எண்பது ஆயிரம் கோடி ரூபாய்….?செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின்னர் ஜன்தன் வங்கி சேமிப்புக் கணக்கில் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . கடந்த ஏப்ரல் வரையில் ஜன்தன் கணக்கில்
80 ஆயிரம் கோடி ரூபாய் வரை டெபாசிட் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன….

————————-

எண்பது ஆயிரம் கோடி ரூபாய்….?

பஞ்சை பராரிகளுக்காகவென்று விசேஷமாக பிரதமரால்
துவங்கப்பட்டது ” ஜன் தன் வங்கிக் கணக்கு “..

இந்த வங்கிக் கணக்கை துவங்க, “மினிமம் பேலன்ஸ்”
எதுவும் தேவையில்லை என்பது இதன் speciality.
அப்படி இருக்கையில் 80 ஆயிரம் கோடி ரூபாய்…டெபாசிட் செய்யப்பட்டிருப்பது வியப்பாக இல்லையா…? சம்பந்தப்பட்ட வங்கிகள் அப்போதே இதை கண்டுபிடித்து அத்தகைய கணக்குகளை முடக்கி இருக்க வேண்டாமா…?

500-1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்த பிறகு ஜன்தன் கணக்கில் எண்பது ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது என்கிற தகவல் உண்மையானால் –

இந்த கணக்குகள் யார் யார் பெயரில் இருக்கின்றன…?
இந்த கணக்குகளில் யாருடைய பணம் போடப்பட்டிருக்கிறது…?
இந்த கணக்குதாரர்கள் யாருடைய பினாமிகளாக செயல்பட்டிருக்கிறார்கள்…?
இந்த பணத்தை, திரும்ப பெறாமல் இருக்க (எடுத்து விடாமல் இருக்க)
தகுந்த உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டு விட்டனவா…?

நவம்பர் 8, 2016 அன்று பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது…
22 மாதங்களை கடந்த பின்னரும், இந்த கணக்குகள் பற்றிய முழு விவரங்களும்
இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லையே ஏன்…?

இதைத் தொடர்ந்து இன்னும் நிறைய கேள்விகள் எழுகின்றன…

சம்பந்தப்பட்டவர்கள் யார் மீதும் ஏன் இன்னும்
நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை…?

செல்லாக்காசு அறிவிப்பிற்குப் பிறகு
இதுவரை எத்தனை கருப்பு பணக்காரர்கள் சிக்கினார்கள்…?
யாராவது கைது செய்யப்பட்டார்களா…?

பல வங்கி ஊழியர்கள் கூட இந்த மோசடியில் துணை போனதாக
செய்திகள் வெளிவந்தனவே…
சம்பந்தப்பட்ட வங்கிகள், ஊழியர்கள் மீது
என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது…?

எவ்வளவு கருப்பு பணம் கைப்பற்றப்பட்டது…?

500 – 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன்
விளைவாக, சாதாரண பொதுமக்கள் பட்ட கஷ்டங்கள் தான் இதுவரை
நம் நினைவில் நிற்கின்றன.
நல்ல விளைவுகள் எதுவும் ஏற்பட்டதாக வெளிப்படையாகத் தெரியவில்லை…!

சில பணக்கார தொழிலதிபர்களுக்கும்,
மத்தியிலும், மாநிலங்களிலும் – ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கும்,
மத்தியில் ஆளும் கட்சிக்கும் பெருமளவில் பயன் ஏற்பட்டது
என்பது அரசு வெளிப்படையாக அறிவிக்க முடியாத லாபங்கள்….

500-1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவிக்கப்பட்டதால்
உண்மையில் ஏற்பட்ட – சாதக, பாதகங்களை பொதுமக்கள் தெளிவாக
அறிந்துகொள்ளும் வகையில்,

இந்த விஷயத்தில், இதுவரை நடந்தது அனைத்தையும் பற்றிய
முழு விவரங்களையும் மத்திய அரசு வெளியிடுமா…?

.
———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to எண்பது ஆயிரம் கோடி ரூபாய்….?

 1. அரவிந்தன் சொல்கிறார்:

  அடுத்த தேர்தல் வரும் வரை இந்த விவரங்கள் எதுவும் வெளிவராது.
  இந்த டிமானடைசேஷன் விவகாரத்தையே முடிந்த வரை மறக்கடிக்க பார்க்கும்
  பாஜக அரசு. மக்களும் மறந்து விடுவார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை;

 2. Pingback: எண்பது ஆயிரம் கோடி ரூபாய்….? – TamilBlogs

 3. Selvarajan சொல்கிறார்:

  இதுக்கும் ஒரு கணக்கு கூறுவார்கள் …அதாவது 31 காேடி நபர்கள் கணக்கு துவங்கியுள்ளார்கள் …ஒரு நபருக்கு வெறும் சுமாராக ரூபாய் 2500 மட்டும் தான் டெபாசிட் செய்துள்ளார்கள் ….என்று …. !!!

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


  செல்வராஜன்,

  சொல்லுவார்கள்… வேறு காரணம் கிடைக்கா விட்டால், இதை நிச்சயம் சொல்லுவார்கள்.

  ஆனால் இந்த ஜன்தன் -னின் விசேஷமே, இது பஞ்சை பராரிகளுக்காக துவக்கப்படும் கணக்கு என்பது. இதன் முக்கிய அம்சம் ஜீரோ பேலன்ஸ்…

  அதாவது கணக்கை தொடர்ந்து பராமரிக்க – குறைந்த பட்ச தொகை என்று எதுவுமே வைக்கத் தேவியில்லை… அப்படி இருக்கும்போது யார் 2,500 ரூபாய் போட்டு வைக்கப்போகிறார்கள்…அதுவும் வட்டி மிகவும் குறைந்த சேமிப்பு கணக்கில் என்றும் கேள்வி வருமே…

  இதைப்பற்றிய விளக்கங்களையெல்லாம் அரசு வெளியிடும் என்கிற நம்பிக்கை நமக்கு இல்லை….

  நமது அக்கறை – இதையெல்லாம் சாமான்ய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும், உரிய முறையில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே.

  .
  – வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 5. புதியவன் சொல்கிறார்:

  ம்ம்ம்ம் டிமானிடைசேஷன் – என்ன சொல்லியும் பாஜக தப்பிக்க முடியாது. பிரதமர் மோடி நல்ல எண்ணத்தில் இந்த ரிஸ்க் எடுத்தார் என்பதுதான் என் நிலைப்பாடு. ஆனால் அதற்கான ஒரு உதாரணமும் காட்ட முடியலையே. கடைசில உத்திரப் பிரதேச சட்டசபைக்காகவா இத்தனை பெரிய முடிவை எடுத்திருப்பார், அரசுக்கு ஏகப்பட்ட செலவுகளோடு? இப்பவே நிறைய 2000 கள்ள நோட்டுக்கள் இருப்பதாக பத்திரிகைகளில் படிக்கிறேன்.

  மோடி அவர்கள் நல்ல எண்ணத்தில் செய்திருந்தால், ஒருவர் மீதுகூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையே. எடுத்த முடிவினால் ஒரு பிரயோசனமும் இல்லாதிருக்கலாம், அதனால் 6 மாதங்கள் மக்கள் வெகுவாக கஷ்டப்பட்டிருக்கலாம். ஆனால் மாட்டிக்கொண்ட ஒருவர்மீதுகூட நடவடிக்கை கிடையாதா? அப்படி என்றால் மாட்டிக்கொண்டவர்கள் எல்லோரும் பாஜக என்றா அர்த்தம்?

  ஏற்கனவே இந்த அரசு tangible நன்மை எதையும் பொதுமக்களுக்குச் செய்தமாதிரி தெரியவில்லை. பொதுத்தேர்தலின்போது எதிர்கட்சிகள் டிமானிடைசேஷன், அதைத் தொடர்ந்த மோடி அவர்களின் பேச்சுக்கள், அதன் விளைவுகள் இவற்றைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தால் அது மிகப் பெரிய பின்னடைவாக பாஜகவுக்கு இருக்கும். (Even otherwise இந்த ஆட்சியில் ஒரு குற்றவாளியையும் (என்று மக்களுக்கு கடந்த 10 ஆண்டு காங்கிரஸ்/திமுக ஆட்சியில் வெளிப்படையாகத் தெரிந்த) சட்டத்தின் பிடியில் கொண்டுவர முடியவில்லை என்றால், பாஜக அரசு ஊழல் விஷயத்தில் பெரும் தோல்வியுற்ற அரசு என்றுதான் கூறமுடியும்).

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.