திருவாளர் எதிர்க்கட்சித் தலைவரின் செயல் ….!!!


அதிகாரபூர்வமாக வெளிவந்த செய்தி இது மட்டும் தான் –

இரவு சென்னையில் இருந்து லண்டன் செல்லும்
விமானத்தில் ஸ்டாலின் லண்டன் சென்று இருக்கிறார்.
அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் லண்டன்
சென்றுள்ளார். ஆனால் இதற்கான காரணம் என்ன என்று யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை……………

https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-working-leader-stalin-goes-
london-yesterday-night-324502.html?h=related-right-articles

அடுத்து வந்த செய்தித் தலைப்பு – comments இவை….

 

திரு ஸ்டாலின் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியின் தலைவர். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால், முதலமைச்சர் பதவியில் அமரக்கூடிய வாய்ப்பு உள்ளவர்.

அவர், வெளிநாடு செல்வதாக இருந்தால், இத்தனை நாட்களுக்கு, இந்த நாட்டிற்கு, இன்ன காரியத்திற்காக செல்கிறேன் என்று அறிவித்து விட்டுச் செல்வது தான் பொறுப்பான கட்சித்தலைவரின் லட்சணம்….

அவர் காரணத்தை சொல்லாமல், ரகசியமாக வைத்துக் கொண்டதால்,
பலவித வதந்திகள் உலவுகின்றன… இரைப்பை கட்டியிலிருந்து, எது எதுவோ எல்லாம் சொல்லப்படுகின்றன…

பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன – அவருக்கு உடலில் என்ன கோளாறு….? அடிக்கடி லண்டன் சென்று செக்கப் /சிகிச்சை செய்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன…? உடல் பிரச்சினை எல்லாருக்கும் வருவது சகஜம் தானே… இவர் அதிலும் ரகசியம் காக்க வேண்டியதன் அவசியமென்ன…?

சென்னையில் இல்லாத மருத்துவ வசதிகளா…? உலகின் பல மூலைகளிலிருந்தும் சிகிச்சைக்காக சென்னையை தேடிவரும்போது, இவர் வெளிநாடு செல்வதன் காரணமென்ன…?

-என்றெல்லாம் பல கேள்விகள்….

கூடவே இது போன்ற கமெண்ட்ஸ்ஸும் –

ஜெ.அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக கொடநாட்டில் தங்கி இருந்ததை, இவர் எந்த அளவிற்கு கொச்சைப்படுத்தினார் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பதைத்தான் மேற்கண்ட கமெண்ட் தெரிவிக்கிறது….

தன் வினை தன்னைச்சுடும் என்பார்கள்…
திரு.ஸ்டாலின் விஷயத்தில் அதனை இங்கே காண்கிறோம்.
இனியும், தனது உடல்நிலை, மருத்துவ சிகிச்சை
குறித்த விவரங்களில் ரகசியம் காக்காமல்,
தனக்கு என்ன பிரச்சினை…?
தான் வெளிநாட்டில் எத்தகைய சிகிச்சையை மேற்கொள்கிறோம்
என்பன போன்ற விவரங்களை

வெளிப்படையாக தெரிவிப்பதன் மூலம்தான் அவர் தனது
மதிப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும்…அநாவசியமான
வதந்திகளை தவிர்க்க முடியும்…

தவிரவும், முதலமைச்சர் பதவிக்கு முதல் வரிசையில் காத்திருப்பவர்
எந்த அளவிற்கு ஆரோக்கியமானவர் என்பதை
தெரிந்து கொள்ள தமிழக மக்களுக்கும் உரிமை உண்டு.

———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to திருவாளர் எதிர்க்கட்சித் தலைவரின் செயல் ….!!!

 1. Pingback: திருவாளர் எதிர்க்கட்சித் தலைவரின் செயல் ….!!! – TamilBlogs

 2. jksm raja சொல்கிறார்:

  எனக்கு தோன்றுவது என்னவென்றால், இவருக்கு உடல்நல பிரச்சனை ஏதும் இல்லை. உடல்நல பிரச்சனை இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை எடுப்பதற்காக லண்டன் செல்வதாகவும் பொய் செய்தியை கசியவிட்டுவிட்டு, இவர் லண்டனில் போட்டுள்ள முதலீடுகளின் மூலம் வரும் வருமானத்தை வசூல் செய்து அதை மீண்டும் வேறு எதிலாவது முதலீடு செய்வதற்காகத்தான் அடிக்கடி லண்டன் செல்வதாக தோன்றுகிறது. இவர் லண்டனில் எந்த மருத்துவமனையிலாவது இருப்பது போன்ற எந்த போட்டோவையாவது எப்பொழுதாவது பார்த்து இருக்கீர்களா சொல்லுங்கள் பார்ப்போம். போகும்போதும் தெம்பாகத்தான் போகிறார். வரும்போதும் தெம்பாகத்தான் வருகிறார்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   jksm raja,

   புதிய கோணம்… !!!
   உங்களின் இந்த கோணத்திலும் கூட உண்மைகள் இருக்கலாம்..!

   நம்முடைய புலனாய்வு பத்திரிகைகள் எதிர்க்கட்சித்தலைவரின்
   விஷயத்தில் எப்படி மௌனம் சாதிக்கின்றன பார்த்தீர்களா…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. ravikumar r சொல்கிறார்:

  I am not surprised about MKS activity. Being as political observer and writer i am surprised how you have not anticipated?

 4. புதியவன் சொல்கிறார்:

  சார்… நீங்க ரொம்பத்தான் அப்பாவி. ஏதோ தமிழ்நாட்டைப் பற்றி மிகவும் கவலைப்படுபவர் ஸ்டாலின் என்று கணிக்கிறீர்களே. அவருக்கு அது ஒரு பணம் காய்க்கும் தொழில். தினமும் வெளிநடப்பு, ரெண்டு கூட்டங்கள், அவருடைய வேலை ஓவர். அது தவிர அவரது தொழில்களை, வெளிநாட்டு வரவுகளை யார் கவனித்துக்கொள்வது? இதுலவேறு, இரத்த மாற்று செய்துகொள்ளவேண்டும் ரெகுலரா என்று ஒரு ரூமர். அது அதுவாட்டுக்கு, சுற்றுலா அதுவாட்டுக்கு, முதலீடுகளை வரவு வைக்க, கையெழுத்துப்போட என்று அதுவாட்டுக்கு. அவருக்கு லண்டன், மலேஷியா, சிங்கப்பூர், துபாய்லலாம் தொழில்கள் இருக்கு. இதுக்கு இடையில் நேரம் கிடைக்கும்போது, வயல்களில் நடக்கணும், ஆட்டோல நின்றுகொண்டே போகணும்… அவர் கவலை அவருக்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s