இது பெண்களால் தான் முடியும் …..!!!


லஞ்சம், ஊழல் என்று புலம்பிக்கொண்டே இருக்கிறோம்…. எப்படி ஒழியும்… யார் வந்து ஒழிக்கப்போகிறர்கள் என்று எதிர்பார்த்து அந்த அவதார புருஷனுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்….

ஏன்…? எதற்காக எவரோ ஒருவர் வந்து ஒழிக்க வேண்டுமென்று நினைக்க வேண்டும்…? நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொண்டால் – நேர்மையாக எனக்கு கிடைக்கும் வருமானத்தில் தான் நான் வாழ்வேன்… நேர்மையற்ற வழியில் வரும் வசதிகள் எங்களுக்கு தேவை இல்லை என்று நம்மில் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொண்டால்…?

முக்கியமாக நம் வீட்டுப்பெண்கள் நினைத்தால் –
அரசு ஊழியர்களின் குடும்பத்துப் பெண்கள் – நேர்மையற்ற வழியில் வரும் வசதிகள் நமது குடும்பத்திற்கு தேவை இல்லை… அது அவமானகரமானது… அந்த திருட்டுப்பணத்தில் வந்த சுகம் எங்களுக்கு தேவையில்லை….நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தீர்மானித்தால் – அரசு ஊழியர்களிடையே நிலவும் லஞ்ச ஊழல் தன்னால் காணாமல் போய் விடும்…

அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் வீட்டுப் பெண்கள் மனது வைத்தால் நிச்சயமாக அரசு அலுவலகங்களில் லஞ்சம் குறைந்து விடும்.

பள்ளிகளில், வாரம் ஒரு பீரியடாவது நற்பண்புகளை வளர்க்கும் விதத்தில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்…லஞ்சம் வாங்கி சம்பாதிக்கும் பணத்தில் சுகம் அனுபவிப்பது கேவலம் என்று அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்….

தங்கள் பெற்றோர்களிடம் அவர்களது வருமானம் என்ன, தாங்கள் அனுபவிக்கும் வசதிகள் எந்த விதத்தில் வந்தன…? என்பன போன்ற விஷயங்களைப்பற்றி – வீட்டில் விவாதிக்க, பிள்ளைகளை தூண்டி விட வேண்டும்…..நியாயமான வழியில் வசதிகளை பெருக்கிக்கொள்ள, குடும்பத்தில் ஒவ்வொருவரும் எந்த விதத்தில் செயல்பட முடியும் என்று அவர்கள் விவாதிக்க வேண்டும்.
இது பிள்ளைகளிடையே பொறுப்புணர்வையும் வளர்க்கும்….

பொதுவாக – நான் தனியே வெளியில் பயணிக்கும்போதெல்லாம், பஸ்ஸில் தான் செல்வேன். குடும்பத்துடன் சென்றால் –
சுமாரான தூரம் என்றால் ஆட்டோ… தூரம் அதிகம் என்றால் அவர்களும் சேர்ந்து பஸ் பயணம் தான். லிங்க் உள்ள இடங்களுக்கு மெட்ரோ…

என் பேத்தி ஒரு சமயம் என் உடல்நிலையைக் கருதி, நீங்கள் தனியே வெளியில் செல்லும்போது – ஆட்டோ அல்லது காரில் செல்லலாமே தாத்தா என்றாள்… நான் அவளுக்கு விவரமாக எனக்கு மாதம் எவ்வளவு பென்ஷன் வருகிறது… அதை நான் எந்தெந்த விஷயங்களுக்கு… எப்படி பயன்படுத்துகிறேன் என்பதை
விளக்கினேன்…. சரி, அம்மா/அப்பா காரில் நீங்களும் செல்லலாமே என்று கேட்டாள்.

அதற்கும் நான் விவரமாக – நான் சம்பாதிக்கும் பணத்தில் எனக்கு என்ன வசதிகளை உண்டு பண்ணிக்கொள்ள முடியுமோ, அனுபவிக்க முடியுமோ – அதை மட்டும் தான் செய்ய விரும்புவேன். அடுத்தவர் சம்பாத்தியத்தில், வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதை என் மனம் ஏற்கவில்லை என்றேன்.

இப்போதெல்லாம், நான் தனியே பஸ்ஸில் பயணம் போகும்போது,
என் பேத்தி என்னை பெருமையுடன் பார்க்கிறாள்… சில சமயங்களில், அவள் free -யாக இருக்கும்போது, துணைக்கு – கம்பெனிக்கு, நானும் கூட வரட்டுமா தாத்தா என்றும் கேட்கிறாள்….!

விவரமாக எடுத்துச் சொன்னால், அடுத்த தலைமுறை இவற்றையெல்லாம்
புரிந்துகொள்ளும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது…

நாம் ஒவ்வொருவரும் அக்கறை எடுத்துக்கொண்டு முனைந்து ஈடுபட்டால், இல்லத்து பெண்களும், பள்ளி செல்லும் வயதில் இருக்கும் சிறுவர் சிறுமிகளும் இதன் தீவிரத்தை, தன்மானத்தின் அவசியத்தை உணரச் செய்தால் –
அடுத்த தலைமுறையை நிச்சயம் இந்த வியாதியிலிருந்து விடுபடச் செய்து விடலாம்.

இன்றில்லா விட்டாலும் –
நாளை இல்லாவிட்டாலும் –
எதிர்காலத்தில் – நிச்சயம் லஞ்ச ஊழலை நம் சமூகத்திலிருந்து அகற்றி
விடலாம்… எனக்கு நம்பிக்கை இருக்கிறது… நீங்களும் நம்பி, செயல்பட
வேண்டும்… இந்த தலைமுறையை திருத்த முடியாவிட்டாலும், அடுத்த
தலைமுறையாவது சிறப்பாக வாழ வேண்டும்…!!!

———————————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இது பெண்களால் தான் முடியும் …..!!!

 1. Sridhar சொல்கிறார்:

  Dear sir, Great to know the changes you have seeded in your family sir. The tree will definitely bear good fruits.
  🙂

 2. Pingback: இது பெண்களால் தான் முடியும் …..!!! – TamilBlogs

 3. Mani சொல்கிறார்:

  உண்மை. பெண்களிடம் இந்த வைராக்கியம் வந்து விட்டால், நல்ல நல்ல பிள்ளைகளை அவர்கள் நிச்சயம் உருவாக்குவார்கள்.
  சில நாட்களுக்கு முன்னர் ஒரு வீடியோ பார்த்தேன். தொலைக்காட்சிகளிலும்,
  சமூக ஊடகங்களிலும் கூட வலம் வந்தது. தன்னை அடித்து திருத்த முடியும் அன்னையிடம், ஒரு குட்டிக் குழந்தை அழுதுக்கொண்டே சொல்கிறது ” தப்பு தான். ஆனால் அதை அடிக்காமல் சொல்லித் தரணும் “. அங்கே பெற்றோர்களின் ஆர்வம் வெளிப்படுகிறது.

 4. Mani சொல்கிறார்:

  “முடியும்” – பதிலாக “முயலும்” என்று படிக்கவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s