டெல்லிக்கு வந்த ராஜபக்சே பேட்டி – வீடியோ……


திருவாளர் சு.சுவாமி, முன்னாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி
ராஜபக்சேயை தனது VHS அமைப்பின் சார்பாக நடந்த
ஒரு நிகழ்ச்சிக்காக டெல்லிக்கு அழைத்து வந்திருக்கிறார்.

இருவருமே “தண்டனைக்கு தப்பியவர்கள்”
என்கிற தலைப்பிற்கு பொருத்தமானவர்கள்…
இவர்கள் நல்ல விஷயங்களுக்காக ஒன்றுபடக்கூடியவர்கள் அல்ல ….

இந்த இரண்டு அரசியல்வாதிகளும் சேர்ந்து
அடுத்து யாரைக் கவிழ்க்க –
என்னென்ன திட்டங்கள் போட்டிருக்கிறார்களோ –
யாருக்குத் தெரியும்…!

இவர்கள் இருவருமே நேர்மையானவர்களுமல்ல…
நல்லவர்களுமல்ல…
வெளிப்படையாகச் செயல்படக்கூடியவர்களும் அல்ல…

Strategic News International என்கிற அமைப்பின் சார்பில்
ராஜபக்சேவை பேட்டி காணப்பட்டது…. அந்த பேட்டி கீழே –

பேட்டியில் விசேஷமாக எதுவுமில்லை என்றாலும் கூட,
அந்த முகத்தின் பாவனைகளின் மூலம்
சில விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது…

( கடந்த காலத்தில், பல மோசமான நிகழ்வுகளின் போது
நாம் கையாலாகாதவர்களாகத்தான் இருந்திருக்கிறோம்…
அந்த துயரம் இப்போதும் மனதை அழுத்திக் கொண்டிருக்கிறது…)

.
———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to டெல்லிக்கு வந்த ராஜபக்சே பேட்டி – வீடியோ……

  1. Pingback: டெல்லிக்கு வந்த ராஜபக்சே பேட்டி – வீடியோ…… – TamilBlogs

  2. புதியவன் சொல்கிறார்:

    ஈழ மக்களின் துயரங்கள் பால் நான் மிகவும் அனுதாபம் கொண்டவன். வன்முறை என்பது இரண்டு பக்கமும் மிகக் கூர்மையான கத்தி என்பதைத்தான் விடுதலைப் புலிகள் மற்றும் ராஜபக்‌ஷே அரசு நிரூபித்தது.

    எனக்குத் தெரிவதற்காக நான் கேட்கிறேன். காந்திகள் இல்லாத உலகத்தில், பெரும்பான்மை, சிறுபான்மையினரால் பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டபோது, பலப் பல வருடங்களாக தோல்வியையே சந்தித்துக்கொண்டிருந்தபோது, சிங்களத் தலைவர்கள் பலரை பயங்கரவாதத்தால் இழந்திருந்த போது, நாட்டின் ஒரு பகுதியையே பயங்கரவாதத்தால் இழந்திருந்தபோது, கிடைத்த நல்ல வாய்ப்பை, ராஜபக்‌ஷே ராணுவம் பயன்படுத்தியது. இந்திய ராணுவத்துக்கு நேர்ந்த அதே பிரச்சனை காரணமாக (யார் பயங்கரவாதி, யார் பொதுமக்கள் என்பது), பிரித்தறிய முடியாமல், எல்லோரையுமே ராணுவம் ஆக்ரோஷமாக அழிக்க நினைத்தது/சாதித்தது (திரும்ப அந்தப் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக).

    நக்சல், பழங்குடியினரின் எதிர்ப்பு, ஏதிலிகளின் எதிர்ப்பு, சாமான்ய மக்களின் எதிர்ப்பு என்ற எல்லாவற்றையும் சாதாரணமாக ‘பயங்கரவாதம், வெளிநாட்டுச் சதி’ என்பது போன்ற பெயர்களில் உண்மையான ஜனநாயகம் இல்லாத பல அரசுகள் உலகில், அழித்தொழிப்பு செய்கின்றன. ராஜபக்‌ஷேவின் ஸ்டிராடஜியை, திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் அங்கீகரித்தனரே.

    காந்தி அங்கு தலைவராக இருந்திருந்தால், நாட்டைப் பிளக்க சம்மதித்திருப்பார். ஆனால் உலகத்தில் ஒரு காந்திதானே உண்டு. ஒருவேளை ஜனநாயகத்தில் முதிர்ச்சியுற்ற அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் அப்படிச் செய்திருக்குமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s