NRC-யில் இடம் பெறாத அந்த 40 லட்சம் மக்களை என்ன செய்யலாம்…?


..

..

..

..

NRC பிரச்சினையால் பதற்றத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றன
வட கிழக்கு மாநிலங்கள்… ஒவ்வொரு மாநில எல்லையிலும்
குண்டர்கள் சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அஸ்ஸாம் மாநிலத்தில் National Register of Citizens பட்டியல்
என்று ஒன்று தயார் செய்து வெளியிடப்பட்டு விட்டது….

3.29 கோடி மக்கள் வசிக்கும் அஸ்ஸாமில், 40 லட்சம் மக்களை
அயல்நாட்டவர் என்று முத்திரை குத்தி அடையாளம் காட்டி இருக்கிறது
மத்திய பாஜக அரசு….

இவ்வாறு அடையாளம் காணப்பட்டு முத்திரை குத்தப்பட்டவர்களில்
பலர், அவர்களது பெயர் ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு
அடையாளம் காணப்பட்டுள்ளனர் போலத் தெரிகிறது ….
அதன் காரணமாக பல ஒரிஜினல் அஸ்ஸாமியர் கூட வெளிநாட்டவர்
ஆகி விட்டனர்.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி
ஃபக்ருதீன் அலி அஹமது அவர்களின் சகோதரர் குடும்பம்,
20 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரியும்
ஒரு நபர் உட்பட பலர், வேறு எதை வைத்து வெளிநாட்டவராக
முத்திரை குத்தப்பட்டுள்ளனர் என்பது விளங்கவில்லை….

ஒரு முக்கியமான விஷயம் – இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள
பல லட்சக்கணக்கான நபர்கள், அண்டை மாநிலங்களான – பீஹார்,
உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்…
பல ஆண்டுகளுக்கு முன்னரே அஸ்ஸாமில் செட்டில் ஆகி,
வீடு,வாசல், நில புலன்கள் – வியாபாரம் ஆகியவற்றில் இரண்டு, மூன்று
தலைமுறைகளாக ஈடுபட்டிருப்பவர்கள்…..

உதாரணமாக இன்று தமிழ்நாட்டில் தமிழைத் தாய்மொழியாக
கொள்ளாத, ஆனால், 3-4 தலைமுறைகளாக, வெள்ளைக்காரன்
காலத்திலிருந்தே, இங்கேயே வசித்து வரும் – தெலுங்கு பேசும்
குடும்பங்கள் – அனைத்தையுமே –

நீங்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவர் அல்ல….
மூட்டை கட்டிக்கொண்டு, பிள்ளை குட்டிகளுடன் வெளியேறுங்கள்
என்று சொன்னால் எந்த அளவிற்கு அக்கிரமமாக இருக்குமோ –
அந்த மாதிரி…

இவர்களில் சில லட்சம் பேர்கள், 1971-ல் பாகிஸ்தானிலிருந்து
பங்களா தேஷ் பிரிந்தபோது நடந்த யுத்தத்தின் சமயத்தில், வங்க தேச
எல்லையை கடந்து இந்தியாவுக்குள் வந்து, பின்னர் நிரந்தரமாக
இங்கேயே தங்கி விட்டவர்கள் என்பதும் உண்மையே….

ஆனால், 40 லட்சம் பேரும் பங்களா தேஷிலிருந்து வந்தவர்கள் என்பது
பாஜக சொல்லும் ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்.

பாதிக்கும் மேற்பட்டவர்கள் – பீஹார், மேற்கு வங்கம், உத்திரபிரதேசம்
போன்ற பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தான் உண்மை.

இது ஒரு பக்கம் இருக்க –

மத்திய அரசு தயாரித்திருக்கும் NRC -யை
அப்படியே ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டால் –

– அடுத்து இவர்களை என்ன செய்வதாக மத்திய அரசுக்கு உத்தேசம்…?

பக்கத்தில் கடல் எதுவும் இருந்தால்… வீசி விடலாம்.
ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பு இல்லை…

இத்தனை லட்சம் பேரை பங்களா தேஷுக்கு திருப்பி அனுப்ப
வழியில்லை… பங்களா தேஷ் ஏற்றுக்கொள்ளாது….

ஏனெனில், இது இந்தியாவின் உள் பிரச்சினை; தங்கள் நாட்டிற்கும்
இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறி, பேசத் துவங்கும்
முன்னரே கதவுகளை அடைத்து விட்டது பங்களா தேஷ் அரசு.

வீடு, வாசல், நிலபுலன், தொழில், வர்த்தகம் ஆகியவற்றை
இழந்து விட்டு, இந்த 40 லட்சம் பேர் எங்கே செல்ல முடியும்…?
இவர்கள் அத்தனை பேரும் திடீரென்று – நேற்று அல்லது முந்தாநாள்
போனவர்கள் அல்ல…. 40-50 வருடங்களுக்கும் மேலாக,
இரண்டு மூன்று தலைமுறைகளாக அங்கே வசிப்பவர்கள்.

எந்த மாநிலம் புதிதாக இவர்களை ஏற்றுக்கொள்ளும்…?
இத்தனை லட்சம் பேருக்கு எப்படி வேலை வாய்ப்புகள் கிடைக்கும்…?
இவர்கள் – புதிதாக எங்கே போய், என்ன தொழில் செய்ய முடியும்…?
இந்த குடும்பங்களில் உள்ள சிறுவர் சிறுமிகளின் படிப்பு
என்ன ஆகும்…….?

இப்படி, நடைமுறைப்படுத்த முடியாத ஒரு முடிவை
மத்திய அரசு இப்போது அறிவிக்க காரணம் என்ன…?

2019 பாராளுமன்ற தேர்தல்…

2014-ல் மோடிஜியின் மீது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் வைத்திருந்த
நம்பிக்கை இன்று அந்த அமைப்புகளுக்கே இல்லை. கடந்த
நான்கரை ஆண்டுகளில் –

மோடிஜி/ சங்க் பரிவார் செய்த அலங்கோலங்கள்,
பண மதிப்பிழப்பு, வங்கிகள் அடியோடு சரிந்த விவகாரங்கள் –
எல்லாம் சேர்ந்து அடுத்த தேர்தலில், மோடிஜியின் செல்வாக்கையும்,
வாக்குவன்மையையும் வைத்து வெற்றி பெற முடியுமென்ற
நம்பிக்கை அவர்களுக்கே இல்லை….

எனவே, தேர்தலை – ( இந்த ஆண்டில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,
சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள், அடுத்து
2019-ல் வரும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றை ) எதிர்கொள்ள
அவர்கள் எடுத்துள்ள புதிய ஆயுதம் இது…

இந்த லிஸ்ட் தான் இறுதி என்று மத்திய அரசு
உறுதி செய்து விட்டால்,
..

..

அடுத்த கணமே, அந்த நாடற்ற மக்களை அடித்துத் துரத்தி விட்டு
அவர்களது வீடு, நிலம், கடை, நிறுவனங்கள் – அனைத்தையும்
அபகரித்துக்கொள்ள, ஒவ்வொரு ஊரிலும் ஆளும் கட்சி பிரமுகர்கள்
என்கிற பெயரில் குண்டர்கள் தயாராக இருக்கிறார்கள்.
( ஆளும் கட்சியினருக்கு அதன் தலைமை அளிக்கப்போகும் பரிசு….. ? )

இது நடக்கப்போகிறது என்பதற்கான சிக்னல்கள்
அஸ்ஸாமில் தோன்றி விட்டன….
( எந்தவித ரத்த சம்பந்தமும் இல்லாவிட்டாலும், நமக்கு, இதனால்
பாதிக்கப்படப்போகும் லட்சக்கணக்கான மக்களை நினக்க –
வேதனையாக, பாவமாக இருக்கிறது… )

2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னால், இந்த நாட்டு மக்களை,
மத அடிப்படையில் இரண்டாகப் பிரிப்பது என்று பாஜக அரசு
தீர்மானித்து விட்டது உறுதியாகத் தெரிகிறது. இதைச் செய்வதன்
மூலம், வேறு எந்த காரணங்களை பற்றியும் யோசிக்க விடாமல்,
ஒட்டு மொத்த ஹிந்துக்களின் ஓட்டுகளையும் தங்கள் பக்கம் திருப்பி
விடலாம் என்கிற அவர்களின் எண்ணம் வெளிப்படையாகவே தெரிகிறது.

அதே ரீதியில், அவர்கள் பேசவும் துவங்கி விட்டார்கள்.
பாஜக அரசுக்கு எதிராக பேசுபவர்களை – முன்பு தேசத்துரோகிகள்
என்று சொன்னார்கள். இப்போது – அந்நிய நாட்டவரை ஆதரிப்பவர்கள்
என்று சொல்லத் துவங்கி விட்டார்கள்.

தேர்தலில் ஜெயிக்கவும், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும்
இவர்கள் செய்வதை எல்லாம் பார்த்தால் – அடுத்த தேர்தல் முடிவுகள்
எப்படி இருக்கும் என்பதை இப்போதே யூகிக்க முடிகிறது….

இந்த நாட்டையும், மக்களையும் – இந்த ராட்சதர்களின்
பிடியிலிருந்து விடுவிக்க –
இறைவனாகப் பார்த்து எதாவது செய்தால் தான் உண்டு.

.
————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to NRC-யில் இடம் பெறாத அந்த 40 லட்சம் மக்களை என்ன செய்யலாம்…?

 1. Pingback: NRC-யில் இடம் பெறாத அந்த 40 லட்சம் மக்களை என்ன செய்யலாம்…? – TamilBlogs

 2. Prasad சொல்கிறார்:

  கொலைக்குற்றம் சாட்டப்பட்ட கட்சித்தலைவர் இது குறித்து பாராளுமன்றத்தில் பேசும்போதெ, அவர் கண்களில் கொலைவெறி தாண்டவமாடுகிறது. குரலில்,
  வார்த்தைகளில் வெளிப்படையான மதவெறி; நம்மால் புரிந்து கொள்ள முடிவதை இந்த நீதிபதிகளால் புரிந்து கொள்ள முடியாதா என்ன ?
  எங்கும் பணம், பதவி ஆசைகள்; அவற்றை சரியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் கெட்டிக்கார அரசியல்வாதிகள்.

 3. புதியவன் சொல்கிறார்:

  உங்கள் ஆதங்கம் புரிந்துகொள்ளக்கூடியது. அரசாங்கம் கணக்கெடுக்கும் இத்தகைய சட்டவிரோதக் குடியேறியவர்களில் தவறுகள் இருக்கலாம், கடந்த காலங்களில் ஓட்டுக்காக காங்கிரஸ் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம்.

  இதில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை நீக்கவைக்கவேண்டுமே தவிர முற்றிலுமாக இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. வங்கதேசத்தவர் தென்னிந்தியாவிலும் ஊடுருவுகின்றனர். தமிழகத்தில் ஏற்கனவே நிறைய வடநாட்டவர் புலம் பெயர்ந்துவருகின்றனர். இதுவெல்லாம் பின்னால் மிகப் பெரிய பிரச்சனையில் நாட்டைக் கொண்டுபோய்விடும்.

  பாஜக இந்த விஷயத்தில் மத அடிப்படையில் செயல்படுகிறார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் வெறும் ‘மத’ப் பேச்சுகளை மட்டும் பெரும்பான்மையான இந்துக்கள் நம்பி வாக்களிக்கமாட்டார்கள்.

  அரசின் இந்த முடிவில் தவறுகள் இருந்தால் களையப்படவேண்டும் ஆனால் ஒட்டுமொத்தமாக இத்தகைய கணக்கெடுப்பை நாம் ஆதரிக்கவேண்டும். ஆந்த்ராவிலிருந்து வந்தவர்கள் இந்தியர்கள். நாமும் (தமிழர்கள்) ஆந்திரா கர்நாடகா, மும்பை, தில்லி என்று பல மாநிலங்களில் புலம்பெயர்ந்து வசிக்கிறோம். ஆனால் மற்ற தேசங்களிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்கள் நமது நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், நமது தேசத்துக்கு இந்தியர்களுக்கு எதிரானவர்கள்.

  • R KARTHIK சொல்கிறார்:

   புதியவன் அவர்களின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.

   Its a delicate subject, it should be handled with utmost care. But ignoring it fully is equally dangerous.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   அண்டை நாட்டிலிருந்து பெரிய அளவில் அகதிகள் வராமல்
   தடுக்க வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
   அதில் இரண்டு கருத்து இருக்க வழியே இல்லை.

   இப்போதைய பிரச்சினை –
   நான் மேலே எழுப்பியிருக்கும் கேள்வி –

   இந்த 40 லட்சம் மக்களை என்ன செய்வதாக உத்தேசம்…?

   நீங்கள் இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்…
   உங்கள் யோசனை, கருத்து என்ன -சொல்லுங்களேன்.

   இப்போதைய ISSUE அது தான்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    அவர்கள் அனைவரும் தவறான நோக்கத்துடன் இந்தியாவிற்கு வந்தவர்கள் (சட்டவிரோதம் என்பது தவறான நோக்கம். இரண்டு, தவறாகக் கணக்கெடுக்கப்பட்டவர்களைத் தவிர அனைவரும் அவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளேன்). இந்தக் கணக்கெடுக்கப்பட்ட காலம் வரை பிறந்த அனைவருக்கும் வாக்குரிமை, தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கான உரிமை கொடுக்கப்படக்கூடாது. அவர்கள் அனைவரும் ‘அகதிகள்’ என்ற நிலையில்தான் மனிதாபிமானத்தில் வைக்கப்படவேண்டும். (இதைப் புரிந்துகொள்ளணும்னா, உங்க நிலத்துல ஒருவன் ஓரமா குடிசை போடறான், நீங்க, பாவம்.. சரி சரி.. என்று விட்டுவிடுகிறீர்கள். நாளை அவன் உங்க நிலத்துக்கு வாரிசாக உரிமை கொண்டாடுகிறான். அப்போது, ஆமாம், அவன் குடிசை போட்டபோது பாவம் பார்த்தது நம் தவறுதான், அதனால் அவனுக்கும் என் வாரிசுகளுக்கு உள்ள உரிமை உண்டு, அதனால் எனக்கு 2 வாரிசுகள் இருப்பதால், அவனையும் சேர்த்து 3 ஆக நிலத்தைப் பிரித்துக் கொடுத்துவிடலாம் என்று எண்ணுபவர்கள், இத்தகையவர்களும் உண்மையான தேசக்குடிமகன்களும் ஒன்று என்று வாதிடலாம்)

    இந்த எண்ணவோட்டத்தில் இந்தப் பிரச்சனையை அணுகி, அதில் உள்ள சிக்கல்களைக் களையவேண்டும். (உதாரணம், இவர்களில், பணத்தை அவர்களின் நாட்டுக்கு அனுப்பியிருந்தால், சொத்துப் பறிமுதல், பயணம் செய்திருந்தாலும் அதேபோன்று சொத்துப் பறிமுதல் போன்று). இது மிகவும் சிக்கலானது, ஆனால் இவர்களுக்கு ஆயுள்வரை வாக்குரிமையோ தேசக்குடிமகனுக்கான உரிமையோ அளிக்கப்படக்கூடாது என்பது என் எண்ணம். இவர்களுக்கும், தேசப்பிரிவினையின்போது இடம் மாறி வந்தவர்களுக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு.

    சரி… இவர்களுக்கான உரிமைகளை, சரிபார்க்காமல் கொடுத்தவர்களை என்ன செய்வது? (இப்போதும் நம் அரசு அலுவலர்கள் செய்வதுதான். பட்டா சரிபார்க்காமல் கரண்ட் கனெக்‌ஷன் கொடுப்பது, தண்ணீர் குழாய் வைப்பது, கட்டிட பிளானைப் பார்க்காமல் 6 மாடி வரை கட்டும்போது கண்ணைக்கட்டிக்கொண்டு லஞ்சம் வாங்கிக் கண்டுகொள்ளாமல் விடுவது போன்று) மற்ற குற்றங்கள் செய்தவர்களைப்போல் பாவிக்கவேண்டும். இதுல என்ன பிரச்சனைனா, இந்தியாவில், தவறு செய்யும் அலுவலர்கள் யாரும் தண்டிக்கப்படுவதில்லை. அவர்கள்தான் பெரும்பாலான குற்றங்களுக்குக் காரணம், உடந்தை.

 4. Prasad சொல்கிறார்:

  //பாஜக இந்த விஷயத்தில் மத அடிப்படையில் செயல்படுகிறார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. //

  Fantastic statement !

 5. Prasad சொல்கிறார்:

  Mr.Puthiyavan,

  – அடுத்து இவர்களை என்ன செய்வதாக மத்திய அரசுக்கு உத்தேசம்…?

  பக்கத்தில் கடல் எதுவும் இருந்தால்… வீசி விடலாம்.
  ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பு இல்லை…

  இத்தனை லட்சம் பேரை பங்களா தேஷுக்கு திருப்பி அனுப்ப
  வழியில்லை… பங்களா தேஷ் ஏற்றுக்கொள்ளாது….//

  So what do you suggest ? How these people can be DISPOSED OFF NOW ?

 6. indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

  Anyway these mass of peoples will soon become minority community of our great nation, and would become a vote bank for the parties.Be prepared for their fight for thier rights in near future…

 7. indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

  சமீபத்தில் ஒரு செய்தியை படித்தேன்.ஒரு தமிழ்நாட்டு பெண் ஒருத்தி இங்கே வேலை செய்த பங்களாதேஷ வாலிபரை காதலித்திருக்கிறார்.பிறகு வீட்டை விட்டு ஒரு நாள் ஓடி போயிருக்கிறார்.அவரை காணாமல் பெற்றோர் தவிக்க , பிறகு தான் தெரிய வந்தது , அந்த பெண் அந்த பங்களாதேஷ வாலிபருடன் அவர் நாட்டுக்கே சென்ற விஷயம்.இத்தனைக்கும் இருவருக்கும் பாஸ்போர்ட் வேறு இல்லையாம். இந்த அழகில் நம் நாட்டு எல்லை பாதுகாப்பு இருக்கிறது.
  பல பங்களாதேஷ் மக்கள் இந்திய எல்லைக்குள் சர்வ சாதாரணமாக ஊடுருவி கொண்டு இருக்கிறார்கள். இங்கேயே செட்டில் ஆகிறார்கள். மம்தா பானெர்ஜி போன்ற தலைவர்கள் அவர்களை வோட்டு வங்கியாக பார்த்து அவர்களுக்கு இந்திய குடியுரிமையை வாங்கி தர முனைப்பு காட்டி கொண்டிருக்கிறார்கள்.

  • தமிழன் சொல்கிறார்:

   பொதுச் செய்திகளைப் படித்து, நேர்மை, நியாயம் என்று மட்டும் எண்ணுபவர்கள் களத்தில் நடப்பதை அறியவில்லை என்று தோன்றுகிறது. பாதுகாப்பு விஷயத்தில் நாம் கண்டுகொள்ளவில்லை என்றால், நமக்குப் பேராபத்து காத்திருக்கிறது. வெறும்ன ‘தமிழன்’ என்று வாயில் வடை சுட்டால் போதாது. (நான் பொதுவா எல்லாத் தமிழரையும் சொல்றேன்). தமிழ்நாட்டில் வடவர்கள் ஊடுருவல் அதிகம். காசு மிச்சம் என்ற பெயரால் இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். வடவர்களில் யார் எந்த மாநிலத்தவர், தேசத்தவர் என்று ஒன்றும் நமக்குத் தெரியாது. மதச்சார்பின்மை என்ற கண்ணாடியால் இத்தகைய நிகழ்வுகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது.

   இன்னொன்று, மதத்தின் பெயரால், இப்போது கலாச்சார வித்தியாசம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதனைப் பற்றி விளக்கினால், அது தவறாகப் புரிந்துகொள்ளப்படும் என்பதால் எழுதவில்லை.

   மம்தா செய்வது நல்லதல்ல. இதனை ஆதரிக்கும் எவரும், அவரது சொத்தில் 90% இத்தகையவர்களுக்கு எழுதிவைத்துவிட்டுத்தான் இதனை ஆதரிக்கணும் (அதாவது ஊடுருவும் பிற தேசத்தவர்களை). இந்திய நாடு, எவனுடைய சொத்தோ, யார் வேணுமானாலும் வரட்டும், அனுபவிக்கட்டும், மதம், இனத்தின் பெயரால் ஆதரிப்போம் என்பது தவறான செயல். ஊடுருவி வந்தவர்களுக்கு வாக்குரிமையோ அல்லது தேசக்குடிமகனுக்குரிய உரிமையோ எதற்கு?

   • indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

    சட்டத்திற்கு புறம்பாக எல்லை தாண்டி வருபவர்களிடத்தில் தயவு தாட்சண்யம் என்பது இருக்க கூடாது.இது தான் வரலாறு சுட்டி காட்டும் பாடம்.இவர்கள் அனைவரும் ஒற்றுமையை பேணி காத்து அதன் மூலம் மிகப்பெரிய வோட்டு வங்கியாக நாளை உருவெடுப்பார்கள்.அப்பொழுது எல்லாஅரசியல் தலைவர்களும் அவர்களுக்கு நிறைய உரிமைகளை, இட ஒதுக்கீடுகளை அளித்து அவர்கள் வாக்கு வங்கியை கைப்பற்ற முனைவார்கள். இது ஒருமை பாட்டிற்கு கேடு விளைவிக்கும். நாளை நமது குழந்தைகளுக்கு கூட கிடைக்காத இட ஒதுக்கீடு, இவர்களுக்கு வழங்கப்படும். வேடிக்கை பார்த்து கொண்டு நாம் இருக்க முடியாது.
    பி.ஜெ.பி யின் நோக்கம் எதுவாகவும் இருந்து விட்டு போகிறது.ஆனால் ரோஹிங்கயா அகதிகள் விஷயத்திலும், இந்த சட்ட விரோத வங்க தேசத்தினர் விஷயத்திலும் அவர்கள் நடந்து கொள்ளும் முறை மிக்க சரியே.இது வரை காங்கிரஸ் இந்த விஷயத்தில் அசட்டையாக நடந்து கொண்டிருந்தது என்பது கண்கூடு.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     புதியவன்,

     உங்களுக்கு சில கேள்விகள் –

     நான் கேட்டது –
     “இந்த 40 லட்சம் மக்களை என்ன செய்வதாக உத்தேசம்…?”

     -அதற்கு நீங்கள் சரியான விளக்கம் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. மற்றபடி ஒரு hardcore ஆர்.எஸ்.எஸ்.காரர் சொல்லக்கூடிய அத்தனையையும் நீங்கள் இங்கே வெகு விளக்கமாக சொல்கிறீர்கள்….

     – இந்த சமயத்தில் இந்த பிரச்சினையை பாஜக கிளப்பியது ஏன்…?

     சுப்ரீம்கோர்ட் உத்திரவை காரணம் காட்டாதீர்கள்…. அதை எதாவது நொண்டிச்சாக்கு சொல்லியே இன்னும் 5 – 10 ஆண்டுகளுக்கு வெகு சுலபமாக தள்ளிப்போட மத்திய அரசால் முடியும்.

     – திரும்ப திரும்ப ராஜீவ் காந்தி போட்ட ஒப்பந்தம் என்று சொல்கிறாரே
     பாஜக தலைவர் – ஒரு காங்கிரஸ் தலைவர் போட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பாஜக தலைமைக்கு ஏன் இத்தனை அக்கறை…?

     – இந்த 40 லட்சத்தில், பிற மாநிலத்திருந்து வந்து செட்டில் ஆனவர்கள்
     எவ்வளவு பேர், பங்களா தேஷிலிருந்து வந்தவர்கள் எத்தனை பேர் என்று மத்திய அரசால் கண்டு பிடிக்க முடியுமா…?

     – கண்டுபிடிக்க முடியாதென்றால், நம் நாட்டிலேயே வேறு ஒரு மாநிலத்திலிருந்து வந்தவர்களை, அந்நிய நாட்டிலிருந்து வந்த அகதி
     என்று சொல்லி தண்டிப்பது நியாயமா..?

     – கண்டு பிடிக்க முடியும் என்றால் – எப்போது அதைச் செய்ய முடியும்….?

     – அதை முதலில் செய்து விட்டு, பிறகு லிஸ்டை வெளியிடுவதற்கென்ன…? அதற்குள்ளாக ஏன்…?

     ( அதற்குள் தேர்தல்கள் முடிந்து விடும்…. அதனால் தானே…?)

     – சரி, எந்தவித தடங்கலுமின்றி – 40 லட்சம் பேர் வேறு ஒரு நாட்டிலிருந்து எல்லையை தாண்டி இந்த நாட்டிற்குள் வர முடிகிறதென்றால், இந்த நாட்டிற்கு மத்திய அரசு என்று ஒன்று எதற்கு….? ராணுவம் தான் எதற்கு…?

     – மத்திய அரசின் வழிகாட்டுதலில் தயாரித்த NRC -யில் இடம் பெற வேண்டுமானால், அதற்கு என்னென்ன ஆவணங்கள் தரவேண்டும் என்பதைப்பற்றிய விவரங்கள் தெரிந்தால் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள்…
     ஒன்றே ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன்…

     அது கேட்கும் விவரங்களை – கொடுத்தால் தான் குடியுரிமை
     உறுதிப்படுத்தப்படும் என்றால் – என்னாலேயே கூட நான் ஒரு இந்தியன் என்பதை நிரூபிக்க முடியாது……

     – 1951-ஆம் வருடத்திற்கு முன்பாக எனது தந்தை இந்தியாவில் தான் இருந்தார் என்பதையும், அவர் எந்த ஊரில், எந்த விலாசத்தில் இருந்தார்
     என்பதையும் ஆவண ஆதாரங்களுடன் நிரூபித்தாக வேண்டும்… சொத்து-பத்து இல்லாத எத்தனை பேர்களால் இது முடியும்.. ?

     ———————————-

     இதெல்லாம் கிடக்கட்டும் விடுங்கள் –

     இந்த விஷயத்தை பாஜக /ஆர்.எஸ்.எஸ். இப்போது கையில் எடுத்துக் கொண்டதன் காரணம் என்ன…?

     – இன்னும் 40 வருடங்கள் ஆனாலும், இந்த 40 லட்சம் பேரை என்ன செய்வது என்பது குறித்து, எந்த அரசாலும், எந்த தீர்மானத்திற்கும் வர முடியாது… அது அவர்களுக்கும் தெரியும்.

     அதிக பட்சம் – அவர்கள் செய்யக்கூடியது – இதில் யார் யாருக்கு தற்போது ஓட்டுரிமை இருக்கிறதோ… அது விலக்கிக் கொள்ளப்படலாம்.சொத்துரிமை மறுக்கப்படலாம்…… அவ்வளவே…

     ஆனால், வெளியில் சொல்லாத,
     அவர்கள் செயல்பட –
     மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது…..
     இதில் சம்பந்தப்பட்ட முஸ்லிம் மக்களை அவர்களால்
     நிரந்தரமாக அச்சத்தில் ஆழ்த்த முடியும்.

     அதே போல், இந்த விஷயத்தை,
     ஒரு விவாதப்பொருளாக்கி,
     நாட்டு மக்களிடையே சூடேற்றினால் –
     ஹிந்து-முஸ்லிம் மக்களிடையே
     விரோதத்தை, வெறுப்பை, குரோதத்தை
     உண்டு பண்ணலாம்.

     ஹிந்துக்களுக்கு – முஸ்லிம்கள் தங்கள் சொத்தை, வேலையை, நிலத்தை அபகரிக்க வந்தவர்கள் என்கிற தோற்றத்தை உண்டுபண்ணி – வெறுப்பை அதிகரிக்கலாம்.

     முஸ்லிம்களிடையே – ஹிந்துக்களால், தங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து உண்டாகக்கூடும் என்கிற நிரந்தர அச்சத்தை உண்டு பண்ணலாம்.

     மக்களிடையே இதை மட்டுமே முக்கிய பிரச்சினையாக உருவாக்கி விட்டால், தேர்தல் நேரத்தில் – இதுவே மிகப்பெரிய பிரச்சினையாகி விடும்… பாஜக அரசின் தோல்விகள் …எதிர்மறையான பிரச்சினைகள் அனைத்தும் மறைக்கப்படும்…….மறக்கப்படும்…!!!

     NRC -யை ஆதரிக்கும் – உங்களைப்போன்ற அனைவருமே, பாஜக அரசை ஆதரிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்… உருவாக்கப்படும்.

     பாஜக தலைமை முயற்சிப்பது அந்த சூழ்நிலையை உருவாக்கவே…!

     —————————–

     “மதம்” என்பது அபினை விட அதிகமாக போதை தரும் வஸ்து….
     சாதாரணமாக – ஓரளவு காரணங்களோடு – விவாதிக்கக்கூடிய உங்களைக்கூட அது மயக்கி திசைதிருப்பி இருப்பதிலிருந்தே அதை உணரலாம்.

     இந்த நாட்டில் – நிம்மதியும், அமைதியும், சந்தோஷமும் நிலவ வேண்டுமானால் – அது ஹிந்து மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையால் மட்டுமே முடியும்.

     ஆனால் பாஜக /ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை தொடர வேண்டுமானால்,
     இந்த இரு சமூகத்தினரிடையேயும் விரோதத்தை மூட்டி விட்டு,
     அந்த நெருப்பை தொடர்ந்து அணையாமல் பாதுகாப்பதன் மூலம்
     மட்டுமே முடியும்….

     பாஜக, ஆர்.எஸ்.எஸ். தனது நடவடிக்கைகளில்
     தீவிரமாக
     ஈடுபட்டிருக்கிறது….

     இதை- இந்த நாட்டின் மெஜாரிடியினரான ஹிந்து மக்கள்
     எந்த அளவிற்கு புரிந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே –
     எதிர்காலம் அமையும்….

     “ஈஸ்வர அல்லா தேரே நாம்” – என்று சொன்னவரை
     ஏற்றுக் கொண்ட நாடு இது…

     அப்படிச் சொன்னவரையே கொன்றவர்கள் பலம் பெற்றால், பிறகு
     இந்த நாட்டின் கதி என்ன ஆகும்…?

     நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதற்காக
     நான் இதை எழுதவில்லை… அது உங்கள் விருப்பம்…. உரிமை.

     இந்த வலைத்தளத்திற்கு வருகை தரும் நண்பர்களுக்கு இந்த கருத்தை
     விளக்கமாக எடுத்துச்சொல்ல வேண்டிய கடமை எனக்கிருப்பதாக
     நான் கருதுவதால் – இவ்வளவு விவரமாக எழுதுகிறேன்.
     ஒருவேளை அது உங்கள் நிலையிலும் எதாவது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்குமேயானால், எனக்கு மகிழ்ச்சியே…

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • புதியவன் சொல்கிறார்:

      //முஸ்லிம்களிடையே – ஹிந்துக்களால், தங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து உண்டாகக்கூடும் என்கிற நிரந்தர அச்சத்தை உண்டு பண்ணலாம்.//

      கா.மை சார்… எனக்கு இதுதான் பாஜகவின் அஜெண்டாவாக இருக்கும் என்று தோன்றவில்லை. எப்போதும் நமக்குத் தோன்றுவது உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை அல்லவா? இதைத்தானே பலப் பல வருடங்களாக அரசியலில்ல் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

      இதுதான் அஜெண்டா என்று சொன்னால், அதனால் நாட்டுக்கு உபயோகம் இல்லை. கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சந்தேகப்பட்டுக்கொண்டு வாழ்க்கை ஆரம்பித்தால், எதைச் செய்தாலும் அதில் குற்றம் காணமுடியும். அதுபோல் இந்தியர்கள் என்ற உணர்வு இருப்பவர்களிடம் பேதமை காட்டுவது அறிவீனம்.

      பிரச்சனையை மட்டுமே கிளப்பினால், அதில் எல்லோரும் பாதிக்கப்படுவார்கள். பிரச்சனையோடு தீர்வையும் (அதாவது பாராளுமன்றத்தில் முக்கிய எதிர்கட்சித் தலைவரால் ஒத்துக்கொள்ளப்படும்) தந்தால்தான், அதனால் இந்தியாவிற்கு உபயோகம்.

      ஏற்கனவே நான் எழுதியுள்ளபடி, ‘அயோத்யா ராமர் கோவில்’ போன்றவை தேர்தல் அஜெண்டாவாக இனி ஆகமுடியாது. இப்போதுள்ள தலைமுறை மாறிக்கொண்டுவருகிறது. அவர்களிடையே பேதங்கள் குறைகிறது என்பதை நான் உணர்கிறேன் (ஜாதி, மதம் போன்று). இது படித்த இளைஞர்களிடையே, அதிலும் நகரங்களில், குறிப்பாக சென்னையில் பரவலாக இருக்கிறது. இது நிச்சயம் தமிழகம் முழுக்க பரவத்தான் செய்யும்.

      இன்றைக்கு உங்கள் கருத்தைப் படித்து அதன் பின்னர் இடுகையையும் இன்னும் ஒரு தடவை படித்தேன். நம் இருவரின் கருத்தும் இருவேறு கோணத்தில் இருக்கிறது. காலம் விரைவில் தெளியவைக்கும் என நினைக்கிறேன்.

 8. Mani சொல்கிறார்:

  பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். DNA ரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும்
  ஊரித்திளைத்திருக்கும் ஒரே ஆசாமி இங்கே பல பெயர்களில் வந்து விஷத்தை கக்கி இருக்கிறார். இவரையெல்லாம் ‘யோசனை’ கேட்கலாமா ?

  கே.எம்.சார் தவறாக நினைக்காதீர்கள். நீங்கள் இவரை எல்லாம் பெரிய சிந்தனையாளராக treat பண்ணுவது சரியா ?

  • புதியவன் சொல்கிறார்:

   மணி – எந்தக் கருத்தை யார் எழுதினாலும், தனக்குப் பிடிக்காவிட்டால், அவர்கள் ‘பக்தர்கள்’, ‘பாஜக’, ‘ஆர் எஸ் எஸ்’ என்று சரமாரியாக விஷத்தைக் கக்குவது நீங்களா அல்லது நானா என்பது படிப்பவர்களுக்குத் தெரியாதா?

   ஒரே கருத்தை, அதுவும் நீங்கள் எதிர்பார்க்கும் கருத்தை, ‘முரசொலி’யிலேயே படித்துக்கொள்ளலாமே. இந்த ‘விமரிசனம்’ தளத்திலும் உங்கள் கருத்தையே எதிர்பார்க்கிறீர்களே. `1,2,3… 6 வரை எண்ணத் தெரிந்தவர்களையெல்லாம் ‘அறிஞர்’ என்று அடைமொழியிடுவது தமிழக வழக்கமல்லவா?

 9. Thiruvengadam சொல்கிறார்:

  The problem in Assam is the legacy of the British days.DK Barua a Congress leader said as long as the Ali’s and Coolies are there Congress will be in power.Becase of this policy the Foreighners Act was not enforced in Assam.Secondly the problem was aggravated by the unscientific demarcation at the time of independence.General Ersha d of Bangladesh told a news person “not only Assam but the entire NE will provide the space for the bangladshis.The Assam accord was to identify infiltrators after 1971 but AGP government and subsequent could not complete Becase of legal problems.we have to declare those who are infiltrators as stateless persons and move international forums or distribute the all over India in camps Becase despite the presence of Jyoti Basu from East Bengal no repatriation was possible Becase of votes.The problem is between Upper Assam (mostly Ahoms) andLower Assam (mostly Bengalis)Thiruvengadam

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.