வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்கள்…!!!


தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்காக ஸ்ரீரங்கம் வந்த திமுக
செயல்தலைவர் ஸ்டாலின் அவர்களின் காரை வழிமறித்து –

..

..

..

மாலைகள் போட்டு, போர்வை போர்த்தி, ஸ்டாலின் நெற்றியில்
விடாப்பிடியாக பொட்டு வைத்து, கோவில் பிரசாதமாக பழங்களை கொடுத்து, புளகாங்கிதம் அடைந்த அந்த 5 ஸ்ரீரங்கம் பட்டர்களைக் பார்த்து கேட்கத்தோன்றுகிறது –

“உங்களுக்கு மான வெட்கமே இல்லையா…?

தெருவோடு போகிற,
கோவிலுக்குள் வரப் பிடிக்காத,
கடவுள் நம்பிக்கை இல்லாத – ஒருவரை,
வழிமறித்து நிறுத்தி,
இப்படியெல்லாம் செய்கிறீர்களே….

நீங்கள் எல்லாம் வேதம் படித்த,
கடவுள் பணி செய்யும் பட்டர்கள் தானா…?

உங்கள் கண்ணெதிரேயே அவர் நீங்கள் வைத்த
நெற்றிப்பொட்டை முதலில் கையாலும்,
பிறகு நீங்கள் போட்ட துண்டைக் கொண்டும்
துடைத்தெரிந்ததை பார்த்துக் கொண்டு தானே
இருந்தீர்கள்…?

உங்களுக்கு சூடு சொரணை எதுவுமே இல்லையா…?
அவமானமாக இல்லையா…?
நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு வலுக்கட்டாயமாக
எதற்காக நீங்கள் இப்படிச் செய்தீர்கள்…?

அவரிடமிருந்து எதை எதிர்பார்த்து
இதை நீங்கள் செய்தீர்கள்….

சொல்லுங்கள் மானங்கெட்ட பட்டர்களே….

———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்கள்…!!!

 1. Appannaswamy சொல்கிறார்:

  அவர்களுக்கு மானம் என்று ஒன்று இருந்தால்தானே அவர்கள் எதை எதிர்பார்த்தார்கள் என்று சொல்வதற்கு?

 2. Mani சொல்கிறார்:

  இந்த மானங்கெட்ட பட்டர்களால் அவர்கள் மானம் மட்டும் பறிபோகவில்லை.
  கடவுள் நம்பிக்கை இருக்கின்ற அனைவரது மானமும் பறிபோயிருக்கிறது.
  ‘எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை’ என்று வெளிப்படையாகச் சொல்லும்
  ஒரு ஆசாமியிடம் இவர்கள் சென்று ஏன் மண்டியிட வேண்டும் ?
  அதற்கு என்ன அப்படி அவசியம் வந்தது ?
  அவர்கள் விரும்பினால் வேறு எங்கு வேண்டுமானாலும் இதைச் செய்திருக்கலாம்.
  கோவில் வாசலில் வைத்து செய்தது அயோக்கியத்தனம்.
  இந்த மாதிரி சுயநலமிகளை கோயிலிலிருந்து முதலில் வெளியேற்ற வேண்டும்.
  இது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகத்திற்கு நிகழ்ந்த அவமானம்.
  அந்த கோவில் மீது பற்று வைத்துள்ள பக்தர்களுக்கு நிகழ்ந்த அவமானம்.

 3. Raghavendra சொல்கிறார்:

  இவர்கள் கோவில் நிர்வாகத்திடம் இதற்கு அனுமதி பெறவில்லை.
  சொந்த பணப்பலன் களுக்காக கோவில் பின்னணியை பயன்படுத்திக்
  கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கும், அதன்
  பக்தர்களுக்கும் தங்களது சுயநலத்தால் அவமானத்தை தேடித்தந்திருக்கும் இவர்களை கோவில் நிர்வாகம் கோவிலிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

 4. seshan சொல்கிறார்:

  money money money = sri rangam pattars.

 5. Pingback: வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்கள்…!!! – TamilBlogs

 6. Selvarajan சொல்கிறார்:

  // / கலங்காதிரு மனமே நீ
  கலங்காதிரு மனமே – உன்
  கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே
  ஒரு தினமே // .. கவிஞரின் கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று …..
  கலங்காதிரு மனமே என்ற இரு சொல் முத்திரையுடன் தன் காலடித் தடத்தை திரைப்படப் பாடல் துறையில் அவர் பதித்தார். இது தான் அவர் இயற்றிய முதல் திரைப்படப் பாடல்.கன்னியின் காதலி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல்! இந்த பிரபஞ்சம் உள்ளவரை வாழும் கவிதைகள் …!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   கண்ணதாசனின் கவிதைகள் மட்டும் தானா…?

   கண்ணதாசனின் வாழ்க்கையே ஒரு கவிதை தான்..
   குழந்தை மனது; வெகுளியாகவே வாழ்ந்தவர்…
   அரசியலில் மட்டும் தான் அவர் தோற்றார்…
   அதுவும் நல்லதற்கு தான்…

   இல்லையென்றால் நாம் கண்ணதாசனை முழுமையாக
   பார்த்திருக்க முடியுமா…?

   தமிழ் உள்ள வரை 20-ஆம் நூற்றாண்டின்
   பாரதியும், கண்ணதாசனும் இருப்பார்கள்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. ஆதி சொல்கிறார்:

  மக்கள் உடன் கோயில் நிர்வாகம் விலகி இருப்பதே இது போன்ற கேவலம் நடக்க காரணம்…

 8. புதியவன் சொல்கிறார்:

  இவை ஸ்டாலின் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் (இவையெல்லாம் திட்டமிடாமல் பூரண கும்பம் அளிக்க இயலாது). கருணாநிதியின் தொண்டர்கள் மனம் கலங்கக்கூடாதே என அவசர அவசரமாக பொட்டை அழித்திருந்தால்?

  ஸ்டாலின் நாடகம் இப்போதும் டைரக்‌ஷன் குளறுபடிதான்.

  இதில் அர்ச்சகர்களை நான் பெரிதும் குறை காணவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் கோவிலை அதன் பாரம்பர்யத்தை கடந்த 50 வருடங்களாக திமுக எவ்வளவு குறைத்துள்ளது என்பதை எல்லோரும் அறிவோம்.

 9. Raghavendra சொல்கிறார்:

  puthiyavan,

  I second this statement :

  // இந்த மானங்கெட்ட பட்டர்களால் அவர்கள் மானம் மட்டும் பறிபோகவில்லை.
  கடவுள் நம்பிக்கை இருக்கின்ற அனைவரது மானமும் பறிபோயிருக்கிறது.
  ‘எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை’ என்று வெளிப்படையாகச் சொல்லும்
  ஒரு ஆசாமியிடம் இவர்கள் சென்று ஏன் மண்டியிட வேண்டும் ?
  அதற்கு என்ன அப்படி அவசியம் வந்தது ?

  How you say : இதில் அர்ச்சகர்களை நான் பெரிதும் குறை காணவில்லை. ?

 10. Raghavendra சொல்கிறார்:

  These Butters who are involved in this are shameless people.
  Can they do anything for money.?
  How do you support them ?

  • புதியவன் சொல்கிறார்:

   ராகவேந்திரா – எனக்குத் தோன்றுவதை எழுதுகிறேன். இதில் தவறு இருந்துவிடலாம். இருந்தால் சரி என்று தோன்றுவதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

   1. கோவில் பணிகளில் பட்டர்கள் ஈடுபட்டாலும், அவர்கள் நிர்வாகத்தினருக்குப் பணிந்தோ அல்லது அவர்களை அனுசரித்தோதான் செல்லவேண்டியுள்ளது. இல்லையென்றால் கோவில் பணிகளில் சுணக்கம் ஏற்படும். ஏற்படுத்திவிடுவார்கள் இந்த நிர்வாகத்தினர். உங்களுக்குத் தெரியும், 60களுக்குப் பிறகு கழகத்தினவர் எத்தனை கோவில்களில் ஆக்கிரமிப்புச் செய்து பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்று. அவர்களில் எத்தனை பேர்களுக்கு கோவில் நடைமுறைகள் தெரியும், அந்த அந்த சமய ஒழுங்குகள் தெரியும் என்பதும் கேள்விக்குறி (வைணவம், சைவம், தேவி வழிபாடு போன்று)

   2. அரசியல்வாதிகளை கோவில் பட்டர்கள் கண்டிப்பாக அனுசரித்துத்தான் செல்லவேண்டியிருக்கிறது. இல்லை என்றால் அவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் வந்துவிடும். ஒரு வகையில் இதனை ஜஸ்டிஃபை செய்யலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அரசியல்வாதிகள். அதனால் அவர்களை அனுசரிப்பதன்மூலம் கோவில் பட்டர்கள் மக்களையே அனுசரித்துச் செல்கிறர்கள்.

   3. கோவில் பட்டர்களும் மனிதர்களே. அவர்களிலும் நல்லவர்கள், கெட்டவர்கள், ஜால்ரா கோஷ்டி, அரசியல் செய்பவர்கள் என்று பலவிதமானவர்கள் உண்டு. இதனால்தான் வள்ளுவர், ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்துவிடின்’ என்று சொல்லியிருக்கிறார்.

   நான் முதலிரண்டு பாயிண்டுகளை கன்சிடர் செய்து, பட்டர்களிடத்து குற்றம் காணவில்லை. ஆனாலும் சாதாரண மனிதர்களாகிய நாம், ‘கடவுளுக்கு நேரடியாக சேவை செய்கின்ற பட்டர்களை’ இன்னும் சரியாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.

 11. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  yaarukkum vetkkamillai

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.