ஸ்வப்னா பர்மன் – ஒரு தாயின் வெடித்துக் கொண்டு வெளியேறும் உணர்வுகள்….ஸ்வப்னா பர்மன்; எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத, படிப்பறிவில்லாத, மிக மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்….மேற்கு வங்கம், ஜல்பைகுரியைச் சேர்ந்த இவர் –

அண்மையில் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஏசியன் 2018 போட்டிகளில் கலந்துகொண்டு, பெண்களுக்கான heptathlon போட்டியில் –

இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்றேடுத்தார்.

இதற்கு முந்தைய போட்டியில் கலந்துகொண்டபோது ஏற்பட்ட, கடுமையான காயத்தின் வலியையும், வேதனையையும் தாண்டி, இந்த போட்டியில் ஸ்வப்னா ஜெயித்திருக்கிறார்….

இந்த வெற்றியை பெற, அந்தப் பெண் அளவற்ற துன்பங்களையும்,
வேதனைகளையும் எதிர்கொள்ள நேர்ந்ததை,
உடனிருந்து பார்த்த,
பங்குகொண்ட – அவரது தாயின் மனதை
இந்த நிகழ்ச்சி எந்த அளவிற்கு பாதித்திருந்தது என்பதை
இந்த வீடியோ காட்டுகிறது…

மகள் ஜெயிப்பதை டிவியில் பார்க்கும் தாய்,
உணர்ச்சி வசப்பட்டு
என்ன செய்கிறாள் பாருங்கள்….

..
———————————————————————————

.
அவ்வளவு எளிதான போட்டி அல்ல இது….

What is Women’s heptathlon …?

Women’s heptathlon is the combined event for women
contested in the athletics programme of Championships. The women’s outdoor

heptathlon consists of the following events, with the first four contested on the
first day, and the remaining three on day two:

100 metres hurdles
High jump
Shot put
200 metres
Long jump
Javelin throw
800 metres

.
———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ஸ்வப்னா பர்மன் – ஒரு தாயின் வெடித்துக் கொண்டு வெளியேறும் உணர்வுகள்….

 1. புதியவன் சொல்கிறார்:

  இந்தக் காணொளியை போட்டி நடந்துகொண்டிருந்தபோதே (ஆசியப் போட்டி) கண்டிருக்கிறேன். பிறகுதான் ஹெப்தலான் ஹைலைட்ஸை மறுநாள் பார்த்தேன்.
  ஆசிய விளையாட்டுப் போட்டியில் நம்மவர்கள் (இந்தியர்கள்) நன்றாக திறமையை வெளிப்படுத்தினார்கள், அதிலும் ஹாக்கி, தடகளம் போன்ற பல போட்டிகளில் நன்றாக விளையாடினார்கள். அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

  மற்ற தேசங்களைப் போல் அல்ல நம்ம தேசம். இங்கு ஒருவன் வெற்றிபெறும்போது அவன்/ள், 90% உழைப்பைக் காண்பிக்கவேண்டியிருக்கிறது, ஏகப்பட்ட பாலிடிக்ஸைத் தாண்டி தன் திறமையினால் வெளிவரவேண்டியிருக்கிறது. அப்படி அவர்கள் கஷ்டப்பட்டு பதக்கங்களை வெல்லும்போது, மற்ற தேசத்து விளையாட்டு வீரர்களைவிட, இவர்களைப் பாராட்டுவது தகும்.

  பொதுவா மற்ற நாடுகள்ல, மிகச் சிறிய வயதிலேயே திறமை இனம் காணப்பட்டு கடுமையான பயிற்சி கொடுக்கறாங்க. திறமை என்ற ஒன்றினாலேயே அவர்களுக்கு கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்கும், அதைவிட பயிற்சியும் ஊக்கமும் கிடைக்கும். சீனா, பல்வேறு ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் சிறிய குழந்தைகளை பங்கேற்கச் சொன்னதுபோல்தான் எனக்குத் தோன்றியது (போட்டியைப் பார்க்கும்போது). அது அவர்களுக்கு மிகப் பெரிய அனுபவமாக இருக்கும். நம்ம ஊர்ல, அவர்கள் பீக் ஏஜ் தாண்டியபிறகுதான் பெரிய போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பே கிடைக்கிறது.

  ஸ்வப்னா அவர்கள் தன் உழைப்பால் பதக்கம் வாங்கினார். அந்த உழைப்பு அவருடைய ஏழ்மை பின்னணியை முழுவதுமாக மாற்றிவிட்டது. 10 லட்சம் பரிசு, அரசு வேலை என்று இனி அவர் வாழ்க்கை நல்லபடி அமையும். இத்தகையவர்களுக்குத் தான், பயிற்சியாளர்களாகவோ விளையாட்டு சம்பந்தமான வேலைகளோ அரசு வழங்கவேண்டும். நம் ஹாக்கி சங்கம், கிரிக்கெட் சங்கம் போன்றவற்றில் உள்ள பாலிடிக்சினால் எத்தனை திறமையாளர்கள் வெளிச்சத்துக்கு வராமல் போய்விடுகிறார்கள்?

  அரசு, இரண்டு உலகளாவிய போட்டிகளில் பதக்கங்கள் பெறவில்லைய் என்றால், அல்லது 2-4 வருடங்களில் அந்த அந்த ஸ்டிரீமில் பதக்கங்கள் பெறவில்லை என்றால் பயிற்சியாளர், நிர்வாகிகள் குழுவை முழுவதுமாக கலைத்துவிடவேண்டும். இதைவிட, ரிசல்ட் காண்பித்தாலும், 8 வருடங்களுக்குப் பிறகு பயிற்சியாளர், நிர்வாக வேலை கிடையாது என்று சொல்லவேண்டும். இல்லையென்றால் பழந்தின்று கொட்டை போட்டு, விளையாட்டில் பாலிடிக்ஸ் செய்து நாட்டின் மானத்தை வாங்கிவிடுவார்கள் (ஹாக்கி கிரிக்கெட் போன்ற பலவிளையாட்டுகளில் நடப்பதைப் போல)

  நான் ஒன்று கவனித்தேன். அனைத்து விளையாட்டுவீரர்களும் (தமிழக வீரர்கள் உள்பட) ஹிந்தியிலேயே பேசினார்கள். நல்லவேளை கரியைப் பூசிக்க வேண்டியவர்கள் களத்தில் இல்லை. ஹாஹாஹா.

  • mekaviraj சொல்கிறார்:

   <<நான் ஒன்று கவனித்தேன். அனைத்து விளையாட்டுவீரர்களும் (தமிழக வீரர்கள் உள்பட) ஹிந்தியிலேயே பேசினார்கள். நல்லவேளை கரியைப் பூசிக்க வேண்டியவர்கள் களத்தில் இல்லை. ஹாஹாஹா.

   என்ன சொல்ல வருகிறீர்கள் ?
   அந்த விளையாட்டு வீரர்கள் தமிழில்/ அல்லது தாய் மொழியில் பேசி இருந்தால் அது தவறா ? அவர்களுக்கு ஹிந்தி தெரியாமல் இருந்தால் அதில் ஏதேனும் தவறு உள்ளதா ?


   உங்களுக்கு திராவிட ஆட்சியாளர்களை பிடிக்காமல் இருக்கலாம்.. ஆனால் அதற்கும் ஹிந்தி திணிப்பிறகும் வித்தியாசம் உள்ளது.

 2. Pingback: ஸ்வப்னா பர்மன் – ஒரு தாயின் வெடித்துக் கொண்டு வெளியேறும் உணர்வுகள்…. – TamilBlogs

 3. Mani சொல்கிறார்:

  // உங்களுக்கு திராவிட ஆட்சியாளர்களை பிடிக்காமல் இருக்கலாம்.. ஆனால் அதற்கும் ஹிந்தி திணிப்பிறகும் வித்தியாசம் உள்ளது.//
  சரியாகச் சொன்னீர்கள். உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்.
  கூடவே பின்னூட்டத்தில் எதற்காக அசிங்கமாக அந்த ஹாஹாஹா ?
  மட்டமான, தரக்குறைவான ரசனை.

  • புதியவன் சொல்கிறார்:

   //அதற்கும் ஹிந்தி திணிப்பிறகும் வித்தியாசம் உள்ளது//

   மணி, மேகாவிராஜ் – இருவருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். தயவு செய்து ‘ஹிந்தித் திணிப்பு’ என்ற மாயையில் இருக்காதீர்கள். கருணாநிதியின் உறவினர்கள் யாரும் அந்த மாயையில் இல்லை. அவர்கள் எல்லோரும் கற்றுக்கொண்டுவிட்டார்கள்., பதவிகளிலும் அமர்ந்துவிட்டார்கள். கற்றுக்கொள்ளாதவர்கள் கட்சியிலேயே இல்லை. நீங்கள் எந்த மத்திய அரசு அலுவலகத்திற்கும் வாழ்நாளில் சென்றதில்லை போலிருக்கிறது. அங்கு ஹிந்தியில்தான் பேசவேண்டும், அல்லது ஹிந்தியில்தான் பதில் வரும். இந்தச் சட்டம், கருணாநிதி காங்கிரஸ் மத்திய அரசு இருந்தபோது வந்த சட்டம். அப்போ உங்க தலைவர் ரொம்ப பிஸி, எனக்கு முதலில் இது ஏற்றுக்கொள்ளவே கஷ்டமாக இருந்தது. (ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் ஹிந்தியில் பதில் சொல்வார்கள்). இன்னும் 2009லிருந்து என்ன என்ன மாற்றங்கள் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நிறைய உதாரணங்களைக் கொடுக்க முடியும். ரொம்ப நீளமாக என் பதில் போய்விடும். ரயிலில் பிரயாணம் செய்திருக்கிறீர்களா? (தமிழகத்தில்). சென்னைக் கடைகளில், மற்ற தமிழக நகரங்களில் யார் வேலை பார்க்கிறார்கள் என்று தெரியுமா? என்ன என்ன பிசினெசில் யார் யார் இப்போது இருக்கிறார்கள் என்று தெரியுமா?

   ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என்ன எழுதியிருக்காங்க (சில வருடங்களுக்கு முன்னால் படித்தேன்) என்பதையும் படித்துப்பாருங்கள். எப்படி உணர்ச்சி வேகத்தில் தலைவர்களை நம்பி தங்கள் நேரத்தை வீணடித்திருக்கிறார்கள் என்று எழுதியிருக்காங்க.

   தேசிய விளையாட்டுகளில், பயிற்சி மற்றும் எல்லாவற்றிர்க்கும் ஹிந்தி மொழிதான் பயன்பாட்டு மொழி. நானே இவங்க சர்வசாதாரணமா ஹிந்தி பேசியதைக் கேட்டு கொஞ்சம் ஆச்சர்யம் அடைந்தேன். அப்புறம் ground reality தெரிந்தது.

   என் சிரிப்பு மட்டமான ரசனை இல்லை. பேச்சு ஒன்றே மூலதனமாகக் கொண்டவர்கள், வாயில் வடை சுடுபவர்கள் திராவிடர்கள் (இதுவும் ஈவெரா பெரியாரை விட்டுக்கொடுக்கக் கூடாது, நீதிக் கட்சி தலைவர்கள் வருத்தப்படக் கூடாது என்பதற்காக) என்ற மாயையில் மக்களை ஏமாற்றியிருக்கிறார்களே என்ற வயித்தெரிச்சல்.

   • Mani சொல்கிறார்:

    எந்த மொழியையும் நம் மீது திணிப்பதற்கு எவனுக்கும்
    அதிகாரமோ, உரிமையோ கிடையாது. இருக்கிறது என்று
    ஏற்றுக்கொள்கிறவர்கள் அடிமை புத்தி கொண்டவர்கள்.

    நாமே விரும்பி எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம்; ஹிந்தி,
    சம்ஸ்கிருதம் உட்பட.

    பின்னூட்டத்தில் ஹா ஹா ஹா என்று சிரித்தால்
    என்னைப் பொருத்தவரையில் அவர்கள் மனோவியாதியால்
    பீடிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தம்.

    • புதியவன் சொல்கிறார்:

     மணி… உங்களுக்குத் தெரியவில்லை. ஹிந்தித் திணிப்பு போராட்டம் பற்றியும் தெரியவில்லை, அப்போது என்ன நடந்தது என்றும் தெரியவில்லை, கடந்த 15 ஆண்டுகளாக என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை. அதனால் இதனைப் பற்றி மேலும் எதுவும் எழுதவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது மத்திய அரசு அலுவலகம், மற்ற எல்லா அரசு ஃபார்ம்ஸ் களையும் பார்க்கவும்.

 4. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  பெரிய நகரங்களை பொறுத்தவரையில் :
  இந்தி சாதாரணமாக பேசும் மொழியாக உள்ளது .
  மற்றபடி ஆங்கிலம் ஓரளவு பேசப்படுகின்றது .

  இரண்டு மாநிலத்தவர் சந்தித்தால் இதில் எதோ ஒன்று பயன்படும் .

  சிறு நகரங்களில் இரண்டுமே எடுபடாது – மாநில மொழி மட்டும் .

  நெறைய பேருக்கு ஆங்கிலம் பேச வராவிட்டாலும்
  எழுதத் தெரியும் – எதோ Form என்றால் ஆங்கிலம்தான் !

  கவனிக்க – இந்தி பேச்சு மொழி மட்டும் !
  நீ வரியா , அவன் என்னா பன்றான் அவ்வளவுதான் .

  முதலில் இந்தி என்ற ஒரு மொழியே கிடையாது .
  இந்துஸ்தானி என்றுதான் இருந்தது –
  உருது லிபியில் எழுதப்பட்டது .
  இந்துஸ்தானி /உருது மொழியில் அரபி பார்ஸி
  துர்க்க் சொற்கள் நெறைய வரும்

  1920 களில் காந்தி ஆங்கிலத்திற்கு பதிலாக
  நமக்கு என்று ஒரு மொழி வேண்டும் என்று இந்தியை கொண்டு வந்தார் .
  தேவநாகரி என்ற மராத்தி மொழியின் லிபி எழுத்தை இந்திக்கு
  கொடுக்கப்பட்டது

  இப்போது அரசு சொல்லும் இந்தி யாரும் பேசுவதில்லை .
  மாதாஜி பிதாஜி என்று சொன்னால் சிரிப்பார்கள் .
  பிரவேஷ் நிஷேத் என்றால் வடக்கேயே நிறைய
  பேர் என்ன அர்த்தம் என்று கேட்பார்கள் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.