இசையரசி எம்.எல்.வி. – 90 ( என் விருப்பம் – 18 )


புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் –
மறைந்த எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின்
90-வது பிறந்த நாள் இன்று…. (1928-1990)

கர்நாடக இசையுடன் எனக்கான பரிச்சயம் மிகக்குறைவே…
என்றாலும் கூட எம்.எல்.வி. அவர்களின் நிகழ்ச்சி என்றால்
மிகவும் விரும்பிக் கேட்பேன்… வித்தியாசமான, மிக
இனிமையான குரலமைப்பு அவருடையது…..
( தமிழ் மக்களின் அபிமானத்தைப்பெற்ற, புகழ்பெற்ற
தமிழ் நடிகை ஸ்ரீவித்யா இவருடைய மகள் என்பது
குறிப்பிடத்தக்கது…)

50-களிலும், 60-களிலும், தமிழ்த் திரைப்படங்களில் கர்நாடக
இசையின் அடிப்படையிலான பாடல்கள் வெளியானபோது,
இவரும் குறிப்பிடத்தக்க பாடல்களை பாடி இருக்கிறார்.
அநேகமாக பத்மினி நடனம் இடம்பெறும் பாடல்கள்
அனைத்தும் இவருடையதாகவே இருக்கும்… இருவரும்
மிக நெருங்கிய தோழிகள்…!

அவரது நினைவாக, சில பாடல்களை இங்கே பதிவு செய்து
நண்பர்களும் ரசிக்கச் செய்ய வேண்டுமென்று நினைத்தேன்…
pure கர்நாடக இசை மட்டுமின்றி, எம்.எல்.வி. அவர்கள் பாடிய
சில திரைப்படப் பாடல்களையும் தந்தால், அனைவரும் ரசிப்பர்
என்று தோன்றியது.

கீழே –
எல்லாவற்றையும் கேட்க வசதிப்படாதவர்கள்
ஒன்றிரண்டையாவது அவசியம் கேளுங்கள்….
அந்த இனிமை தெரிய வரும் …

பாரதிதாசனின் – வெண்ணிலாவும் வானும் போலே –
(கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி திரைப்படம்…)

ஆறுமோ ஆவல் – ஆறுமுகனை நேரில் காணாது –
(தனிப்பாடல்…)

காணி நிலம் வேண்டும் பராசக்தி – பாரதியார் பாடல்…
(அந்தமான் கைதி திரைப்படம்….)

ஆடல் காணீரோ –
( மதுரை வீரன் – திரைப்பட பாடல்…)

ஆடாத மனமும் உண்டோ –
( மன்னாதி மன்னன் -திரைப்பட பாடல் …)

புரந்தரதாசர் கீர்த்தனை -வெங்கடாசல நிலையம் –

எல்லாம் இன்ப மயம் –
( மணமகள் – திரைப்பட பாடல்…)

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா -பாரதியார் –
(மணமகள் – திரைப்பட பாடல்…)

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to இசையரசி எம்.எல்.வி. – 90 ( என் விருப்பம் – 18 )

  1. பிங்குபாக்: இசையரசி எம்.எல்.வி. – 90 ( என் விருப்பம் – 18 ) – TamilBlogs

  2. புதியவன் சொல்கிறார்:

    வெங்கடா சல நிலையம் – இப்போதுதான் எம் எல் வி வாய்சில் கேட்கிறேன். மிக அருமையா இருந்தது. ‘ஆறுமோ ஆவல்’ எம்.எல்.வியின் சிஷ்யை சுதா ரகுநாதன் பாடித்தான் கேட்டிருக்கிறேன். (விதியைப் பாருங்கள். எம்.எல்.வியின் மகள் ஸ்ரீவித்யாவுக்கு பாடும் திறமை, பரத நாட்டியத் திறமை இவைகள் இருந்தும், எம்.எல்.வியின் மேண்டிலை சுதா ரகுநாதன் தொடரணும்னு விதி. ஸ்ரீவித்யா தமிழ் நடிகையாக இருந்தபோதும், அவருக்கு கேரள அரசுதான் ‘அரசு மரியாதை’களோடு இறுதிச்சடங்குகள் செய்தது.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      ஸ்ரீவித்யாவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம், ஒரு பரிதாப உணர்வே மேலிடுகிறது. பாவம், மிகச்சிறந்த கலைஞராக இருந்தும், அவர் வாழ்க்கையில் சந்தித்ததெல்லாம் – வெறும் துரோகம், ஏமாற்றங்கள் மட்டும் தான்.

      -காவிரிமைந்தன்

      • புதியவன் சொல்கிறார்:

        கா.மை. சார்… பெரும்பாலான நடிகைகளுக்கு இதுதான் விதித்தது. இதிலிருந்து தப்பி நல்ல குடும்பப் பெண்ணாக மாற முடிந்தவர்கள் வெகு சிலர்தான்.

        கமலுடனான பந்தம் திருமணத்தில் முடியலை. தானே விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்த ஜார்ஜ், முழுச் சொத்தையும் அபகரித்தார். ‘திரையுலகம்’தான் தன் தொழில் என்று அவர் தேர்ந்தெடுத்ததால் நிறைய கஷ்டங்களைச் சந்தித்தார்.

        சொன்னால் நம்புவது கடினம். கே.பி.சுந்தராம்பாள் அவர்களும், நிறையச் சம்பாதித்தாலும், பெரிய மதிப்பு பெற்றிருந்தாலும், அவரும் வாழ்க்கையில் சந்தித்தது துரோகம்தான். தன் கடைசி காலத்தில் தனிமையில் வாடி, இறந்தார். அவர் மறைந்தபோது, அவரது பெரும் சொத்துக்கள் உறவினர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எவரையுமே தன்னை அண்டவிடவில்லை, உணவுக்குக்கூட வெளியே செல்ல அஞ்சி தனிமை வாழ்க்கை வாழ்ந்துவந்தார்.

  3. Mani சொல்கிறார்:

    Very good selection of Songs.
    thank you Sir.
    Unforgettable MLV and also SriVidya.

  4. R.Gopalakrishnan சொல்கிறார்:

    i feel the song Chinnunchiru kiliye should have come first.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      கோபாலகிருஷ்ணன்,

      முழுவதுமே இனிப்பு தான்…. எந்தப்பக்கத்திலிருந்து சுவைக்கத் துவங்கினால் என்ன…? 🙂

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  5. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    கூவாமல் கூவும் கோகிலம் !

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      நன்றி நண்பரே.

      இதுவும், இன்னும் 3 பாடல்களும் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன்…. அதிகமாகி விட்டதாக தோன்றியது.
      எனவே, நிறுத்திக் கொண்டு விட்டேன். இப்போது தான் தெரிகிறது என்னைப்போன்ற ரசனை உடையவர்கள்
      நிறைய பேர் இருக்கிறார்கள் என்று…

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  6. பேராசிரியர் என் சண்முகலிங்கன் சொல்கிறார்:

    அழியாத ஆத்த்ம இசை அனுபவங்கள்!
    நுகர்வோராகி உருவழியும் எம்மவர் ரசனை வளர்க்கும் நின் பணி வாழி!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ஒரு நல்ல ரசிகராகவும் இருக்கும் துணைவேந்தர்
      அவர்களின் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
      நன்றி பேராசிரியர் அவர்களே.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.