தமிழகம் முழுவதும் இந்த நிலை உருவாக வேண்டும்….!!!


இது நடப்பதும் சென்னையில் தான்…
தண்டையார் பேட்டை…., நேதாஜி நகர்….
இந்துக்களும், இஸ்லாமியர்களுமாக சுமார் 20,000 பேர் பல
பத்தாண்டுகளாக ஒன்றாகச் சேர்ந்து வசிக்கும், வாழும் இடம்…

பர்மா தமிழ் முஸ்லிம் ஜூம்மா மசூதியின் பொறுப்பாளர் –
அலி யாஹ்யா கூறுகிறார்….

இங்கே ஒரு முருகன் கோவிலைக் கட்ட, இஸ்லாமிய சகோதரர்கள்
உதவியிருக்கிறார்கள்…. அதே போல் மசூதியை உருவாக்க
இந்துக்கள் ஒன்று கூடி உதவிக்கரம் நீட்டி இருக்கிறார்கள்.
இந்து நண்பர்கள் சொல்லும்போது, நாங்கள் தேங்காய் உடைத்ததும்,
கற்பூரம் காட்டியதும் உண்டு.

விநாயகர் ஊர்வலம் வரும்போது, இங்கே இந்துக்களும்,இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் – எல்லா மக்களுமே உற்சாகத்துடன் கலந்து கொள்வோம்.

இஃப்தார், கிறிஸ்துமஸ் உட்பட அனைத்து மத பண்டிகைகளிலும்,
எங்கள் எல்லார் குடும்பமும், பிள்ளைகளும் – கலகலப்பாக
கலந்து கொள்வது வழக்கம்…. என்கிறார் துணைச் செயலாளர்
அப்துல் ரெஹ்மான்…

உண்மையான மத நல்லிணக்கம் என்பது இது தான்…

அனைத்து மதங்களும் சமம்.
அவரவர் பழக்க வழக்கங்கள் அவரவருக்கு…
எல்லாரும், எல்லாரையும் கொண்டாடுவோம்… நேசிப்போம்.
எல்லாரையும் படைத்தது ஒரே இறைவன் தான்…
எல்லாரும் கொண்டாடுவதும் அந்த ஒரே இறைவனைத் தான்…

இந்த நிலை தமிழகம் முழுவதும் உருவாக வேண்டும்…
மனம்…. அதற்கான மனம் வேண்டும் – அவ்வளவு தான்…!

இன்றில்லா விட்டாலும், நாளையாவது –
இந்த நிலை உருவாக வேண்டும்…
உருவாகும் என்று நம்புவோம்…
அதற்காக உழைப்போம்…

மேற்கண்ட செய்தி குறித்து 17ந்தேதி, ஹிந்து ஆங்கில நாளிதழில்
வெளிவந்த புகைப்படமும், செய்தியும் – கீழே….

….


.
——————————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to தமிழகம் முழுவதும் இந்த நிலை உருவாக வேண்டும்….!!!

 1. Pingback: தமிழகம் முழுவதும் இந்த நிலை உருவாக வேண்டும்….!!! – TamilBlogs

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! // பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம் மனித இதயமே …பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே ..அமைதி நிலவுமே // என்பது எம்ஜிஆர் படப்பாடல் வரிகள் …அதை உணர வைக்கிறது தங்களின் இனறைய இடுகை பதிவு …! இதே பாேல ஒரு நிகழ்வு ஒரு நிகழ்ச்சிக்காக என்றாலும் மனிதனும் ..மனிதநேய ஒற்றுமையை விளக்கும் விதமாக …
  https://youtu.be/GTY0iBruSLw … யாரும் யாரையும் வெறுப்பதில்லை ..அன்புக்காட்டி உதவவே நினைக்கிறார்கள் … இவர்களை உசுப்பேத்தி பிரிப்பவன் ….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   செல்வராஜன்,
   மணி,

   உண்மை. அன்பும், கருணையும் தான் மனிதனின் இயற்கையான குணம். உடன் இருப்பவர்களுக்கு உதவுவது தான் அவனது இயற்கையான பண்பு.

   நேற்று பார்த்தோமே… அதைப்போன்ற அற்பப்பதர்கள், சுயநலன்மிக்க அரசியல்வாதிகள், மத வெறியர்கள் தான் இந்த சமூகம் சீர்கெட்டுப்போக காரணம்.

   மக்கள் இதை சரியாக புரிந்துகொண்டு, எத்தனைக்கெத்தனை இந்த கயவர்களை ஒதுக்கி வைக்கிறார்களோ
   அத்தனைக்கத்தனை – நம்மிடையே அமைதியும், நட்புறவும் மிளிரும்…

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s