வாஜ்பாய் தமிழில் பேசினால்….? வீடியோ …..!!!..

1996-ல் நடந்த பொதுத் தேர்தலில், பி.ஜே.பி தனிப்பெரும் கட்சியாக
உருவெடுத்ததால், அப்போதைய ஜனாதிபதியான ஷங்கர் தயாள் ஷர்மா,
வாஜ்பாயை பிரதமராகப் பொறுப்பேற்க சொன்னார். இந்தியாவின் 11வது
பிரதமராக வாஜ்பாய் பதவியேற்றார்.

ஆனால், நம்பிக்கை ஓட்டில் வெற்றி பெற, போதிய அளவு, மற்ற
கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்களில்
வாஜ்பாய் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நேர்ந்தது.

ராஜினாமா செய்யும் முன்பாக, அன்று பாராளுமன்றத்தில்
பேசிய வாஜ்பாய் தனது உரையின் இடையே பாரதியாரின்-

( இந்த தேசத்தின் மொழி, இனம், கலாச்சாரம் வெவ்வேறாக
இருந்தாலும் சிந்தனையில் பாரதம் ஒரே நாடு தான் –
என்கிற பொருளைத்தரும் – )

“ முப்பது கோடி முகமுடையாள் ,
உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் –
இவள் செப்பு மொழி பதினெட்டு உடையாள்
எனிற் சிந்தனை ஒன்றுடையாள் ”

என்கிற கவிதையை தமிழிலேயே வாசித்துக் காட்டி, அதன் அர்த்தத்தை
ஹிந்தியில் விளக்கினார்…..விவாதத்தினூடே, தனக்கு தமிழ் புதிதல்ல என்றும் சொல்கிறார்….!

அந்த வீடியோ கீழே –

..

..
———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to வாஜ்பாய் தமிழில் பேசினால்….? வீடியோ …..!!!

 1. Mani சொல்கிறார்:

  வாஜ்பாய் தமிழில் பேசினால் ?

  தமிழ் தவிக்கிறது ;
  இருந்தாலும் ரசிக்கிறோம். அவர் தமிழின் மீது கொண்ட அன்பினாலும்,
  அவர் மீது நாம் கொண்ட அன்பினாலும் !

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இப்போது தான் படித்தேன்; படித்ததில், இந்த பதிவுக்கு
  தொடர்பானதை பகிர்ந்து கொள்கிறேன்….

  ——————–

  புதுடெல்லி ரெய்ஸினோ ரோடு!
  வாஜ்பாய் பதவி விலகிய மறுநாள்!

  அவருடன் பத்திரிகையாளர் சார்பாக ஒரு பிரத்யேக பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது அவரிடம் ஒரு முக்கிய கேள்வி எழுப்பப்பட்டது.

  அந்த கேள்வி தமிழ் மொழி குறித்துதான். அதற்கு காரணம், மக்களவையில் பாரதியின் கவிதை வரிகளை சொல்லி வாஜ்பாய் அப்போது பேசியிருந்தார். இதுகுறித்து அவரிடம் எழுப்பப்பட்ட ஒரு சில கேள்விகளும், வாஜ்பாயின் பதில்களும்தான் இவை.

  கேள்வி: மக்களவையில் பாரதியின் கவிதை வரிகளை எடுத்து சொன்னீர்கள்? ஆனால் தமிழகத்தில் நீங்கள் ஒரு இந்தி வெறியர் என்ற கருத்து நிலவுகிறதே, உங்களின் விளக்கம் என்ன?

  பதில்: நானா? இந்தி வெறியனா? கிடையவே கிடையாது. பல்வேறு மொழிகளுக்கிடையே நமது விலைமதிக்க முடியாத கலாச்சார மரபுகள் குறித்து நாம் அனைவரும் நியாயமான முறையில் பெருமை அடையவே செய்கிறோம்.

  பாரதியை பற்றி நான் பேச காரணம், நவ இந்தியாவில் மிகப்பெரிய கவிஞர்களில் சுப்பிரமணிய பாரதியும் ஒருவர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற விஷயம் குறித்து வெளிப்படுத்தவும், அதை முழுமையான உணர்வுகளில் சொல்லவும், “முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புது ஒன்றுடையாள் – இவள் செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என்ற பாரதியின் கவிதையை சொல்வதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. (பாரதியின் இந்த கவிதை வரிகளை இந்தி எழுத்துக்களில் எழுதி வைத்து படித்து காட்டினார் வாஜ்பாய்)

  கேள்வி: உங்களுக்கு தமிழ் இவ்வளவு பிடிக்குமா? தமிழ் இலக்கியங்கள் மீது உங்களுக்கு ஆர்வம் உள்ளதா? திராவிட நாகரீகத்தின் அடித்தளத்தில் வளர்ந்த தமிழ்க் கலாச்சார மரபுகள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் மீது மதிப்பும், மரியாதையும் உங்களுக்கு இருக்கிறதா?

  பதில்: கண்டிப்பாக. தமிழில் என்னால் பேச முடியாமல் போனாலும் தமிழ் இலக்கியத்தின் வளம் குறித்து எனக்கு நன்றாக தெரியும். பாரதியின் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளை ஒன்றுவிடாமல் நான் படித்திருக்கிறேன். அப்படி படிக்கும்போது, அவரது படைப்புகளின் ஆழத்தையும், அரும்பெரும் கருத்துக்களையும் என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு இந்தியனும் நான் உட்பட பழமையும், வளமும் கொண்ட தமிழ்க் கலாச்சாரத்தை பற்றியும் தமிழ் நாகரீகத்தை பற்றியும் பெருமை கொள்வதில் நியாயம் உண்டு.

  • புதியவன் சொல்கிறார்:

   இதைவிட முக்கியமான ஒன்று கா.மை சார்…. இவர் இறந்துவிட்டாரே என்று அரசியல் கட்சிகள் வருத்தம் வெளிப்படுத்தியதைவிட, மக்களும் ‘அடடா போயிவிட்டாரே’ என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். யாரும் வெறுப்பு காட்டமுடியாத காட்டாத அரசியல்வாதி வாஜ்பாய் அவர்கள். நம் துரதிருஷ்டம்தான், அவர் கடைசி 10 ஆண்டுகளாவது அரசியலில் இல்லாதது.

   இதுபோல, கலாம் அவர்கள் மறைந்தபோது பெங்களூரில் நிறைய இடங்களில் ‘வருந்துகிறோம்’ என்று கன்னடக் காரர்கள் அஞ்சலி செலுத்தி ஃப்ளெக்ஸ் ஸ்பாண்டேனியஸாக வைத்திருந்தனர். கலாம் அவர்களும் முழு நேர அரசியல்வாதி இல்லையாயினும் நம் மனங்களைக் கவர்ந்தவர்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    தமிழகத்தில் இப்போது இருக்கும் பெரியவர்களில் – யாராவது, இப்படி எல்லாராலும் நேசிக்கப்படக்கூடியவராக
    இருக்கிறாரா…? அரசியல்வாதி தான் என்றில்லாமல், பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர் / ஈடுபட்டிருப்பவர் என்கிற பின்னணியில் யோசித்துச் சொல்லுங்களேன் …

    • புதியவன் சொல்கிறார்:

     நல்லக்கண்ணு அவர்கள் இருக்கலாம். ஆனால் அவருடைய கட்சி, அதன் கொள்கைகள் போன்றவற்றால் மக்களிடம் தேவையான அளவு அவர் ரீச் ஆகவில்லை என்றே நினைக்கிறேன். (அவர் இப்போதும் வெகு சாதாரணர். கட்சி திரட்டிக்கொடுத்த நிதியையும் அவர் வாங்கிக்கொள்ளவில்லை. குமரி அனந்தன் அவர்களும் காந்தீயவாதிதான், ஆனால் அரசியல் பெயரை வைத்து லாபங்கள் சம்பாதித்திருக்கலாம், மகள் மருத்துவர், சகோதரன் பெரிய தொழிலதிபதி என்பதுபோல். எனக்கு விவரமாகத் தெரியலை).

     மற்றபடி, வேறு யாரும் நினைவுக்கு வரவில்லை. முக்கியஸ்தர்களை (அரசியலில் இப்போதும் முன்னணியில் இருப்பவர்களை) நினைத்து வெகு எரிச்சல்தான் வந்தது. அவர்கள் யார் மீதும் எனக்கு மரியாதை இல்லை.

     இந்திய அளவிலும் அப்படி யாராவது இருக்கிறார்களா? ஸ்டேட்ஸ்மேன் என்று சொல்லத்தக்க அளவில்? யோசித்து பகிர்ந்துகொள்ளுங்களேன் கா.மை சார். (எனக்கு சட்னு யாருமே நினைவுக்கு வரலை)

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      கிட்டத்தட்ட உங்கள் மனநிலையில் தான் நானும் இருக்கிறேன்… யோசிப்போம்…
      யாராவது கண்ணில் தெரிகிறார்களா என்று பார்ப்போம்…!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 3. செ. இரமேஷ் சொல்கிறார்:

  வாஜ்பாயி அன்று பேசும்போது என்னால் பெருமை கொள்ள முடிந்தது. அதில் ஒரு பொய் இருப்பதாக கூட என்னால் சந்தேகப் பட முடிய வில்லை. ஆனால் இப்போதும் ஒருவர் பேசுகிறார், ஆனால் ஒரு உண்மையாக பேசுவதாக என்னால் 1% கூட நம்ப முடியவில்லை.

  • தமிழன் சொல்கிறார்:

   யாரென்று சொல்லியிருக்கலாமே இரமேஷ்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    தமிழன்,

    சில சமயங்களில் சம்பந்தப்பட்டவர் பெயரைச் சொல்லாமல் – யூகிக்க விடுவது இன்னும் சுவாரஸ்யமாக இல்லை…? 🙂 🙂

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 4. Pingback: வாஜ்பாய் தமிழில் பேசினால்….? வீடியோ …..!!! – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.