நவீன கர்ண மஹா பிரபு….


அம்பானிக்கும், அடானிக்கும், கொடுக்காததையா டாட்டாவிற்கு
கொடுத்து விட்டார்…? – என்று சிலர் கேட்கலாம்….!!!

உண்மை தான்… அவர்கள் அளவிற்கு டாட்டா
கொடுத்து வைக்கவில்லை தான்… ஆனாலும்
இவருக்கு கொடுத்ததே இவ்வளவு என்றால் –
அவர்களுக்கு கொடுத்ததை எவ்வளவு என்று சொல்வது….?

அப்படி எதைத்தூக்கி, டாட்டாவிற்கு – கொடுத்து விட்டார்…?

nano-inauguration

தோல்வியுற்ற திட்டம் என்று இப்போது அறிவிக்கப்படும்
டாட்டாவின் கனவுத்திட்டமான நானோ கார் தயாரிக்கும்
திட்டத்தை, மேற்கு வங்கம் சிங்கூரிலிருந்து
குஜராத்தின் “சதானந்த்”-க்கு கொண்டு வருவதற்காக –

மோடிஜி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது,
டாட்டாவிற்கு அளித்த சலுகைகள் குறித்த விவரங்கள் –

டாட்டா நானோ தொழிற்கூடத்திற்கு
9570 கோடிகள் கடன் … அதுவும் 0.1 % வட்டிக்கு –
20 ஆண்டுகளில் திரும்ப செலுத்தப்படலாம்…
முதல் இரண்டு ஆண்டுகள் ஒன்றும் கொடுக்க வேண்டாம்…

கிட்டத்தட்ட 1000 ஏக்கர் நிலம்
விவசாயிகளிடமிருந்து சதுரமீட்டர் ரூபாய் 120 என்று
குஜராத் அரசால் வாங்கப்பட்டு

சதுரமீட்டருக்கு வெறும் 90 ரூபாய் என்கிற விலையில்
டாட்டா கம்பெனிக்கு விற்கப்பட்டது…

பத்திரப்பதிவிற்கான வரியிலிருந்து விலக்கு ….
(சுமார் 20 கோடி..)

மேற்கு வங்கத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டுமானங்களை
அங்கிருந்து குஜராத்திற்கு கொண்டு வருவதற்கான
செலவிற்காக –

முற்றிலும் இனாமாக – 700 கோடி ரூபாய்

சலுகை விலையில் மின் சப்ளை….
( 200 KVA power supply up to project receiving station,
exemption from electricity duty )

சலுகையில் தண்ணீர் …
14,000 cubic meter per day water supply at project site,
facilities for disposal of hazardous waste,

சலுகையில் எரிவாயு சப்ளை –
pipeline for supply of natural gas to the project site.

சலுகையாக – தொழிற்சாலை அருகே குடியிருப்புகளை
கட்ட வசதியாக, 100 ஏக்கர் நிலம்….

அளிக்கப்பட்ட சலுகைகளின் மொத்த மதிப்பு-
சுமார் 30,000 (முப்பதாயிரம்) கோடி ரூபாய்….!!!

————-

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த கார் ப்ராஜெக்டுக்கு
கொடுக்கப்பட்ட சலுகைகளின் விவரங்களை
தகவல் அறியும் உரிமை சட்டங்களின் கீழ் கேட்டபோது –
இவை வர்த்தகம் சம்பந்தப்பட்ட ரகசியங்கள் என்பதால்
தரப்பட முடியாது என்று குஜராத் அரசு மறுத்திருக்கிறது….
( the government declined to make available information
under the Right to Information Act taking the plea that it was business secrets ….)

——————-

ஒரு சாதாரண மாநில முதலமைச்சராக இருந்தபோதே
இவ்வளவு தான தர்மங்கள் என்றால்,

ஒரு நாட்டிற்கு பிரதமராக இருக்கும்போது,
தொழில்கள் வளர –

-SORRY –

– தொழிலதிபர்கள் வளர,
எந்த அளவிற்கு – தான, தர்மங்கள் செய்ய முடியும்…..!!!

—————-

கர்ணன் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய
பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது…..

( P.B.ஸ்ரீநிவாஸ் குரலில், அதே ராகத்தில் –
சொல்லிப் பாருங்கள்…..!!! ஆறுதலாக இருக்கும்…. )

என்ன கொடுப்பான் –
எதைக்கொடுப்பான்… என்றிவர்கள் எண்ணும் முன்னே –
பொன்னும் கொடுப்பான்
பொருளும் கொடுப்பான் –
போதாது போதாதென்றால் –
இதுவும் கொடுப்பான்….
இன்னமும் கொடுப்பான்….
இதுவும் குறைவென்றால்…

……….. கொடுப்பான் ….
…. தயாநிதியே….

இதில் வித்தியாசமென்னவென்றால் –
மஹாபாரத கர்ணன்,
தன்னிடம் இருந்தவற்றைத்தான்,
தனக்கு சொந்தமானதை தான் –
தானம் கேட்பவருக்கெல்லாம் கொடுத்தான்..

ஆனால், இந்த நவீன கர்ண மஹா பிரபு….
யாருக்குச் சொந்தமானதை எடுத்து –
யார் யாருக்கு கொடுக்கிறார்….?

———————————————————————————

பின் குறிப்பு – ஏற்கெனவே இரண்டு வருடங்களுக்கு
முன்னர் எழுதிய ஒரு இடுகையை நேற்று எதேச்சையாக
பார்க்க நேரிட்டது….

அம்பானிக்கும், அடானிக்கும் –
இன்றைய கால கட்டத்தில், மேலும் ஏகப்பட்ட
வெளிநாட்டு சீர்வரிசைகள் வேறு
தரப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் –

( அம்பானிக்கு ஃப்ரென்ச் ரஃபேல் விமான உற்பத்தி கம்பெனியில்
ஐம்பது சதவீத பார்ட்னர்ஷிப்….

அடானிக்கு, ஆஸ்திரேலிய நிலக்கரிச் சுரங்கம்.. ஏகப்பட்ட
சோலார் பவர் ப்ளான்டுகள், முக்கிய துறைமுகங்கள்…. !!!)

இப்போதைய சூழ்நிலையில் இது இன்னும் பொருத்தமாக
இருக்குமென்று தோன்றியது…. எனவே –
லேசான மாறுதல்களுடன்…..மேலே….

டாட்டா, அம்பானி, அடானி – இன்னும் எத்தனையோ (ச…?) னி’க்கள்….
போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும்….

இந்த ஜென்மத்தில், இந்த கர்ண மாமன்னர் பார்வையில் பட ….
கொடுத்து வைத்தவர்கள்…!!!

வாழ்க வளமுடன்…!!!


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to நவீன கர்ண மஹா பிரபு….

 1. Pingback: நவீன கர்ண மஹா பிரபு…. – TamilBlogs

 2. Rajagopalan சொல்கிறார்:

  பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளி துறைமுகம்
  அதானி வசம் சென்றிருப்பதாகத் தெரிகிறது.

 3. அறிவழகு சொல்கிறார்:

  “ஊரான் ஊட்டு நெய்யே எம் பொன்டாட்டி கையே” என்ற சொலவடை தான் நியாபகம் வருது.

  நீங்கள்லாம் நல்லா இருப்பீங்க…..! மற்றவர்கள வயிறெரிய விட்டுட்டு….?

 4. Mani சொல்கிறார்:

  அந்த கர்ணன் தானம் தான் கொடுத்தான். பதிலுக்கு எதையும் பெறவில்லை…
  இவரும் கொடுக்கிறார் ; இவருக்கு சொந்தமில்லாததை யெல்லாம் எடுத்து;
  ஆனால் பதிலுக்கு எதுவும் எதிர்பார்க்காமலா இதையெல்லாம் செய்கிறார் ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s