டாக்டர் சுப்ரமணியன்சுவாமி – ரங்கராஜ் பாண்டே – கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி….


..

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் பேட்டி என்றாலே
ஒன்று அதிரடியாக
இருக்கும் அல்லது சிரிப்பு வெடியாக இருக்கும்….

இந்த பேட்டியை இரண்டாவது ரகத்தில் தான் சேர்க்க வேண்டும்.

ஒரு முன்னேற்றம் – சு.சுவாமி ஓரளவு நன்றாக
தமிழ் பேச ஆரம்பித்து விட்டார்…..!!!

அவர் சொல்வதை யாரும் நம்பப்போவதில்லை என்பதை நன்கு
தெரிந்துகொண்ட பிறகும், சு.சுவாமி அதிரடியாகப் பேசுவது தான்
சிரிப்பை உண்டாக்குகிறது….

துவக்கத்திலேயே –

டாக்டர் ரகுராம் ராஜனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி கவர்னராக
வைத்துக் கொள்ள வேண்டும் என்று (அப்போதைய) அமெரிக்க
ஜனாதிபதி ஒபாமாவே, மோடிஜியிடம் சொன்னாராம்…
ஆனாலும் சு.சுவாமியின் effect காரணமாக ( 🙂 🙂 )
மோடிஜி ஒத்துக் கொள்ளவில்லையாம்.

மோடிஜியாலேயே மெனக்கெட்டு, குஜராத்திலிருந்து கொண்டு
வரப்பட்டவர் என்றாலும் கூட, தற்போதைய நிதித்துறை செயலாளர்
ஹஸ்முக் ஆதியா, ப.சிதம்பரம் சொல்படி தான் கேட்கிறாராம்….!!!

Gang of Four என்று தான் சொன்னது மோடிஜி ஆட்சியை கவிழ்க்க
கூட்டு சேர்ந்திருப்பவர்கள் என்கிற அர்த்தத்தில் சொல்லவில்லை;
சோனியா காந்தி, ப.சிதம்பரம் ஆகியோரை ஜெயிலுக்கு போவதிலிருந்து
தப்புவிப்பதற்காக கூட்டு(கேங்க்) சேர்ந்திருப்பவர்கள் என்று தான் ….!!!

இந்தியாவில் இருக்கும் எல்லாருடைய DNA-வையும்
சோதித்துப்பார்த்தால், ஹிந்துத்வா DNA தான் இருக்குமாம்.
( இவர் கூற்றுப்படி பார்த்தால், இன்றைய தினம் பாகிஸ்தான் மற்றும்
பங்களாதேஷ் நாடுகளில் இருப்பவர்களின் DNA-வில் கூட ஹிந்துத்வா
DNA தானே இருக்கும்….அவர்களும் முன்னாள் இந்தியர்கள்
தானே.. 🙂 🙂 )

நாட்டில் மறுமலர்ச்சி வர வேண்டும் என்பது மட்டும் தான் தன் நோக்கம்
என்றும் ஹிந்துத்வாவை நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டால்
தன்னால் மறுமலர்ச்சி வந்து விடும் என்றும் சொல்கிறார்…

இரண்டு மூன்று தடவைகள் ரங்கராஜ் பாண்டேயை, உங்களை மாதிரி
பத்திரிக்கையாளர்கள் சினிமா பார்த்து விட்டு, அதே மாதிரி எதாவது
கற்பனை செய்து கொண்டு பேட்டி கண்டு விட வந்து விடுகிறீர்கள்…
என்று கலாய்க்கிறார்…

ஒருபக்கம் திருமதி சசிகலா மீது ஊழல் வழக்கு போட்டு தண்டனை
வாங்கி தந்து விட்டு, மறுபக்கம் அவரே தான் தமிழ்நாட்டின்
முதலமைச்சர் ஆக வேண்டும் என்று அவர் ஏறுமாறாகச்
சொன்னதைப்பற்றி கேட்டபோது –

ஊழல், வழக்கு எல்லாம் வேறு.
சட்டம் என்பது வேறு…
சட்டப்படி அன்றைய தேதியில் யாருக்கு மெஜாரிடி சப்போர்ட் இருந்ததோ,
அவரைத்தான் முதலமைச்சராக ஆக்கி இருக்க வேண்டும்…
சசிகலாவிற்கு தான் மெஜாரிடி இருந்தது…
அதைச்செய்யாதது அன்றைய கவர்னரின் தவறு தான்…

தமிழ்நாட்டில் பாஜக எங்கே இருக்கிறது….?
கட்சி தமிழ்நாட்டில் – சுத்தமாக செயல்படவே இல்லை…
இங்கே வேறு யாருடனும் கூட்டு சேரவேண்டிய
அவசியமில்லை…தனியாக போட்டியிட்டால், இந்த தேர்தலில்
தோற்றாலும் கூட அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை
பிடிக்க முடியும்… 🙂 🙂

இருப்பதிலேயே பெரிய சிரிப்பு வெடி –

தமிழ்நாட்டில், துப்பாக்கி-வெடிகுண்டுகளுடன் – 10,000 தீவிரவாதிகள்
திரிந்துகொண்டு இருக்கிறார்கள்…!!!

2019 பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக யாருடனும் கூட்டு
வைக்கத் தேவையில்லை… தனித்தே போட்டியிட வேண்டும்.

தனது 5 ஆண்டுக்கால சாதனைகளை ( ???) சொல்லி, மோடிஜி,
இந்தியா முழுவதும் பயணம் செய்து ஓட்டு கேட்க வேண்டும்… ஹிந்துத்வாவை முழுவதுமாக இந்தியாவில்
கொண்டுவந்து அமல்படுத்த வேண்டும் என்று சொல்லி சு.சுவாமி
பிரச்சாரம் செய்வார்….

அது இரண்டும் மட்டுமே போதும்…. பாஜகவை தனிப்பட்ட
மெஜாரிடியுடன் மீண்டும் மத்தியில் ஆட்சியில் அமர்த்தி விடும்.

மோடிஜி, சு.சுவாமியின் ஆலோசனைபடியே செயல்பட வேண்டுமென்று
இறைவனை வேண்டுவோமாக…. 🙂 🙂 🙂

…………………………..

தொலைக்காட்சியில் பார்க்க முடியாதவர்களுக்காக பேட்டியின்
காணொளி கீழே –

( பேட்டியில் விசேஷமாக சொல்லும்படி எதுவும் இல்லை
என்பதால், முழு பேட்டியை பார்க்க வேண்டுமென்பது
அவசியமில்லை….நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம்…!!! )

…………………………………….

..

.
—————————————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to டாக்டர் சுப்ரமணியன்சுவாமி – ரங்கராஜ் பாண்டே – கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி….

 1. அறிவழகு சொல்கிறார்:

  ///அது இரண்டும் மட்டுமே போதும்…. பாஜகவை தனிப்பட்ட
  மெஜாரிடியுடன் மீண்டும் மத்தியில் ஆட்சியில் அமர்த்தி விடும்.///

  என்னா நக்கல்….!

  ///மோடிஜி, சு.சுவாமியின் ஆலோசனைபடியே செயல்பட வேண்டுமென்று இறைவனை வேண்டுவோமாக..🙂🙂🙂///

  நாமும் வேண்டுகிறோம்.

 2. Pingback: டாக்டர் சுப்ரமணியன்சுவாமி – ரங்கராஜ் பாண்டே – கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி…. – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.