பகுதி-2 – ஜெயலலிதா…. கரண் தாப்பர் இண்டர்வியூ… என்ன சொல்கிறார் கரண் தாப்பர்….
கரண் தாப்பர் புதிதாக எழுதியிருக்கும் Devil’s Advocate: The Untold Story,
புத்தகத்திலிருந்து ஜெயலலிதா அவர்களுடன் நிகழ்ந்த அந்த இண்டர்வியூ பற்றி மட்டும் சிறிதளவு (ஒரு பக்க அளவு ) வெளிவந்திருக்கிறது….

புத்தக விற்பனையை boost செய்வதற்காக selective-ஆக இது
வெளியிடப்பட்டிருக்கலாம்….

அநேகமாக இண்டர்வியூவில் என்ன நடந்ததோ, அதைத்தான் அவர் சொல்கிறார்…. கூடவே சில செய்திகள், இண்டர்வியூவின் பின்னணி
குறித்து சில செய்திகளை வெளியிடுகிறார்….

…………

துவக்கத்தில் ஜெ.பற்றி, உயர்வாகத்தான் பேசுகிறார் –

Of all the people I had ever wanted to interview, Jayalalithaa
was almost at the top of the list. She intrigued me. Her convent accent, sangfroid, deliberate manner and glide-like walk were captivating. She was so cultivated, so carefully put together, she seemed unreal.

———

பிரச்சினைக்கான காரணம் இங்கே தான் துவங்குகிறது என்று கரண் தாப்பர் கூறுவது இதை…

” The trouble began with something as silly as flowers. Jayalalithaa had asked for some to be placed on the interview table. So a vast arrangement that stretched from end to end was readied. I balked and refused to allow this huge display to obstruct my view. Instead, I placed them on a stool by her side. ”

ஜெ. நல்ல உயர் ரசனையும், அழகுணர்வும் உள்ள ஒரு பெண்மணி. அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் கவனித்திருப்போம்..
நிறைய மலர்களுடன் அழகான தோற்றத்துடன் மேடை மிளிரும்.

மெனக்கெட்டு, அவர் டேபிளில், மலர் அலங்காரம் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கும்போது, அதை தடுக்க தாப்பருக்கு என்ன உரிமை..? அதிகாரம்…?

இண்டர்வியூ நடந்தது கோட்டையில், ஜெ.அவர்களின் அலுவலகத்தில்…அங்கே தாப்பர் அதிகாரம் செலுத்தியது தவறு.. மலர்களை வைக்கக்கூடாது என்று அவர் சொன்னது முதல் தவறு.

அதற்கான காரணமாக அவர் கூறுவது, மிகக்கேவலமான ஒரு கற்பனை.

ஒரு மிகப்பெரிய விஐபி-யை இண்டர்வியூ செய்யப்போகிறவருக்கு
அவரைப்பற்றிய பின்னணிகள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்…
தெரிந்திருந்தது என்பதை அவரே பிற்பாடு உறுதி செய்கிறார்.

” What I did not know was that the flowers were not intended
for their beauty. Jayalalithaa wanted to hide her notes behind them.
In their absence, the papers she carried became visible and, as the interview proceeded, I could see her flicking through them…”

ஜெ. தான் கொண்டுவந்த பேப்பர் குறிப்பை அங்கே பூக்களிடையே மறைத்து வைத்து, அவ்வப்போது பார்த்துக் கொள்ள விரும்பினார். அங்கே பேப்பர் நோட்ஸ் இருப்பதை பார்வையாளர்கள் உணரக்கூடாது என்று அவர் நினைத்திருப்பார் என்று கரண் சப்பைக்கட்டு கட்டுகிறார்….

பல காரணங்களை வைத்து தாப்பர் உளறுகிறார் என்று சொல்லலாம்….

1) ஜெ.எந்தவித குறிப்பும் இல்லாமல் மணிக்கணக்காக பேசக்கூடியவர்
என்பதை அனைவருமே அறிவர். அவர் கையில் வைத்திருந்தது பெரிய அளவிலான பேப்பர் கத்தைகள் என்பதை இண்டவியூவில் பார்க்கலாம். அவ்வப்போது எதாவது புள்ளி விவரங்கள் தேவைப்பட்டால் – refer செய்வதற்காக அதை வைத்திருந்திருக்கிறார்…. பூக்களிடையே மறைத்து வைக்கக்கூடிய சைசிலா அது இருந்தது…?

2) ஜெ. குறிப்புகளிடையே ஏதோ புள்ளி விவரத்தை தேடியபோது, வேண்டுமென்றே இடையில் தாப்பர் குறுக்கிட்டு, நீங்கள் பார்த்து படிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுவது போல் கூறினார்…. இது வேண்டுமென்றே அவமானப்படுத்தும் ஒரு செயல்.

3) தாப்பர் எத்தகைய கேள்விகளை கேட்கப்போகிறார் என்பது ஜெயலலிதாவுக்கு எப்படித் தெரியும்…? அந்த நிலையில் அவர் எப்படி பதில் தயாரித்து வந்து, அதைப் படித்திருக்க முடியும்….?

4) அதனாலேயே கோபமடைந்த ஜெ. கடுமையாக பதிலடி கொடுத்தார்…
“நான் படிக்கவில்லை… உங்கள் கண்களைப் பார்த்து நேரடியாகப்
பேசுகிறேன்”… என்று இரண்டு தடவை கூறுகிறார்.

” From time to time, she even seemed to look down and read. I suppose my
mistake ( பை மிஸ்டேக் அல்ல… வேண்டுமென்றே…)
was to point this out. I don’t know why I did it. “I’m not reading,” she shot back angrily. “I am looking at you straight in the eye. I look at everyone straight in the eye.”

In fact, the truth is that the interview got off to a bad start well before this
happened. The fault was undoubtedly my first question.

( முதல் கேள்வி மட்டுமல்ல… இண்டர்வியூ செய்தவரின்
மொத்த குறிக்கோளே முடிந்தவரை ஜெயலலிதா அவர்களை அவமானப்படுத்துவது என்பதாக இருந்திருக்கிறது…)

————-

“Chief Minister, let’s start with your image,” I began. “For the last three years the press has at different times portrayed you as undemocratic, unreliable,
irresponsible, irrational and even vengeful. Are you misunderstood or
can you accept you have made errors and mistakes?”

———–
I had intended to attract attention with this question. Unfortunately, to
Jayalalithaa, it probably felt like a personal attack. Anyway, I had a set of
questions and was determined to carry on.

“And what about the withdrawal of defamation cases against
the media and the cancellation of punishment and disciplinary action
against government servants for going on strike last year?
They seemed arbitrary and unjustified then and they seem the same now.”

—————

I next raised the manner in which she had arrested her political adversary M.
Karunanidhi. It had happened just over three years earlier.
At the time he was 77 and a former Chief Minister of 14 years’ standing.

“You arrested your predecessor at 2 in the morning on a Saturday,
although the FIR against him had only been filed the day before.
And then he was taken kicking and screaming to jail. Why was it done in this high-handed fashion?”

In fact, sections of the press had concluded that this was Jayalalithaa’s
revenge for the fact that Karunanidhi had arrested her after
she lost power in 1996. Once again, Jayalalithaa was incandescent.
Her fury was visible.

—-

“The DMK government foisted cases against me and threw me into jail. I
languished in jail for 28 days for a case in which I was ultimately acquitted. When Karunanidhi did this, the media gave him kudos, portraying it as the triumph of good over evil. When I became Chief Minister, Mr. Karunanidhi was arrested in a corruption case. At the time his family channel, Sun TV, played a big hoax, putting out very cleverly edited footage. It was not vengeance. I do not regret it at all.”

———-

Once again, changing subjects, I decided to put to her the zigzag way in which
she had switched political alliances over the last six years.

———–

இங்கே மீண்டும் மீண்டும், திருமதி சோனியா காந்தியைப்பற்றி தான் விவாதிக்க விரும்பவில்லை என்று ஜெ. சொல்லும்போது,
அதை லட்சியம் செய்யாமல், மீண்டும் மீண்டும் அதையே கேட்கிறார் தாப்பர்….

“Let’s turn to what they call your unreliability. You fought the ’98 elections
opposed to Sonia; you fought the ’99 elections as her ally, by 2003 you had
changed sides again and now, after the Congress has won,
you’re claiming there is nothing personal about it. You seem to change
your mind every time the mood in the country alters.”

This time Jayalalithaa refused to answer. “I don’t want to discuss Sonia Gandhi in this interview. I have a choice to pick and choose the questions
I want to answer.”

——————

Finally, in the dying seconds, as I thanked her, I stretched out my hand and
added, “Chief Minister, a pleasure talking to you.”

For a moment she stared back implacably.
“I must say it wasn’t a pleasure talking to you. Namaste.”
She rebuffed my proffered hand, unclipped and banged down
the mike, and sailed out of the room.

பலபேர் இந்த இண்டர்வியூவை பார்ப்பார்கள் என்று தெரிந்திருந்தும்,
பட்டவர்த்தனமாக, முகத்தில் அடித்தாற்போல்,
காமிராவின் முன்பாகவே இப்படிச் சொல்லும் ஜெயலலிதாவின்
அப்போதைய மனநிலை மிகத்தெளிவாக தெரிகிறது.

வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று ஆணி அடித்தாற்போல்
பேசும் அவரது பாங்கு வியப்பளிக்கிறது… எதையும், வழவழவென்று,
பூசி மெழுகும் அரசியல்வாதிகளிடையே இது மிக மிக அபூர்வம்…!

———————-

கரண் தாப்பர் தொடர்கிறார் …..

As we drove out of Fort St. George, Ashok Upadhyay (the producer) turned to
me, the tapes of the interview firmly in his hands, and said,
“We better make the most of this interview because Jayalalithaa will
never give you another one again.”

( ஜெயலலிதா நினைத்திருந்தால், அந்த இண்டட்வியூ ஒளிபரப்பாகாமல் தடுத்திருக்கலாம்… பேட்டி கொடுத்தவர் என்கிற வகையில், அவருக்கு அந்த உரிமை இருந்தது….மேலும், இண்டர்வியூ நடந்தது கோட்டையில், அவரது அலுவலகத்தில்… அங்கேயே – வீடியோவை நிறுத்திக் கொண்டிருக்கலாம்….ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை… அந்த இண்டர்வியூ ஒளிபரப்பாவதை தடுக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை…

அவரது அசாத்திய தன்னம்பிக்கையையே அது காட்டுகிறது… )

Although at the time I was convinced he was right, Amma proved that
Ashok was decidedly wrong. Either because she was a great politician or a generous and large-hearted woman, she took me completely by surprise when we next met.

It happened two years later at a National Integration Council meeting
in Vigyan Bhawan, New Delhi. I was talking to Odisha Chief Minister
Naveen Patnaik when she walked up and joined us. I assumed it was
Naveen she wished to meet, not me, so I stepped aside.

“Where are you going, Karan?” she said in a voice that sounded genuinely
cheerful. “I came to talk to you. I meet Mr. Patnaik all the time.”

I was stumped. I couldn’t believe what I’d heard. Indeed, I stared back in silence, not knowing what to say. “Well,” she said, smiling, her eyes twinkling with mirth, “aren’t you going to say something?”

“I wasn’t sure you wanted to meet me,” I stammered.
“Have you forgotten our last meeting?”

“Of course,” she said and laughed. “In fact, isn’t it time for another?” But before I could answer she turned to Naveen and asked how he was. I took this as my cue to leave.

– மீண்டும் ஒரு இண்டர்வியூவிற்கு தயாரா …? என்று இங்கே
ஜெயலலிதா அவர்களே கேட்க ( சவால்…? ) கரண் தாப்பர் நழுவுகிறார்…!

————————————————

உங்களுக்கு இன்னமும் எதிர்காலம் இருக்கிறதா…?
அடுத்த தேர்தலில் ஜெயிப்போம் என்கிற நம்பிக்கை இருக்கிறதா
என்று தாப்பர் கேட்ட பிறகு –

ஜெயலலிதா இரண்டு முறை (2011-லும், 2016-லும்)
சட்டமன்ற தேர்தலிலும் 2014 பாராளுமன்ற தேர்தலிலும்
மகத்தான வெற்றியை பெற்றுக் காட்டினார்.

———————–

14 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு பேட்டியை பற்றி இப்போது –
தான் நினைக்கிற கோணத்தில் பின்னணிகளை கதைத்து, கரண் தாப்பர் இந்த புத்தகத்தை வெளியிடுகிறார்….

ஜெயலலிதா அவர்கள் இறந்து ஒன்றரை வருட காலம் ஆகி விட்டது…

இப்போது கூட, அவருக்கு வருத்தம் ஏற்படும் முறையில் தான் நடந்து
கொண்டதற்கு கரண் தாப்பர் புத்தகத்தில் சிறிதும் வருத்தம் தெரிவிக்கவில்லை….

மாறாக, உண்மைக்கு மாறான காரணங்களைச் சொல்லி…
தன் பக்கத்தில் எந்த தவறும் இல்லையென்பது போல் உருவாக்கம்
செய்கிறார்….

—————————-

மொத்தத்தில், கரண் தாப்பர் அப்போது எடுத்த இந்த இண்டர்வியூ,
யாருடைய எதிர்பார்ப்பையோ நிறைவேற்றுவதற்காகவென்றே எடுக்கப்பட்டது என்பது போல் தான் தெரிகிறது….

( கரண் தாப்பர், திருமதி சோனியா காந்தி அவர்களின் குடும்ப நண்பர் –
இது இங்கே ஒரு கூடுதல் தகவலாக மட்டுமே சொல்லப்படுகிறது…….

எப்படி வேண்டுமானாலும் யூகித்துக் கொள்ளும் உரிமை நண்பர்களுக்கு உண்டு…..!!! )

.
————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to பகுதி-2 – ஜெயலலிதா…. கரண் தாப்பர் இண்டர்வியூ… என்ன சொல்கிறார் கரண் தாப்பர்….

 1. Pingback: பகுதி-2 – ஜெயலலிதா…. கரண் தாப்பர் இண்டர்வியூ… என்ன சொல்கிறார் கரண் தாப்பர்…. – TamilBlogs

 2. Selvarajan சொல்கிறார்:

  அர்னாப் காேஸ்வாமி அவர்கள் மேடம் ஜெயலலிதாவுடன் ஜூன் 2011. ல் நடத்திய ” இணட்டர்வியூ ” வை பற்றியும் 2014 ல் ” திருமதி சிமி கேர்வால் நடத்திய இண்ட்டர்வியூ பற்றியும் எழுதினால் நண்பர்களுக்கு மேடத்தின் முழு வாழ்க்கை… தன்னம்பிக்கை …விடா முயற்சி ..அர்ப்பணிப்பு ..ஆளுமை … யாருக்காகவும் , எதுக்காகவும் காம்ப்பரமைஸ் ஆகாதது பற்றி நன்கு புரிந்துக் காெள்ள ஏதுவாக இருக்கும் …!!!

  • Muthuram சொல்கிறார்:

   Dear Mr.Selvarajan, whatever told by you are OK…but whats the outcome? IMO she was given with great opportunities by TN people to establish herself as a great leader like Lee Kuan yew the father of Singapore. She failed miserably and focused on personal agenda only. Stop worshipping a criminal like her. This is dirty political leaders and their devotees.

 3. shiva சொல்கிறார்:

  இது மட்டுமில்லை. இந்த பத்திரிக்கையாளர்கள் மிகவும் ஒரு தலை பட்சமானவர்கள். இப்படி ஒரு interview சோனியாவையோ, ராஹுலையோ, ஏன் சிதம்பரத்தைக் கூட எடுக்க மாட்டார்கள்.
  ஒரு உதாரணம்: சமீபத்தில் வைரமுத்து-ஆண்டாள் விஷயத்தில் யாராவது ஸ்டாலினின் கருத்தைக் கேட்டார்களா? அதே போல் கனிமொழி பகவத் கீதை மற்றும் திருப்பதி பெருமாள் பற்றியும் சொன்ன கருத்து பற்றி யாராவது ஸ்டாலினிடமோ ராகுலிடமோ கேட்டார்கள? ஏன்? கேட்டால் அவர்களுக்கு சங்கடமாக இருக்கும் என்றா?

 4. Mani சொல்கிறார்:

  // வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று ஆணி அடித்தாற்போல்
  பேசும் அவரது பாங்கு வியப்பளிக்கிறது… எதையும், வழவழவென்று,
  பூசி மெழுகும் அரசியல்வாதிகளிடையே இது மிக மிக அபூர்வம்…! //

  You are 100 % right Sir.

 5. Mani சொல்கிறார்:

  // ஜெயலலிதா நினைத்திருந்தால், அந்த இண்டட்வியூ ஒளிபரப்பாகாமல் தடுத்திருக்கலாம்… பேட்டி கொடுத்தவர் என்கிற வகையில், அவருக்கு அந்த உரிமை இருந்தது….மேலும், இண்டர்வியூ நடந்தது கோட்டையில், அவரது அலுவலகத்தில்… அங்கேயே – வீடியோவை நிறுத்திக் கொண்டிருக்கலாம்….ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை… அந்த இண்டர்வியூ ஒளிபரப்பாவதை தடுக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை…

  அவரது அசாத்திய தன்னம்பிக்கையையே அது காட்டுகிறது… //

  Again you give perfect remarks. I totally agree with you.

 6. அறிவழகு சொல்கிறார்:

  இன்று இந்த ‘Iron Lady’ இருந்திருந்தால் 8 வழிச்சாலை வருமா?

  விளை நிலங்கள் வழியாக கெயில் கேஸ் பைப் லைன் திட்டத்தை எதிர்த்தவர் அவர்.

  இன்று அவர் பெயர் சொல்லி நடக்கும் ஆட்சியில்…..!

  படங்களிலும் வீடியோக்களிலும் பச்சை பசேல் என்று இருக்கும் நிலங்களையும் அந்த விவசாயிகளையும் பார்க்கும் பொழுது பரிதாபமாக இருக்கு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.