பாகவதருக்கு ஏன் இதெல்லாம் நிகழ்ந்தது …? (பகுதி-6) (மா.உ. -முடிவில்லாத கேள்விகள்…..)முந்தைய பகுதியை பார்க்க…..

இதன் அடுத்த பகுதி – ஆடி அடங்கும் வாழ்க்கை …!!! (பகுதி-7) முடிவில்லாத கேள்விகள்… -பார்க்க ….

பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இந்தியாவில் சுப்ரீம் கோர்ட் கிடையாது.
எனவே, உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து அதற்கு அடுத்த நீதிமன்றத்தில்
அப்பீல் செய்ய வேண்டுமானால் –
லண்டனில் உள்ள ‘ப்ரிவி கவுன்சிலு’க்கு தான் போக வேண்டும்…

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தான் சுப்ரீம் கோர்ட் (உச்ச நீதிமன்றம்)
தோற்றுவிக்கப்பட்டு, ப்ரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்யும் வழக்கம் நிறுத்தப்பட்டது….

லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், பாகவதரும் மற்றவர்களும்
ப்ரிவி கவுன்சிலில் அப்பீல் செய்தார்கள்….ப்ரிவி கவுன்சிலில், இவர்களுக்காக, உலகப்புகழ்பெற்ற பிரிட்டிஷ் வக்கீல் Barrister, D.N.Pritt என்பவர் வெகு சிறப்பாக வாதாடினார்.

அப்பீலை விசாரித்த ப்ரிவி கவுன்சில், கீழ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்று கூறி, வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு மீண்டும் கீழ் நீதிமன்றத்துக்கு ( அதாவது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ) உத்தரவிட்டது.

இந்தியாவில் மறுபடியும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, இறுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேப்பல் மற்றும் ஷஹாபுதின் அடங்கிய பெஞ்ச் (Division Bench) முன்பு விசாரணைக்கு வந்தது.

பாரிஸ்டர் எதிராஜ்
அவர்களுடன், MKT பாகவதரும், NSK-யும்

இந்த தடவை, பிரபல வழக்கறிஞர், பாரிஸ்டர் எத்திராஜ்
(தற்போது சென்னையில் இயங்கும் எதிராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர்….) குற்றவாளிகள் சார்பில் மிகத்திறமையாக வாதாடினார்.

உண்மையாக குற்றம் செய்தவர்கள், அரசியல் அதிகாரங்கள்
உள்ளவர்களின் உதவியோடு தப்ப விடப்பட்டு,

நிரபராதிகளான தன் கட்சிக்காரர்கள் மீது பொய்யாக வழக்கு
போடப்பட்டு –

போலி சாட்சியங்களின் வாக்குமூலங்களை நம்பியும்,
ஜூரர்களின் அறியாத்தனத்தினாலும், தனது கட்சிக்காரர்கள் தவறாக தண்டிக்கப்பட்டு விட்டார்கள் –

என்று கூறி நிரபராதிகளான தன் கட்சிக்காரர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென்று வாதாடினார். வழக்கை மீண்டும் விசாரித்த புதிய பெஞ்ச், வழக்கின் இறுதியில்,

தியாகராஜ பாகவதரையும் என்.எஸ்.கிருஷ்ணனையும் குற்றமற்றவர்கள்
என்று கூறி விடுதலை செய்ய உத்தரவிட்டது….

இதில் தீர்ப்பு எழுதும்போது ஜட்ஜ் சொன்ன ஒரு விஷயம் – ஒரு தவறான அணுகுமுறையால், செய்யாத குற்றத்திற்காக, அப்பாவிகளான பாகவதரும்,
NSK-யும் எந்த அளவிற்கு துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது என்பதை வெளிப்படுத்திக் காட்டியது.

ஜட்ஜ் சொன்னார்…

” இந்த வழக்கில், கொலை செய்ய உபயோகிக்கப்பட்டதாக சொல்லப்படும்
கத்தியை வைத்துக் கொண்டு ஒரு எலியைக்கூட கொல்ல முடியாது;
இந்த ஆயுதத்தை கொலை ஆயுதமாக ஏற்றுக் கொண்டு நிரபராதிகளை
தண்டித்தது நீதிக்கே செய்யப்பட்ட ஒரு அநியாயம்.”

இந்த வழக்கு முடியும் வரை பாகவதரும் NSK-யும், சுமார் இரண்டரை
ஆண்டுகள் சிறையிலேயே இருக்க வேண்டியதாகி விட்டது.
இந்த வழக்கை எதிர்கொண்டு நடத்துவதற்காக, பாகவதரும் NSK-யும்,
தாங்கள் சம்பாதித்த சொத்துகள் அனைத்தையும் விற்க வேண்டியதாகி விட்டது.

சிறையிலிருந்து வெளியே வந்த பாகவதற்கு கிடைத்த உற்சாகமான வரவேற்பு….

இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு ஏறக்குறைய 30 மாதங்களுக்குப் பிறகு, சிறையிலிருந்து வெளியே வந்த பாகவதருக்கும், NSK-க்கும், அவரது ஆதரவாளர்களாலும், திரையுலகத்தினராலும் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த இருவருக்குமே அநியாயமாக அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக படித்தவர்களும், பாமரர்களும் ஒரு சேர நினைத்தனர்.

பாகவதர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்படும் முன்னர், ஹரிதாஸ் படம் ரிலீசாகி, மகத்தான வெற்றியை பெற்றதும்,

தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு பாகவதரை ஒப்பந்தம் செய்தனர். பாகவதர், கொலை வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 12 திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதற்கான அட்வான்சையும் அவர் வாங்கி இருந்தார்.

பாகவதர் ஜெயிலுக்கு போனதும், அந்த படங்கள் அனைத்தும் ரத்தாயின…
பாகவதர் வழக்கிலிருந்து விடுபட்டு, வெளியே வருவார் என்கிற
நம்பிக்கை அந்த தயாரிப்பாளர்களுக்கு இல்லை… தயாரிப்பாளர்கள்
பாகவதரை அட்வான்சை திருப்பிக் கொடுக்க வற்புறுத்தினர். சிறைக்கு சென்ற கொடுமையோடு பாகவதர் இந்த கொடுமைகளையும் சேர்த்து அனுபவிக்க வேண்டியதாகி விட்டது.

வெளியே வந்த பிறகு, பாகவதருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்
மிகக் கொடுமையானவை…..( NSK சம்பந்தப்பட்ட விஷயங்களை பின்னர்,
தனியே கவனிக்கலாம்…) அவர் மீது பொதுமக்களுக்கும், திரைப்படத்
துறையில் இருந்தவர்களுக்கும் மரியாதையும், அனுதாபமும் இருந்தது
உண்மை…. ஆனால்…….

(அடுத்து பகுதி-7-ல் தொடரும் …)

—————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to பாகவதருக்கு ஏன் இதெல்லாம் நிகழ்ந்தது …? (பகுதி-6) (மா.உ. -முடிவில்லாத கேள்விகள்…..)

 1. Pingback: பாகவதருக்கு ஏன் இதெல்லாம் நிகழ்ந்தது …? (பகுதி-6) (மா.உ. -முடிவில்லாத கேள்விகள்…..) – TamilBlogs

 2. Mani சொல்கிறார்:

  பல செய்திகள் படிக்கும்போதே சங்கடப்படுத்துகின்றன.
  இத்தனைக்கும் பாகவதர் யாருக்கும் எந்தவித கெடுதலையும்
  செய்ததாகத் தெரியவில்லை. தன் கம்பீரக் குரலாலும்,
  தோற்றத்தாலும் தமிழக மக்களின் மனதை ஆட்கொண்ட ஒரு
  இசைச் சக்கரவர்த்தி, இறுதியில் இவ்வளவு வேதனைக்கு
  உள்ளாகி இருக்கிறாரே.

 3. அறிவழகு சொல்கிறார்:

  நான் ஒரு கல்வி நிறுவனம் தொடங்கலாம் என்று திட்டமிட்டு உள்ளேன்.

  இப்போது தான் மனதளவில் நினைத்து இருக்கிறேன்.

  எனக்கும் இந்த நினைப்பே சிறந்த திட்டம் தான் என்று ‘சிறந்த நினைப்பு’ என்ற பட்டமும் 1000 கோடி உதவியும் கிடைக்குமா….!?

  • அறிவழகு சொல்கிறார்:

   அப்படி தப்பி தவறி வழங்கப்பட்டால்… யாராவது அதை ஊழல் கீழல் என்று சொன்னீர்கள்….நல்லா இருக்காது.

   நாங்கள் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கி கொண்டு இருக்கும் போது இது எப்படி ஊழலில் சேரும்….!?

   கபர்தார்.

 4. Pingback: ஆடி அடங்கும் வாழ்க்கை …!!! (பகுதி-7) முடிவில்லாத கேள்விகள்… | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.