அம்மா ஒரு நிமிஷம்….”பெட்ரோல் விலை”…… “பளார்…?”தொண்டரின் “சேவை” யும் – தலைவரின் ‘மகிழ்ச்சி’ யும்….!!!

..

——————-

இந்த விஷயத்திற்கு இடுகைக்கு என்ன அவசியம் …
செய்தி மட்டுமே போதுமே…!!!
—————-

பெட்ரோல் விலை பற்றி தமிழிசையிடம் கேட்ட ஆட்டோ டிரைவரை தாக்கிய பாஜகவினர்-
..

சென்னை: தமிழிசையிடம் கேள்வி எழுப்பியதற்காக பாஜகவினரால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கதீர் தற்போது பேட்டி அளித்துள்ளார்.

தன்னுடைய ஆதங்கத்தைதான் சொன்னதாக அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் கதீர் பாஜகவினரால் தாக்கப்பட்டு இருக்கிறார். இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாஜகவினர் அந்த டிரைவரை வலுக்கட்டாயமாக கழுத்தை பிடித்து இழுத்து வெளியே அனுப்பி தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழிசையிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி கேட்ட அந்த ஆட்டோ ஓட்டுநர் பேட்டி அளித்துள்ளார். அதில் வண்டி வாடகை கொடுக்க கூட பணம் இல்லை என்னிடம். பெட்ரோல் போடவே வருமானம் சரியாக உள்ளது. தினமும் பெட்ரோலுக்கே எல்லா பணமும் செலவாகிறது. இதில் எப்படி குடும்பத்திற்கு பணம் கொடுப்பது. எப்படி வாடகை கொடுப்பது. எப்படி சாப்பிடுவது. அதனால்தான் அவரிடம் கேள்வி எழுப்பினேன். ஆனால் அதற்காக
பாஜகவினர் என்னை தாக்கினார்கள். என் ஆதங்கத்தைதான் நான் சொன்னேன். அதற்கு போய் பாஜகவினர் என் கன்னத்தில் அறைந்தார்கள் –

என்று அந்த ஆட்டோ ஓட்டுநர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

( https://tamil.oneindia.com/news/tamilnadu/i-asked-about-petrol-price-but-they-slapped-me-says-auto-driver-who-questioned-tamilisai-329941.html )

இப்போதெல்லாம் தமிழ்நாட்டு செய்திகளுக்கு டெல்லி ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன… பல செய்திகள், இங்கே வருவதற்குள், அங்கே வெளிவந்து விடுகின்றன…

.
—————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to அம்மா ஒரு நிமிஷம்….”பெட்ரோல் விலை”…… “பளார்…?”

 1. Pingback: அம்மா ஒரு நிமிஷம்….”பெட்ரோல் விலை”…… “பளார்…?” – TamilBlogs

 2. புரட்சி தமிழன் சொல்கிறார்:

  flight ல வச்சி கேட்டாலும் அடிக்கிறாங்க , தெருவுல வச்சு கேட்டாலும் அடிக்கிறாங்க,

 3. Selvarajan சொல்கிறார்:

  ஆட்டாேக்காரர் வீட்டுக்கே பாே ய் ” அல்வா ” காெடுத்துட்டாங்க அம்மணி… எல்லாம் நமம முன்னாள் செ யல் தலைவர் பாணி தான் ..!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   .
   மீடியா செய்த புண்ணியம்…
   ஆட்டோக்காரருக்கு “அல்வா” கிடைத்திருக்கிறது… 🙂 🙂
   சில சமயங்களில் மீடியாக்கள் உதவியாகவும் இருக்கின்றன…!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.