தெலுகு தேச எம்.பி. அபார ஷோ … திருஷ்டி கழிக்க வேண்டும்…!!!வெள்ளிக்கிழமை நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது
நடந்த விவாதத்தின்போது – மோடிஜி, ராகுல்ஜி குறித்த
‘கட்டிப்பிடி’, – ‘கண்ணடி’ அமளியில் ஒரு முக்கியமான நபரை
பாராட்ட நாம் மறந்து விட்டோம்.

நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பை கவனித்தவர்கள் இந்த காட்சியை
கவனித்திருக்கலாம்.

சுமார் 12 மணி நேர விவாதத்திற்கு பிறகு, மோடிஜியின் நீண்ண்ண்ண்ட
(ஒன்றரை மணி நேர ஹிந்தி உரை….) பதிலுக்குப் பின் விவாதம்
முடிவிற்கு வந்ததாக அவைத்தலைவர் திருமதி சுமித்ரா மஹாஜன்
அறிவித்தார்.

மோடிஜி பேசும்போது, பல வித சைகைகளைக் காட்டியும்,
முகபாவங்களை மாற்றியும், குரல் ஏற்ற இறக்கங்களுடனும்,
ராகபாவங்களுடனும் – மிகவும் அனுபவித்து….(?) பேசினார்….

அவைத்தலைவர் ஓட்டெடுப்புக்கு விடும் சமயத்தில், அவையில்
கடைசீ வரிசையிலிருந்து ஒரு குரல் வந்தது…

அந்த குரலுக்கு சொந்தக்காரர் தெலுகு தேசம் கட்சியின் விஜயவாடா
எம்.பி… கேசினேனி நாநி – ஸ்ரீநிவாஸ்….!

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ் அவர் பெயரில்
தான் கொடுக்கப்பட்டிருந்தது… எனவே, அவர் தான் விவாதத்தை
முடித்து வைக்க வேண்டும்.. அதை அவைத்தலைவர் சுத்தமாக
மறந்து விட்டார் போலிருக்கிறது… “எல்லாம் முடிந்து விட்டது
இப்போது என்ன பேசப்போகிறீர்கள்..?” என்று கேட்டார்.

பொதுவாகவே, தெலுங்கர்கள் ஆங்கிலம் பேசும்போது, உச்சரிப்பு
வித்தியாசமாக இருக்கும்… அதுவும், அரைகுறையாக ஆங்கிலம்
தெரிந்தவர்கள் பேசினால் ….காமெடி தான்…!

“நோ ஸ்பீக்கர் மேம்…
தட் இஸ் மை ப்ரிவிலேஜ் மேம்…
ஐ வாண்ட் டு ஸ்பீக்.. ஸ்பீக்கர் மேம்..”

“சரி என்ன பேசப்போகிறீர்கள்…சுருக்கமாகப் பேசுங்கள்” (பேசித்
தொலையுங்கள் என்கிற தொனி நன்றாகவே அவர் முகத்தில் தெரிந்தது..)

கிட்டத்தட்ட இந்த மாதிரி…..
எதையெதையோ பேசிக் கொண்டு,
இழுத்தடித்துக் கொண்டே இருந்தார்.
சிரிக்காமல், ஆனால் வேண்டுமென்றே அனைவருக்கும்
சிரிப்பு வரும்படி பேசினார் கேசினேனி நாநி ….

என் நினைவில் இருப்பதிலிருந்து இங்கே தருகிறேன்….

கிட்டத்தட்ட இந்த மாதிரி…..
அடுத்த 7-8 நிமிடங்களுக்கு ஒரே காமெடி தான்…

ஒன்றரை மணி நேரம் தனிக்கச்சேரி செய்து மோடிஜி எல்லாரையும்
படுத்தி’யதற்கு பதிலாக, கேசினேனி நாநி ஸ்ரீநிவாஸ் 7-8 நிமிடங்களில்
“பதில் மரியாதை” செய்து விட்டார்… 🙂 🙂

————-

“ஃபார் ஒன் அன்ட் ஹாஃப் ஹவர் ஐ தாட் ஐ வாஸ்
வாட்சிங்க் ப்ளாக் பஸ்டர் பாலிவுட் மூவி….!!!”

“மோடிஜி ஓர்ல்ட் பெஸ்ட் ஆக்டர் ஸ்பீக்கர் மேம்…

ஹி ஸ்பீக் வெரி நைஸ் – ஸ்பீக்கர் மேம்..
ஐ வான்ட் டு தேங்க் ஹிம் ஸ்பீக்கர் மேம்…

ஹி கெட் அவார்ட் ஃபார் வொர்ல்டு பெஸ்ட் ஆக்டர் மேம்…

———
பட் ஹி சீட்டட் தெலுகு பீப்பிள் ஸ்பீக்கர் மேம்..”
———–

நொந்து போனது ஸ்பீக்கர் மேம் மட்டுமல்ல…
ஒட்டு மொத்த பாஜக கூட்டமும் தான்…
மோடிஜியின் அபாரமான உரைக்கு பிறகு முகத்தில் சந்தோஷம் கொப்பளிக்க அனைவரும் ஓட்டெடுப்பில் வெற்றியை காண துடித்துக் கொண்டிருந்தபோது, இந்த ஸ்ரீநிவாஸ் –

அவர்கள் எண்ணத்தில் மண்ணைத் தூவி விட்டு தொடர்ந்து
பேசிக் (?) கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவைத்தலைவர் பொறுமை இழந்து,
“நீங்கள் என்ன தான் சொல்ல விரும்புகிறீர்கள்…
உங்களுக்கு தேவையான நேரம் தந்து விட்டேன்…
விஷயம் அடுத்து ஓட்டெடுப்புக்கு போகப்போகிறது….”

– என்கிற ரீதியில் நொந்து கொண்டே, அவசர அவசரமாக,
ஸ்ரீநிவாஸ் அடுத்த அட்டாக்கில் இறங்கும் முன்னர் ஓட்டெடுப்பை
அறிவித்து விட்டார்….!!!

மோடிஜியின் ஒன்றரை மணி நேர solo ஆட்டத்துடன் ஆட்டம்
வெற்றிகரமாக முடிந்தது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களை
பயங்கரமாக வெறுப்பேற்றிய ஸ்ரீநிவாசுக்கு நிச்சயம் எதாவது
அவார்டு கொடுக்க வேண்டும்.

தன் முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பை வெளிப்படுத்தாமல்,
சர்வ சாதாரணமாக அப்பாவிபோல் வைத்துக் கொண்டு,
எதிரே சிரிப்புவெடியை உண்டாக்குவது
சுலபமான விஷயம் அல்ல…

எனக்குத் தெரிந்து இந்த சாமர்த்தியம் உடையவர் –
நமது தென் கச்சி சுவாமிநாதன் அவர்கள் மட்டும் தான் …
இப்போது விஜயவாடா கேசினேனி நாநி ஸ்ரீநிவாஸ்- ஐயும்
அதில் சேர்த்துக் கொள்ளலாம்…!

—————————————–

பின் சேர்க்கை –

தேடிக்கொண்டே இருந்தேன்…
அந்த வீடியோ கிடைத்து விட்டது….

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்…
கீழே –

.
————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to தெலுகு தேச எம்.பி. அபார ஷோ … திருஷ்டி கழிக்க வேண்டும்…!!!

 1. Mani சொல்கிறார்:

  நிஜமாகவே சூப்பர் காமெடி தான்.
  மோடிஜியையும், பாஜக மெம்பர்களையும் நன்றாகவே
  கலாய்த்திருக்கிறார். அந்த தாடிக்கார ஜவ்வடேகரை ஸ்பீக்கரிடம்
  கதற வைத்து விட்டாரே.

  நமது ராஜ்ய சபா அதிமுக மெம்பர் நவனீதகிருஷ்ணனை கொஞ்சம்
  ட்ரெயினிங்க் கொடுத்தால் இந்த மாதிரி டெவலப் செய்யலாமென்று
  தோன்றுகிறது 🙂

 2. Pingback: தெலுகு தேச எம்.பி. அபார ஷோ … திருஷ்டி கழிக்க வேண்டும்…!!! – TamilBlogs

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  My instinct says that mostly there will be a raid in this MP’s house during this week itself.
  What do you think?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   quite possible…!
   என்ன treatment கொடுக்க வேண்டுமென்று…அமீத்ஜீ தான் முடிவெடுக்க வேண்டும் …!

   அவர் தானே இப்போது Intelligence, IT, ED
   எல்லாவற்றிற்கும் BOSS… 🙂

  • அறிவழகு சொல்கிறார்:

   Mr. R.Gopalakrishnan,

   உங்க வீட்டுக்கும் கூட வந்தாலும் வரலாம். பத்திரம்.

   அவர்களை பதவி வெறி பிடித்து ஆட்டுகிறது. அந்த வெறி அவர்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டிற்கே நல்லதில்லை.

 4. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Mr.Arivazhagu,
  Ayyayyo, Enna ippadi bayamuruthiringale. I am in my twilight days. I have been paying my IT
  for the past 40 yrs. I feel I am not indebted to Govt. Why this KOLAVERY Sir.

  • அறிவழகு சொல்கிறார்:

   ஹா….ஹா….ஹா….!

   இங்கு நாம் பொய்யாக அலறுகிறோம்.

   உண்மையில் எல்லோரையும் அலறவைக்கனும் பதட்டத்துடன் வைக்கனும்கிறது தான் அவர்கள் குறிக்கோளே.

   அப்ப தான் காப்பாற்ற நாங்க இருக்கோம்னு வந்து நிப்பாங்க…..!

   இல்லன்னா……!

   இருக்கவே இருக்கு மதக்கலவரம். Sentimental-ஆக அப்பாவி மக்களை தூண்டிவிட்டு தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.

   இது தானே காலங்காலமாக நடக்கிறது.

   “உண்மையான ஆபத் பாந்த வான்” பார்த்துக் கொண்டு தான் இருக்கான். குறிப்பிட்ட காலம் வரை.

 5. bandhu சொல்கிறார்:

  இவர்களை எப்படி டீல் செய்ய வேண்டும் என்று பாடம் எடுத்திருக்கிறார் கேஸினெனி. ஸ்பீக்கர் என்பவர் கொஞ்சமாவது நடு நிலையில் இருக்கவேண்டாம்? ஒன்றரை மணி நேர சொற்பொழிவுக்கு பதில் கொடுக்க வெறும் ஐந்து நிமிடம் ஒதுக்குகிறார்?

  தாங்கள் கட்டிய மண் கோட்டையில் விரிசல் விழுவது பி ஜே பி க்கு தெரிகிறது. தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லை. முடிவு கண்ணனுக்கு தெரிகிறது!

 6. seshan சொல்கிறார்:

  Good Show by TDP MP. same time another TDP mp also did a good (meaningful) speech with pin point data. it shows more than “pappu” drama.

  you can see the 2015 – same person speech – how much he improved. none of the TN mp’s open their mouth for the sake of own state.

 7. seshan சொல்கிறார்:

  His profile also promising as a good leader.

  Kinjarapu Ram Mohan Naidu was born in Nimmada, Srikakulam on 18 December 1987. He is the son of Kinjarapu Yerran Naidu [3]; a senior Telugu Desam Party leader and Kinjarapu Vijayakumari. His father has served as a Member of Legislative Assembly from Tekkali constituency and then became a Member of Parliament from Srikakulam and later served as a Union Minister for Rural Development in the united front government between 1996 and 1998. He did his primary schooling in Srikakulam. After his father became a Member of Parliament, he joined Delhi Public School, R. K. Puram, Delhi, where he completed his schooling. He left for the United States of America to pursue under graduation in Electrical Engineering at Purdue University. Post which he enrolled himself up for an MBA at Long Island University. He worked for a year in Singapore before returning back to India.

  Political career[edit]
  He entered politics in 2012 after the untimely death of his father[5]. He shoulders his father’s legacy and now represents Srikakulam Parliamentary constituency. He was made the MP constituency in charge in 2013. In 2014, he contested for elections from the Srikakulam Constituency and won with a margin of 127,576 votes. [6]. Ram Mohan Naidu is the second youngest Member of Parliament to the 16th Lok Sabha. His participation in Indian Politics speaks volumes of the contribution youth can make in shaping our country. He introduced a private member bill to draw the attention of the center towards Andhra Pradesh Railway Zone with Vishakhapatnam as its headquarters.

  Performance in the Lok Sabha, 2014–present [9]

  MP performance parameters (2014–present) Ram Mohan Naidu Kinjarapu
  Attendance in parliament 93%, against state average 76%
  Questions raised 397, against state average 227
  Debates Participated 88, against a state average 35
  Private Member Bills 1, against state average 0.8
  MP Local Area Development Funds Utilization 87.71 % of the allotted are spent
  Number of criminal cases None
  —————————————————————-
  thanks to: https://en.wikipedia.org/wiki/Ram_Mohan_Naidu_Kinjarapu

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சேஷன்,

   இவ்வளவு வேண்டாமே…
   விறுவிறுப்பை குறைக்கிறதே…
   அவசியமானதையும், சுவாரஸ்யமானதையும் மட்டும் கொடுங்களேன்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 8. Mani சொல்கிறார்:

  சார்,

  நீங்க தெலுங்கு தேசமா ?

 9. புதியவன் சொல்கிறார்:

  நாட்டிற்கு தேவையானது, சரியான எதிர்க்கட்சித் தலைவர்கள் (மோடி அவர்களின் முகத்துக்கு நேரே உண்மையைப் பேசுபவர்கள்). தெலுகுதேச எம்பி அதைத்தான் செய்திருக்கிறார். பாராட்டவேண்டியதுதான்.

 10. tamilmani சொல்கிறார்:

  India needs young leaders like Ram mohan naidu, educated,articulate representing his state
  in the Parliament willing to do something for the people who elected him .Congress unnecessarily
  bifurcated the state of Andhra and left the states to fend themselves without supporting them.
  BJP should not do the same thing.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.