உலகப்புகழ் “மல்யுத்த” சாம்பியனை, ஒரே பிடியில் கவிழ்த்த குழந்தை “பப்பு” ….


51 நாடுகளின் தலைவர்களை கட்டிப்பிடித்து சாதனை புரிந்த ஒரு சாம்பியனை, தனது ஒரே ஒரு “கட்டிப்பிடி”யின் மூலம் அதிரவைத்து விட்டது ஒரு அரசியல் குழந்தை….!!!
————–
————–

————–

இவ்வளவு “உலகளாவிய” அனுபவம் வாய்ந்த “சாம்பியன்” நேற்று, தன்னை கட்டிப்பிடிக்க வந்த குழந்தையை பார்த்து மிரண்டே போனார் என்பதை புகைப்படங்களும் வீடியோவும் காட்டுகின்றன…

என் அருகே வந்து, “GET UP ” என்று சொன்னார்.. அவர் என் ஆசனத்தை
பறித்துக் கொள்ள பார்த்தார்… என் இடத்தில் உட்கார்ந்து கொள்ள
அவசரப்படுகிறார்… என்று பின்னர் பேசும்போது, சாம்பியனே கூறுகிறார்.

நான்கு அடி தூரத்திலிருந்தே, இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு,ஆலிங்கனம் செய்ய வரும் ஒருவர், இவரைக் கிளப்பி விட்டு இவரது இடத்தில் உட்கார்ந்து கொள்ளப்பார்த்தாராம்….. ( நிஜமாகவே இவர் மிரண்டு போய், கெட்டியாக ஆசனத்தை பிடித்துக் கொண்டிருப்பதும் வீடியோவில்
தெரிகிறது….)

அந்த சாம்பியனின் இடத்தைப் ( ??? ) பிடிக்க, இந்த குழந்தையால் நிச்சயம் இயலாது என்றாலும் கூட,

“அரசியலில் இது தேறாது”
என்று கைவிடப்பட்ட
ஒரு சவலைக்குழந்தை
இன்று கொழு கொழுவென்று வளர்ந்து,
ஆட்டம் போட்டு, சிரித்து,கண்ணடித்து
அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது….

எது எப்படி இருந்தாலும் –
ராகுல் காந்திக்கு, நேற்றைய நிகழ்வுகள், பல புதிய அபிமானிகளையும்,
ரசிகர்களையும் – கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்பது உண்மை.

.
——————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to உலகப்புகழ் “மல்யுத்த” சாம்பியனை, ஒரே பிடியில் கவிழ்த்த குழந்தை “பப்பு” ….

 1. Mani சொல்கிறார்:

  It is TRUE.
  Rahul has earned LAKHS of Fans since Yesterday
  particularly Youngsters.
  Hope this will be a good beginning for a CHANGE.

 2. அறிவழகு சொல்கிறார்:

  அப்ப ராகுல் ‘Get Up’ என்று சொல்லவில்லையா….!?

  பொய்யே உன் பெயர் தான்…திருவாளர்….மோடி….அவர்களா….!

  ///அந்த சாம்பியனின் இடத்தைப் ( ??? ) பிடிக்க, இந்த குழந்தையால் நிச்சயம் இயலாது என்றாலும் கூட,///

  எதில்…..?

  எவ்வளவோ சாம்பியன்கள் தன் ஆனவத்தால் அகந்தையால் மண்ணை கவ்விய வரலாறு ஏகத்துக்கும் உண்டு.

  பார்ப்போம்…இறைவன் சித்தம் என்ன வென்று.

  • அறிவழகு சொல்கிறார்:

   அவ்வளவு பெரிய சாம்பியன் வளர்ந்து நிற்கும் குழந்தையின் அனல் பேச்சுக்கு பதில் சொல்ல முடியவில்லையே.

   காங்கிரஸ திட்டியது சோனியாவ வைதது தான நடந்தது.

   இப்படியே அடுத்த பொது தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் இல்லை….!

   ராகுல் வளர்கிறார்.
   சாம்பியன் தேய்பிறை…?

 3. Pingback: உலகப்புகழ் “மல்யுத்த” சாம்பியனை, ஒரே பிடியில் கவிழ்த்த குழந்தை “பப்பு” …. – TamilBlogs

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ப்ளட் பாங்க்ல போய் பணத்த மாத்த வரிசைலே நின்ன பப்பு-வா இப்போ கட்டிபுடி வைத்தியம் பார்க்கறது!
  நம்பவே முடியலே!

  இனிமேல் நான் மோடி நாட்டுக்கு எதுவும் உருப்பயா செய்யலேன்னு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோன்னு பேசமாட்டேன்.
  பப்புவையே மாத்தியவர் இந்தியாவ மாத்தாம விட்டுடுவாரா?

 5. Mani சொல்கிறார்:

  //இந்தியாவ மாத்தாம விட்டுடுவாரா?//

  பாஜக ஆளும் மாநிலங்கள் எல்லாவற்றையும் மாத்திட்டாங்களே சார். இன்று மீண்டும் ராஜஸ்தானில் ஒரு ” லைன்ச் ” செய்தி. ஒரு கொலைவெறிக்கூட்டம்,
  மாடு கொண்டு போவதாகச் சொல்லி இருவரைத் தாக்க, ஒருவர் இறந்து போனார்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மீண்டும் மீண்டும் வெறுப்பு… விஷம்…
   மனிதர்களின் மனதில் மதவெறியை ஊட்டி,
   அவர்களை விலங்குகளாக்குகிறார்கள்.
   அன்பையும், தர்மத்தையும் போதிக்க வேண்டிய மதம்,
   இவர்கள் கையில் சிக்கி சின்னாபின்னப்படுகிறது.
   இந்து மதமே இவர்களால் நாசமாக்கப்பட்டு விட்டது.

   இன்று ராஜஸ்தானில் ஒரு மனிதர் இவர்களின்
   மாட்டு வெறிக்கு பலி…
   நேற்று பாராளுமன்றத்தில் பாஜக தரப்பில் பதிலளிக்கும்போது,
   சட்டம், ஒழுங்கு மாநில அரசுகளின் பொறுப்பு என்றும்
   அதற்கு மோடி அரசை குறை சொல்வது தவறு என்றும்
   விளக்கம் சொன்னர்கள்….
   பெரும்பாலான மாநிலங்களில் இன்று ஆட்சி செய்வது யார்…?
   இவர்கள் தானே…? கட்சித்தலைமை, மோடிஜியிடம் இல்லையா..?
   அவர் பிடித்து உட்கார வைத்த கூட்டாளி அமீத்ஜீயிடம் இல்லையா…?

   இவர்கள் பதவியிலிருந்து இறங்கும் முன்னர் இந்தியாவை
   முற்றிலுமாக நாசமாக்கி விட்டுத்தான் இறங்குவார்கள்
   போலிருக்கிறது…

 6. Raghavendra சொல்கிறார்:

  ராகுலின் செய்கையை முன்வைத்து புதிய சர்ச்சையை சுப்ரமணியன் சாமி கிளப்பியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர்,

  “ராகுல் காந்தி தம்மைக் கட்டிப்பிடிக்கப் பிரதமர் அனுமதித்திருக்கக் கூடாது. ரஷ்யர்களும் வட கொரியர்களும் மற்றவர்கள் மீது விஷ ஊசியைச் செலுத்த இந்த முறையைக் கடைப்பிடிப்பார்கள். அதனால் பிரதமர் மோடி வெகு விரைவாக மருத்துவமனை சென்று சுனந்தா புஷ்கர் கையில் இருந்தது போல தம் மீது ஏதாவது விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

  – முட்டாள் டாக்டருக்கு இது கூட புரியவில்லையா ? – “விஷத்தை” விஷத்தால் என்ன செய்ய முடியும் ?

 7. Vignaani சொல்கிறார்:

  Not exactly related to the HUG; but to the No-confidence motion. Viewed in FB. Hindi-non-knowing or half-knowing like me may like this Tamil version: https://www.facebook.com/jayaraman.v.o/videos/10155612372936709/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s