இவர்களும் இந்தியர்களே….!!!

இந்தியா எத்தகைய நாடு… இதில் எந்தெந்த பகுதிகளில், எத்தகைய மனிதர்கள் எல்லாம் வசிக்கின்றனர் என்று அறிந்து கொள்வதே பல ஆச்சரியங்களை தருகிறது… நம் நாட்டைப்பற்றியே நாம் அறிந்ததை விடவும் அறியாதவையே அதிகமாக இருக்கிறது….

என் நண்பர் ஒருவரின் மகனுக்கு நாகாலாந்தில் வேலை கிடைத்திருக்கிறது… அவருக்கு உதவியாக, சில விவரங்களை சேகரிப்பதில் ஈடுபட்டிருந்த வேளையில் –

நாகாலாந்து பற்றி நிறைய வித்தியாசமான தகவல்களை பார்க்க நேர்ந்தது…. ஒன்றிரண்டு விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.

இந்த இடம் நாகாலாந்தின் தலைநகரமாகிய கோஹிமாவிலிருந்து
சுமார் 18 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

..

..

இவர் – 76 வயது, Chaiyievi Zhiinyii ( சய்யெய்வி ஜின்யில்…? ) இந்தியாவின் வடகிழக்கு மூலையில் உள்ள நாகாலாந்தை சேர்ந்தவர்… ஆதிவாசி… பல நூற்றாண்டுகளாக வேட்டையாடிப் பிழைப்பது இவர்களது முன்னோர்களின் பரம்பரைத் தொழிலாக இருந்து வந்திருக்கிறது.


..

..

..

..

கடந்த சில வருடங்களாக, இவரும், இவரது கூட்டத்தைச் சேர்ந்த மற்ற
ஆதிவாசிகளும் வேட்டையாடுவதை நிறுத்தி விட்டார்கள்… காரணம் – இவர்களுக்குள் ஏற்பட்ட மனமாற்றம்….பல அபூர்வ பறவையினங்களும், விலங்குகளும், சிறிய பூச்சி வகைகளும், அவை அண்டியிருந்த காடுகளும் அழிவதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை…


..

முதலில் சில பழங்குடியின மக்கள் தங்களைச் சுற்றியிருந்த சுமார்20 சதுர கிலோமீட்டர் தூரத்திற்குள் மட்டும் வேட்டையாடுவதில்லை என்று தீர்மானித்தார்கள்… நாளடைவில், மற்றவர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்… இப்போது கிட்டத்தட்ட இந்த இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் அனைவருமே வேட்டையாடுவதை நிறுத்தி விட்டனர். நாகாலாந்து அரசாங்கமும் இதற்கு ஊக்கம் கொடுத்து இந்த இடத்திற்கு 1998 -ல் Khonoma Nature Conservation and Tragopan Sanctuary… என்று பெயரிட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.


..

இவர்கள் கூட்டத்தில், தாங்கள் வேட்டையாடிய மிருகங்களின் தலைகளை
வீட்டிற்குள் அலங்காரமாக வைத்திருப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.


..

வேட்டையாட பயன்படுத்தும் துப்பாக்கிகளும், சிலவகை யந்திரப் பொறிகளும் …..


..

இவர்களின் நாட்டுப்புற இசை ஆர்வம் – சில இசைக்கருவிகள்…


..

வேட்டையை முற்றிலுமாக விட்டுவிட்டு, சுகமான பயிர்த்தொழிலில்
ஈடுபடத்துவங்கி விட்டனர் இந்த பழங்குடியினர்.

கிடைக்கின்ற மழை நீரை பயனுள்ள வகையில் பயன்படுத்தி,
(terraced farming and irrigation…..)
மூலிகை, மருந்து செடிகள், காடுகளில் விளையக்கூடிய காய்கறி வகைகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பெரும் அளவில் விளைவிக்கிறார்கள்….

..

.
———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to இவர்களும் இந்தியர்களே….!!!

  1. தமிழன் சொல்கிறார்:

    பார்க்காத இடம். ஓரளவு அறியாத செய்தி. தாய்லாந்து, இந்தோனேஷியாவில் இந்த மாதிரி இடங்களை சரி செய்து, சுற்றுலாவில் இணைத்துவிடுகிறார்கள் (நானும் படிப்படியாக அரிசி விளைவிக்கும் மலைச்சரிவுகளைப் பார்த்து படம் எடுத்திருக்கிறேன். அப்புறம் பார்த்தால் கொடைக்கானலிலும், மற்றும் பல இடங்களிலும் இந்தியாவிலேயே இத்தகைய இடங்கள் இருக்கின்றன. என்ன வித்தியாசம் என்றால், இந்தியாவில் கையேந்துபவர்கள் இருப்பதைப்போல் மற்ற இடங்களில் நான் பார்த்ததில்ல, அவ்வளவாக)

    நம் வாழ்நாளில் இந்தியாவின் அதிசயங்களைப் பார்க்கவே நேரம் இருக்காது. இந்த தேசத்தில் எல்லா அதிசயங்களும் இருக்கின்றன. டூரிசம் என்பதில் அரசு ஆர்வமாக பணம் செலவழித்தால், நிறைய டூரிஸ்டுகள் நம்ம நாட்டுக்கு வருவாங்க. உள்ளூர் மக்களும் அதிகம் செல்வாங்க. அதுக்கு ஒரு கண்ட்ரோல் மட்டும்தான் அரசு கொண்டுவரணும். இப்போ ரயில் நிலையங்களில் உணவு கண்ட்ரோல் கொண்டுவந்துள்ளதைப் போல், அரசின் உதவியோடு உணவகங்கள், விற்பனைப் பொருட்கள் (சுவினீர்) மட்டும் ஆரம்பித்தால் போதுமானது. சுற்றுலாவுக்கான இடத்தைப் பாழடிக்கும் மக்களையோ வியாபாரிகளையோ கையேந்துபவர்களையோ அங்கு வரவிடாமல் தடுத்தால் போதுமானது.

  2. Pingback: இவர்களும் இந்தியர்களே….!!! – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.