

   என்ன பிரிஞ்சிதா…!?

 8. Selvarajan சொல்கிறார்:

  // மோதியின் சொந்த கிராமத்திற்கு சென்றடையாத “தூய்மை இந்தியா” திட்டம் // https://www.bbc.com/tamil/global-42068449

 9. அறிவழகு சொல்கிறார்:

  /// 1) பணமதிப்பு நீக்கத்துக்கு பின் குஜராத்தின் 11 வங்கிகளில் 5 நாட்களில் ரூ.3,118 கோடி செல்லாத ரூபாய் டெபாசிட் செய்த பாஜகவினர்: காங்கிரஸ் அதிர்ச்சித் தகவல். – தமிழ் ஹிந்து.

  2) /அமித் ஷா இயக்குநராக இருக்கும் வங்கியில் பணமதிப்பு நீக்கத்தின்போது, 5 நாட்களில் ரூ.745 கோடி டெபாசிட்: ஆர்டிஐயில் அதிர்ச்சித் தகவல் – தமிழ் ஹிந்து ///

  /// 3) பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதில் முதல் பரிசு பெற்ற அமித் ஷா: ராகுல் வாழ்த்து – தினமணி ///

  நாமும் வாழ்த்துவோம்.

  Well done அமித்ஷா மற்றும் பாஜக.

  நாடு நலம் பெற நன்றாக உழைக்கிறீர்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.