சென்னையில் அமித்ஜீ விட்ட ரீல்’கள்… சொன்ன பொய்கள்….!!!


சென்னையில் பாஜக தலைவர் பேசிய பேச்சில் நிறைய பொய்யான தகவல்கள் இருந்தன – என்று – நான் எழுதினால், பாஜக நண்பர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

எனவே, இன்று நடுநிலையான பிபிசி செய்தித்தளத்தில் வெளிவந்துள்ள ஒரு செய்திக் கட்டுரையின் சில பகுதிகளை கீழே தருகிறேன்.

பிபிசி செய்தித்தளம் இதுவரை “சிறுநீர்ப்பாசனம்” ( 🙂 🙂 )
செய்தியை வெளியிடவில்லை என்பதால், இதனை பாஜகவுக்கு விரோதமான தளம் என்று கூறி ஒதுக்கிவிட மாட்டார்களென்று நம்புகிறேன்……

————————————————————-

( https://www.bbc.com/tamil/india-44794195 )


தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடு:
அமித் ஷா உரையில் இவ்வளவு ஓட்டைகளா?
முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பிபிசி தமிழ்
—————————————–

சென்னையில் பாரதிய ஜனதாக் கட்சியின் ஊழியர்கள் மத்தியில் பேசிய
அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கடந்த நான்காண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது சரியான கணக்குத்தானா?

தமிழ்நாட்டில் உள்ள சக்தி கேந்திரப் பொறுப்பாளர்களின் கூட்டம் சென்னையை அடுத்துள்ள ஈஞ்சம்பாக்கத்தில் திங்கட்கிழமையன்று நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியைக் கடுமையாகச் சாடியதோடு, கடந்த நான்காண்டு கால பா.ஜ.க. ஆட்சியில்தான் தமிழகத்திற்கென மத்திய அரசிலிருந்து அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

முரணான மோதி, அமித் ஷா கணக்குகள் –

தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் கீழ் –

13வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி தமிழகத்திற்கு
94 ஆயிரத்து 540 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும்
ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் 14வது நிதி ஆணையத்தின் கீழ்
1 லட்சத்து 96 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று தமிழகத்தில்
ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைப்பதற்காக வந்த பிரதமர்
நரேந்திர மோதி –

13வது நிதி ஆணையத்தின் கீழ் தமிழகத்திற்கு
81 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும்
14வது நிதி ஆணையத்தின் கீழ்
ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

கட்சித் தலைவர் அமித் ஷா சொல்வதற்கும் பிரதமர் நரேந்திர மோதி
சொல்வதற்கும் இடையில் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பது ஒரு
புறமிருந்தாலும் – 🙂 🙂

இந்தக் கணக்கே தவறானது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

வரி வீதம் அதிகரிப்பை பாஜக கொடுத்ததாக கூறலாமா?

வரி தொகுப்பில் 32 சதவீதத்தை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என
13வது நிதி ஆணையம் பரிந்துரைத்திருந்தது. ஆனால், 14வது நிதி ஆணையம் இதனை 42 சதவீதமாக உயர்த்தியது.

இதனால், இயல்பாகவே மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு அதிகரித்தது. 🙂

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், 14வது நிதி ஆணையத்தை அமைத்தது, பா.ஜ.கவுக்கு முன்பு ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்.

2013ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி 14வது நிதி ஆணையம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒய்.வி. ரெட்டியின் தலைமையில் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையத்தின் பரிந்துரையின்படி, நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதை பா.ஜ.க. எப்படி தன்னுடைய சாதனையாக சொல்ல முடியும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

ஓப்பீட்டில் குறைந்துள்ள தமிழக நிதி

“இதைவிட அபத்தமான வாதம் இருக்கவே முடியாது. 14வது நிதி ஆணையத்தை அமைத்தது காங்கிரஸ் ஆட்சி என்பது ஒரு புறமிருக்க,

முந்தைய ஆணையம் வழங்கிய நிதி சதவீதத்தோடு ஒப்பிட்டால்,
-19 சதவீதம் தமிழகத்திற்குக் குறைவாகக் கிடைத்திருக்கிறது என்பதுதான்
உண்மை” என்கிறார் பொருளாதார நிபுணரும் நிதி ஆணையங்களின் நிதிப்
பங்கீடு குறித்து தொடர்ந்து எழுதி வருபவருமான ஆர்.எஸ். நீலகண்டன்.

இதற்கு முந்தைய நிதி கமிஷன்களில் 1971ஆம் வருட மக்கள் தொகைக்
கணக்கிற்கு முக்கியத்துவம் அளித்த நிலையில், 14வது நிதி கமிஷன்தான்
முதல் முறையாக 2011ஆம் வருட மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு
முக்கியத்துவம் அளித்தது.

இதனால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற
மாநிலங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதேபோல, ஒழுங்காக
நிதியை நிர்வகிப்பது முந்தைய நிதி கமிஷன்களில் கணக்கில் கொள்ளப்பட்டது.

ஆனால், 14வது நிதி கமிஷனில் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

இதன் காரணமாக, தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நிதியில் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் கிடைக்காமல் போனது என்று சுட்டிக்காட்டுகிறார் நீலகண்டன். 🙂

இது தவிர, பா.ஜ.க. ஆட்சியில் 2017ஆம் ஆண்டில் என்.கே. சிங்கைத்
தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட 15வது நிதிக் கமிஷன், 1971ஆம்
ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு எந்த மதிப்பும் வழங்காமல்,
2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கே முழு மதிப்பையும்
வழங்க முடிவுசெய்தது.

இதனால், 1970களின் மத்தியில் இருந்து மக்கள் தொகையைக் குறைப்பதில் தீவிரமாக ஈடுபட்ட தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு கடுமையாக பாதிக்கப்படும். 🙂

“இதையெல்லாம்விட, அமித் ஷா ஏதோ தன்னுடைய பணத்தை எடுத்து
மக்களுக்குக் கொடுப்பதைப்போல அந்தக் கூட்டத்தில் பேசியிருப்பது மிக
மோசமானது. அது மாநில மக்களின் வரிப்பணம். அவர்களுக்குச் சேர
வேண்டிய பணம்” என்கிறார் நீலகண்டன். 🙂

பன்னீர்செல்வம் பிரதமர் மோதிக்கு கடிதம் –

இந்த விவகாரம் குறித்து 2015ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோதிக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

நிதிக் குழுவின் புதிய பரிந்துரைகளால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய
தொகையில் 19.14 சதவீதம் குறைவாகவே கிடைக்கும் என்பதை அவர்
சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதனால் வருடத்திற்கு ஆறாயிரம் கோடி ரூபாய் இழப்பை தமிழ்நாடு
எதிர்கொள்ளும் என்பதையும் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார்.

கைவிடப்பட்ட மோனோ ரயில் திட்டத்திற்கு முழு செலவையும்
கொடுத்ததா? 🙂

அடுத்ததாக, அமித் ஷா சென்னை மோனோ ரயில் திட்டத்திற்காக 3,267
கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறினார்.

இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு 2014 நவம்பரில் ஒப்புதல் அளித்தது.
அந்த ஒப்புதலில் இந்தத் திட்டத்திற்கான செலவு முழுவதையும் மாநில
அரசும், மாநில அரசின் ஏஜென்சிகளும் திட்டத்தில் பங்குபெறும் தனியார்
நிறுவனங்களுமே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் மத்திய அரசு
இதற்கென நிதியுதவி ஏதும் அளிக்காது என்றும் கூறப்பட்டது.

2015 மே மாதத்தில் ஓ. பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில், இந்தத்
திட்டத்திற்கான viability gap fundingஐ (விஜிஎஃப்) செய்யும்படி
வலியுறுத்தியிருந்தார்.

மத்திய அரசின் இந்த விஜிஎஃப் நிதி என்பது ஒட்டுமொத்த திட்டச்செலவில் அதிகபட்சமாக 20 சதவீதமாகும். 3,267 கோடி ரூபாய் திட்டச்செலவு கொண்ட மோனோ ரயில் திட்டத்திற்கான விஜிஎஃப் நிதி என்பது சுமாராக 650 கோடி ரூபாயாக அமையும்.

ஆனால், இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், மோனோ
ரயில் திட்டமே மாநில அரசால் கொள்கை ரீதியில் கைவிடப்பட்ட திட்டம்
என்பதுதான்… 🙂 🙂

கைவிடப்பட்ட திட்டத்திற்கு, அதுவும் மாநில அரசு – தனியார் ஒத்துழைப்பில் செயல்படுத்தப்படவிருந்த திட்டத்திற்கு எப்படி முழுத் தொகையும் மத்திய அரசு அளித்ததாக அமித் ஷா குறிப்பிட்டார் என்ற கேள்விக்கு விடையில்லை.

வறட்சி நிதியிலும் அமித் ஷா வழங்கிய குளறுபடி கணக்கு

2017ஆம் ஆண்டில் தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டதாக தமிழக அரசு கூறியது. இதற்காக நிவாரண உதவியாக தேசியப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 39 ஆயிரத்து 565 கோடி ரூபாய் நிதி அளிக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் கோரினார்.

அதேபோல, 2016ஆம் ஆண்டில் ஏற்பட்ட வார்தா புயலினால் பாதிப்பை
எதிர்கொள்ள மத்திய அரசு 22 ஆயிரத்து 573 கோடி நிதியுதவி அளிக்க
வேண்டுமென்றும் உடனடி உதவியாக ஆயிரம் கோடி ரூபாயை அளிக்க
வேண்டுமென்றும் தமிழக அரசு கோரியது.

ஆனால், வறட்சி நிவாரண நிதியாக 1748 கோடி ரூபாயும், வார்தா புயல்
சேதங்களுக்காக 266 கோடி ரூபாயும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டன.

இது மாநில அரசு கோரிய நிதியில் வெறும் 3.24 சதவீதம்.
மாநில அரசு கோரிய நிதி எவ்வளவு என்பது தற்போது மக்கள் மனதில் இருக்காது என்பதால், அதனை மத்திய அரசின் ஒரு சாதனையாக அமித் ஷா
முன்வைத்திருக்கிறார். 🙂 🙂

மருத்துவ கல்லூரிகளுக்கு உதவியது மத்திய அரசா? பாஜகாவா?

அடுத்ததாக, தஞ்சாவூர், நெல்லை மருத்துவக் கல்லூரிகளுக்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமித் ஷா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மத்திய அரசு, நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக
பிரதான் மந்த்ரி ஸ்வஸ்தீய சுரக்ஷா யோஜனா என்ற திட்டத்தை 2006ஆம்
ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, நாடு முழுவதும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளை
உருவாக்குவது, ஏற்கனவே இருக்கும் மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவது ஆகியவை மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும்.

இந்தத் திட்டம் துவங்கியதிலிருந்து இதுவரை நான்கு கட்டங்களாக மருத்துவக் கல்லூரிகள் தேர்வுசெய்யப்பட்டு நிதியுதவி அளிக்கப்பட்டது.

முதல் இரண்டு கட்டங்களில் மதுரை மருத்துவக் கல்லூரி, சேலம் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நான்காவது கட்டத்தில் தஞ்சாவூர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டது.

இந்த நான்கு கட்டங்களிலும் சேர்ந்து இதுவரை இந்தியா முழுவதும்
71 மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதில், நான்கு
கல்லூரிகள் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவை.

இந்தியா முழுவதுமுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதியுதவி அளிக்கும் இந்தத் திட்டத்தில் நிதியுதவி அளித்ததை, தமிழகத்திற்கு அளித்த சலுகையாக அமித் ஷா தன் உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தவிர, இந்தத் திட்டமும் 2006ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்
காலத்தில் துவங்கப்பட்டது. 🙂 “-)

அரசியல் சாசனத்திற்கு எதிரான கருத்து

“இந்தக் கூட்டத்தில் அமித் ஷா நிதிக் குழு குறித்து பேசியது முழுக்க முழுக்க அரசியல் சாஸனத்திற்கு விரோதமானது. நிதிக் குழுக்கள் என்பவை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 280வது பிரிவின் கீழ் சுயேச்சையாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டவை. அதன் மூலம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை, தங்கள் கட்சி ஒதுக்கீடு செய்வதாக பேசுவதே தவறு” …

நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு,
திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக நி்தி ஆயோக்
உருவாக்கப்பட்டது. இதனால், திட்டக்குழுவின் நிதியுதவியோடு
நடத்தப்பட்டுவந்த திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டது
என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

——————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to சென்னையில் அமித்ஜீ விட்ட ரீல்’கள்… சொன்ன பொய்கள்….!!!

 1. Pingback: சென்னையில் அமித்ஜீ விட்ட ரீல்’கள்… சொன்ன பொய்கள்….!!! – TamilBlogs

 2. Mani சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இப்போ எல்லாம் மக்கள் பாஜகவுக்கு எதிரா
  பேசவே பயப்படறாங்க போலிருக்கே
  பின்னூட்டங்கள் கூட காணோம்.
  புகைப்படத்தை பார்த்தே பயந்துட்டாங்க பொலிருக்கிறது. 🙂
  எதுக்கும் நீங்க ஜாக்ரதையா இருந்துக்குங்க சார்.
  சுவரை வைத்து தானே சித்திரம் எழுதணும் ?

  • அறிவழகு சொல்கிறார்:

   Mani,

   இந்த பின்னூட்டத்தில் அமித் ஷாவையோ பாஜகவையோ எதிர்த்து அப்படி என்ன நீங்கள் கருத்து சொல்லி விட்டீர்கள்.

   “உங்களுக்கு ஏதாவது பயமா…?”

   பின்னூட்டம் இடுவதற்கு அவரவர்க்கு பல காரணங்கள் இருக்கலாம். ஷிப்ட் முறையில் வேலை செய்து விட்டு தூங்கி எழுவது கூட அதில் ஒரு காரணமாக இருக்கலாம். அவரவர்க்கு தோதான நேரத்தில் தான் இடுவார்கள்.

   அதற்குள் மற்றவர்களை குற்றப் படுத்துவதை விட்டு நம் வேலையை செய்வது நலம்.

   • Mani சொல்கிறார்:

    அறிவழகு சார்,

    //ஷிப்ட் முறையில் வேலை செய்து விட்டு தூங்கி எழுவது கூட அதில் ஒரு காரணமாக இருக்கலாம். அவரவர்க்கு தோதான நேரத்தில் தான் இடுவார்கள்.
    அதற்குள் மற்றவர்களை குற்றப் படுத்துவதை விட்டு நம் வேலையை செய்வது நலம்.//

    அடேடே, நான் ஒங்களைத்தான் சொன்னேன்னு நீங்க எப்படி
    எடுத்துக்கிட்டீங்க ? ஆனாலும் அநியாய தன்னம்பிக்கைங்க ஒங்களுக்கு.
    தலையும் இல்லாம, வாலும் இல்லாம துண்டு துண்டா வர்ர துக்கடாக்களுக்காகவா இங்கே மக்கள் காத்துக்கிட்டுருக்காங்க ?
    நான் பொதுவா எழுதினதுக்கு நீங்க ஏன் ஜவ்வு அடிக்கறீங்க ?
    இந்த பின்னூட்ட பகுதியை நீங்க லீசுக்கு எடுத்துருக்கீங்களோ ?

    போங்க சார்; ஷிப்டு வேலை முடிஞ்சா தூங்க போங்க; மத்தவங்களுக்கு
    அட்வைஸ் வேண்டாம். எங்க வேலை எங்களுக்கு தெரியும்.

    • அறிவழகு சொல்கிறார்:

     பொத்தாம் பொதுவா சொன்னா இப்படித்தான் எல்லாரையும் குறிப்பதாக பொருள் படும்.

     சரியாக சொல்லியிருந்தால் ஏன் இத்துனை பேர் ‘குட்ட’ போகிறார்கள்.

     இனிமே சரியா சொல்றீயலா…

     • Mani சொல்கிறார்:

      // போங்க சார்; ஷிப்டு வேலை முடிஞ்சா தூங்க போங்க; மத்தவங்களுக்கு
      அட்வைஸ் வேண்டாம். எங்க வேலை எங்களுக்கு தெரியும்.//

      ஒரு தடவை சொன்னா ஒறைக்காதா ?
      திரும்ப திரும்ப வந்து மூக்கை ஒடெச்சுக்க வேணாம்.
      வந்தமா; ஒளறிக் கொட்டினமா; போய்ச்சேந்தோமான்னு இருக்கணும்;

     • அறிவழகு சொல்கிறார்:

      முண்டங்களிடம் பேசினால்…..

      ஏதாவது இப்படி தான்….

      ///இந்த பின்னூட்டத்தில் அமித் ஷாவையோ பாஜகவையோ எதிர்த்து அப்படி என்ன நீங்கள் கருத்து சொல்லி விட்டீர்கள்.

      “உங்களுக்கு ஏதாவது பயமா…?”///

      பதில்.

      பெரும் அயற்ச்சி தான் ஏற்படுகிறது. யார் கூடவெல்லாம் மாரடிக்க வேண்டியது இருக்கு.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      அறிவழகு,
      மணி –

      போதும்…. இருவருமே நிறுத்திக் கொள்ளுங்கள்.
      பின்னூட்டங்களை நீக்க வேண்டிய அவசியத்தை
      தயவுசெய்து எனக்கு ஏற்படுத்தி விடாதீர்கள்.

      சுவாரஸ்யமான, பயனுள்ள, தரமான,
      மற்றவர்கள் ரசிக்கக்கூடிய,
      பின்னூட்டங்களை
      தான் நான் இங்கு எதிர்பார்க்கிறேன்.

      -காவிரிமைந்தன்

 3. jksm raja சொல்கிறார்:

  மணி சார்,
  நான் புரிந்த வரையில், கொடுக்கப்பட்டிருக்கும் கட்டுரை, வாசகர்களின் மனஎண்ணத்தோடு ஒத்துப்போனால், பின்னுட்டம் குறைவாகவே வரும். இந்த இருக்கைக்கு மறுப்பு சொல்லி யாராவது பின்னூட்டம் இட்டால், அதன் பின்புவரும் reaction- ஐ பாருங்கள்.

  • அறிவழகு சொல்கிறார்:

   jksm raja,

   ///கொடுக்கப்பட்டிருக்கும் கட்டுரை, வாசகர்களின் மனஎண்ணத்தோடு ஒத்துப்போனால், பின்னுட்டம் குறைவாகவே வரும். ///

   அழகாக சொன்னீர்கள்.

   ஆர்எஸ்எஸ்/பாஜக வின் அடித்தளமே பொய் பிரச்சாரம் தான்.

   இல்லை என்றால் மத உணர்வுகளை தூண்டிவிட்டு கலவரங்களை ஏற்படுத்தி அதில் குளிர் காய்வது இவர்களின் வாடிக்கை. தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் என்ன நடக்க போகிறதோ…?

 4. புதியவன் சொல்கிறார்:

  பின்னூட்டம் போடலை என்றால், ‘பயம்’ என்று ஏன் நீங்களாகவே கற்பனை செய்துகொள்ளணும்?

  பொழுதுபோகலையா… இவர் பேசறதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு என்றும் நினைத்திருக்கலாமே. ஆரம்பத்திலிருந்தே அமித் ஷா அவர்கள் மீது எனக்கு எந்த வித அபிப்ராயமும் (மதிப்பும்) இல்லை. இதுல இவர் சொல்றதுக்கு நாம ஏன் ரியாக்ட் செய்யணும்?

  குறிப்பிடும்படியாக தமிழகத்துக்கு பாஜகவோ மத்திய அரசோ இதுவரை உதவியதுபோல் தெரியவில்லை. இதுல ‘புள்ளி விவரங்கள்’மீது யாருக்கு ஆர்வம் இருக்கும்? கூட்டத்திற்கு அழைத்துவரப்பட்டவர்கள் வேறு வழியில்லாமல் இதனைக் கேட்டுக்கொண்டு, அடுத்தது ‘எப்போ லஞ்ச்/டின்னர் டயம்’ என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கலாம்.

 5. Mani சொல்கிறார்:

  புதியவன் சார்,

  // பின்னூட்டம் போடலை என்றால், ‘பயம்’ என்று ஏன் நீங்களாகவே கற்பனை செய்துகொள்ளணும்?//

  மத்த டாபிக்குக்கு எல்லாம் நிறைய பின்னூட்டங்கள் வரும்போது, இந்த ‘தாதா’வுக்கு மட்டும் வரவில்லையென்றால் ‘பயமோ’ என்கிற சந்தேகம்
  வரத்தானே செய்யும் ?

  //இவர் சொல்றதுக்கு நாம ஏன் ரியாக்ட் செய்யணும்?//

  மத்தியில் ஆளும் கட்சியின் அகில இந்தியத் தலைவர். ஒவ்வொரு ராஜ்ஜியமாக
  கபளீகரம் செய்துகொண்டே வருகிறார். இங்கேயும் ஆட்சியைக் கவிழ்க்கப் போகிறார்கள் என்று பேச்சு அடிபடுகிறது. இதற்கெல்லாம் ரீயாக்ட் பண்ணவில்லை என்றால் வேறு எதற்குத்தான் ரீஆக்ட் பண்ணலாம் ? யாராவது மாமி எழுதும்
  சமையல் குறிப்புகளுக்கா ?

 6. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  whatever granted for Tamilnadu-Useless

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.