முத்தலாக் – டாக்டர் ராமதாஸ் அவர்களின் யோசனை சிறப்பானது ….


முத்தலாக் பற்றி மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் குறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் வரவேற்கத்தக்க கருத்தினை கூறி இருக்கிறார்…..

அவரது கருத்து வெளிவந்த தமிழ் இந்து நாளிதழின் செய்தியை அப்படியே கீழே தந்திருக்கிறேன்….

————————————————-

முத்தலாக் சட்டம் இஸ்லாமியப் பெண்களின் சிக்கலைத் தீர்க்காது:
ராமதாஸ்
Published : 20 Sep 2018 14:30 IST

—————–

முத்தலாக் முறையைத் தடை செய்ய மத்திய அரசு பிறப்பித்திருக்கும் அவசரச் சட்டம் இஸ்லாமியப் பெண்களின் சிக்கலைத் தீர்க்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இஸ்லாமியப்
பெண்களின் திருமண உறவைப் பாதுகாப்பதற்காக முத்தலாக் முறையைத் தடை செய்யும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது. ஆனால், இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம் மற்றும் கவுரவத்தைப் பாதுகாக்க மத்திய அரசின் அவசரச் சட்டம் எந்த வகையிலும் பயனளிக்காது.

இஸ்லாமியப் பெண்களின் திருமண உரிமைக்கு எதிராக முத்தலாக் முறை அமைந்திருந்தது என்பதில் ஐயமில்லை. அதனால் தான் முத்தலாக் முறையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு ஏற்ற கருவி அல்ல. இது இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரானதாகவே அமையும்.

மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தின்படி முத்தலாக் கூறி இஸ்லாமியப் பெண்களுடனான திருமண உறவை முறித்துக் கொள்வது
தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது.

இது பிணையில் வெளிவரக்கூடிய குற்றம் தான் என்றாலும் கூட,
காவல் நிலையத்தில் பிணை பெற முடியாது; நடுவர் நீதிமன்றத்திற்குச் சென்று தான் பிணை பெற முடியும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த அம்சங்கள் இஸ்லாமிய இணையரிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக பிணக்கைப் பெருக்கி விடும். அவ்வாறு பிணக்கு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் கிடைக்க வழியின்றி போய்விடும். அத்தகைய சூழலில் இஸ்லாமியப் பெண்களின் கண்ணியத்தை எவ்வாறு காக்க முடியும்?

இஸ்லாமியர்களிடையே தலாக் -இ- பாயின் என்ற மணமுறிவு முறை
நடைமுறையில் உள்ளது. அது சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. ஆனால், மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தில் தலாக் -இ- பாயினும் தண்டனைக்குரிய குற்றமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது குடிமை ஒப்பந்தம் என்றும் அத்தகைய ஒப்பந்த மீறலுக்கு சிறைத் தண்டனை விதிப்பது முறையல்ல என்றும் இஸ்லாமியத் தலைவர்கள் கூறுகின்றனர்.

அண்டை நாடான பாகிஸ்தான் உள்ளிட்ட 22 நாடுகளில் முத்தலாக் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த நாட்டிலும் முத்தலாக் என்பது தண்டனைக்குரியக் குற்றமாக அறிவிக்கப்படவில்லை.

அவ்வாறு இருக்கும் போது இந்தியாவில் மட்டும் அதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பது ஏன்?

இஸ்லாமியரின் சமூக, கலாச்சார, பண்பாட்டு நடைமுறைகளை மதிக்கும் வகையில் தான் இந்தியாவில் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளது; இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியமும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் முத்தலாக் தடை தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளிடம் கலந்து பேசி ஒருமித்த கருத்தை உருவாக்கிய பிறகே எந்த ஒரு சட்டத்தையும் மத்திய அரசு
கொண்டு வந்திருக்க வேண்டும். மாறாக மத்திய அரசு தன்னிச்சையாக
பிறப்பித்துள்ள இந்த அவசரச் சட்டம் இஸ்லாமியப் பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக நிலைமையை மேலும்,
மேலும் மோசமாக்கவே வகை செய்யும்.

பாமகவைப் பொறுத்தவரை இஸ்லாமியப் பெண்களின் திருமண உறவை முறிக்கப் பயன்படுத்தப்படும் முத்தலாக் முறை
தடை செய்யப்பட வேண்டும்; அதேநேரத்தில் அது தண்டனைக்கு உரிய குற்றமாக இருக்கக்கூடாது.

மாறாக கைவிடப்படும் இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம்,
கவுரவம், வாழ்வாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் தான் இஸ்லாமியப் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம் வகுக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டத்தை ரத்து செய்து விட்டு, இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்துடன் ஆலோசனை நடத்தி புதிய சட்ட முன்வரைவை உருவாக்கி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”

என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

( https://tamil.thehindu.com/tamilnadu/article24993811.ece )

.
——————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to முத்தலாக் – டாக்டர் ராமதாஸ் அவர்களின் யோசனை சிறப்பானது ….

 1. Pingback: முத்தலாக் – டாக்டர் ராமதாஸ் அவர்களின் யோசனை சிறப்பானது …. – TamilBlogs

 2. sru சொல்கிறார்:

  excellent ayya

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பல சமயங்களில், டாக்டர் ராமதாஸ் அவர்கள் நல்ல முதிர்ச்சியுடன் கருத்துகளைக் கூறுகிறார். ஆட்சியில் இருப்பவர்கள், அவரது ஆலோசனைகளை ஈகோ இன்றி, சரியான பார்வையில் எடுத்துக் கொண்டு செயல்படுவது எல்லாருக்கும் நல்லது.

   -காவிரிமைந்தன்

 3. Ashok.R சொல்கிறார்:

  ராமதாஸை எல்லாம் பாராட்டி பல பதிவு போட்டுள்ளீர்கள்
  எனக்கு ஒரே ஒரு ஐயம் ?
  தாங்கள் வன்னியரா ?

  வன்னியர் அல்லாத ஒருவரால் நிச்சயம் ராமதாஸை பாராட்டி பதிவு போட முடியாது

  Ashok.R
  ஒருங்கிணைப்பாளர்
  திராவிடம் 2.0

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அஷோக்,

   முதலில் இடுகையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ள கருத்தைப்பற்றிய உங்கள் கருத்தை பதிவிடுங்களேன்….
   பிறகு உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • Ram சொல்கிறார்:

   Ashok.R
   ஒருங்கிணைப்பாளர்
   திராவிடம் 2.0

   மானமிகு வீரமணி அவர்கள் இருக்கையிலேயே நீங்கள் திராவிடம் 1.0
   விற்கு மூடு விழா நடத்தி விட்டது எப்படி ? திராவிடம் 2.0 எப்போது,
   எப்படி துவக்கப்பட்டது. அதன் உறுப்பினர், ஒருங்கிணைப்பாளர் எல்லாமே
   நீங்கள் ஒருவர் தானோ ? வீரமணி அய்யாவிடம் சொல்லி விட்டுத்தான்
   செய்தீர்களா ?

  • புதியவன் சொல்கிறார்:

   அசோக் – ராமதாஸ் அவர்களைப் பற்றி ஏகப்பட்ட விமர்சனம் செய்ய முடியும்.

   ஆனால், அரசியல் நிகழ்வுகளில் அவர் உடனுக்குடன் கருத்து சொல்வார். அதில் அர்த்தம் இருக்கும். கருணாநிதியும் இது மாதிரி கருத்துச் சொல்லுவார், ஆனால் அதில் சுயநலமே மிஞ்சும். ஆனால் ராமதாஸ் நிறைய தடவை நல்ல ரியாக்‌ஷன் கொடுப்பார். (மாடல் நிதிநிலை அறிக்கை, அரசியல் சம்பவங்களுக்கான உடன் ரியாக்‌ஷன் என்று நிறைய சொல்லலாம்)

   அவர் எங்க சறுக்குவார்னா, சாதி சார்பாத்தான் எப்போதும் இருப்பார். அதேபோல பல சமயங்களில் வாக்குரீதியான ரியாக்‌ஷன் அவர் கொடுப்பார்.

   அவர் சொல்லற நல்லதைப் பாராட்ட, வன்னியரா இருக்கணும்னு அவசியமில்லையே. காந்தியைப் பாராட்ட பனியாவாகவும், காமராஜரை பாராட்ட நாடாராகவும், கக்கன் அவர்களைப் பாராட்ட தாழ்த்தப்பட்டவராகவும் ஒரே சமயத்தில் இருப்பது எப்படி சாத்தியம் அசோக்?

 4. புதியவன் சொல்கிறார்:

  இந்த ராமதாஸின் விமர்சனத்தை நான் ஏற்கவில்லை.

 5. Ram சொல்கிறார்:

  Mr.Puthiyavan,

  You can also explain WHY YOU DON’T accept Dr.Ramdoss’s suggestions.

  • புதியவன் சொல்கிறார்:

   @ராம் – நீங்கள் கேட்டிருப்பதால் எழுதுகிறேன். இதை வேறு கோணத்தில் நான் அணுகுவதாக எடுத்துக்கொள்ளுங்கள்.
   இந்தியர்கள் அனைவருக்கும் பொது சிவில், கிரிமினல் சட்டங்கள் இருக்கவேண்டும். ஒவ்வொருவர் மதத்தை மதிக்கவேண்டுமே தவிர, சட்டம் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவாகத்தான் இருக்கணும். இட ஒதுக்கீடு என்பது சரி, அது மக்களின் அடர்த்தியைப் பொறுத்த வாய்ப்பு என்றால், நம்மை ஆளுபவர்களும் இட ஒதுக்கீட்டின்படிதான் நியமிக்கப்படவேண்டும். அப்போதுதான் மக்களின் பூரண கருத்துப்படி ஆட்சி நடக்கும் என்றும் வாதிடலாம்.
   எது சரி எது தவறு என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கமுடியாது என்றால், சாதீய அமைப்பு தவறு, அது கூடாது என்று சொல்லும் உரிமையை யார் அரசாங்கத்துக்குக் கொடுத்தார்கள்? அரசாங்கம் என்பது இந்தியர்களின் ரெப்பஸென்டேடிவிஸ் ஆல் ஆனது. பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டால் அது போதுமானது. நாம் விமரிசனம் செய்யலாமே தவிற, சட்டப்படி அரசாங்கம் செய்துள்ளது தவறல்ல.
   ராமதாசின் கருத்துப்படி இஸ்லாமியரின் ஒருமித்த கருத்து வேண்டும் என்றால், இட ஒதுக்கீட்டுக்கு அனைத்துத் தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்து எட்டப்பட்டதா?
   ராமதாசின் இந்தக் கருத்து அவருடைய வாக்கு வங்கி பிரிப்புக்காக (விடுதலைச் சிறுத்தைகள், பொதுவான சிறுபான்மையர் வாக்குகளுக்காக) சொல்லப்பட்டது. அதில் சாரமில்லை.

 6. Ram சொல்கிறார்:

  புதியவன் –

  உங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை. இருந்தாலும் கூட, என் வேண்டுகோளுக்கிணங்கி விளக்கம் தந்ததற்காக நன்றி.

  //சாதீய அமைப்பு தவறு, அது கூடாது என்று சொல்லும் உரிமையை யார் அரசாங்கத்துக்குக் கொடுத்தார்கள்? //

  the Constitution of India.

  //பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டால் அது போதுமானது.//

  இது ஒரு அவசர சட்டம் தான். பாராளுமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற
  அரசாங்கத்தால் முடியவில்லை. இந்த அவசர சட்டம் தேர்தலுக்காக கொண்டு வரப்பட்டது. பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால், காலாவதியாகி விடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.