காமராஜர் – “ யாரு கூச்சல் போட்டது ? என்ன சொல்றீங்க? புரியும்படியா சொல்லுங்க “…..


சிலரைப்பற்றி சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கும்… வேறு எதாவது பலமான குறுக்கீடுகள் இருந்தாலொழிய தொடர்ந்து அவர்களைப்பற்றியே பேசிக்கொண்டிருப்போம்…. எம்.ஜி.ஆர், காமராஜர் – ஆகியோர் அத்தகையோர்… சுயநலம் பிடித்த அரசியல்வாதிகளிடையே அபூர்வமாகத் தோன்றிய – மாமனிதர்கள்.

அவர்களைப்பற்றி சொல்ல ஆரம்பித்தால், அலுப்பதே இல்லை…!!!

நேற்று இரண்டு இடுகைகள் பதிவிட்டிருந்தாலும், மீண்டும் இன்று
இன்னொன்றையும் நினைவுறுத்த விரும்புகிறது மனம்…. ஏற்கெனவே
2012-ல் இங்கு பதிவிட்ட இடுகை தான்…. இருந்தாலும், புதிதாக
வந்திருப்பவர்களுக்காக, மீண்டும் ஒரு முறை கீழே –

——————————————–

கடற்கரை கூட்டத்தில் தலைவர் காமராஜரிடம்
நான் கேட்ட கேள்வியும், அவர் சொன்ன பதிலும் !

இன்று ஜூலை 15. பெருந்தலைவர் காமராஜ் அவர்களின்
பிறந்த நாள். சிறு வயதிலிருந்தே காமராஜ் அவர்களின்
மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும், ஒட்டுதலும்
உண்டு. எனக்கு மிகவும் பிடித்த வெகு சில அரசியல்
தலைவர்களில் காமராஜ் அவர்கள் மிக முக்கியமானவர்.

அவரது பிறந்த நாளான இன்று,
அவருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை இங்கு
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் –

நான் வடக்கே ஜபல்பூரில் பணிபுரிந்து வந்த நேரம் அது.
இருபதுகளில்- துடிப்பான இளைஞன்.சூடான இளம் ரத்தம்.
என் பெற்றோர் அப்போது பாண்டிச்சேரியில் இருந்தனர்.
அவர்களைப் பார்க்க –ஒரு வார லீவில் வந்திருந்தேன்.

என் நினைவில் இருப்பதை
வைத்துச் சொல்கிறேன் –

மாலையில் கடற்கரையில், டூப்ளே சிலையருகே
மீட்டிங். தலைவர் காமராஜ் பேசுகிறார் என்று
தெரிந்தது.

ஆவலுடன் சென்றேன். என் அண்ணனும் என்னுடன்
வந்திருந்தார். அப்போதெல்லாம் கூட்டத்திற்கு
சேர் போடும் வழக்கம் கிடையாது. மணலில் தான்
கடலை நோக்கி, மேடையை நோக்கி – அமர்ந்திருந்தோம்.

அப்போது பிரதமர் இந்திரா காந்திக்கும்,
காமராஜ் -நிஜலிங்கப்பா போன்ற மூத்த காங்கிரஸ்
தலைவர்கள் அடங்கிய குழுவிற்கும் இடையே  பிணக்கு ஏற்பட்டிருந்தது. இந்திரா இவர்கள் யார்
ஆலோசனையையும் ஏற்பதாக இல்லை.

அதற்கு சில மாதங்கள் முன்னதாக,
(லால் பகதூர் சாஸ்திரியின் மறைவிற்குப் பின் )புதிய
பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்தபோது,
காமராஜ் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக
இருந்தார். காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற கூட்டத்தில் தலைவர்(பிரதமர்) பதவிக்கு மொரார்ஜி தேசாய்க்கும் இந்திராவிற்கும் இடையே கடும் போட்டி இருந்தது.

காமராஜ் அவர்கள் தன் ஆதரவை இந்திராவிற்கு
தெரிவித்ததால் தான்  இந்திரா அம்மையார்
சுலபமாக  பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட முடிந்தது.

எனவே இந்திரா – குறைந்த பட்சம் காமராஜ் அவர்களுக்காவது விசுவாசமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், தான் பிரதமர் ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்த காமராஜரைக்கூட திருமதி இந்திரா மதிக்கவில்லை.

காமராஜ் அவர்கள் கூட்டத்தில் பேசும்போது,
இந்திரா காந்தி மூத்த தலைவர்களை எல்லாம்
புறக்கணித்து,
அவமானப்படுத்துவதைப் பற்றி வருத்தப்பட்டு
பேசிக் கொண்டிருந்தார்.

நான் உட்கார்ந்த இடத்திலிருந்தே, ஒரு
ஆதங்கத்துடன்
பலமாகக் கூறினேன்.
“நீங்க தானே அவரைக் கொண்டு வந்தீங்க ?”

காமராஜ் ஒரு கணம் பேசுவதை நிறுத்தினார்.
கூட்டத்தைப் பார்த்து –
“யாரு -யாரு கூச்சல் போட்டது ? என்ன சொல்றீங்க?
புரியும்படியா சொல்லுங்க “ என்றார்.

கூட்டத்தின் நடுவே உட்கார்ந்திருந்த நான் எழுந்திருக்க
முயன்றேன். என் அண்ணன் என் கையைப்
பிடித்து
அழுத்தினார் – எழுந்திருக்காதே என்கிற விதமாக.
அவரிடமிருந்து விடுவித்துக் கொண்டு எழுந்து
நின்றேன்  நான்.

“சார் – நீங்க தானே அவங்களை ப்ரைம் மினிஸ்டரா
ரெகமண்ட் பண்ணினீங்க ?” என்று சத்தமாக
இருந்த
இடத்திலிருந்தே சொன்னேன் நான்.

ஒரு கணம் கூட்டம் முழுவதும் அமைதி.
அடுத்த கணம், தயக்கமே இல்லாமல் தொடர்ந்தார் –

“ஆமாம் – யாரு இல்லேன்னாங்க ?
நேருஜியோட மகளாச்சே – நல்லது செய்வாங்கன்னு
நெனைச்சேன். தப்பாப் போச்சுங்கறேன்.  இப்படிப்
பண்ணுவாங்கன்னு யாருக்கு தெரியுங்கறேன்”
-என்றார்.

அவ்வளவு பெரிய கூட்டத்தில்,
அவ்வளவு பெரிய தலைவர் –
இடைமறித்து கேள்வி கேட்டவர் மீது கோபப்படாமல்,
கேட்டவரின் உணர்வுகளை மதித்து,  
கொஞ்சம் கூட தயக்கமின்றி,
அடுத்த பிரதமரை அடையாளும் காணுவதில் தான்
செய்த தவறை ஒப்புக்கொண்டது எனக்கு பிரமிப்பை
ஏற்படுத்தியது.

இன்றைய தினத்தில் எந்த அரசியல்வாதியிடமாவது
இத்தகைய வெளிப்படையான அணுகுமுறையை
எதிர்பார்க்க முடியுமா ?

இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு –
இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களை எல்லாம்
பார்க்கும்போது அவர் மீது உள்ள மதிப்பு –
பலநூறு மடங்கு அதிகம் ஆகிறது.

இனி எங்கே, எப்போது – பார்க்கப்போகிறோம்
இத்தகைய தலைவர்களை ?

———————–

வரலாற்றைச் சொல்லும் புகைப்படங்கள் –

1) இந்திரா காந்தி காங்கிரஸ் பாராளுமன்ற
உறுப்பினர் கூட்டத்தில் தலைவராக/பிரதமராக
தேர்ந்தெடுக்கப்படுவதை, அதற்கு காரணமாக இருந்த,
அருகில் அமர்ந்திருக்கும் தலைவர் காமராஜர்
கைகுலுக்கி பாராட்டுகிறார்.

2) பிரதமராக ஒரு நிகழ்ச்சியில் இந்திராவும்,
காமராஜரும். இங்கு body language பேசுகிறது.
பிரதமர் ஆகி விட்டதால் அலட்சியமாக இந்திரா !
பிரதமருக்கு அருகிலேயே கம்பீரமாக கால் மீது கால்
போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் காமராஜர் !

3) இந்திராவுடன் பிணக்கு ஏற்பட்ட பிறகு –
கன்னியாகுமரியில் பிரதமரின் தலைமையில் ஒரு விழா.
தொகுதி M.P.யாக விழாவில் கலந்து கொண்ட காமராஜர்.

இருவருக்குமிடையே symbolic ஆக –
இருக்கும் இடைவெளியைப் பாருங்கள்.

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to காமராஜர் – “ யாரு கூச்சல் போட்டது ? என்ன சொல்றீங்க? புரியும்படியா சொல்லுங்க “…..

 1. Arun சொல்கிறார்:

  //இன்றைய தினத்தில் எந்த அரசியல்வாதியிடமாவது
  இத்தகைய வெளிப்படையான அணுகுமுறையை
  எதிர்பார்க்க முடியுமா//
  I think Kamal is doing it to some extent. He publicly apologised for supporting demonetisation and even had the guts to urge PM to do so.

  • புதியவன் சொல்கிறார்:

   அருண் – Sorry.. நான் எழுதுவதற்கு.

   கமல் தன்னைச் சுற்றி, தன் ‘எடுபிடிகளை’ மட்டும் வைத்துள்ளார். நான் படித்த வரையில், கமலின் எண்ணவோட்டத்தை விமரிசிப்பவர்கள், அவருக்கு அறிவுரை சொல்பவர்கள், அவர் நிலை தவறு என்று தைரியமாகச் சொல்லுபவர்கள் எவரையும் கமல் தன்னைவிட்டு விலக்கிவிடுவார். அதனால், கமல், நிச்சயம் நோட்டாவுக்குத்தான் போட்டி. வெறும் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தினால், தான் ‘அடுத்த கருணாநிதியாக ஆகிவிடலாம்’ என்ற அவர் நினைப்பு, வாக்குகள் எண்ணப்படும்போதுதான் எவ்வளவு தவறு என்பது அவருக்குப் புரியும்.

  • Mani சொல்கிறார்:

   அருண்,

   யாரையும் யாரையும் ஒப்பிடுகிறீர்கள் ?
   இமயமலையையும், பரங்கிமலையையுமா ?

   • Arun சொல்கிறார்:

    Hi Mani,
    It is not about who against whom we compare. It is the quality of accepting the mistake we compare.

    Puthiyavan,
    No need to be sorry Bro.
    //கமல், நிச்சயம் நோட்டாவுக்குத்தான் போட்டி//
    Again my comparison is just about the attitude to accept mistakes..

 2. புதியவன் சொல்கிறார்:

  காமராஜரைப் பற்றிய செய்திகளில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது ஒன்று உண்டு. படிப்பறிவில்லாதபோதும் அவரிடம் பட்டறிவு மிகுந்து இருந்தது. அதனால்தான் வட நாட்டு அரசியல்வாதிகள், தலைவர்களோடு இணைந்து அவர்களும் ஏற்றுக்கொள்ளும்படியான நிலைக்கு உயர முடிந்தது. நேரு போன்ற தலைவர்கள், ‘தான் அவர்களுக்குச் சமம், தானும் ஒரு அரசியல் தலைவரே’ என்ற எண்ணம் தன்மீது கொண்டுவிடக்கூடாது என்று காமராசர் மிகுந்த ஜாக்கிரதை உணர்வோடு இருந்தார் (ஏனென்றால் நேரு அவருடைய தலைவர்). மக்கள் மற்றும் கட்சி அபிமானம் இந்திராவிடம் இருக்கும் (நேருவின் மகள் என்பதால்) என்பதால்தான் இந்திராவைத் தலைவராக முன்மொழிந்தார் காமராசர். கட்சியின் நலனை மட்டுமே முன்னிறுத்தி அவர் முடிவுகளை எடுத்தார்.

  சிறிய பெண் இந்திரா தன்னை ஒதுக்கியதை, அதுவும் தவறான பாதைகளில் செல்வதை காமராசரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இந்திரா, கட்சியில் தன் தலைமையை நிலைநிறுத்த, கட்சியையே பிளந்தவர், கட்சி வேட்பாளரையே தோல்வியுறச் செய்தவர். அத்தகைய குணம் கொண்ட இந்திரா, எப்படி காமராசரைப் பொறுத்திருந்து அரசியல் செய்ய இயலும்? இந்திரா விரும்பியது, தன்னைத் தவிர எல்லா தலைவர்களும் டம்மிகளாக இருக்கவேண்டும் என்பதை.

 3. Pingback: காமராஜர் – “ யாரு கூச்சல் போட்டது ? என்ன சொல்றீங்க? புரியும்படியா சொல்லுங்க “….. – TamilBlogs

 4. vic சொல்கிறார்:

  காமராசர் கக்கன் எல்லாம் ok வரும் தேர்தலுக்கு என்ன பிலான்

 5. அறிவழகு சொல்கிறார்:

  காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் ஏன் திரும்ப கிடைக்கவில்லை.

  இதில் யார் குற்றம்…? மக்களா….. தலைவர்களா…?

  யார் மாறிப் போனார்கள்.

  தலைவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்…?

  மக்களில் இருந்து, எனில் மக்கள் தான் மாறி போனார்களா என்றால் அவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை ஓட்டு போட்டு தலைவர்களை தேர்ந்தெடுப்பதை தவிர அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள். எனில் தலைவர்கள் தானா…?

  தவறுவதற்கு வாய்ப்பு தலைவர்களுக்கு தான் அதிகம். பதவி எல்லா அனுகூலங்களையும் அளப்பறிய சந்தர்ப்பங்களையும் அளிக்கிறது.

  அப்படி தன்னை தானே கெடுத்துக் கொண்டு இந்த நாட்டையும் நாசமாக்குவது தலைவர்கள் தான்.

  நேரு, காமராஜர், லால் பகதூர் சாஸ்திரி வழியில் வந்தவர் தானே இந்திரா. அவரை யார் மாற்றியது. மக்களா…? எமர்ஜென்சி கொண்டு வந்தது….?

  இந்திராவின் தொடர்ச்சி தான் மோடி.

  ஒவ்வொரு தலைவர்களும் தங்களலவில் ஒரு பரிமாணத்தை காண்பிக்கிறார்கள்.

  மோடி தன் மனப் பிரழ்வை காண்பிக்கின்றார். எனவே மக்கள் அனைவரும் அப்படி தான் என்று சொல்ல முடியாது அல்லவா…!

  இந்த மனம் பிரழ்ந்தவரின் ஆட்சி இன்னும் தொடர்ந்தால் நாட்டின் கதி…?

  விதி.

 6. அறிவழகு சொல்கிறார்:

  பரிமாணத்தை = பரிணாமத்தை

 7. Nalini சொல்கிறார்:

  சிறு வயதிலிருந்தே காமராஜ் அவர்களின்
  மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும், ஒட்டுதலும்
  உண்டு. எனக்கு மிகவும் பிடித்த வெகு சில அரசியல்
  தலைவர்களில் காமராஜ் அவர்கள் மிக முக்கியமானவர்…….. MEE TOO

 8. tamilmani சொல்கிறார்:

  தமிழர்கள் செய்த இமாலய தவறு 1967 தேர்தலில் காங்கிரெஸ்ஸை
  தோற்கடித்து ஊழல் கட்சிகள் ஆட்சி அமைக்க உதவியது. அவர்கள்
  தோற்கடித்தது காமராஜரை அல்ல, அவர்களையே அவர்கள்
  தோற்கடித்துக்கொண்டார்கள்.

 9. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  I know about Kamaraj & MGR only by hear-say and reading. I feel so sad and sorry for your words – “எம்.ஜி.ஆர், காமராஜர் – ஆகியோர் அத்தகையோர்… சுயநலம் பிடித்த அரசியல்வாதிகளிடையே அபூர்வமாகத் தோன்றிய – மாமனிதர்கள்”…… How can a person like you put Kamaraj & MGR in same lines……Again coming to the article and the subject matter of the article, do you think same could have happened with MGR ?…..Had it happened, you would have been parceled to Ramavaram. In such a scenario, it is so bad to show Kamaraj and MGR in same lines. I accept MGR too had thoughts of people in mind. But he and his image stood above all. I still believe his image protected carried away everything as I could not realize a solid scheme introduced by him which had benefited a large section of society).

  For quite sometime I have not been commenting here, because of you aligning towards or “speaking for” superstar…..Sir, I am so sad that a person like you is speaking for a drunkard who cant take any decisions.(if you would object me for saying the word “drunkard”, through your connections, check it out why he had gone to Singapore for treatment). I accept everyone has their own preferences, choices and favoritism. I believe in your sensibility. Please do not speak for that guy. If so please dont try to spread a positive image about him, as many neutral people are also reading your posts, who may get carried away(I hope they wont, but still we are all humans).

  Thanks.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சன்மத்,

   இரண்டு விஷயங்களை மட்டும் உங்களுக்கு சுருக்கமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

   1) இரண்டு மனிதர்களை ஒப்பிடும்போது, அவர்களிடையே 100 சதவீதம் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது
   அவசியமே இல்லை… காமராஜர், எம்.ஜி.ஆர் – இருவரையும் நான் ஒப்பிடக் காரணம் – அந்த இரண்டு
   தலைவர்களுமே – சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் மீது, ஏழை மக்களின் மீது உளப்பூர்வமாக இரக்கம்,
   அனுதாபம், கருணை, பரிவு – காட்டினார்கள். இருவருமே தங்களால் இயன்ற அளவிற்கு இந்த மக்களுக்கு
   உதவினார்கள்….
   இது ஒன்று போதும் – அவர்கள் இருவரையும் ஒப்பிட.

   2) இப்படி எழுதினால் இவருக்கு பிடிக்கும், இப்படி எழுதினால் இவருக்கு பிடிக்காது என்றெல்லாம்
   நான் யோசித்து எழுதுவதில்லை…. என் மனசாட்சிக்கு எது சரியென்று தோன்றுகிறதோ, அதைத்தான்
   எழுதிக்கொண்டிருக்கிறேன்… இனியும் அப்படித்தான் எழுதுவேன்…

   சன்மத்’துக்கு பிடித்தாலும் சரி… பிடிக்கா விட்டாலும் சரி.

   அது சரி – உங்களுக்கு பிடித்ததை மட்டும் தான் நான் எழுத வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்…?
   உங்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு எப்படி என் எழுத்தை உள்ளாக்க முடியும்…?

   பொது வாழ்வில் ஈடுபடும் ஒரு மனிதரைப்பற்றி கணிக்க எனக்கு அனுபவம் பத்தாது என்று நீங்கள் நினைத்தால்… என்னைப்பற்றி நீங்கள் கொண்டிருக்கும்
   உயர்ந்த அபிப்பிராயத்திற்கு மிக்க நன்றி.

   Anytime in the past – நான் உங்கள் பார்வையில் மதிப்பிற்குரியவனாக,
   பிடித்தவனாக – இருந்திருந்தால் – அதற்காகவும் நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Sanmath AK சொல்கிறார்:

    KM Sir,

    I have never asked you to write things which I am aligned to and neither commenting hard like “bhakts”. I get saddened when “you” support superstar, because it is “you”. So, when a person like you writes “for” sup.star, I feel bad. That is it. Not just anytime in past, even now I respect your thoughts towards a good society – and so could not digest when you speak for that guy.

    Of course I accept that two people being discussed upon or being compared for similarities do not require to have similar traits. Yes, both might have got good thoughts about improving the state of downtrodden. But thoughts should become actions and the way of life implementing those thoughts for the welfare of people is higher, greater for Kamaraj and MGR cant be compared with a great man like Kamaraj. I am just stressing this Sir.

    • அறிவழகு சொல்கிறார்:

     Mr.Sanmath, I agreed your valued points about MGR and Rajini.

     And also I agreed 100% with KM sir as he is insists somany times in this regard, this is his blog and he has full right to write what he’s thought. No one can’t imposed him to what to write and what to do not.

     As he has been allowing every one to comment in all the articles he writes and others feedback here, I would honestly say that he is showing his generosity and he is requesting the people to decent dialogue. I definitely warm welcome this one as well.

     Dear Bros.

     Instead of pointed out him, “why you are doing this”, he hates this kind of commanding feedback, we can criticise his writes in a honourable manner as he is very happy to give reply and explanation. If my observation is right.

     Yes, Mr. Sanmath, again I would like to say, your stand is absolutely right about Rajini and MGR. I welcomed it.

     If we comparatively speaking with Kamaraj what MGR have done to the Tamil Nadu as a CM. He has good hearted, he has given away lot of things, money. That’s different. These are his personal life activities, that’s why Tamil People carry him on their head as Ponmachemmal, Ithaya theivam etc…etc….right, when he’s in power in 13 years what he’s done to the people there are some good things, agreed but comparatively speaking to Kamaraj very few.

     I would say even Omanthoorar (any body knows about him? ) O. P. Ramaswamy Reddiyar done better than him. He is far better than him.

     Now if we come to Rajini he is not even a baby in politics. In one tv debate Kankaraj of CPM said about Rajini, tell him to come to meet the people then only he came to know what is real life. He’s still living in the sky.

     If we looking him one side of his personal life we can’t even compare to MGR.

     Few months back KM sir asked few questions about Rajini. I think that those questions still unanswered. Then how he would be a better choice.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.