தாய்லாந்து குகை – அடேயப்பா….எத்தனை கடினம்…?

மாயா உலகம் – முடிவில்லாத கேள்விகள்…..
அடுத்த பகுதியைப் பார்க்க –

பாகவதருக்கு ஏன் இதெல்லாம் நிகழ்ந்தது …? (பகுதி-6) (மாயா உலகம் – முடிவில்லாத கேள்விகள்…..)


..

பிரமிப்பாக இருக்கிறது…
இப்படியெல்லாம் கூட மலைக்குகைகள் இருக்கின்றனவே…

ஒரு இடத்தில் வெறும் 15 அங்குலம் தான் குகையின் விட்டம்…!
ஆமாம் – இவ்வளவு குறுகலான வழிகளின் வழியாக
அந்த சிறுவர்கள் முதலில் உள்ளே சென்றது எப்படி…?
நீரின் வேகத்தில் அடித்துக் கொண்டு செல்லப்பட்டிருப்பார்கள்
என்று தோன்றுகிறது….

அந்த சிறுவர்களின் மனோதிடத்தைப் பாருங்கள்….
மீட்புக் குழுவை (ரெஸ்க்யூ டீமைப் )பார்த்து – ஒருவன் கூட அழவில்லை.
தைரியமாக சிரித்துக்கொண்டே கை அசைக்கிறார்கள்…

9 நாட்களுக்கு எதைச்சாப்பிட்டு எப்படி உயிரோடு இருந்தார்கள்…?
புரிந்து கொள்வது கடினமாகவே இருக்கிறது.
God is Great…!
மீட்பு நடவடிக்கைகள் முழுவதுமாக முடிந்த பின்னர் தான்
முழு விவரங்களும்
தெரிய வருமென்று நினைக்கிறேன்.

நிறைய வெளிநாட்டு செய்திகள் பார்த்தேன்…
உலகம் பூராவும் இதில் காட்டும் அக்கறை பிரமிக்க வைக்கிறது…
எங்கெங்கிருந்தெல்லாமோ உதவிகள் வருகின்றன….
துண்டு துண்டாக நிறைய வீடியோக்கள் வெளிவந்திருக்கின்றன.
நண்பர்கள் பார்த்து, ஓரளவு புரிந்து கொள்ள –
சின்னச் சின்ன வீடியோக்கள் சில கீழே –


.
—————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to தாய்லாந்து குகை – அடேயப்பா….எத்தனை கடினம்…?

 1. Pingback: தாய்லாந்து குகை – அடேயப்பா….எத்தனை கடினம்…? – TamilBlogs

 2. Mani சொல்கிறார்:

  உண்மை. அந்த சிறுவர்களின் மனோ உறுதி அபூர்வம்.
  அழுது புலம்பாமல், பயப்படாமல், யாராவது வருவார்கள் என்று
  நம்பிக்கையுடன் 10 நாட்கள் காத்திருந்திருக்கிறார்களே.
  அவர்களின் அந்த 10 நாள் எண்ணங்களைப்பற்றி அறிந்து
  கொள்ள வேண்டும்.

 3. அறிவழகு சொல்கிறார்:

  இன்று அந்த 12 பையன்கள் மற்றும் பயிற்சியாளர் அனைவரும் மீட்டெடுக்கப் பட்டார்கள். இறைவனுக்கு நன்றி.

 4. அறிவழகு சொல்கிறார்:

  தாங்கள் கேட்ட கேள்விக்கு,

  ///ஆமாம் – இவ்வளவு குறுகலான வழிகளின் வழியாக
  அந்த சிறுவர்கள் முதலில் உள்ளே சென்றது எப்படி…?
  நீரின் வேகத்தில் அடித்துக் கொண்டு செல்லப்பட்டிருப்பார்கள்
  என்று தோன்றுகிறது….///

  பதில் கிடைத்துள்ளது. அவர்கள் சாகசப் பயணம் சென்றுள்ளனர். எப்படியோ இறைவன் அருளால் காப்பாற்ற பட்டுள்ளார்கள்.

  ///குகையில் சிக்கிய சிறுவர்கள் கால்பந்து அணி

  தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகையில் கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றிருந்தார்.

  இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ள நீர் குகைக்குள் சூழ்ந்து கொண்டது. நீரும், சேறுமாகக் குகை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.

  நன்றி: தமிழ் ஹிந்து நாளிதழ். ///

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.