மதவெறியர்களுக்கு இங்கே எப்படி இடம் கிடைக்கும்….?


“ஏசுவே” என்றழைத்தாலும்,
“அல்லா” என்று குரல் எழுப்பினாலும்,
“ராமா”, “கிருஷ்ணா” என்று கூப்பிட்டாலும்,
உண்மையில் நாம் அனைவரும் நினைத்து, விரும்பி,
வேண்டி அழைப்பது, அந்த ஒரே இறைவனைத்தான் என்பதை
இந்தியர்களாகிய நாம் அனைவரும் உளமாற
உணர்ந்து ஏற்றுக் கொண்டால் –

இங்கே மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் அதிகாரத்தை பெறவும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் நினைப்பவர்கள் வெற்றி பெறுவது எப்படி சாத்தியமாகும்….?

நான் இந்த தளத்தில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும் ஒரு கருத்தை, இன்று ஒரு கிறிஸ்தவ மதபோதகரின் வழியாக கேட்கும்போது, அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை, நம்பிக்கையை – தருகிறது…

நீங்களும் பாருங்களேன் – அந்த உரையை …..

.
———————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to மதவெறியர்களுக்கு இங்கே எப்படி இடம் கிடைக்கும்….?

 1. Raghavendra சொல்கிறார்:

  இதற்கு முன்னால் எப்படி இருந்தாலும், இப்போது 4 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் நடப்பவற்றைப் பார்த்த பிறகு ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை அனைத்து
  மதத்தினரும் உணர்கிறார்கள்.
  மதத்தலைவர்கள், வேற்றுமைகளை களைந்து, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை தங்கள் போதனைகளைகளின் மூலம் தொடர்ந்து மக்களிடம் வலியுறுத்த வேண்டும்.

 2. Pingback: மதவெறியர்களுக்கு இங்கே எப்படி இடம் கிடைக்கும்….? – TamilBlogs

 3. அறிவழகு சொல்கிறார்:

  யோகி ஆதித்யாநாத், சாக்ஷி மகாராஜ் போன்றவர்கள் எல்லாம் ஹிந்து மத தலைவர்கள்…!

  இல்லை இவர்கள் மட்டும் இல்லை…. இவர்கள் போன்ற பாஜக தலைவர்களும் அமைச்சர்களும் ஹிந்து மதத்தின் மேன் மையை காப்பவர்கள் இல்லை….

  இவர்கள் ஆர்எஸ்எஸ் வெறித்தனம் உருவாக்கிய பிள்ளைகள்.

  அவர்களின் வெறித்தனமான பேச்சால் ஹிந்து மதத்தின் நற்பெயரை நாசமாக்க கூடியவர்கள் என்று ஒட்டு மொத்த நல்ல உள்ளங்கள் கிளர்ந்து எழும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

  இது காலத்தின் கட்டாயம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.