பிரதமர் – முதல்வர் சந்திப்பு சரி… ஆனால் இடையில் எதற்கு …. இவை….?


நல்லதோ, கெட்டதோ – உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் செய்வதை அனைவரும் கவனிக்கிறார்கள்… அவர்களையும் அறியாமல் அந்த பின்னணி பார்ப்பவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.

பிரதமர் – முதல்வர் சந்திப்பு…. அதிகம் போனால் அரை மணி நேரம்
நீடிக்கலாம்… மேஜையில் இரண்டிற்கு பதிலாக, நான்கு என்றே வைத்துக் கொள்வோமே…..கண்ணாடி டம்ளர்களில் குடிநீர் வைத்தால் போதாதா…?

அங்கே எதற்கு ப்ளாஸ்டிக் பாட்டில்கள்….?
இந்த ப்ளாஸ்டிக்கை தவிர்த்திருக்க வேண்டாமா…?
உபதேசம் எல்லாம் மற்றவர்களுக்கு மட்டும் தானா…?
அவர்களும் நடைமுறையில் செய்து காட்ட வேண்டாமா…?

நிஜமாகவே தங்கள் லட்சியங்கள் நிறைவேற வேண்டும் என்று
நினைப்பவர்கள் இதை கவனித்திருக்க வேண்டாமா…?
தவிர்த்திருக்க வேண்டாமா…? தங்கள் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு
முதலில் உத்திரவு போட வேண்டாமா…?

சி.எம்., பி.எம். அலுவலகத்தில் இருப்பவர்கள் (… 🙂 🙂 வேறு வழி..?)
மட்டுமல்லாது, அனைத்து அலுவலக, தொழில் ரீதியான
சந்திப்புகளிலும் இனியாவது இதை யோசித்து, தவிர்ப்பார்களா…?

பின் குறிப்பு –

இதை ஒரு பெரிய விஷயமாக, இடுகை போட்டு எழுத வேண்டுமா என்று தான் முதலில் தோன்றியது…. ஆனால், ப்ளாஸ்டிக் பயன்படுத்தலை தவிர்ப்பது குறித்து, இந்த இடுகையை படிப்பவர் எல்லார் மனதிலும் ஒரு அழுத்தத்தை
உண்டுபண்ண இது உதவுமே என்று தோன்றியதால் … இந்த இடுகை.

.
———————————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பிரதமர் – முதல்வர் சந்திப்பு சரி… ஆனால் இடையில் எதற்கு …. இவை….?

 1. Pingback: பிரதமர் – முதல்வர் சந்திப்பு சரி… ஆனால் இடையில் எதற்கு …. இவை….? – TamilBlogs

 2. Raghavendra சொல்கிறார்:

  What you say is right.
  Not only CM, PM but also the
  Officials working in their office should be alert.
  This serves as a Reminder to everyone.

 3. புதியவன் சொல்கிறார்:

  காமை சார்… நான் போலீஸ் ஆபீசர்கள் வெளிநாட்டு பிராண்ட் கார்கள் ஆபீஸ் உபயோகத்துக்காக வாங்கி உபயோகிப்பதைப் பார்த்தும் இப்படி நினைத்திருக்கிறேன். இந்தியத் தயாரிப்புகளை, அதாவது டாட்டா, மாருதி போன்று, வாங்கக்கூடாதா என்று.

  இந்தமாதிரி எண்ணம் அதிகாரிகளுக்கு முதலில் வரணும். சட்டம், கைடுலைன்ஸ் எல்லாம் சாமானியர்களுக்கு என்றால், அதிகாரிகள், அரசியல்வாதிகள், பணம் படைத்தவர்களால் தேசத்துக்கு என்ன பயன் இருக்கமுடியும்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.