சொல்வது திருமதி தமிழிசை – டீசல் விலை திடுக்கிட வைக்கிறது… பெட்ரோல் விலை பயமுறுத்துகிறது…!!!


தமிழக பாஜக தலைவர் திருமதி தமிழிசை டீசல், பெட்ரோல்
விலையேற்றம் குறித்து கடுமையாக கண்டித்து குரல் எழுப்பிய
ஒரு செய்தி ஒளி நாடாவை பார்க்க நேர்ந்தது….

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள அதனை கீழே பதிந்திருக்கிறேன்.

..

..

இது பாஜக மத்தியில் ஆட்சியில் இல்லாத காலத்தில்
சொல்லியதாயிற்றே என்று நினைக்கக்கூடும்…

ஆட்சியில் இருக்கும்போது ஒரு மாதிரியும்,
எதிர்க்கட்சியாக இருக்கும்போது வேறு மாதிரியாகவும்
பேசக்கூடிய கட்சியா என்ன பாஜக….
கொள்கை மாறாத, லட்சியக் கட்சி அல்லவா…?

எனவே இன்றும் அவரது அபிப்பிராயம்
அதுவேயாக இருக்குமென்றே நம்பலாம்….!!!


( நன்றி – ஹிந்து ஆங்கில நாளிதழ் )

மார்ச் 1, 2016 – ரூ.56.61 – செப்டம்பர் 7, 2018 – ரூ.79.99

.
——————————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to சொல்வது திருமதி தமிழிசை – டீசல் விலை திடுக்கிட வைக்கிறது… பெட்ரோல் விலை பயமுறுத்துகிறது…!!!

 1. அரவிந்தன் சொல்கிறார்:

  இந்த வீடியோ அதிக அளவில் circulation ஆக வேண்டும்.
  நான் facebook -ல் போடுகிறேன். மற்றவர்களும் செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்வது, மத்தியில் ஆளும் கட்சியின் இரட்டை வேடத்தை பகிரங்கப்படுத்த உதவும். எனவே நான் இந்த யோசனையை வரவேற்கிறேன்.

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   ஐயா
   உலகத்துலேயே ஒரே நேரத்துலே ரெண்டு நிதி மந்திரிகள வச்சிக்கிட்டு, டாலர் வெல ஏறினா ஏற்றுமதியாளருக்கு நல்ல லாபம். அதனால இந்திய நாணய மதிப்பு குறைஞ்சது தப்பில்லேன்னு சொல்றவங்கள வச்சிக்கிட்டு…
   ஜிஎஸ்டி தப்பு, ஆதார் தப்பு, 15 லட்சம் தருவேன், 50 நாளில் எதுவும் சரியில்லேன்னா தூக்கிலிட சொன்னது, குஜராத் மாடல் எல்லாம் கண்ணு முன்னரே வந்து போகுதே!

 3. Pingback: சொல்வது திருமதி தமிழிசை – டீசல் விலை திடுக்கிட வைக்கிறது… பெட்ரோல் விலை பயமுறுத்துகிறது…!!! –

 4. Selvarajan சொல்கிறார்:

  அன்று அடுக்கு மாெழி … இன்று (பாெய்களை) அடுக்குகிற மாெழி …?

 5. venkat சொல்கிறார்:

  if you want to write an impartial article on this, i recommend you do some research on how…
  1. India is resisting US push to stop buying oil from Iran.
  2. how india has negotiated with Iran on oil pricing, payment terms and shipping cost
  3. how indian refineries have been retrofitted to process iraninan oil

  all above and more ( if you do impartial research ) will tell you that government is truly acting to contain effect of dollar appreciation and oil price increase in global markets. If they have not done above, we will be seeing much higher prices.

  i know what you will say…. but i don’t care as i take a holistic view of things rather than populist view of yours.

  yes, by reducing taxes government can bring down the price but that will only set a new low. From there if price increases due to external conditions we cannot do much. I think letting the price increase based on market reality and high prices at pump are good in long run. Only if prices are consistently high then there will be innovation that will lead to…

  1. More electric vehicle
  2. less consumption thru people behavior change and highly fuel efficient vehicle on the road etc.,

  • புதியவன் சொல்கிறார்:

   வெங்கட்… இதில் பாபுலர் வியூ என்று ஒன்றும் கிடையாது. எது நியாயம் எப்படி தேசத்தின் பொருளாதாரத்தை மேனேஜ் செய்வது என்பது தெரியாதவர்கள் அதிகாரத்தில் உள்ளதால் நடக்கும் நாடகம் என்றே நான் நினைக்கிறேன். நம் அதிகாரத்தில் உள்ளவர்கள், நிச்சயம் மற்ற தேசத்தவர்களைவிட மூளையில் குறைவானவர்கள் என்பதை பல நாடுகளைப் பார்த்தால் நமக்குத் தெரிந்துவிடும்.

   உங்களை ஒன்று கேட்கிறேன். கத்தரி கிலோ – விளைவிப்பனுக்கு 15 ரூபாய். அது பல்வேறு நிலைகளைத் தாண்டி 30-40 ரூபாயாக இருக்கிறது. உங்களுக்கு முடியுமென்றால் கோயம்பேடு சென்று 25 ரூபாய்க்கு வாங்கலாம், இல்லைனா, கத்தரி தோட்டத்துக்குச் சென்று 15 ரூபாய்க்கு அல்லது 20 ரூபாய்க்கு ஃப்ரெஷ் ஆக வாங்கலாம். இதனை, அரசு உள்ளே நுழைந்து, 50 ரூபாய் வரி என்று சொல்லி, 100 ரூபாய் ஒரு கிலோ கத்தரி என்று சொன்னால், அப்போதும் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அண்டார்டிக்கா என்று சொல்வீர்களா?

   உள்ளூரில் எடுக்கும் எண்ணெய்க்கும் அதே விலை வைக்கிறதே அரசு… அது யாருடைய சொந்த நன்மைக்காக என்று கண்டுபிடித்துச் சொல்வீர்களா?

   மற்ற தேசங்களில் நம்மைவிட (நான் கல்ஃப் தேசங்களைச் சொல்லவில்லை) விலை குறைவாக கிடைப்பது எப்படி? நான் கேட்கிறேன், தேசத்துக்கு வரி வேண்டுமென்றால், 5 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் வருடா வருடம் 50% வரி சொத்தின்மீது தரவேண்டும் என்று சொன்னால், அதுவே பல லட்சம் கோடி வருமே. எந்த டிரஸ்டும் இந்தியாவில் கூடாது, எல்லா டிரெஸ்டுகளும் 50% வருமான வரி கட்டவேண்டும் என்று சொன்னால் பல லட்சம் கோடி வருமானம் இந்தியாவிற்கு கிடைக்காதா? எதற்கு 30 ரூபாய் பெட்ரோலுக்கு, 40 ரூபாய் வரி போடவேண்டும்? இதை விளக்காமல், உலகப் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசி என்ன உபயோகம்?

   உங்கள் மற்ற பாயிண்டுகள், வாதத்திற்கானது என்றாலும், (எந்த சர்வாதிகாரி சொன்னது என்பது ஞாபகம் இல்லை), எல்லோரும் அரிசி உணவு சாப்பிடுவதால்தான் அரிசி கிலோ 50 ரூபாய் விற்கிறது. மற்றவர்கள் எல்லோரும் அரிசி உணவைக் குறைத்து உட்கொண்டால், கிலோ 20 ரூபாய்க்கு அரிசி கிடைக்கலாம் என்று சொல்வதைப்போலச் சொல்கிறீர்களே.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    .
    நன்றி புதியவன்…. என் வேலையை சுலபமாக்கி விட்டீர்கள்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   //From there if price increases due to external conditions we cannot do much. // – இதிலும் எந்த சப்ஸ்டன்சும் இல்லை. பெட்ரோல் அத்தியாவசியப் பொருள் கிடையாது (சாதாரண குடிமகனுக்கு). அரசு இதை சப்சிடைஸ்ட் விலைக்குக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. தங்கத்தைப் போல உலகத்தில் உள்ள விலைக்கு இந்தியாவிலும் விற்க வேண்டியதுதானே (அதற்கான கூடுதல் சுமையோடு). எதற்கு தேவையில்லாமல் இவ்வளவு வரி செலுத்தணும்?

   // India is resisting US push to stop buying oil from Iran.// – இந்தக் கதை எல்லாம் இப்போது வந்ததுதானே… 10 வருடங்களுக்கு முன்னால் பெட்ரோல் 20 ரூபாய்க்கா கிடைத்துக்கொண்டிருந்தது? மத்திய அரசு, அதிகாரிகளுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. பொருளாதார அறிவு நம்ம நாட்டில் இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வெங்கட்,

   உங்களால் முடிந்தவரை பாஜக தலைமைக்கு வக்காலத்து வாங்க முயற்சிக்கிறீர்கள்… உங்களிடம் அதைத்தான் எதிர்பார்க்க முடியும்…பரவாயில்லை…!

   உங்களுக்கு புதியவன், அழகாக, தெளிவாக, விளக்கமாக – பதில்
   சொல்லி இருக்கிறார். அதுவே போதுமானது.

   ஆனால், நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்திலிருந்து தப்பியோட பார்க்கிறீர்களே…

   இந்த இடுகை எதைப்பற்றியது…..?
   பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, பெட்ரோல் விலை ஏறியபோது
   எப்படி ரீ-ஆக்ட் செய்தது….இப்போது என்ன சொல்கிறது என்பதைப்பற்றியது தானே….?

   தபாஜக தலைவரின் ” டீசல் விலை திடுக்கிட வைக்கிறது, பெட்ரோல் விலை பயமுறுத்துகிறது… etc…etc…” பற்றிய உங்கள் கருத்து என்ன
   என்பதைச் சொல்லாமல் நழுவுகிறீர்களே…நியாயமா…??? 🙂 🙂

   வெட்கமாக இருந்தால்…. பரவாயில்லை … விட்டு விடுங்கள்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   //if you want to write an impartial article //

   Funny… this suggestion comes from a hardcore BJP Loyalist… 🙂 🙂

  • அரவிந்தன் சொல்கிறார்:

   venkat

   4 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாயை பாஜக அரசு மக்களிடமிருந்து கொள்ளையடித்திருக்கிறது (மறைமுகமாக எக்சைஸ் வரியை 15 தடவை உயர்த்தியதன் மூலமாக). இந்த கொள்ளையை எது நியாயப்படுத்தும் ?
   சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்ததை மறைத்து,
   பாஜக அரசு எக்சைஸ் வரியை பல மடங்கு உயர்த்தியதன் காரணமாகவே
   பெற்றோல் விலை ஏறியது என்கிற உண்மையையும் மறைத்து,
   டாலர் மதிப்பு உயர்ந்தது காரணமாக பெட்ரோல் விலை ஏறியதாக
   கதை கட்டுகிறீர்களே நீங்கள் நடுனிலையாளரா ?
   புதியவன் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன ? சத்தியசந்தர் போல் கேள்வியை கேட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொள்ளாதீர்கள். கருத்துக்கு கருத்து பதில் சொல்லுங்கள்.

   • புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்… இங்கு வந்தபிறகு (கல்ஃபிலிருந்து), பொருட்கள் விலையை நான் சில மாதங்களாகக் கவனிக்கிறேன். நான் வாங்கச் செல்கிறேன். விலை மிக அதிகமாக எனக்குத் தோன்றுகிறது. சொன்னால் கேவலமாக இருக்கும். கடலை மிட்டாய், துபாயைவிட இங்கு விலை அதிகம் (செய்யும் முறை ரொம்ப சுகாதாரம்னு சொல்லமுடியாது தமிழ்நாட்டில்). இத்தனைக்கும் துபாயில் கடலை விளைவிப்பதில்லை, ஜீனி தயாரிப்பதில்லை, ஏன்… வேலை செய்யும் ஆட்கள் எல்லாமே இந்தியர்கள்தான். இதைவிட இந்தியாவின் நிலையைச் சொல்லமுடியாது. ஒரு உதாரணத்துக்குத்தான் இதனை எடுத்துக்கொண்டுள்ளேன். மற்ற பொருட்களைப் பற்றி எழுதினால் எல்லோருக்கும் வயத்தெரிச்சல்தான் வரும்.

    எல்லாப் பொருட்களின் தரம் நன்றாக இல்லை (உண்மையாச் சொல்றேன். அது எலெக்டிரானிக் பொருட்களாக இருந்தாலும் சரி, ஆக்சசரைசாக இருந்தாலும் சரி, சாப்பிடும் பொருட்களாக இருந்தாலும் சரி. சொன்னா ஆச்சர்யமா இருக்கும். பெப்சி… போன்ற பானங்கள், காலை உணவுக்கான செரியல்கள் போன்றவை, கல்ஃப் தேசத்தைவிட தரம் மிகக் குறைவு. இதுக்கு காரணம் கண்டுபிடிப்பது சுலபம். ஏசி விலை, இந்தியாவில் ஏன் இவ்வளவு அதிகம், இவ்வளவு குறைவான தரம்? வெறும்ன வரிகளை மட்டும் சொல்லக்கூடாது. அப்படியென்றால் அந்த வரிகள் எங்கே செல்கிறது? எப்படி மற்ற அரசாங்கங்கள் வரிகள் குறைவாக அரசை நடத்த முடிகிறது?)

    இந்தியாவில் இருக்கும் நமக்கு 60% ஏழைகளைப்பற்றி அக்கறை இல்லையா? அவர்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டுமா? இதைப் பற்றி நினைத்தபோதுதான் இந்த இடுகையையும், துரதிருஷ்டவசமாக வெங்கட்டின் பின்னூட்டத்தையும் பார்த்தேன்

    நாம் கரும்பின் இனிமையைத் தெரிந்துகொள்ளாத காலம்வரை, இலுப்பைப் பூக்களைப் பற்றி புகழ்ந்து எழுதிக்கொண்டிருப்போம். வெளிநாட்டிற்குச் செல்லும்போதுதான் நம் நாட்டின் வீழ்ச்சி தெளிவாகத் தெரியும். இதற்குக் காரணம் மக்கள் என்று சொல்லக்கூடாது, நம் தலைவர்கள்தான். அவர்கள்தான் நெறிமுறைகளின்படி இருந்து மக்களையும் உயர்த்தவேண்டும். தேர்தலில் தோல்வியுற்றாலும், இன்றைக்கும் நாம் காமராசரை நினைத்துக்கொண்டிருக்கும் காரணம் எந்த அரசியல்வாதியும் அறியாதது.

 6. புதியவன் சொல்கிறார்:

  இன்றைக்கு தமிழிசை அவர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம் என்று சொல்லியிருப்பதைக் கவனித்தீர்களா? விரைவில் பெட்ரோல் டீசல் விலை குறையுமாம். அதுவும் தவிர மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரியைக் குறைத்தான் விலை மட மடவெனச் சரியுமாம்.

  புதிதாக இடுகை போட்டுவிடாதீர்கள். ஒருவேளை நாளைக்கே பெட்ரோல் மீதான வரி முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்பட்டு (மத்திய அரசால்) பெட்ரோல் விலை 30 ரூபாயாக ஆகிவிடப்போகிறது. தமிழிசை அவர்கள் வெகு விரைவில் என்று சொல்லியிருக்கிறார். கொஞ்சம் பொறுத்து இடுகை வெளியிடுங்கள்.

  இந்த அரசியல்வாதிகளில் பேச்சைக் கேட்டால் எவ்வளவு எரிச்சல் வருகிறது. கையாலாகத் தனத்துக்கு முழ நீள அறிக்கை விடுபவர்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.