பகல் கனவு பலிக்க வாழ்த்துகள் அமீத் ஷா…….ஜீ….!!!


‘அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டில் பாஜகவின் ஆட்சிதான்’:
அமித் ஷா சூளுரை‘

Published : 09 Sep 2018 20:00 IST
பிடிஐ
புதுடெல்லி

( இது தமிழ் ஹிந்துவில் வெளியகியுள்ள செய்தி…..!!!
https://tamil.thehindu.com/india/article24909041.ece?utm_source=HP-
RT&utm_medium=hprt-most-read)

———————————-

அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டில் பாஜகவின் ஆட்சிதான் நடக்கும் என்று பாஜக தேசிய செயற்குழுக்கூட்டத்தில் அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா சூளுரைத்துள்ளார்.

பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் தொடங்கியது. 2-வது நாளான இன்று பிரதமர் மோடி, தேசியத் தலைவர்
அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உரையாற்றினார்கள், பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அது குறித்து மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில்,

வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தற்போது இருக்கும் இடங்களைக் காட்டிலும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் –
என்று தேசியத் தலைவர் அமித் ஷா பேசினார்.

அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டில் பாஜகவின் ஆட்சிதான் நடக்கும். யாரும் பாஜகவை தூக்கிவீசிவிட முடியாது என்று அமித் ஷா தெரிவித்தார்.

2019-ம்ஆண்டு தேர்தலில் பாஜக வெல்லும், ஏனென்றால், மத்திய அரசும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் ஏராளமான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி இருக்கிறோம். நாட்டில் உள்ள அரசியல் என்பது நம்பிக்கை மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் வளர்ந்து வருகிறது.

கடந்த 2001-ம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி வந்ததில் இருந்து பாஜக எந்தவிதமான தேர்தலிலும் தோற்கவில்லை. இன்னும் மாநிலத்தில் தொடர்ந்து பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. அதற்குக் காரணம் பாஜகவின் சிறந்த செயல்பாடுதான் என்று அமித் ஷா பேசினார் என அவர் தெரிவித்தார்.

.
———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to பகல் கனவு பலிக்க வாழ்த்துகள் அமீத் ஷா…….ஜீ….!!!

 1. Pingback: பகல் கனவு பலிக்க வாழ்த்துகள் அமீத் ஷா…….ஜீ….!!! – TamilBlogs

 2. Mani சொல்கிறார்:

  ” பெட்ரோல் விலை உயர்ந்ததற்கும் மத்திய அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எங்களால் விலையேற்றத்தை தடுக்க முடியது ”
  என்று இன்று சொல்லி இருக்கிறாரே ர.ச.பி. அந்த ஒன்றுக்காகவே அவர்களை
  50 என்ன 100 வருடங்கள் கூட ஆட்சியில் வைத்திருக்கலாம்.

 3. Mani சொல்கிறார்:

  “பெட்ரோல், டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வருவதற்கு ஏன் மத்திய அரசு முரட்டுத்தனமாக மறுக்கிறது ?
  கச்சா எண்ணெய் விலை $107 ஆக இருந்த போது விலை குறைவு.
  இப்பொழுது கச்சா எண்ணெய் விலை $ 78 ஆக இருக்கும் போது
  விலை உயர்வு ஏன்?” கேட்கிறார் ப.சி.
  பதில் சொல்லுங்கள் ஷாஜி, மோஜி,

  • புதியவன் சொல்கிறார்:

   அமித் ஷா அவர்களுக்கு கனவு காணும் உரிமை உண்டு. பெட்ரோல் விலை ஏற்ற இறக்கத்துக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை. இந்தியப் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்துக்கு பாஜக கட்சி காரணமல்ல என்பது எல்லா இந்தியர்களுக்கும் தெரியும். வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? தொழிற்சாலைகள் பெருகினாலோ அல்லது மக்களே சொந்தத் தொழில் செய்யத் தொடங்கினாலோ வேலை இல்லாத் திண்டாட்டம் அதுவாகவே குறைந்துவிடும். – சரி… வேறு என்ன திட்டங்களை மத்திய அரசு இந்தியாவில் நிறைவேற்றியிருக்கு? இந்தக் கதை ஒரு பக்கம் இருக்கட்டும்.

   மணி – தயவு செய்து ப.சி எதையாவது சொன்னார் என்று அதை ஆதாரமாக நினைக்காதீர்கள். அவர் பதவியில் இருந்தபோது ஒன்றும் செய்யத் தெரியாதவர் அவர். ப.சி இதைச் செய்தார் என்று சொல்லும்படி ஒன்றுமே அவர் செய்ததில்லை, பையன் பல்லாயிரம் கோடி அதிபரானதைத் தவிர. ஏட்டுச் சுரைக்காய் அவர். பெட்ரோல் விலை ஏற்றத்துக்குக் காரணம், இந்திய ரூபாயின் வீழ்ச்சி. இதைத் தவிர, பெட்ரோலுக்கான வரி அதே சதவிகிதம்தான் இப்போதும் இருக்கு. முழுவதுமால தேவையில்லாத வரிகளை நீக்கினால் மட்டுமே, மற்ற தேசங்களில் உள்ள விலையைப் போல் நமக்கு பெட்ரோல் கிடைக்கும். ஞாபகம் இருக்கட்டும். நம் கன்சம்ஷன் மிக அதிகம். அப்படி என்றால் இறக்குமதி செய்யும் பெட்ரோலும் மிக அதிகம். அரசு வரி குறைப்பு மட்டுமல்லாது, உபயோகப்படுத்துவதிலும் ஒரு கண்ட்ரோல் கொண்டுவர வேண்டும். (தனிப்பட்ட முறையில் நான் நினைப்பது. அவசியத் தேவையான கமர்ஷியலுக்கு 50 ரூபாய் என்றால்-டாக்சி செர்வீஸ் அவசியத் தேவையில் வராது, பொதுப் போக்குவரத்து அவசியத் தேவையில் வரும், தனிப்பட்ட உபயோகத்துக்கு பெட்ரோல் 100 ரூபாயாக ஆக்கவேண்டும், பொதுப் போக்குவரத்து அதிகமாக ஆகவேண்டும். இதை கணிணி வாயிலாக நிச்சயம் செய்யமுடியும்)

   கச்சா எண்ணெய் 107 டாலர் ஆக இருந்தபோது இந்திய ரூபாயின் மதிப்பு என்ன, இப்போதைய ரூபாயின் மதிப்பு என்ன? வெளிநாட்டிலிருந்து தொடர்ந்து பணம் அனுப்பிக்கொண்டிருந்த எனக்கு பணத்தின் மதிப்பு எப்படி குறைந்துகொண்டே வருகிறது என்று தெரியும். கல்ஃப் நாடுகளின் பணத்தின் மதிப்பு அனேகமாக ஒரே மாதிரித்தான் கடந்த 30 வருடங்களாக இருக்கிறது (டாலருக்கு எதிரான). ஆனால், 95ல் 10,000 திர்ஹாம் 1 லட்ச ரூபாய் என்றானது, இப்போது 5,000 திர்ஹாம் 1 லட்ச ரூபாய் என்றாகிவிட்டது. (நான் சொல்வதில் கொஞ்சம் கூடக் குறைய இருக்கும்). 2008-2010 காலகட்டத்தில்தான் இந்திய ரூபாய் மதிப்பு கூட ஆரம்பித்தது, அதுவும் டாலர் வீழ்ச்சி அடைந்ததால் மட்டுமே.

 4. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! இன்று மகாகவி பாரதியார் நினைவு நாள் … அவர் அறிவுறுத்திய மாயையைப் பழித்தல் என்று ஒரு கவிதை :

  உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
  மாயையே!-மனத்
  திண்மையுள்ளாரை நீ செய்வது
  மொன்றுண்டோ!-மாயையே!

  எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
  மாயையே! நீ
  சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
  நிற்பாயோ?-மாயையே!

  என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
  கெட்ட மாயையே!-நான்
  உன்னைக் கெடுப்ப துறுதியென்
  றேயுணர் மாயையே!

  சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
  மாயையே!-இந்தத்
  தேகம் பொய் யென்றுணர் துரரை யென்
  செய்வாய் மாயையே!

  இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப
  மாயையே!-தெளிந்
  தொருமை கண்டோர் முன்னம் ஓடாது
  நிற்பையோ?-மாயையே!

  நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
  மாயையே-சிங்கம்
  நாய்தரக் கொள்ளுமோ நல்லர
  சாட்சியை-மாயையே!
  என்னிச்சை கொண்டுனை யெற்றிவிட
  வல்லேன் மாயையே!-இனி
  உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
  வராது காண்-மாயையே!

  யார்க்கும் குடியல்லேன் யானென்ப
  தோர்ந்தனன் மாயையே!-உன்தன்
  போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
  உன்னை-மாயையே! …..

  அற்புதமான கவிதை …பலரின் எண்ணங்களுக்கு சவுக்கடி அன்றும் ..இன்றும் …!! வாழ்க நீ எம்மான் இவ்வையகம் உள்ளளவும் …மாறாது உன் நினைவு …!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாரதியை மறக்கும் நாளும் உண்டோ…?
   தமிழ் உள்ள வரைக்கும் பாரதி இருப்பார்.
   என்றும் அவர் நினைவைப் போற்றுவோம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. புரட்சி தமிழன் சொல்கிறார்:

  இவர் மனதில் காங்கிரஸ் காரன் என்று நினைப்பு.

 6. Mani சொல்கிறார்:

  புரட்சி தமிழன்

  // இவர் மனதில் //
  எவர் மனதில் ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.