சீறும், பாயும் – பாஜக தலைவர்கள்…!!! சுஷ்மாஜி, மோடிஜி, அருண் ஜெட்லிஜி…..


வரிசையாக சுஷ்மாஜி, மோடிஜி, அருண் ஜெட்லிஜி –
அத்தனை பேரும் சீறுகிறார்கள்…

மத்திய அரசின் கையாலாகாத்தனத்தை
கடுங்கோபத்துடன் விமரிசிக்கிறார்கள்…

ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கிறதே
அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கோபத்துடன்
கேட்கிறார்கள்…

மத்திய அரசை பாஜக தலைவர்களே எதிர்க்கிறார்களா…?
வியப்பாக இருக்கிறதா…?
அவர்கள் பேசும் இந்த காணொளிகள் எல்லாம்
அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது, 2013 -ல், 2012-ல் –
எடுக்கப்பட்டவை ஆயிற்றே…!!!

நம்முடைய லோக்கல் தலைவர் சீறவில்லையா…?
“டீசல் விலை திடுக்கிட வைக்கிறது… பெட்ரோல் விலை
பயமுறுத்துகிறது…” என்றெல்லாம்….

அது ஸ்டேட் லெவல்…
இது நேஷனல் லெவல்…!!!

எங்கிருந்தோ கவுண்டமணி சாரின் குரல் கேட்கிறதா…

” அரசியலில் இதெல்லாம்………” 🙂 🙂 🙂

.
———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to சீறும், பாயும் – பாஜக தலைவர்கள்…!!! சுஷ்மாஜி, மோடிஜி, அருண் ஜெட்லிஜி…..

 1. Pingback: சீறும், பாயும் – பாஜக தலைவர்கள்…!!! சுஷ்மாஜி, மோடிஜி, அருண் ஜெட்லிஜி….. – TamilBlogs

 2. புதியவன் சொல்கிறார்:

  You are right கா.மை சார். எந்த அரசியல்வாதிகளையும் நினைத்தால் எரிச்சல்தான் வருது. அவங்க ஆளும் கட்சியா இருக்கும்போது ஒண்ணும் செய்ய லாயக்கில்லாமல் இருப்பாங்க. எதிர்கட்சி ஆன உடனே, ஏதோ.. இவங்க ஆளும் கட்சியா இருந்திருந்தா என்னவோ மிக நல்ல முடிவா எடுத்திருப்பார் என்று பாமர மக்களை எல்லாம் மயங்கவைப்பாங்க. அதுனால இதனைப் பற்றிக் கருத்துச் சொல்லவே விரும்பவில்லை.

  யாராவது, நான் ஆட்சிக்கு வந்தால், ‘ஜி.எஸ்.டி’ வாபஸ் வாங்குவேன், இதைச் செய்வேன், இதை மாற்றுவேன் என்று ஸ்பெசிஃபிக்கா சொல்றது கிடையவே கிடையாது. மொரார்ஜி ஒருவர்தான் ஆட்சிக்கு வந்து ‘தங்கத்தின் விலையை’க் குறைத்தவர். மற்ற எல்லாரும் ‘பேச்சுதான்’. ஆளும் கட்சியைத் திட்டிக் குறை சொல்வதற்கு ஒரே காரணம் தான் ஆட்சியில் இருந்து அனுபவிக்க முடியவில்லையே என்ற வயிற்றெரிச்சல்தான்.

  இந்தியாவில் எல்லா அரசியல்வாதியும் தமிழக கருணானிதி/ஸ்டாலின் மாதிரிதான். அதனால் அவங்கதான் இந்தியாவுக்கே முன் உதாரணம் ஹாஹாஹா.

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  இதற்கு ஐந்து காரணங்கள் இருக்கின்றன .
  1 கச்சா எண்ணெய் விலை உயர்வு
  2 டாலர் எதிராக இந்திய ரூபாய் வீழ்ச்சி
  3 OROP
  4 மத்திய அரசு
  5 மாநில அரசு

  OROP – இந்திய ராணுவத்தில் பென்ஷன் திட்டம் .
  ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் – அதாவது நாற்பது
  ஆண்டுகள் முன்னாள் ஒய்வு பெற்றவரும் இன்று
  ஒய்வு பெறுபவர்களும் ஒரே பென்ஷன் .

  விலையைக் குறைக்க ஒரே வழி வரியை குறைப்பதுதான் .
  இதை செய்ய முடியாது – ஏற்கனவே அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு
  சம்பளம் போட பணம் இல்லை – கூடவே ஏழாவது கமிஷன் ,
  எட்டாவது கமிஷன் , பழைய பாக்கி , பஞ்சப்படி வேறு .
  எப்படி முடியும் ?

  இந்திய பட்ஜெட் என்பது ஆயில் கம்பெனி கையில் இருந்து வாங்கி
  அரசு ஊழியருக்கு சம்பளம் போடுவதுதான் !

  நிலமை இன்னும் மோசமாக போக வாய்ப்பு உள்ளது .
  டாலரா இல்லை எண்ணையா முதலில் ரூ 100 க்கு போகும்னு
  இன்று பெட் காட்டும் நேரமிது !

  புலி முதுகில் சவாரி – அச்சே தின் !

 4. தச்சை கண்ணன் சொல்கிறார்:

  பெட்ரோல் விலை நூறை எட்டினாலும் நான் ஆச்சரிய பட மாட்டேன் ..அம்பானியின் பெட்ரோல் கம்பனிக்கு எந்த பாதகமும் வந்து விடக் கூடாது என்ற நல்ல எண்ணமே பெட்ரோல் விலை குறையாததன் பின்னணி ….இவர்களுக்கு மக்கள் நலன் மீது அக்கறை கிடையாது ,,,மோடியிடம் இருந்து எவ்வளவோ எதிர்பார்த்தோம் ,இன்று ஒட்டு மொத்தமாக ஏமாந்து தான் நிற்கிறோம் ,,,,,

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.