அமெரிக்காவில் – settle ஆகும் இந்தியர்களின் மனநிலை…..?


..

என்னுடன் பணி புரிந்த நண்பர் ஒருவரின் 2 பிள்ளைகளும், ஒரு பெண்ணும் வரிசையாக ஒவ்வொருவராக அமெரிக்கா சென்று – அங்கேயே settle ஆகி விட்டார்கள். 76 வயதான அவரும், 70 வயதான அவர் மனைவியும் இப்போது ஸ்ரீரங்கத்தில் தனியே இருந்துகொண்டு – முதுமை காரணமாக நோய்வாய்ப்படும்போது, அவசரத்திற்கு கூட கவனித்துக்கொள்ள யாருமின்றி திண்டாடுகிறார்கள்.

அதே போல், இன்னொரு நெருங்கிய நண்பனின்
மகன், மகள் -இருவருமே அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்கள்… நண்பன் சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டான்… அந்த நண்பனின் மனைவி, கணவனை இழந்து, பிள்ளை, பெண் – இருவரும் இருந்தும் – இல்லாமல் அவரும் ஸ்ரீரங்கத்தில் தனியே வாழ்கிறார்.

இந்த இரண்டு குடும்பமும் எனக்கு மிகவும் பழக்கமான குடும்பம்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக பழகுபவர்கள்.

இப்போது சென்னையில் நான் இருக்கும் அடுக்குமாடி குடித்தனத்தில்,
அடுத்து இருப்பவரின் 2 மகள்களும் அமெரிக்கா…. படிக்கப் போனவர்கள்
திரும்பவில்லை…!

படிப்பிற்காக, வேலை வாய்ப்பிற்காக – அமெரிக்கா செல்பவர்கள் –
நூற்றுக்கு 99 பேர் திரும்புவதில்லை…

சிலர், குடும்பத்தேவையின் காரணமாக போயிருக்கிறார்கள்… புரிகிறது.
அவர்கள் மீண்டும் இந்தியா திரும்பும் நாளுக்காக ஆவலுடன்
காத்திருக்கிறார்கள்..

விடுமுறையில் இங்கு வரும் பலரிடம் நான் பேசியிருக்கிறேன்
ஆனால், இங்கிருந்து போனவர்களில் பெரும்பாலானோர்,
அமெரிக்காவைப்பற்றி உயர்வாகவே கூறிக்கொண்டிருக்கிறார்கள்…
என்ன இருந்தாலும் அமெரிக்கா அமெரிக்கா தான் – இங்கே என்ன
இருக்கிறது என்று கேட்கிறார்கள்….
அவர்கள் வெளிப்படையாக தங்கள் பிரச்சினைகளை கூற அவர்களது ஈகோ தடுக்கிறதா அல்லது நிஜமாகவே அது தான் அவர்கள் அபிப்பிராயமா
என்பது தெரியவில்லை.

இந்த விமரிசனம் தளத்தை அமெரிக்காவிலிருந்து நிறைய தமிழ் நண்பர்கள் படிப்பதை என் dash board- லிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது… சராசரியாக ஒரு நாளைக்கு 200 முதல் 250 பேர் வரை படிக்கிறார்கள்… இத்தனை பேர் இதில் ஆர்வமாக இருப்பது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சியே.

இந்த subject பற்றி நான் விவரமாக ஒரு இடுகை எழுதி, அமெரிக்க வாழ்
தமிழர்களிடம் சில விஷயங்களைப்பற்றி, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்று நினைத்து
பாதி எழுதி, முடிக்காமல் வைத்திருந்தேன்…

– இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
இழைக்கப்படும் கொடுமைகளும் அமெரிக்காவில் கருப்பர்களுக்கு
கொடுக்கப்படும் treatment- உம் ஒப்பிடக்கூடியதா…?

– அமெரிக்க அரசியலில் யூதர்கள் ( jews ) மிகுந்த செல்வாக்குடன்
இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்…. அமெரிக்க சமுதாயத்தில் –
அவர்களின் செயல்பாடுகள் வரவேற்கப்படுகிறதா…? சாதாரண அமெரிக்கர்கள் அவற்றை ஏற்றுக் கொள்கிறார்களா…? அமெரிக்கர்கள் யூதர்களை அந்நியர்களாக கருதுவதில்லையா…?

– இந்தியாவிலிருந்து சென்று நிரந்தரமாக அமெரிக்காவில் செட்டிலாகி
இருக்கும் நண்பர்கள், அங்கிருக்கும் சூழ்நிலையோடு மனப்பூர்வமாக
ஒன்றிப் போக முடிகிறதா…?

– உள்ளூர் அமெரிக்கர்கள், அத்தகைய இந்தியர்களை எப்படி ஏற்றுக்
கொள்கிறார்கள்…?

– தங்கள் குழந்தைகள் –
முக்கியமாக பெண் குழந்தைகள் – வளரும்போது,
அமெரிக்க கலாச்சாரம் அவர்களின் மீது ஏற்படுத்தக்கூடிய
பாதிப்பு பற்றிய கவலை அவர்களுக்கு ஏற்படுவது இல்லையா…?

இது போன்ற இன்னும் சில கேள்விகள்….

அதற்குள்ளாக, நீண்ட காலமாக அமெரிக்காவில் குடியிருக்கும்
தமிழ்ப்பெண்மணி ஒருவர் கொடுத்திருந்த ஒரு பேட்டியை படித்தேன்…

அதிலிருந்து சில பகுதிகள் கீழே –

———–

– அமெரிக்க சரித்திரங்களைப் படிக்கிறேன். அவர்கள் வாழ்வியலை நேரடியாகப் பார்க்கிறேன். நம் நாட்டில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு இணையாகக் கறுப்பர்களுக்கு எதிரான வெறுப்பு அமெரிக்காவில் இருக்கிறது. வளமான நாடாக இருந்தாலும் நிறைய பிரச்சினைகள் அங்கேயும் இருக்கின்றன. –

வெளியிலிருந்து வந்த யூதர்கள் –
புனிதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் சகித்துக்கொள்ள முடியாத
வன்முறையை வெளிப்படுத்துகிறார்கள். – யூதர்களுக்கு முஸ்லிம்களோடு தான் என்றில்லை, யூதர்களுக்கு கிறிஸ்தவர்களோடும் பிரச்சினைதான்.

-நம் சிந்தனையில் இருக்கும் அமெரிக்காவும் யதார்த்தமும் ஒன்றல்ல.
இப்போதும் அமெரிக்காவில் பாலும் தேனும் ஓடுவதாக நினைக்கிறோம்.

அமெரிக்க ஏழைகள் அவசரத்துக்கு மருத்துவரைப் பார்ப்பது சாதாரண
காரியம் அல்ல. மருத்துவத் துறையில் முன்னேறியிருப்பதற்கு நிகராக
மருத்துவக் குளறுபடிக்குள்ளும் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

– கறுப்பினத்தவர்கள் பற்றி இந்தியர்களுக்கு சில அடிப்படை விஷயம்
தெரிந்திருக்கும் என்றாலும்கூட யதார்த்ததில் கொடூரமாக இருக்கிறது.

கறுப்பர்கள் அனுபவிக்கும் கொடுமைகள், பூர்வகுடிகளை அமெரிக்க
வெள்ளையர்கள் அழித்த விஷயங்களெல்லாம் நம் கற்பனைக்கு
அப்பாற்பட்டது. மனதளவிலும் அவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.

சும்மா இருப்பவனிடம் துப்பாக்கி இருப்பதாகச் சொல்லி சுட்டுவிட்டுத்
தற்காப்புக்காகச் சுட்டேன் என்பார்கள்.

இன வெறுப்பை ஒழிப்பதற்காக அங்கே முயற்சிகள் ஒன்றுமே செய்வது
கிடையாது. மக்கள் மனதிலுமேகூட அப்படியான எண்ணங்கள் கிடையாது.

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர்களால் ஒரு ஐடி நிறுவனத்தில்
பணிபுரிந்துகொண்டு பொருளாதாரரீதியில் மேலே வர முடிகிறது. அமெரிக்காவில் அப்படியான வாய்ப்புகள் கறுப்பர்களுக்குக் கிடையாது.

– ஒபாமா செய்த சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் ஒபாமா செய்தார் என்ற ஒரே காரணத்துக்காகவே அதை மாற்றிக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப். – ஒபாமா ஆட்சியின்போது வங்கிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்தார். அதை ட்ரம்ப் மாற்றிவிட்டார். சுற்றுச்சூழல் துறையிலும் அப்படியே. பிற நாடுகளைப்
பகைத்துக்கொள்வதும் அதிகமாகியிருக்கிறது. ஒழுக்கத்திலும் ரொம்ப
மோசம்.

– ஆனால், இன்னும் அவருக்கான ஆதரவு இருக்கிறது. “தெருவில் வைத்து ஒருவரை நான் சுட்டால்கூட மக்கள் என்னை ஆதரிப்பார்கள்”
என்கிறார் ட்ரம்ப். இப்போது ட்ரம்பின்
அடுத்த ஆட்சிக்காலம் குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதை நினைத்தால் பயமாக இருக்கிறது.

– பெண்ணியம் பேசப்பட்ட பிறகு அமெரிக்கா,
கலாச்சாரத்தில் எண்ணற்ற பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறது.
ஆண்களைப் போல நாங்களும் போரின் முன்வரிசையில் நின்று சண்டையிடுவோம் என்கிறார்கள் பெண்கள்.

வீட்டைக் காலிசெய்யும்போது பொருட்களைத் தூக்க ஆண்களால்தான் முடியும். பெண்களால் முடியாது. முடியாத வேலையைப் பெண்கள் செய்ய வேண்டாமென்கிறேன்.

– சமூகம் இருவரையும் ஒன்றாக மதிக்க வேண்டும், இருவருக்கும்
சமமான உரிமையைக் கொடுக்க வேண்டும்
என்று பேசுவதற்குப் பதிலாக இவர்கள் பேசும் பெண்ணியம் பெண்களின் மனநிலையைப் பெரிதும் பாதித்துவிட்டது.

– கல்யாணத்துக்கு முன்பாக சேர்ந்து வாழ்வதும்,
கல்யாணத்துக்குப் பிறகு பிரிந்து வாழ்வதும் சகஜமாகிவருகிறது.
அதை நாமும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறோம்.
இது சமூகத்துக்கான கேடு. முக்கியமாக, இதுபோன்ற உறவுகளால் குழந்தைகள்தான் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

– கலாச்சாரரீதியாக சீர்கெடுவதால் சமூகம் எவ்வளவு மோசமான நிலைக்குச் செல்லும் என்பதற்கு முன்னுதாரணமாக அமெரிக்கா இருக்கிறது.

——————————————————————-

இந்த விஷயங்கள் குறித்து, தற்போது அமெரிக்காவில் வாழும் –
விமரிசனம் தளத்தை தொடர்ந்து படித்து வரும் தமிழ் நண்பர்கள்
யாராவது கருத்து கூற முடியுமா…?

இதை வைத்துக்கொண்டு ஒன்றையும் சாதித்து விடப்போவதில்லை..
இருந்தாலும், நான் கவலைப்படும் சில விஷயங்களைப்பற்றி தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

தற்போது இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் கூட -இது குறித்து
அவர்களுக்கு அனுபவம் இருக்குமேயானால் – விளக்கலாம்.

தமிழில் எழுத வசதிப்படவில்லையென்றால்,
ஆங்கிலத்தில் எழுதினாலும் சரியே….!!!

நண்பர்கள் யாராவது இதையெல்லாம் குறித்து விளக்கமாக எழுவீர்களானால் –
அவர்களுக்கு இப்போதே என் அட்வான்ஸ் நன்றிகள்….!!!

.
—————————————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to அமெரிக்காவில் – settle ஆகும் இந்தியர்களின் மனநிலை…..?

 1. தமிழன் சொல்கிறார்:

  காவிரி மைந்தன் சார்.. எனக்கு மனதில் தோன்றுவது. இங்கிருந்து செல்பவர்கள் ஜாதீய, மத வித்தியாசங்களையும் இங்கிருந்து எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் அவர்களால், அவர்களுடைய அடுத்த ஜெனெரேஷனைக் கட்டுப்படுத்த இயலாது. இப்படிச் செல்பவர்கள் தங்கள் பெற்றோர்களையும் வேறு வழியில்லாமல் விட்டுத்தான் செல்லணும்.
  1. சவுகரியங்கள், வாழ்க்கைக்கான வசதி, ஓரளவு பயமில்லாத வாழ்க்கை, நல்ல சுற்றுச்சூழல், பணம் (ரிலேடிவ்லி) இவைகள்தாம் இந்தியாவைக் குறை கூறி புலம் பெயர்ந்தவர்கள் தாங்கள் சொர்க்கத்தில் இருப்பதுபோன்ற ஃபீலிங் உண்டாக்குகிறது. அங்கு போய் இருந்தபிறகு, தமிழகம் மீண்டும் பழக்கமாவது கடினம். சாதாரண வாழ்க்கைக்கான பிரச்சனைகள் நம் நாட்டில் மிக அதிகம்.
  2. மனதளவில் கிராம, தமிழக வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர்கள் (குறிப்பாக பிராமணர்கள்), அங்கு போயும் கோவில், அந்தச் சூழல் என்பதில் ஒட்டியிருக்க முயலுகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்களின் அடுத்த ஜெனெரேஷன் இந்தியச் சூழ்நிலையை அறியாமல், ஆனால் பெற்றோர் சொல்லும் பாரம்பர்யப் பழக்கங்களை ஒன்றமுடியாத, நம்பிக்கைகொள்ளாத இருதலைக் கொள்ளி எறும்பாகத்தான் இருப்பார்கள்.
  3. பெற்றோரை அங்கு வருடத்துக்கு 6 மாதங்கள் கூட்டிக்கொள்வார்கள். அதுவும் எல்லா வருடங்களிலும் சாத்தியமாகுமா, பெற்றோருக்கு பயணம் செய்ய முடியாதபோது (அந்த வயது வரும்போது) அடுத்து என்ன செய்வது என்ற பிரச்சனை வரும். பொதுவா இது, ‘பெற்றோரை விடமுடியாதே’ என்ற மனத்திலும், அவங்க அங்க இருக்கும்போது, பெரும்பாலும் அம்மா, அவங்களுக்கு உதவுவார்கள் என்ற எண்ணத்திலும் செய்யப்படுவது.
  4. பெற்றோர்களுக்கு வசதியான ஒரு வீடு இங்கு வாங்கி அதில் தங்கவைத்துவிடுவார்கள். ஸ்கைப் போன்ற வசதிகளும் பண்ணிவைத்துவிடுவார்கள். அதற்குமேல் பெற்றோர் வாழ்க்கை அவர்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். அவர்களால் உதவிசெய்ய (பணத்தைத் தவிர) முடியாது.
  5. என்னதான் சொன்னாலும், அடுத்த அல்லது நிச்சயமாக அதற்கு அடுத்த ஜெனெரேஷன் முழுமையான அமெரிக்கக் கலாச்சாரத்தில்தான் மூழ்கிவிடுவார்கள். இப்போ நாம் பார்க்கிற ‘பாண்டியன்’ என்ற பெயர் கொண்ட கால்பந்து கோச் (வேறு நாடு), வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளிகள்போல்தான் மாறிவிடுவார்கள். ‘இந்து’ என்று தெரியும், அதற்குமேல் ஒன்றும் தெரியாது. கிறித்துவர்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை. இயல்பாக அந்த அதற்கு அடுத்த ஜெனெரேஷனே அமெரிக்காவில் சுலபமாகக் கலந்துவிடமுடியும்.
  6. அமெரிக்க கலாச்சாரம் குழந்தைகள்மீது நிச்சயமாக பாதிப்பு ஏற்படுத்தும். அதை மனதில் போட்டுக் குழப்பிக்கொள்ளாவிட்டால், (ஏனென்றால் அடுத்த கலாச்சாரத்தில் ஆசையாக போயாச்சு), இங்கில்லாத சவுகரியம் அந்த கலாச்சாரத்தில் உண்டு. 18 வயது-20 ஆச்சுன்னா பசங்க தனியாகப் போய்விடுவார்கள். தாங்கள் தனிமையாக தொந்தரவு இல்லாத வாழ்க்கை வாழலாம். தமிழகக் கலாச்சாரத்தில் 30 வயது வரையிலும் நாம் நம் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்யறோம், அதற்கு அப்புறம் இன்னும் 15 வருடங்கள் தியாக வாழ்க்கை, பிறகு அவர்கள் நம்மைக் காக்கவேணுமே என்ற கவலையுடன் கழிக்கிறோம். இந்த மாதிரி செண்டிமெண்ட், எதிர்பார்ப்புகள் அந்தக் கலாச்சாரத்தில் கிடையாது. (இங்கேயே இளமைக் காலத்தைக் கழித்தவர்களால், தன் பசங்க வேறு நண்பர்களோடு 18 வயதில் பழகுவதை மனதளவில் ஏற்கமுடியாது. அந்தக் கலாச்சாரத்தின் அந்த மாதிரி பக்கங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது.. ஆனால் ஒன்றும் செய்யமுடியாத கையறு நிலை)
  7. நம் கலாச்சாரம் முற்றிலும் வேறு. வெஸ்டர்ன் கலாச்சாரம் முற்றிலும் வேறு. அடல்ட் வயதை அடையும் வரை பெற்றோர் ரெஸ்பான்சிபிள். அதற்குப் பிறகு நம் வாழ்க்கை வேறு அவர்கள் வாழ்க்கை வேறு. அவர்கள் நம்மோடு இருக்கும்போதும் தேசத்தின் கலாச்சாரப்படிதான் அவர்களை வளர்க்கமுடியும் (நாம் கண்டிப்பு காண்பிக்க முடியாது, சட்டப்படிதான் நடக்கணும். தனி அறை கொடுக்கணும், அடிக்கக்கூடாது என்றெல்லாம் சட்டம்). இது அவர்கள் கலாச்சாரம். நம் கலாச்சாரம் நாம் இறக்கும்வரை நம் பசங்க, அவங்க பசங்க ஓரளவு நம்ம கண்ட்ரோலிலேயே வைத்து ஒன்றுக்குள் ஒன்றாக வாழும் கலாச்சாரம். 30 வயதான மகனும் அப்பாவுக்கு பயந்துகொண்டு, அவருக்கு முகச்சுளிப்பு இல்லாமல் வாழும் கலாச்சாரம் நம்முடையது. இரண்டும் இரண்டு திசை.

  எனக்கும், வெஜ்/நான் வெஜ் உணவகத்தில் இன்று வரை சாப்பிட (5 ஸ்டார், பிட்சா தவிர) மனம் வந்ததில்லை. மனது முழுக்க கிராமம் வளர்ந்த விதம், இருக்கும் சூழல் முற்றிலும் வேறுபட்டது. இருந்தாலும் நல்ல காலம், கல்ஃபில் வாழ்க்கை இருந்ததால் பாதிப்பு அவ்வளவு இல்லை. ஆனால் நான் சந்தித்த தமிழர்கள் (லண்டன், பாரிஸ் மற்றும் வேறு தேசம்) அந்தக் கலாச்சாரத்தின் நமக்கு நன்மையான விஷயத்தை மட்டும் முனைப்பாகக் கற்றுக்கொண்டு வேரை இழந்தவர்கள்போல் வாழ்வதைத்தான் நான் பார்த்திருக்கிறேன். எனக்கு அந்தக் கலாச்சாரத்தின் மீதான பயம், மனதளவில் நான் மாறுவது கடினம், கண் முன்னால் பசங்க என் கலாச்சாரத்தை விட்டுப் போய்விடுவார்கள் என்றெல்லாம் தோன்றி, கலாச்சாரத்தை மீறக்கூடாது என்ற எண்ணம் என்னை அப்போது டாமினேட் செய்ததால் அமெரிக்காவோ, கனடாவோ வாய்ப்புகள் வந்தபோதும் செல்லவில்லை. பொதுவெளியில் இன்னும் உண்மைகளை பட்டவர்த்தனமாக எழுத முடியாது. இன்னொன்று, நம் விழுமியங்கள், பொது விழுமியங்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

  அமெரிக்கா வாழ் தமிழர்கள் இன்னும் விரிவாக உண்மைகளை எழுதமுடியும்

 2. Pingback: அமெரிக்காவில் – settle ஆகும் இந்தியர்களின் மனநிலை…..? – TamilBlogs

 3. மதுரைத்தமிழன் சொல்கிறார்:

  நான் அமெரிக்காவின் நிரந்தர குடிமகனான மதுரைத்தமிழந்தான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை படிக்கிறேன். இப்போது நேரம் இல்லை கலைஞரின் மறைவும் மனத்தை கனக்க செய்கிறது…..நிச்சயம் எனக்கு அமெரிக்காவில் ஏற்பட்ட அனுபவங்களை கூறி செல்லுகிறேன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   மதுரைத்தமிழன்,

   உங்கள் வருகைக்கு நன்றி.
   உங்களுக்கு எப்போது வசதிப்படுகிறதோ அப்போது விவரமாக எழுதுங்கள். உங்கள் மடலை நான்
   நிச்சயம் எதிர்பார்த்திருப்பேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. Raghuraman N சொல்கிறார்:

  Dear KM Sir.,

  I read this post a week ago and due to other commitments could not reply.

  I too spent an year at US.

  The positives I could see there – openness – whether they love or hate. When I visited a Chinese restaurant for food and upon my request for complete veg food, they washed the stove top, showed me the utensils washed and cooked in front of me with the items I selected. This may be a marketing trick but I loved it.

  On my first trip – when my connecting flight departure is about less than two hours and there was a long queue – I approached a policeman and he helped me by taking me to the VIP counter and cleared. Imagine the delight one can have on day one.

  They respect our belief and check with us in the common forum. Their denials are also polite. Even for a false statement – which many used to make – they simply deny by making a statement ” may be true – I don’t know” This gives us some pride in the group.

  Since I did not own a car and while carrying my purchase from superstores, I was offered for a drive to my apartment.

  There are associations available for each language groups and people celebrate festivals jointly.

  General feeling is – if we do not indulge in any wrong activity, we can be safe.

  The negatives – Yes – we miss our close relations and the festivals. We could communicate only through phone or video chats. (even here people wish only through watsup – not even phone calls)

  I don’t think people go there only for money, some may stay there even for false status.

  There also we can see groups – even among our own people – there is a complete demarcation between green card holders and the H1 B holders. It could be easier to move with our own people if we know Hindi well. I faced this problem. Thanks to Dravidian culture.

  On cultural differences – yes – it is huge shock when we hear language of kids with age group between 10 – 15. One of the reason I came back earlier is due to the standard of education I can afford for my son and the question of how he can cope up with Indian standards when we return. Private education is expensive. Also if there is no medical insurance, we may have to sell our forefather’s assets in India.

  But looking at the current situations in India – we also feel it is not safe to stay away from native state. Every year between March – July, we feel unsafe in Bangalore. By God’s grace – we have good rain this year.

  Regards

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   ரகுராமன்,

   உங்களது விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி…

   ஒன்றிரண்டு கேள்விகள் –

   -குறிப்பிட்ட காலத்திற்கு தான் அமெரிக்கா என்பதை நீங்கள் போகும்போதே தீர்மானித்துக் கொண்டு தான் போனீர்களா…? அல்லது அது அங்குபோன போன பிறகு அங்கே இருந்த சூழல் (ground realities), குழந்தைகள் கல்வி, கலாச்சாரம் போன்றவற்றை நினைத்து ஏற்பட்ட மனமாற்றமா…?

   – நீங்கள் திரும்பி வருவது என்று தீர்மானித்த பிறகு உங்கள் பெற்றோர்களின் மனநிலை எப்படி இருந்தது…?
   (உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ – இதை பாராட்டியிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்…)

   – திரும்பி வந்த பிறகு – இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது…? (பண நிலையை விடுங்கள்…!!! )
   தவறான முடிவு எடுத்து விட்டோமோ என்று தோன்றுகிறதா…?

   ( உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்வதாக தயவுசெய்து நினைத்து விடாதீர்கள். பொதுவாக இத்தகைய சூழலில் வாழும் மக்களின் மனநிலையை தெரிந்துகொள்வதே என் நோக்கம். )

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Raghuraman N சொல்கிறார்:

    No Sir., I came back without completing the eligible term. My friends suggested that I was making a mistake – but my concise is clear.
    My parents are no more and I am the last son for them and there is no compulsion from family side. Thankful to my wife and son who understood me and they never repented.

    The original idea was to stay there for a while and then to take family. Then changed my mind and when I could get opportunity to come back, I utilized. Somehow I could not adapt to the their lifestyle.

    I have no regrets. I do enjoy what ever I do and take life as it takes me.

    When I spoke to some of my friends – they wanted to stay there for a while, earn and then retire early.

    I have doubts whether they can do so as there is no end for wants and once kids started adapted to different lifestyle at young age, it is tough for them to re-adapt to our lifestyle. This is my view.

    Regards

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     ரகுராமன்,

     Excellent…!

     பணத்திற்கோ, உயர் வசதிகளுக்கோ (high standard of living ) முன்னுரிமை கொடுக்காமல் – குழந்தைகள் வளரும் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்கள்…

     அதன் விளைவாக – கிடைப்பதை, இருப்பதை – ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் உங்களிடம் இருக்கிறது… உங்கள் குடும்பமும் இதற்கு மனப்பூர்வமாக ஒத்துழைக்கிறது.

     நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் –
     நிறைவாகவும், மகிழ்ச்சியோடும் வாழவும்,
     உங்கள் அனைவருக்கும் நல்ல வளமான எதிர்காலம் அமையவும் –
     நான் மனப்பூர்வமாக வேண்டுகிறேன்

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 5. Raghuraman N சொல்கிறார்:

  Please read it as few days ago instead of week ago. Due to our official reporting culture, Friday belongs to prev week for us.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.