பகுதி-2 – அமெரிக்காவில் settle ஆகும் ……


சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்காவில் settle ஆகும் இந்தியர்களின்
மனநிலை என்கிற தலைப்பில் ஒரு இடுகை இந்த தளத்தில் வெளியானது.

அதில், சம்பந்தப்பட்ட நண்பர்களிடமிருந்து, அவர்களது அனுபவம்,
மனநிலை, கண்ணோட்டம் குறித்து முடிந்தால் எழுதுங்களேன் என்று
கேட்டிருந்தேன்…. சில நண்பர்கள் அப்போதே அந்த இடுகையின்
பின்னூட்டமாக தங்களது கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

நண்பர் மதுரைத்தமிழன், கொஞ்சம் அவகாசம் கேட்டிருந்தார்…
இப்போது தனது கருத்துகளை விவரமாக எழுதி அனுப்பி இருக்கிறார்.
இடைவெளியில் இன்னும் சில இடுகைகள் வெளிவந்துவிட்ட நிலையில்,
இதை அங்கே பின்னூட்டமாகப் பதிவு செய்தால், உரிய கவனம்
கிடைக்காமல் போய் விடும் என்பதால் –

முதல் இடுகையின் தொடர்ச்சியாக,
2-ஆம் பகுதியாக இந்த இடுகையை பதிவிடுகிறேன்.

எனக்கு இன்னும் சில கேள்விகள் இருக்கின்றன…
யார் வேண்டுமானாலும் பதிலெழுதலாம்…
அவற்றை கடைசியில் எழுதுகிறேன்….

முதலில் நண்பர் மதுரைத்தமிழனின் விளக்கமான பின்னூட்டம் –

————————————————-

காவிரிமைந்தனின் இந்த பதிவு பார்தததும் அதில் அவர் கேட்ட கேள்விகளுக்கு அமெரிக்காவில் வாழும் நான் பதில் சொல்லாம் என்று எழுதிய பதிவே இந்த பதிவு.

—————

இது பற்றி என் மனதில் பட்டதை சொல்லுகிறேன்.

அமெரிக்காவில் மட்டுமல்ல மேலைநாடுகள் என்று சொல்லப்படும் கனடா, யூரோப், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்லுபவர்களில் 90 சதவிகிதத்தினர் அங்கேயே தங்கிவிடுகிறார்கள் என்று சொல்லாம்.

அப்படி நிரந்தர செட்டில் ஆவதற்கு காரணம் அங்கு நிரந்தரமாக செட்டில் ஆக அந்த நாடுகளின் குடியுரிமை கிடைத்துவிடுகிறது என்பதை சொல்லாம். ஆனால் இது போல அரபு நாடுகளுக்கு போனவர்களால் அங்கு நிரந்தரமாக செட்டில் ஆக முடியாது. அங்கு யாருக்கும் நிரந்தர குடியுரிமை கிடையாது. நீண்ட காலம் வசிக்கலாம் என்றாலும் அந்நாட்டு குடிமகனாக ஆக முடியாது

இதுமட்டுமல்ல மேலைநாடுகளில் வந்து நிரந்தரமாக குடியேறுவதற்கு முக்கிய காரணம் நல்ல வேலைவாய்ப்பு, பணவசதி, மற்றும் அன்றாட வாழ்க்கையில் கிடைக்கும் எளிய வசதிகள்தான் மக்களை இங்கு நிரந்தரமாக செட்டிலாக்க வைக்கிறது.

இப்படி செட்டில் ஆகுபவர்களை பார்த்து இந்தியாவில் இருப்பவர்கள் இவர்களுக்கு தேசப்பற்று கிடையாது…. பிறந்த மண்ணின்மீதும் தாய் தந்தையர் மீதும் கலாச்சாரத்தின்மீதும் பற்று இல்லை என்ற குற்றசாட்டு வைக்கப்படுகிறது…அது உண்மையா என்று பார்த்தால் இல்லை என்று அடித்து சொல்லாம்.

இப்படி குற்றசாட்டுகளை வைப்பவர்கள் யார் என்று சற்று யோசித்து பாருங்களேன்..

அவர்கள் வேறுயாருமல்ல குக்கிராமத்தில் இருந்து சென்னை, பெங்களுர், பாம்பே, டெல்லி – என்று குடிபெயர்ந்தவர்கள்தான்.
இவர்கள் எப்படி தங்களின் வசதி வேலைவாய்ப்பு, பணம், மற்றும் அன்றாட வாழ்க்கையில் கிடைக்கும் வசதிக்காக பெரும் நகரங்களுக்கு குடிபெயர்ந்தார்களோ – அதே மனநிலையில்தான் வெளிநாடுகளில் குடியேறியவர்களும் இருக்கிறார்கள்.

எப்படி பெரும் நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் தாய் தந்தையர்களை தங்களுடன் கூட வைத்திருந்து வயதான காலத்தில் பார்த்து கொள்ள முடிவதில்லையோ அது போலத்தான் வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் செய்கிறார்கள்..

பெரும் நகரங்களில் வசிப்பவர்களும் சரி வெளிநாட்டில் வசிப்பவர்களும் சரி ஒரு போதும் அவர்கள் பெற்றோர்களை ஒதுக்கி வைக்க முற்படுவதில்லை. பெற்றோர்கள் விலகி இருக்க காரணம் அவர்களால் எப்படி நகர வாழ்க்கையோடு ஒத்துப் போக முடியவில்லையோ அது போலத்தான் வெளிநாட்டு வாழக்கையும் அவர்களோடு ஒத்துப் போவதில்லை….

எப்படி கிராமத்தில் வசிக்கும் நம் பெற்றோர்கள் அக்கம் பககத்தில் பழகுவதோடு நாலு தெருவிற்கு அப்பால் உள்ளவர்களோடும் பேசி பழகி மகிழ்வார்கள். அவர்களை சென்னை போன்ற பெரும் நகரங்களுக்கு அழைத்து வீட்டில் இருக்க செய்தால் அவர்கள் முதலில் சொல்லுவது இது என்ன – ஊராடா இது ? எல்லோரும் கதவை சாத்தி கொண்டு இருக்கிறார்கள். பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை எப்படி இப்படி பொழுதன்னைக்கும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடைப்பது.. இப்படியெல்லாம் என்னால் இருக்க முடியாது நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணுக்கே போய்விடுகிறேன் என்று சொல்லி மூட்டைகட்டிவிடுகிறார்கள்.

அப்படி செல்லுபவர் வயதான காலத்தில் கஷ்டப்படும் போது நம்மாலும் குழந்தைகளை கூட்டி அங்கு சென்று அவர்களுடன் வசிக்க முடியாது யாரிடமாவது சொல்லி பெற்றவர்களை பார்த்து கொள்ள சொல்வதுதான் நடக்கிறது. அதே கதைதான் வெளிநாட்டில் வந்து செட்டில் ஆனவர்களுக்கும் ஏற்படுகிறது.

//அடுத்தாக இங்கிருந்து போனவர்களில் பெரும்பாலானோர், அமெரிக்காவைப்பற்றி உயர்வாகவே கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்ன இருந்தாலும் அமெரிக்கா அமெரிக்கா தான் இங்கே என்னஇருக்கிறது என்று கேட்கிறார்கள்.///

இந்தியாவில் என்ன இருக்கிறது என்பதைவிட அமெரிக்காவில் என்ன இல்லை என்று பார்த்தால் எல்லாமே இன்னும் அழியாமல் இருக்கிறது என்று சொல்லலாம்.

உலக நாடுகளிலேயே அமெரிக்க நாட்டுமக்கள் தான் மிக சுயநலமிக்கவர்கள். அதனால்தான் என்னவோ அவர்கள் தங்கள் நாட்டு வளங்களையெல்லாம் மிக சிறிய அளவில் பயன்படுத்தி தங்களின் முழு தேவைகளுக்கு மற்ற நாடுகளின் வளங்களை சுரண்டி அழித்து கொண்டிருக்கிறார்கள் எனலாம். இதுதான் உண்மை

இஙகே நிலங்களையும், இயற்கை வளங்களையும், நீர் போன்றவற்றையும் மிகவும் பாதுகாத்து வருகிறார்கள். இன்னும் இந்த வளங்களை எல்லாம் பயன்படுத்தவே ஆரம்பிக்கவில்லை என்று கூட சொல்லாம். எலக்டரானிக் கழிவுகள், மெடிக்கல் கழிவுகள், ராசயானப் பொருட்கள் கழிவுகள் – இது பொன்ற கழிவுகளை ரீசைக்கிள் செய்ய முடிந்ததை செய்கிறார்கள். அப்படி செய்ய முடியாததை இங்கே மண்ணில் புதைத்து இயற்கையை நாசப்படுத்துவதற்கு பதிலாக அதையெல்லாம் மூன்றாம்தர நாடுகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள்.
அது தப்பில்லையா என்றால் தப்புதான். ஆனால் முன்பு நான் சொன்னது போல இந்த நாட்டுக்காரர்கள் சுயநலம் மிக்கவர்கள்

எனக்கு ஏன் அமெரிக்கா பிடிக்கிறது / பிடித்தது என்பதற்கு சில உதாரணங்கள்:

இங்கு பிரசவ சமயங்களில் பெண்களை நடத்தும் முறை மிக பிடிக்கிறது. முதல் குழந்தை என்றால் டெலிவரி சமயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் குழந்தையை எப்படி கையாள்வது என்பதை எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். அது மட்டுமல்ல டெலிவரி சமயத்தில் கணவர் அல்லது அந்த பெண்ணிற்கு வேண்டியவரும் அந்த டெலிவரி ரூமில் இருக்க அனுமதியுண்டு.. இது அந்த பெண்ணிற்கு மிக மனம் பலத்தை கொடுக்கிறது. அதுமட்டுமல்ல பெண்கள் வலியால் துடிக்கும் போது அங்குள்ள நர்ஸ்சுகள் அந்த பெண்னை திட்டுவது இல்லை. சில சமயங்களில் கர்ப்பிணி பெண் திட்டினாலும் அதை மிக எளிமையாக எடுத்து கையாள்கிறார்கள். எனது நண்பரின் மனைவி இரண்டு தடவை டெலிவரி நடந்து போது டாக்டரை வலியால் எட்டி உதைத்து இருக்கிறார். அந்த டாக்டர் எள்ளவும் தவறாக எடுத்து கொள்ளவில்லை.

அடுத்தாக உடல்நிலை மோசமாகி உயிருக்கு போராடும் சூழ்நிலை இருக்கும் போது எந்த ஹாஸ்பிடலுக்கும் நாம் சென்றால் நம்மிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ அவர்கள் கண்டிப்பாக சிகிச்சை அளிக்க வேண்டும். முன் பணம் கட்டினால்தான் சிகிச்சை என்று எல்லாம் கிடையாது.

தீவிரவாதிகளால் அமெரிக்காவின் ட்வின் டவர் தகர்க்கப்பட்ட போது
என் மனைவி அதற்கு அருகில் உள்ள இடத்தில் வேலை பார்த்து வந்தாள். அந்த சமயத்தில் அவள் ஒன்பது மாத கர்ப்பிணி…..அந்த டவர் தகர்க்கப்பட்ட நேரத்தில் அவள் ரயிலில் பயணம் செய்தாள். அந்த டவர் வெடிப்பு சம்பவத்தால் அவள் சென்ற ரயில் வேறு ஸ்டேஷன் சென்று நின்றுவிட்டது. அது அவளுக்குமட்டுமல்ல அந்த ரயிலில் பயணித்தவர்கள் யாருக்கும் தெரியாது. அதனால் அவர்கள் ரயில் நின்றதும் அவர்கள் வேலை பார்க்கும் பகுதி நோக்கி சென்ற போதுதான் தெரிந்தது.

அந்த சமயத்தில் பலரும் அவருக்கு உதவினார்கள் எல்லாவித போக்குவரத்து சர்வீஸ்களும் முடங்கிப்போகின….என்னாலும் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த சமயத்தில் பலபேர் அவளுக்கு உதவினார்கள்…. கடைசியாக அலைந்து அலைந்து நியூயார்க்கில் இருந்து நீயூஜெர்ஸி பக்கம் வரமுடியாது என்று தெரிந்துவிட்டது.

அதன் பின் பல மணிநேரம் கழித்துதான் எங்கள் செல்போன்கள் இயங்க ஆரம்பித்தன, அதன் பின் அவள் என்னை தொடர்பு கொண்ட போது அங்கேயே ஹோட்டலில் ரூம் எடுத்து தங்க சொன்னேன்.. அப்போது அவள் மட்டுமல்ல பாதிக்கப்பட்ட அனைவரும் அலைந்து திரிந்தபோது அங்கு திறந்து இருந்த கடை மற்றும் ஹோட்டல் ஆட்கள் மிக பணிவுடன் நடந்து கொண்டனர்.

பணம் இருந்தவர்கள் பசிக்கும் போது வாங்கி சாப்பிட்டனர். பணம் இல்லாதவர்களுக்கு கடைக்காரர்கள் இலவசமாகவும் கொடுத்தனர். ஆனால் எந்த காரணத்தை கொண்டும் பொருட்களின் விலையை கூட்டவோ அல்லது ஹோட்டல் ரூம்களின் வாடகையை உயர்த்தவோ இல்லை.. இது எல்லாம் இந்தியா போன்ற நாடுகளில் சாத்தியம் இல்லை

இதுமட்டுமல்ல பல சமயங்களில் புயல் சூறாவளி வெள்ளத்தால் மாநிலமே பாதிக்கப்பட்ட போதிலும் எந்த கடைகளிலும் பொருட்களின் விலை உடனே ஏறாது. ஒரு தடவை புயல் காரணமாக தண்ணீருக்கு மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்ட போது ஒரு கடையில் விற்பனைக்கு தண்ணீர் வந்து இருக்கிறது என்று கேள்விபட்டு அங்கு போனபோது அதன் விலையை அவர்கள் ஏற்றி விற்கவில்லை.

அதுமட்டுமல்லாமல் அந்த வாரம் அது சேல் என்று சில வாரங்களுக்கு முன்பு விளம்பரம் செய்த சேல் விலைக்கே விற்றார்கள். ஏன்- அதிக அளவு டிமாண்ட் இருந்த சமயத்தில் ஒரிஜனல் விலைக்கு கூட அவர்கள் விற்கவில்லை.. இப்படி பல அதிசயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். வெள்ள சமயங்களில் நாம் தங்குவதற்கு பாதுகாப்பான வசதிகளை செய்து கொடுப்பதுமட்டுமல்லாமல் நாம் வீட்டில் வளர்க்கும் நாய் பூனை போன்றவைகளுக்கு நம் உடன் தங்குவதற்கு வசதிகளும் செய்து தருகின்றனர்

நான் இந்த நாட்டிற்கு வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த 20 வருடகாலத்தில் நான் வசித்த பகுதிகளில் ஓரிரு நிமிடங்களுக்கு மேல் கரண்ட் கட் ஆனதே இல்லை. சில சமயங்களில் பெரும் புயல் காரணமாக மரங்கள் விழுந்து கரெண்ட் கட்டாகி ஒரு வாரங்களுக்கு மேல் அதை சரி செய்யும் நிலைமையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வளவு காலம் எடுத்து கொள்ள காரணம் பத்தாயிரம் இருபாதாயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டு இருக்கும் மரங்கள் மிக அதிகம் இங்கே.

இங்குள்ள அரசு பள்ளிக் கூடங்கள் மிக தரமாக இருப்பதுடன் ஏழைக்குழந்தைகளுக்கு காலை உணவும் மதிய உணவும் இலவசமாக தருகிறார்கள். ஸ்கூல் பஸ் வீட்டு வாசலுக்கே வந்து கூட்டி செல்கிறது எந்த விதமான பீஸ்களும் இல்லை. பாடப் புத்தகங்களும் இலவசம். நோட்டும் பெனிசில் மட்டும்தான் நம் செலவு. பள்ளிக் கூடத்தில் ஒரு குழந்தை என்ன மார்க் வாங்குகிறது என்பது அடுத்த குழந்தைக்கு தெரியாது. படிக்காத குழந்தைகளை கூட இந்த குழந்தை மிக மோசம் என்று கூட பெற்றோர்களிடம் சொல்லமாட்டார்கள்

இந்த நாட்டில் படித்தவர்களுக்கு மட்டுமல்ல உழைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு. பேச்சுரிமை, எழுத்துரிமை இங்கு மிக அதிகம்.. இங்கு அரசியலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க என்று வருவதில்லை

அப்படியானால் அமெரிக்கா ஒரு சொர்க்க பூமியா அங்கே பிரச்சனைகளே இல்லையா என்று கேட்டால் ஆமாம் இங்கே பிரச்சனைகளும் பல இருக்கத்தான் செய்கின்றன…ஆனால் இந்தியாவை ஒப்பிடும்போது அது மிக குறைவாகத்தான் எனக்கு இதுவரையில் இருக்கிறது.. இங்கு சாதி மத வேறுபாடுகள் அவ்வளவாக இல்லை ஆனால் இனவேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன ஆனால் என்ன அது அதிக அளவு வெளியே தெரியாமல் இருக்கிறது.

காலேஜ் படிப்புக்கு செல்லும் போது அது தெரிகிறது. மிகப் பெரிய காலேஜ்களில் ஏசிய நாட்டினருக்கு திறமை இருந்து மறுக்கப்படுவது என்னவோ உண்மை.

அப்படி அவர்கள் மறுக்கப்படவில்லை என்றால் அந்த கல்வி நிறுவனங்களில் நம் ஏசிய நாட்டை சேர்ந்தவர்கள்மட்டுமே படிக்கும் சூழ்நிலை ஏற்படும். அதுபோல பள்ளி விளையாட்டுக்களிலும் நம்மவர்கள் நன்றாக விளையாண்டாலும் வெள்ளையர்களுக்கு வாய்ப்புக்கள் அதிகம் தரப்படுகிறது. விளையாட்டில் அவர்கள் திறமையானவர்கள் என்பதை மறுக்க முடியாது ஆனாலும் நம்மவர்களில் சிலர் அதற்கு சமமாக வரும் போது வாய்ப்புக்கள் தட்டி பறிக்கப்படுகின்றன.

மற்றபடி இங்குவந்த இந்தியர்கள் நம் நாட்டின் கலாசாரத்தை பண்பாட்டை இந்தியாவில் உள்ளவர்களை விட மிக அதிகமாகவே பின்பற்றுகிறார்கள் என்றும் சொல்லலாம் நிறைய கோயில்கள் இருக்கின்றன… இப்படியே போனால் இன்னும் சில காலத்தில் நீயூஜெர்ஸியை கோயில்கள் நிறைந்த மாநிலம் என்று கூட அழைத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. நமது வேதங்களை கற்றுக் கொடுக்கும் பள்ளிகளும் இங்கு பல உள்ளன.
இன்னும் நிறைய எழுதலாம்……நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்

.
அன்புடன்
மதுரைத்தமிழன்

———————————————————————————

இது – என்னுரை –

நண்பர் மதுரைத்தமிழன் ஒரே ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றி
தன் கருத்தை சொல்ல மறந்து விட்டார்…அதைப்பற்றியும் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்….நண்பர்களும் விரும்புவார்கள் –
.


.

– அங்கு நிரந்தரமாக தங்கி விடுவதன் மூலம் நமது குழந்தைகள்
( முக்கியமாக பெண்குழந்தைகள் ) அமெரிக்க கலாச்சாரத்தின் பாதிப்பிற்கு உள்ளாவது குறித்து கவலை ஏற்படவில்லையா…?

– அடுத்த தலைமுறையால் சுத்தமாக தமிழில் எழுதவோ, படிக்கவோ இயலாமல் போய் விடுமே – அது குறித்து வருத்தமாக இல்லையா…?

தனது பின்னூட்டத்தில் இதுகுறித்து விளக்கும்படி நண்பரை
கேட்டுக்கொள்கிறேன்….

– கீழே ஒரு பொதுவான விஷயம் –

அமெரிக்காவில் பல வருடங்களாக வசிக்கும் தங்கள் மகனுடன்
ஒரு 6 மாத காலம் தங்கி இருக்கலாம் என்று திட்டமிட்டு, என் நண்பர் ஒருவர், தனது மனைவியுடன், மே மாதம் அமெரிக்கா சென்றிருந்தார்.

நேற்று காலை திடீரென்று அவரிடமிருந்து டெலிபோன் அழைப்பு வந்தது.
மும்பையிலிருந்து பேசுகிறேன்… திரும்ப வந்து 10 நாட்கள் ஆயின என்று
சொன்னார்…

என்ன ஆயிற்று…? ஏன் சீக்கிரம் திரும்ப வந்து விட்டீர்கள்…?
என்று கேட்டேன்…

அவர் சொன்னது –

அமெரிக்காவில் இருக்கும்போது அவரது மனைவிக்கு ( வயது-70 ) திடீரென்று நடப்பதில் பிரச்சினை… மூச்சு விடுவதில் பிரச்சினை..என்று சில பாதிப்புகள்… துவக்கநிலை பரிசோதனையில், அவருக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது…

அங்கேயே சிகிச்சை எடுத்துக் கொள்வதில் இரண்டு பிரச்சினைகள்
இருந்ததாக என் நண்பர் சொன்னார்…

ஒன்று –
சிகிச்சைக்கு, சில மாதங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும்.

இரண்டு –
அதற்கு அமெரிக்காவில் ஆகும் செலவை சமாளிக்க, 40 ஆண்டுகள்
அவர் இந்தியாவில் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் விற்றால் தான் முடியும்.

வேறு வழியின்றி, உடனடியாக விமானம்பிடித்து, மும்பை வந்து
சேர்ந்திருக்கிறார்கள். இந்தியா வந்தவுடனேயே, மும்பையிலேயே ஒரு
மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், அவரது இதயக்குழாயில்
இரண்டு இடங்களில் அடைப்புகள் இருப்பதாகவும், உடனே ஆங்கியோ
ப்ளாஸ்டி செய்ய வேண்டுமென்றும் சொல்லி இருக்கிறார்கள்.
அப்படியே மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து –
அன்றே ஆங்கியோ ப்ளாஸ்டி செய்யப்பட்டு விட்டது…ஒரு வாரத்தில்
டிஸ்சார்ஜும் செய்து விட்டார்கள். சுமார் ஐந்து லட்சம் ரூபாய் செலவழிந்திருக்கிறது.

நண்பரிடம் சில விஷயங்களை விவரமாக கேட்க நினைத்தாலும்,
அதை இப்போது, டெலிபோனில் கேட்பது சரியாக இருக்காது என்று
தோன்றியதால், அடுத்த மாதம் நேரில் சந்திக்கும்போது கேட்கலாமென்று
விட்டு விட்டேன்.

அவரிடம் கேட்க நினைத்த கேள்விகளை இங்கே கேட்கிறேன்…

– அமெரிக்க குடிமகனாக ஆகி விட்டவர்களின் இந்திய பெற்றோர்கள்
தற்காலிகமாக சில மாதங்கள் தங்க வந்தால், அவர்களுக்கு தற்காலிக இன்சூரன்ஸ் வசதிகள் எதுவும் கிடையாதா…? மருத்துவ வசதிகள்
எதுவும் கொடுக்கப்பட மாட்டாதா…? குறைந்த காலத்திற்கு
மெடிகல் பாலிசிக்கள் எதுவும் எடுத்துக் கொள்ள முடியாதா…?

– சரி; இன்சூரன்ஸ் இல்லாவிட்டாலும் கூட, சொந்த செலவில் மருத்துவ
சிகிச்சை செய்துகொள்வதாக இருந்தாலும் கூட, மாதக்கணக்கில்
காத்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே – ஏன்…?

செவ்வாய்க்கும், சூரியனுக்கும் கூட ராக்கெட் அனுப்புபவர்களின்
தேசத்தில், மனிதருக்கு மருத்துவ வசதி கிடைப்பதில் ஏன் இவ்வளவு
பிரச்சினை…? ஏன் இவ்வளவு காத்திருப்பு… தாமதம்…?

– மருத்துவ சிகிச்சை ஏன் இவ்வளவு costly- யாக இருக்கிறது…?

சென்னையில் அற்புதமான மருத்துவ வசதிகள் இருக்கின்றனவே…?
எந்தவித நோய்களுக்கும், எந்த காத்திருப்பும் இல்லாமல் உடனடியாக
சிகிச்சை எடுக்க ஏகப்பட்ட மருத்துவமனைகள் இருக்கின்றனவே –
வளம் நிறைந்த அமெரிக்காவில் ஏன் இந்த நிலை…?

தெரிந்தவர்கள் யாராவது விளக்குங்களேன்….

.
———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to பகுதி-2 – அமெரிக்காவில் settle ஆகும் ……

 1. Pingback: பகுதி-2 – அமெரிக்காவில் settle ஆகும் …… – TamilBlogs

 2. புதியவன் சொல்கிறார்:

  //அமெரிக்க கலாச்சாரத்தின் பாதிப்பிற்கு உள்ளாவது குறித்து//

  சார்.. இதைப் பற்றி ரொம்பவும் வெளிப்படையாக எழுத முடியாது. என்னோட விழுமியம், என் பிள்ளைகளுக்கு இருக்காது. என் அப்பாவிடம் இருந்த விழுமியம் எனக்கு இல்லை.

  ஆனால் கன்சர்வேடிவ் குடும்பங்களில் நடந்ததை வைத்து உதாரணம் தரமுடியும். எல்லாக் குடும்பங்களும் ஓரளவு கன்சர்வேடிவ் ஆக இருந்தவர்கள், பசங்களை வளர்த்தவர்கள். ஒருவர் (40+ வருஷம் அங்கு செட்டிலானவர், மத்த உதாரணங்கள் 20+ வருஷங்கள் செட்டில் ஆனவர்கள்) பெண், அமெரிக்க கலாச்சாரத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார், பையனுக்கு மட்டும் பல தடைகளுக்குப் பின் இங்கிருந்து பெண் எடுத்தார்கள். இன்னொருவருக்கு இரு பெண்களில், இரண்டாமவர் திருமணம் செய்துகொண்டார், முதல் பெண், இப்போதைக்கு திருமணம் தேவையில்லை என்று இருந்துவிட்டார் (வேறு என்ன.. மாற்றத்துக்கு பெற்றோர் தயாராக இல்லை). இன்னொரு குடும்பத்தில், அங்கு படிக்க/வேலை செய்யச் சென்ற பையன் (என்னைப் பொறுத்தவரையில் இங்கு இருந்தவரை ரொம்ப கன்சர்வேடிவ் பையன்) வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவன் தந்தை இங்கிருந்தே ஏமாற்றத்துடன் ஆசிகூறினார். (இந்தக் குடும்பத்தில் பெற்றோர் இந்தியாவில் இருப்பவர்கள்). இன்னொரு குடும்பத்தில் பெண், நெதர்லேண்ட் பையனை மணந்துகொண்டார். இன்னொருத்தர் பெண்கள், 18 வயதான பிறகு, வெவ்வேறு இடங்களில் தங்குகின்றனர், மாதம் ஒரு தடவைதான் அங்கு உள்ள பெற்றோரைப் பார்க்க வருகின்றனர். இவங்க, அந்தப் பெண்கள் அழைத்தால்தான் அவங்க இடத்துக்குப் போக முடியும். ஆனால், இன்னொரு கலாச்சாரத்தில் முழுமையாக நுழையும்போது (அமெரிக்கனாக ஆகும்போது), பசங்க, இந்தியக் கலாச்சாரத்தில் இருப்பாங்க என்று எதிர்பார்ப்பதே தவறுதான். இந்தமாதிரி திருமணங்கள் இங்கேயே நிறைய நடக்கிறது. (கலாச்சார மாற்றம்தான், அடுத்த தலைமுறையின் விழுமியங்கள் வேறு).

  திருமணத்தைத் தவிர மற்ற விழுமியங்களை நீங்க எண்ணியிருந்தீங்கன்னா, அதுவும் அந்தக் கலாச்சாரப்படிதான் இருக்கும். இருந்தாலும், சொந்தக் காரங்க இந்தியால இருப்பதால், தன் சமூக கடமைகளை, பண்டிகைகளை முதல் முறையாக புலம் பெயர்ந்தவர்கள் செய்ய எத்தனிப்பாங்க, செய்வாங்க (நான் சொல்றது உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். காது குத்து, ..உபநயனம்..ச்ராத்தம்….. போன்று. அதுக்காக இந்தியா வந்து, உறவினர்களை அழைத்து எல்லாம் செய்வாங்க). அடுத்த தலைமுறை நிச்சயமாக இதனைத் தொடரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

  இதை விடுங்க.. நான் கிராமத்தில் எப்படி இருந்தேனோ அதைவிட்டு முழுமையாக வேறு ஒரு வாழ்க்கை வாழ்ந்தேன், பிறகு இன்னொரு தேசத்தில் முற்றிலும் வேறு வாழ்க்கை. அடல்ட் ஆன நம்மாலேயே விழுமியங்களைத் தொடர இயலாதபோது, compromise செய்துகொள்ளும்போது, பசங்க எப்படி இருக்கமுடியும்?

  //தமிழ் எழுத படிக்க// – இது ரொம்ப கஷ்டமான விஷயம். இருந்தாலும் அதற்கான வாய்ப்புகளை புலம் பெயர்ந்தவர்களே ஏற்படுத்தித் தராங்க. நிறைய தமிழ்மன்றங்கள், அங்கு ஆர்வலர்கள் இலவசமாச் சொல்லித்தராங்க. இருந்தாலும் இது நம்முடைய ஆத்ம திருப்திக்காகத்தான். (இன்னும் நாங்க தமிழர்களாகத்தான் இருக்கோம் என்பதாக). மொழிக்கான தேவை குறைவு என்பது என் அபிப்ராயம். இதுக்குமேல் பொதுவில் எழுத இயலாது.

  Note: Generalized or Specificஆ இல்லை என்று நீங்கள் நினைத்தால், வெளியிடவேண்டாம். (You can remove this feedback)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   இந்த பின்னூட்டம் இங்கே இருக்கலாம் தவறில்லை.
   நாம் தனிப்பட்ட ஒருவரது வாழ்க்கையை விமரிசனம் செய்வது தான் தவறு. இங்கே பொதுவாக சில விஷயங்களை ஆராய்கிறோம். அதுவும் பல்வேறு கோணங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில்..

   வாழ்க்கையே இப்படித்தான்… ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி அமைகிறது…!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. மதுரைத்தமிழன் சொல்கிறார்:

  காவிரி மைந்த்தன் உங்களின் முதல் கேள்விக்கு பதில் கொஞ்சம் பெரிசாக வரலாம் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்

  உங்களின் இரண்டாவது கேள்விக்கு வருகிறேன்..

  உங்களது நண்பரின் குடும்பத்திற்கு அதிக விஷயங்கள் தெரியவில்லை என நினைக்கிறேன் அதனால்தான் பிரச்சனை ஒருவேளை அவர்களின் குழந்தைகள் இங்கு புதிதாக வ்னது இருப்பவர்களாக இருக்கலாம்.

  அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்காக வெயிடிங்க் பண்ண வேண்டி இருக்கும் என்பது மிக மிக தவறனாது.

  2. இங்கு மருத்துவ சிகிச்சைகள் மிக காஸ்ட்லியானது அதனால் இன்சுரன்ஸ் மிக அவசியம்.. அமெரிக்காவிற்கு வரும் யாவரும் டூரிஸ்ட் உட்பட விமான டிக்கெட் மட்டும் எடுத்தாக் போதாது இங்கு வரும் போது மருத்துவ இன்சுரன்ஸ் எடுத்து வருவது மிக அவசியம் . உங்கள் நண்பரின் குடும்பத்தினர் பணம் அனாவசியமாக் ஏன் செலவிடனும் என்று கருதி அதை எடுக்காமல் இருந்திருக்கலாம் அல்லது அது பற்றி கூட தெரியாமல் இருந்திருக்கலாம்

  3. இங்குள்ள ஹாஸ்பிடலில் சாதாரன பிரச்சனைகளுக்கு போனால் நிச்சயம் பணம் உடனேவோ அல்லது சிகிச்சை முடிந்த பின்போ கொடுக்க வேண்டும். ஆனால் எந்த நேரத்திலும் அவசர சிகிச்சைக்களுக்காக போகும் போது பேஷ்ண்ட்களிடம் பணம் இல்லை என்று எந்த ஹாஸ்பிடலும் திருப்பி அனுப்பு கூடாது என்பது அரசு சட்டம்.. முதலில் உயிரை காப்பாற்று அதன் பின் பணம் வசூல் செய்வதை அதன் பின் கவனித்து கொள் என்பதுதான்

  4. எனது கூட வேலை செய்யும் நார்த் இண்டியனின் நண்பரின் நண்பர் மிகமிக வசதியானவர்… அவரின் பெற்றோர்களுக்கு இந்தியாவில் வைத்து ஆஞ்சியோ பண்ணாமல் இங்கு வந்த பின் ஒரு செலவு இல்லாமல் பண்ணினார்… அவரின் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து எடுத்து வந்த மெரிக்கல் இன்சுரண்ஸ் பேசிக் பாலிசிதான்… ஆனால் இங்கு வந்த பின் அதிகம் நெஞ்சு வலிப்பதாக சொல்லி எம்ர்சென்சி நம்பரை அழைது ஹாஸ்பிடலில் சேர்த்தார்கள் அங்கு அவருக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதை சோதனையால் அறிந்து அவருக்கு ஆஞ்ச்யோ சிகிச்சை அளித்தார்கள் அவரை ஹாஸ்பிடலுக்கு அழுத்து செல்லும் போது அவரை டூரிஸ்ட் அவருக்கு யாரும் இங்கே இல்லை என்று சொன்னதால் அவரிடம் இருந்து சிகிச்சைக்கு பணம் ஏதும் பெற்றுக் கொள்ள முடியவில்லை… இப்படி பல சம்பவங்கள் நடைபெறுகிறது

  என் மனைவியின் கூட வேலை பார்ப்பவர் அவருக்கு இன்னும் க்ரின் கார்ட் கூட கிடைக்கவில்லை அவரின் இரு குழந்தைகள் ஸ்பெஷல் கிட் என்பதால் அவருக்கு இந்தியா செல்ல மனது இல்லை காரணம் அங்கு இப்படிப்பட்ட குழந்தைகளை பொது இடங்களில் மதிப்பது இல்லை ஆனால் இங்கு அப்படி இல்லை…. அந்த இரண்டு குழந்தையில் ஒரு குழந்தை மிக மோசமான அன் ஹெல்த்தி குழந்தை அந்த குழந்தைக்கு கிடைத்த சிகிச்சையை எப்படி சொல்லுவது….. அது பற்றி ரொம்ப நாட்களாக பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன் சிக்கிரம் எழுதுகிறேன்

  என்னை பொறுத்தவரை பலர் அமெரிக்கவை பற்றி மிக அதிகம் தெரியாமல் பல விஷயங்களை கண் மூக்கு காது வைத்து எழுதுகிறார்கள்
  யாரவது என்னிடம் அமெரிக்கா சொர்க்கமா என்று கேட்டால் ஆமாம் என்று சொல்ல்வதற்கு பதிலாக நிச்சயம் அமெரிக்கா நரகம் இல்லை என்பதாகத்தான் இருக்கும்…

  இன்னும் தொடர்ந்து பேசுவோம்

  என் கருத்தை பதிவாக வெளியிட்டுதற்கு நன்றி

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மதுரைத்தமிழன்,

   உங்கள் தகவல்களுக்கு நன்றி.

   எனது நண்பருக்கு இந்த விஷயங்கள், வசதிகள் குறித்து முன்னரே தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.
   அவர் தொலைபேசியில் சொன்னதை வைத்து தான் இங்கே எழுதினேன். அடுத்த மாதம் அவரை நேரில்
   சந்திப்பேன்… அப்போது விவரமாக அவரிடம் பேசுகிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. peppin சொல்கிறார்:

  I have been in US for 18+ years, mostly in NJ. I agree with Madura Tamilan…America is neither hell nor heaven. Infrastructure (Roads, schools, hospitals, water/power/sewage, parks and recreation, worship places) wise better than India and other countries. Especially, Indian women like it a lot over here as they feel so safe. My wife can go for shopping even in the midnight if it is necessary with no hazards. Biggest disadvantage is not being with our parents, siblings and our relatives and missing being in our land. After few years of working here, we will be trapped in with many commitments (financial, kids education, Job etc.,), so we hesitate to go back!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நண்பர் peppin,

   சில வசதிகளை பெற வேண்டுமானால், வேறு சில வசதிகளை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது.
   நமக்கு எது முக்கியம் என்பதை நாம் தான் தீர்மானிக்க முடியும்…. இது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக
   அமைகிறது…!
   உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.