மூன்று மூஞ்சிகளும், பாதாளத்தில் விழும் இந்திய ரூபாயும், கேயாஸ் தத்துவமும் ….!!!


இந்த மூன்று மூஞ்சிகளையும் பாருங்கள்….

pastor andrew brunson-

துருக்கி சர்வாதிகாரி எர்டோகன்

..

..

இந்திய ரூபாயின் மதிப்பு திடீரென்று அதல பாதாளத்திற்கு போவதற்கு
இந்த 3 மூஞ்சிகள் தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா…?

( வார்த்தைகளை இன்னொரு முறை பார்த்துக் கொள்ளவும்…
திடீரென்று சரிவதற்குத் தான் இவர்கள் காரணம்… ரெகுலராக
சரிந்துகொண்டே இருப்பதற்கு காரணமான இன்னொரு 4-வது
முகம் இந்தியாவிலேயே இருக்கிறது…!!! )

சரி கேயாஸ் தத்துவத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்….?

கேயாஸ் தியரி சொல்கிறது….

– The idea that one butterfly could eventually have a far-reaching
ripple effect on subsequent historic events – ( “A Sound of Thunder”,
a 1952 short story by Ray Bradbury )

இன்னும் புரியும்படியாக –

– “you could not remove a single grain of sand from its place without
thereby … changing something throughout all parts of the immeasurable whole”. (The Vocation of Man (1800), Johann Gottlieb Fichte )

..

..
இன்னும் விளக்கமாக தமிழில் –

‘பட்டாம் பூச்சி விளைவு’ (Butterfly Effect);
ஒரு பட்டாம் பூச்சியின் சிறகசைவு வளிமண்டலத்தில் ஏற்படுத்தும் சிறு
மாற்றம் கூட காலப் பெருவெளியில் ஒரு சூறாவளியை ஏற்படக்
காரணமாக இருக்கக்கூடும்…

சரி கேயாஸ் தத்துவம் இங்கே எப்படி வருகிறது…?

துருக்கியில் மதபோதனை செய்யும் அமெரிக்காவின் –
கிறுக்கு அல்லது சதிகார -பாஸ்டர் ஆண்ட்ரூ க்ரெய்க் ப்ரன்ஸ்டன் ( pastor Andrew Craig Brunson ) என்பவரை,

துருக்கியின் எதேச்சாதிகார சர்வாதிகாரி எர்டோகன் –
தனது ஆட்சியை கவிழ்க்க கூட்டுசதியில் ஈடுபட்டார் என்று சொல்லி கைது செய்து சிறையில் போட –
..

..
மரியாதையாக அவரை விடுதலை செய்கிறாயா இல்லை பயங்கர எதிர்
விளைவுகளை சந்திக்கிறாயா என்று அமெரிக்க கிறுக்கு ஜனாதிபதி மேன்மைக்குரிய ட்ரம்ப் அவர்கள் மிரட்ட –

-விட மாட்டேன் போ …உன்னால் முடிந்ததை செய்துக்கொள் என்று
துருக்கி சர்வாதிகாரி பதிலுக்கு சவால் விட –

துருக்கியின் மீது ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி கட்டுப்பாடுகளை
(sanctions)விதிக்க –

துருக்கியின் நாணயமான லிரா’வின் டாலருக்கு எதிரான மதிப்பு
40 % கீழே விழ –

அதன் விளைவாக……

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70+ -க்கு அதல
பாதாளத்தில் சரிய –

இந்தியாவில் – பெட்ரோலுக்கும், டீசலுக்கும் –
இன்னும் இறக்குமதியாகும் அத்தனை பொருட்களுக்கும் பலமடங்கு அதிக விலையை கொடுக்க வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவங்களுக்கும்,
இந்த மூன்று கிறுக்கு மூஞ்சிகளுக்கும் –
இந்திய மக்களுக்கும் –
எந்த விதத்திலும், எத்தகைய தொடர்பும், சம்பந்தமும் இல்லை….

ஆனால் – எந்த தவறும் செய்யாத அப்பாவி இந்திய மக்களுக்கு கிடைக்கும்
இந்த தண்டனைக்கு காரணம் என்ன…? எது….?

.
———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to மூன்று மூஞ்சிகளும், பாதாளத்தில் விழும் இந்திய ரூபாயும், கேயாஸ் தத்துவமும் ….!!!

 1. Pingback: மூன்று மூஞ்சிகளும், பாதாளத்தில் விழும் இந்திய ரூபாயும், கேயாஸ் தத்துவமும் ….!!! – TamilBlogs

 2. Ram சொல்கிறார்:

  எளிதாக புரிகிற மாதிரி மிக நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
  உங்களுக்கு அந்த knack இயல்பாகவே வருகிறது.
  தொடர்ந்து எழுதவேண்டும் என்கிற உங்கள் ஆர்வம் பிரமிப்பை தருகிறது.
  நீங்கள் நிறைய எழுத வேண்டும். நன்றி கே.எம்.சார்.

  • Ganesan சொல்கிறார்:

   Yes. I endorse your view.

  • Raghavendra சொல்கிறார்:

   கொன்னுட்டீங்க கே.எம்.சார்.
   எவ்வளவு அழகா, simple-ஆ, சுவாரஸ்யமா புரிய வைக்கறீங்க.

   //திடீரென்று சரிவதற்குத் தான் இவர்கள் காரணம்… ரெகுலராக
   சரிந்துகொண்டே இருப்பதற்கு காரணமான இன்னொரு 4-வது
   முகம் இந்தியாவிலேயே இருக்கிறது…!!! //
   Superb. இது நினைவில் இருந்துகொண்டே இருக்கும்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி ராகவேந்திரா,

    இந்த சாக்கில், உள்ளூர் காரணங்களை மறைத்து /மறந்து மொத்த வீழ்ச்சிக்கும் இதுவே காரணமென்று நினைத்து விடப்போகிறார்களே என்பதற்காகத்தான், முன் ஜாக்கிரதையாக அந்த வார்த்தை.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 3. Sharron சொல்கிறார்:

  This is true sir.

 4. D. Chandramouli சொல்கிறார்:

  Logically deduced with clear interpretation of butterfly effect.

 5. Saravanan சொல்கிறார்:

  Sir, nice explanation regarding the sudden fall of indian rupee, like your way of presentation in a very simple manner. May be some of your readers might be interested in this, here is the list for the gradual fall of the indian ruppee since year 1913 … check this link:
  http://alphaideas.in/2018/08/14/the-fall-fall-of-the-indian-rupee/

 6. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! 1924 ல் கட்டப்பட்ட உங்களூர் காெள்ளிடம் பாலம் …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   செல்வராஜன்,

   மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், ஏற்கெனவே, கடந்த சில வருடங்களாகவே, அந்த பாலம் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது. அரை கிலோமீட்டர் தூரத்திலேயே
   புதிய பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்து விட்டது.

   அரசாங்கமே இடிக்க வேண்டியது…அவர்கள் அவ்வளவு சுலபமாக செய்ய மாட்டார்கள்…
   இப்போது இயற்கையே உதவுகிறது… அவ்வளவு தான்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Sridhar சொல்கிறார்:

    Today morning, the old Kollidam bridge washed away. How many good memories it has carried. Was a vital connectivity for many from north tamilnadu to south tamilnadu.

    Nature’s lesson, nothing is eternal except Him.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     ஸ்ரீதர்,

     நீங்கள் கூறுவது உண்மை தான்.

     கடந்த 50 ஆண்டுகளில், பலநூறு தடவைகள் இந்த கொள்ளிடப்பாலத்தின் மீது நான் பயணித்திருக்கிறேன்…. நடந்தும்…ஸ்கூட்டரிலும், பஸ்களிலும்……..!

     இதே போல், காவிரியாறு மீது, ஸ்ரீரங்கத்தையும்-திருச்சி நகரத்தையும்
     இணைக்கும் பழைய பாலம் ஒன்றும் இன்னும் இருக்கிறது… ஆனால் இதன்
     அருகிலேயே பல வருடங்களுக்கு முன்பாகவே ஒரு புதிய பாலம் கட்டப்பட்டு, பயனுக்கு வந்து விட்டது..

     பழைய பாலத்தின் ஒரு புறம் முற்றிலுமாக அடைக்கப்பட்டு, மற்றொரு பக்கம் மட்டும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது… நாள்தோறும் பலர் இங்கே
     நடைப்பயிற்சி (walking) மேற்கொள்ள இது உதவியாக இருக்கிறது.

     காலம்…. அனைத்தையும் மாற்றுகிறது….!!!
     சில சமயம் நல்லவிதமாகவும்… சில சமயம் மோசமாகவும்…!!!

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 7. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  இந்தியா ரூபாய் விழுவதற்கு காரணம் என்ன ?
  தெரியாது என்று சொன்னால் நம்புவீர்களா ?
  அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் ?
  அதேதான் துருக்கி – இந்தியா சம்பந்தம் .

  பத்திரிகைகள் சொல்லும் காரணமோ அல்லது
  சொல்வதோ உண்மையாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை .

  எதனால் ரூபாய் வீழ்ந்தது என்பது தெரியவில்லை .
  மீடியா கட்டி விட்ட கதை இல்லை
  உண்மையான காரணம் வெளியே சொல்லும்படி இல்லை .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s