துக்ளக்’கிற்கு மோடிஜி மேல் உள்ள கடுப்பு — இவற்றில் வெளிப்படுகிறதா….?

பாஜக அரசின் பொருளாதார நிர்வாகத்தில் நிகழும் குழப்பங்கள்
சிறந்த பொருளாதார நிபுணர்களால் நிச்சயம்
ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா….

ஒரே கட்சி / நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்,
நிர்வாகத் தலைமையின் செயல்பாடுகள் குறித்து,
சில சமயம் குறைகளை கண்டாலும் கூட,
வெளிப்படையாக அதை விமரிசிக்கவோ, விவாதிக்கவோ
முடியாது….தர்மசங்கடம்…!.

எரிச்சல் தரும் சில செயல்பாடுகளை வாய் திறவாமல்
பார்த்துக்கொண்டிருப்பதும் கடினம்….. எனவே, அத்தகையோர்,
வாய்ப்பு கிடைக்கும்போது மறைமுகமாவது தங்கள் கடுப்பை
வெளிப்படுத்தி விடுவார்கள்….

கீழே தரப்பட்டிருக்கும் செய்தித் துணுக்குகள், இந்த வார துக்ளக் இதழில்
வெளியானவை…. ஒரு வேளை அவை அத்தகைய எரிச்சலின்
வெளிப்பாடுகள் தானோ …?

—————-

Prime Minister Narendra Modi on his arrival at Red Fort

” சுதந்திர தின விழாவில் நான் என்ன பேச வேண்டும்…
நான் இன்னும் என்ன செய்ய வேண்டும்..? ” என யார் வேண்டுமானாலும்
யோசனை தெரிவிக்கலாம்… என்று மோடிஜி அறிவித்திருந்தார்…

இதன் தொடர்ச்சியாக, துக்ளக்’கில் – திரு.சத்யா அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் பிரதமருக்கு
கீழ்க்கண்ட ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன ….

————–

– திடீரென்று சி.பி.ஐ., வருமான வரித்துறை ரெய்டுகள் நடந்து,
கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. ஆனால்,
ரெய்டுகளில் சிக்கியவர், சில நாட்களிலேயே – ஒன்றும் நடக்காதது
போல, ஜாலியாக சிரித்துக்கொண்டு திரிகிறார். இந்த மர்மம் நமக்கு
புரிவதேயில்லை; இதுபற்றி எதாவது பேசுங்களேன்.

சரி, அது போகட்டும். இந்த ரெய்டுகளில் பறிமுதலாகும்
கருப்புப் பணத்தையாவது பிரித்து, மக்களின் வங்கிக் கணக்கில்
போடுவீர்களா…? 🙂 🙂

—————

ஸ்விஸ் பேங்கில் பதுக்கப்பட்ட பணத்தை மீட்க முடியாது என்று
தெரிந்து விட்டதால், பலருக்கு தைரியம் வந்து மீண்டும் அங்கே
பதுக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

இதைத்தடுக்க,

” உள்நாட்டு பேங்குகளிலேயே கருப்புப் பணத்தை
பதுக்குபவர்களிடம் கணக்கு கேட்க மாட்டோம்.
கருப்புப் பணத்திற்கு, கூடுதலாக 1 சதவீதம்வட்டி தருகிறோம் ”
-என்று அவர்களது நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் வகையில் விசேஷ
சலுகைகள் வழங்கலாம். விருது வழங்கி கௌரவிக்கலாம்.

முயன்று தான் பாருங்களேன்…. 🙂 🙂

————-

– அரசியல் தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகள் காலம் காலமாக
நடைபெற்று வருகிறது. பலர் மாட்டிக்கொள்ளாமலேயே ( அவர்களின் )
ஆயுள் முடிந்து, நேர்மையான தலைவர்களாகவே மறைந்து
விடுகிறார்கள்…

அப்படியே மாட்டிக் கொண்டாலும், வாய்தா, விசாரணை,
அப்பீல் என்று காலம் தள்ள முடிகிறது…

எனவே, ‘ எந்த ஊழல் வழக்கிலும்
200 முறைக்கு (.?.) மேல் வாய்தா தரக்கூடாது;
250 முறைக்கு (.?.) மேல் ஒத்தி வைக்கக் கூடாது….
35 வருடங்களுக்குள் ( ???) வழக்கை முடிக்க
வேண்டும்’ என்று கறாராக (..????????..) நீதித்துறைக்கு
அறிவுறுத்தலாம்…..!!! 🙂 🙂 🙂

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to துக்ளக்’கிற்கு மோடிஜி மேல் உள்ள கடுப்பு — இவற்றில் வெளிப்படுகிறதா….?

 1. Pingback: துக்ளக்’கிற்கு மோடிஜி மேல் உள்ள கடுப்பு — இவற்றில் வெளிப்படுகிறதா….? – TamilBlogs

 2. புதியவன் சொல்கிறார்:

  இந்த மூன்று குற்றச்சாட்டுகளும் பாஜக மேல் எல்லோருக்கும் (பாஜக அபிமானிகளுக்கும் அப்படியே இருக்கும் என்றும் நம்புகிறேன். துபாயிலிருந்து ஒருவர் முன்னால் மறுமொழி இட்டுக்கொண்டிருந்தார். சுந்தரராமன்? அவருக்கும் அப்படியே இருக்கும் என நினைக்கிறேன்)

  முதல் குற்றச்சாட்டு – பலர் 2000 ரூபாய் பிரச்சனையில் பிடிபட்டபோதும் (அதில் பெரும்பாலானவர்கள் பாஜக) அவர்கள்மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2000 ரூ நோட்டை முதலில் வெளியிட்டவரும் தப்பிவிட்டார் (அல்லது செய்தித்தாள்கள் அதைப் பற்றிக் குறிப்பிடவில்லை). ஏகப்பட்ட ரெய்டுகள் (திமுக ஜெகத் ரட்சகன் உள்பட). இவைகளில் நடவடிக்கை வெளிப்படையாக இல்லாததால் எல்லாமே பொலிடிகலி மோடிவேடட் என்று ரெய்டுக்கு உட்பட்டவர்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம்.

  கருப்புப் பணம், ஸ்விஸ் வங்கி, 15 லட்சம் ஒவ்வொருவருக்கும் – இது பச்சைப் பொய் என்று நான் சொல்லவில்லை. எல்லோரும் சொல்கிறார்கள்.

  அதிலும் மூன்றாவது குற்றச்சாட்டு மிகவும் முக்கியம். 2ஜி-நீதிபதியே சிபிஐ சரியாக வழக்கைக் கொண்டுபோகவில்லை என்று சொல்கிறார். 200 கோடி கலைஞர் தொலைக்காட்சி வழக்கு-இதில் 60% வைத்திருக்கும் தயாளு அம்மையாருக்கு ‘ஞாபகமே இல்லை’ என்று சிபிஐ, காங்கிரஸ், பாஜக ஒத்துக்கொள்கிறது (நல்லவேளை… ஹஸ்பண்ட் யார் என்று அவருக்கு சரியான சமயத்தில் நினைவுக்கு வந்துவிட்டது). மீதி 20% கனிமொழி, 20% ஸ்டாலின், லஞ்சம் கொடுக்கப்பட்டது ஸ்டாலினிடம், இதுக்கு இடையில் பேப்பரை எல்லாம் திருத்தி, திடுமென்று இந்தியா சிமெண்ட்ஸ் அடுத்த 5 வருட விளம்பரத்துக்காக 200 கோடி கொடுத்தார்கள் என்று பச்சைப் பொய், இதற்கெல்லாம் காரணமான கருணாநிதிக்கு பாஜக/மோடி அவர்கள், அவசர அவசரமாக பாரத ரத்னா வழங்க குழு அமைப்பது, தொலைக்காட்சி கேபிள் ஊழலில் – 500 கோடி – கே.டி. பிரதர்ஸ், வேலுச்சாமி – 4 வருடத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை, ப.சி. தேர்தல் வழக்கில் 10 வருடங்கள் ஆகியும் முன்னேற்றம் இல்லை, இதுபோல ஏகப்பட்ட வழக்குகள், பாஜக முன்னெடுத்தவை (பசி தேர்தல் தவிர). இதற்கு எந்த மாதிரி அர்த்தம் கற்பிப்பது? அரசியல் லாபங்களுக்காக, நீதித்துறை, மத்திய அரசு நடந்துகொள்கிறது என்று சாதாரண மக்கள் எண்ணமாட்டார்களா? (நான் அப்படி நினைக்கவில்லை ஹஹ்ஹா).

  சத்யா அவர்கள் பொதுஜனங்களின் அபிப்ராயத்தைச் சொல்லியிருக்கிறார். பாராட்டுகள். (ஏற்கனவே குருமூர்த்தி அவர்கள் சொல்லியிருப்பது, சோ காலத்தில் இருந்த ஆசிரியர்களுக்கு அதே சுதந்திரம் வழங்கப்படும் என்று. அதனால் சத்யாவின் கருத்துக்களை வெளியிட்டது குருமூர்த்தி அவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்குக் கொடுத்த மரியாதை என்று நம்புகிறேன். அவர் இந்தக் குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வைக்கப்பட்டால், அதனைச் சமாளித்துத்தான் பேசுவார் என நம்புகிறேன்)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   ஆமாமாம்….. ! நீங்கள் சொல்வது தான் சரியாக இருக்கும்.

   குருமூர்த்தி சார் இதையெல்லாம் படித்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.

   துக்ளக்’கில் பணிபுரிபவர்கள் எல்லாரும், அவரவர்களுக்கு தோன்றியதை எழுதி அப்படியே அச்சுக்கு அனுப்பி வெளியிட்டு விடுவார்கள் என்று சொல்ல வருகிறீர்கள்… சரிதானே…?

   நீங்கள் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்… 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    இல்லை. சத்யாவிடம் இதை எழுதுங்கள் என்று சொல்வார் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் இந்த மாதிரி இந்த வாரம் எழுதப் போகிறேன் என்று சொல்லும்போது (எல்லா ஆசிரியர்களும் இருக்கும்போது), வேண்டாம், பாஜகவுக்கு எதிராக எழுதாதீர்கள் என்று சொல்லமாட்டார் என நினைக்கிறேன். (ஓரளவு சோ வழியில் பத்திரிகை வருவதால்). இந்த மாதிரி கட்டுரைகள், சோ காலத்தைய துக்ளக்கை நினைவுபடுத்துகிறது அல்லவா? (துர்வாசர் கட்டுரைகளுக்கும் சத்யா கட்டுரைகளுக்கும் இந்த பாயிண்டை வைத்து உங்கள் பாணியில் எழுதுங்கள் என்று சொல்லியிருப்பதாகப் படித்திருக்கிறேன்)

    இப்போவும் துக்ளக் தன் சுயத்தை 70% இழக்கலை என்றே நினைக்கிறேன். அதனால்தான், குருமூர்த்தி அவர்கள் எழுதும்போது, வெளிவந்த செய்தி, அல்லது கட்டுரையின் குறிப்பையும் (சாட்சிக்கு) குறிப்பிடுகிறார். துக்ளக், குருமூர்த்தி அவர்களின் முழுச் சிந்தனையையும் தாங்கி வருவதாக நான் கருதலை (அப்படி எப்போ கருதுகிறேனோ, அப்போது அது தீக்கதிர் போல பாஜகவின் பத்திரிகை ஆகிவிடும்)

    • புதியவன் சொல்கிறார்:

     //என்று சொல்லியிருப்பதாகப் // – என்று சோ அவர்கள் சொல்லியிருப்பதாக

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  ” உள்நாட்டு பேங்குகளிலேயே கருப்புப் பணத்தை
  பதுக்குபவர்களிடம் கணக்கு கேட்க மாட்டோம்.
  கருப்புப் பணத்திற்கு, கூடுதலாக 1 சதவீதம்வட்டி தருகிறோம் ”
  -என்று அவர்களது நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் வகையில் விசேஷ
  சலுகைகள் வழங்கலாம். விருது வழங்கி கௌரவிக்கலாம்.

  முயன்று தான் பாருங்களேன்….” – துக்ளக் சொன்னது .

  இது நடக்கப் போகின்றது .
  இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிரில் விழுந்து கொண்டு
  இருக்கின்றது .
  இப்படியே போனால் ரூ 82 க்கும் (அதாவது 1 US $ க்கு ) போகலாம்
  என்று பூச்சாண்டி வேற வருகின்றது .
  நமக்கு தெரியாது – இது மாதிரி ஒரு யூகம் இருக்கின்றது .

  ரிசெர்வ் வங்கி வெளிநாடு வாழ் இந்தியரிடம் இருந்து
  டெபாசிட் வாங்கும் . ( எத்தனை தடவ பாத்திருக்கோம் )

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.