அப்படியானால், டெல்லியில் நிகழும் குற்றச்செயல்களுக்கெல்லாம் ஜெட்லிஜி பொறுப்பேற்கிறாரா…?ஏற்கெனவே, நிதியமைச்சகத்தை இழந்து “சீட்” இல்லாமல்,
இலாகா இல்லாத மந்திரி என்கிற
“திரிசங்கு” சொர்க்கத்தில் வசித்துக் கொண்டிருப்பவர் –

சில சமயம் குழாயடி சண்டைகளில் ஈடுபடுவோர்,
அடுத்தவரை அவமானப்படுத்த வேண்டும்
என்கிற ஒரே நோக்கில் –
என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் எதையாவது
உளறிக் கொட்டி விடுவது போல் –

டெல்லி மாநில அரசு தொடுத்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்,
டெல்லி LG-க்கும், மத்திய பாஜக அரசுக்கும்
கொடுத்த அடியை மறைக்க / மறுக்க – ஜெட்லிஜி
எதையோ சொல்லப்போய்,
எதற்கோ பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்….

தனது ஃபேஸ் புக் பக்கத்தில் ஜெட்லிஜி எழுதியுள்ளதன் சுருக்கம் –

————————–

“டெல்லி மாநிலத்தை நிர்வகிக்க தேவையான காவல் துறை நிர்வாகம்,
துணைநிலை கவர்னர் கையில் தான் உள்ளது…. நிலம், சட்டம் ஒழுங்கு,
உள்ளிட்டவற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலையிட முடியாது…
போலீஸ் துறையை நிர்வகிக்கும் அதிகாரமே இல்லாதபோது,
குற்றச்சம்பவங்கள், ஊழல்கள் குறித்து விசாரிக்கவோ –
விசாரணக் குழுவை அமைக்கவோ, – தேர்ந்தெடுக்கப்பட்ட
டெல்லி மாநில அரசுக்கு சுத்தமாக அதிகாரம் கிடையாது….”

————————-

டெல்லி அரசுக்கு “போலீஸ் பவர்” கிடையாது என்று இவ்வளவு மெனக்கெட்டு, அழுத்தந்திருத்தமாக – அவர் சொல்ல வேண்டிய அவசியமென்ன….?

அப்படி வலியுறுத்திச் சொல்லும்போது –

– டெல்லியில் நிகழும் அத்தனை குற்றச் செயல்களுக்கும் ( திருட்டு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு, சட்டமீறல்… etc. etc.) மத்திய அரசு தான் காரணம்; அவற்றை கட்டுப்படுத்தத் தெரியாத -தங்கள் அரசின் திறமையின்மையே காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறாரே….
அவருக்கு அது புரியவில்லையா…
ம்ம்ம் – அவ்வளவு ஆத்திரம், அவசரம்……!!!

———-

ஜெட்லிஜி எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது, எல்லாருக்கும்
அவர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருந்தது.
அவர் மிகவும் “உயர்ந்த” மனிதராகத் தோன்றினார்.

பாஜக ஆட்சிக்கு வந்ததில், அவரது ஒப்பனைகள் கலைந்து,
சுய உருவம் தெரிந்ததில், அவரது ‘இமேஜ்’ அடிமட்டத்திற்கு
சரிந்து விட்டது.

நமது மரியாதைக்குரிய, ஆனால் அதிகம் தெரியாத
ஒருவரைப்பற்றிய முழு நிஜங்களும் தெரிய வரும்போது –
சிலபேரின் இமேஜ் பெரிதும் உயர்கிறது;
வேறு சிலரது இமேஜ் அதல பாதாளத்தில் விழுகிறது…

துரதிருஷ்டவசமாக ஜெட்லிஜி 2-வது வகையில் சேர்கிறார்…

.
——————————————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to அப்படியானால், டெல்லியில் நிகழும் குற்றச்செயல்களுக்கெல்லாம் ஜெட்லிஜி பொறுப்பேற்கிறாரா…?

 1. அறிவழகு சொல்கிறார்:

  சேராத இடந்தனிலே சேர வேண்டாம் – இது பால பாடம்.

  ஆனால், அரசியல் வியாதிகளுக்கு…கூட்டி கழித்து பார்த்தால்…என்பது தான் அவர்கள் கணக்கு.

  இதில் நியாயமாவது அநியாயமாவது…!

  பேர வச்சி என்ன செய்வது.

  பதவி ஐயா பதவி. அது தரும் போதை, அதிகாரம்.

  உங்கள் மதிப்பும் மரியாதையும் பேரும் அவைகளை தருமா…!?

 2. Raghavendra சொல்கிறார்:

  Mr.Jaitley is NOT a religious fanatic.
  He gets his name damaged because of his being in BJP
  and being in the Company of M….ji and AS…ji.
  If he has to save his name and fame,
  He should understand that.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   எல்.கே.அத்வானி தலைமையில் பணியாற்றியபோது, ஜெட்லிஜி ஜென்டில்மேனாகத்தான் இருந்தார். பின்னர் தான் ஏற்பட்டது கூடாத சகவாசம். “மூவர்” கூட்டணி ஏற்பட்டதும், அவரது குணமும், கௌரவமும் அழிந்து போனதும் பிற்கால / தற்கால வரலாறு.

   • புதியவன் சொல்கிறார்:

    நான் நினைக்கறேன், ஒரு சமயத்தில், என்ன நல்லது செய்தாலும் தொகுதி மக்கள் வாக்களிப்பது நிச்சயமில்லை, நம்மைவிட மோசமானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கு. அதனால நாம், நம் வாழ்க்கைக்கான ஆதாரத்தைப் பார்ப்போம் என்று இந்த அரசியல்வாதிகள் நினைத்துவிடுகிறார்களோ?

    அருண் ஜெட்லி, முதலிலேயே கிரிக்கெட் மேனேஜ்மெண்டில் இறங்கிவிட்டாரே, நிச்சயம் கிரிக்கெட்டை வளர்க்க அல்ல, அவரை வளர்த்துக்கொள்ள என்றுதால் எல்லோரும் நினைக்கின்றனர்.

 3. Pingback: அப்படியானால், டெல்லியில் நிகழும் குற்றச்செயல்களுக்கெல்லாம் ஜெட்லிஜி பொறுப்பேற்கிறாரா…? – Ta

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.