தேசத் துரோகம் …? ஃப்ரென்ச் ஜனாதிபதி சொல்லும் ரஃபேல் டீல் இல்லையா…? கெட்டிக்காரர் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு…?


நேற்று (வெள்ளிக்கிழமை) ஃப்ரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், ரஃபேல் விமானம் வாங்குவது சம்பந்தமாக மோடிஜி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி கையெழுத்து போட்டவருமான பிராங்சுவா ஹொலாந்த் நேற்று அளித்த பேட்டி,

தேசத்துரோகம் எது என்பதை இந்திய மக்களுக்கு விளக்குகிறது…. காவலர்கள், முதலாளிகளின் ஏவலர்களானது உண்மை என்பதை ஊர்ஜிதப்படுத்தும் மற்றுமொரு ஆதாரம் –

பிரான்ஸ் நாளிதழ்களில் பிராங்சுவா ஹொலாந்த் கூறியதாக வெளியான செய்தியில் –

“அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ்
நிறுவனத்தை போர் விமான உதிரி பாகங்களை
தயாரிக்க டஸால்ட் நிறுவனத்துடன் கூட்டாளியாக்குமாறு
இந்திய அரசு பரிந்துரைத்தது.

எங்களுக்கு வேறு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
எங்களுக்கு அளிக்கப்பட்ட நிறுவனத்தைதானே
நாங்கள் தேர்வு செய்ய முடியும். எனவே,
ரிலையன்ஸ் நிறுவனத்தை விமான தயாரிப்பில்
பங்கேற்க செய்தோம் ” என்று கூறி இருக்கிறார்.

….

இன்றைய தினமணி செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியிலிருந்து ஒரு பகுதி கீழே….

—————————————

ரஃபேல்: இந்தியாவின் பரிந்துரை ரிலையன்ஸ்- பிரான்ஸ் முன்னாள் அதிபர்
By DIN | Published on : 22nd September 2018

ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டாளியாக இருக்க வேண்டும் என இந்திய அரசு பரிந்துரைத்தது என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்த் தெரிவித்துள்ளார்.

36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. எனினும், விமானங்களின் உதிரி பாகங்களை இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்றும், இதற்கான கூட்டாளியை டஸால்ட் நிறுவனமே தேர்வு செய்துகொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ரஃபேல் போர் விமான தயாரிப்பில், பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான்
ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துக்கு பதிலாக தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் டிஃபன்ஸ்’
பலனடைய வேண்டும் என்ற நோக்கில் அந்நிறுவனத்தை டஸால்ட் நிறுவனத்துடன்
கூட்டாளி ஆக்கியது பிரதமர் மோடிதான் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்தின் கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாளிதழ்களில் பிராங்சுவா ஹொலாந்த் கூறியதாக வெளியான செய்தியில், ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்தத் தகவலை நாங்கள் சொல்லவில்லை. அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தை போர் விமான உதிரி பாகங்களை தயாரிக்க டஸால்ட் நிறுவனத்துடன் கூட்டாளியாக்குமாறு இந்திய அரசு பரிந்துரைத்தது. எங்களுக்கு வேறு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எங்களுக்கு அளிக்கப்பட்ட நிறுவனத்தைதானே நாங்கள் தேர்வு செய்ய முடியும். எனவே, ரிலையன்ஸ் நிறுவனத்தை விமான தயாரிப்பில் பங்கேற்க செய்தோம்’ என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:

ரஃபேல் போர் விமான தயாரிப்பில் குறிப்பிட்ட ஒரு இந்திய நிறுவனத்தை டஸால்ட் நிறுவனத்துடன் கூட்டாளியாக சேர்த்துக் கொள்ளுமாறு மத்திய அரசு வற்புறுத்தவில்லை.

இந்த விவகாரத்தில் பிரான்ஸ் அரசும் எந்த நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறவில்லை. இதுதொடர்பாக வெளியான ஊடகச் செய்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று அந்தச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

…..
…..

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறிய கருத்து பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக ஒப்பந்தத்தை திருத்தி அமைத்ததை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஆதாயம் தேடித் தர பிரதமர் மோடி உதவியது
ஹொலாந்தின் பதில் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து
செய்தியாளர்களுக்கு உண்மையை கூறிய ஹொலாந்துக்கு நன்றி. பிரதமர் மோடி
இந்தியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். ராணுவ வீரர்கள் தேசத்துக்காக சிந்தும்
ரத்தத்துக்கும் அவர் அவமரியாதை செய்துவிட்டார் என்றார் ராகுல்.

அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ரஃபேல் போர் விமானம் தயாரிப்பதற்கு ரூ.590 கோடி மதிப்பிடப்பட்டிருந்தது. அந்தத் தொகை 2015-ஆம் ஆண்டில் எவ்வாறு ரூ.1,690 கோடி ஆக அதிகரித்தது என்றும் ஹொலாந்த் விளக்க வேண்டும். இடைப்பட்ட ஆண்டுகளில் ரூ.1,100 கோடி அதிகரித்தது எப்படி?’ என்று அவர் கேள்வி எழுப்பினார்.


( இதில் அவசியம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு பகுதி….)

பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறிய செய்தி
உண்மையாக இருக்கும் பட்சத்தில்
இது மிகத் தீவிரமாக கையாளப்பட வேண்டிய ஒன்று
என்று பாஜக எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்…

( http://www.dinamani.com/india/2018/sep/22 )

.
————————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to தேசத் துரோகம் …? ஃப்ரென்ச் ஜனாதிபதி சொல்லும் ரஃபேல் டீல் இல்லையா…? கெட்டிக்காரர் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு…?

 1. delhipayanam சொல்கிறார்:

  what a shame.why cheat the country like this. Mr.Modi,i trusted you,but your actions are against common man of this country ,ignorant ,innocent,poor people.

 2. அரவிந்தன் சொல்கிறார்:

  இந்திய அரசுக்கு சொந்தமான HAL -க்கு வரவேண்டிய 29,000 ரூபாய் காண்டிராக்டை
  சதிசெய்து பிடுங்கி அம்பானிக்கு கொடுத்தது பச்சை தேச துரோகம்.
  இவர்கள் எத்தனை மூடி மறைக்க முயன்றாலும், உண்மை இப்போது பட்டவெளிச்சமாகி விட்டது. வெட்கங்கெட்ட திருடர்கள். பதவியை விட்டு
  தூக்கி எறியப்பட வேண்டும். இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

 3. Pingback: தேசத் துரோகம் …? ஃப்ரென்ச் ஜனாதிபதி சொல்லும் ரஃபேல் டீல் இல்லையா…? கெட்டிக்காரர் பொய்யும் புர

 4. Mani சொல்கிறார்:

  மறைமுக திருடர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள்,
  மேடையில் நடிக்கும் அரசியல்வாதிகள்,
  முதன்மை சேவகன் என்று சொல்லிக்கொண்டு முதன்மை சுருட்டல்வாதிகளாக இருப்பவர்கள் – என்பதெல்லாம் இவர்களுக்கு மிகச் சாதாரணமான பெயர்கள்.
  இவர்களை என்ன சொல்லி அழைக்க என்று கேட்டு,
  பொதுமக்களிடையே ஒரு போட்டி வைத்து, சிறப்பான தலைப்பிற்கு லட்ச ரூபாய்
  பரிசு கொடுத்து, பின்னர் அந்த சொல்லையே எல்லாரும் பயன்படுத்தலாம்.
  இப்போதைக்கு அவர்கள் “தேச பக்தர்கள்”/ அவர்களை குறை சொல்பவர்கள்
  “தேச துரோகிகள்.”

 5. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! இரண்டு தேசியக்கட்சிகளின் ஆட்சியிலும் காேலாேச்சுகிற அம்பானிகளின் ரகசியம்தான் என்ன ….? சளைக்காமல் அவர்களுக்கு ஏற்றார் பாேலவே ஆளுபவர்கள் நடப்பது எதனால் ..? தனிமனித அடையாளமான ஆதாரை அவர்கள் நாசுக்காக பெற துணை நிற்கும் அளவிற்கு நடந்துக் காெண்ட அரசின் தன்மை …இது கேள்வியாக உருவகம் பெற ஆரம்பித்தவுடன் மற்ற எல்லாவற்றிற்கும் ஆதாரை கட்டாயமாக்கியது எதனால் …? இன்னும் பல கேள்விகள் …. ஹூம் என்று பெ ருமூச்சுதான் விட முடியும் …?

 6. Ram சொல்கிறார்:

  An English portal says –

  // Meanwhile, given the scope of the questions filed by the opposition parliamentarians in India to the Comptroller and Auditor General of India, the Dassault-Ambani controversy is likely to develop much further.

  One of the principal issues they raise is the cancelling by Narendra Modi, who became prime minister in May 2014, of an initial public tender.

  The previous Indian government had opened the way for the purchase of 126 Rafale jets and a working agreement between Dassault Aviation and the Indian state- owned aerospace and defence corporation Hindustan Aeronautics Limited under which 70% or 108 of the aircraft would be built in India.

  But Modi, visiting Hollande in Paris on April 10th 2015, announced the 7.5 billion-euro deal for 36 jets built in France. The Indian opposition says Modi should not have made the announcement before renewing tenders for the supply of fighter aircraft from Dassault’s competitors. Meanwhile, the initial price of the Rafale fighters had risen by 300% from when the very first negotiations began, while the consequences for Hindustan Aeronautics have been catastrophic.

  “There is a serious industrial risk for Dassault because we’re dealing with a company that has never built an aircraft and which has never been involved in defence,” commented a French analyst in defence issues, whose name is withheld.

  The defence arm of the Reliance Group was registered just 12 days before Modi’s announcement in Paris,

  while another of the group’s subsidiaries, Reliance Aerostructure Ltd, was created 14 days after the announcement. In September 2016, //

  Fraud committed on the PEOPLE OF THIS NATION.

 7. புதியவன் சொல்கிறார்:

  இந்த நாட்டில் எல்லா டிரஸ்டுகளும் நாட்டுடமை ஆக்கப்படவேண்டும். கட்சிகளுக்கு நிதி வழங்குவது தடை செய்யப்படவேண்டும். 1 ரூபாய் அளிப்பதென்றாலும் ஆதார் எண் இருக்கிறதே, அதன் மூலமாக அளிக்கட்டும்.

  இதனால்தான் இந்தியாவில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

  இன்றைய செய்தி மிகவும் கலவரப்படுத்துகிற செய்தி. இந்திய மக்களுக்கு ஃபோபர்ஸ், காமன்வெல்த், ரஃபேல், 2ஜி, மாட்டுத்தீவனம், தொலைக்காட்சி, கேபிள் திருடர்கள் இவர்கள்தான் தலைவர்கள்.

 8. venkat சொல்கிறார்:

  take the country to the stone age. KM sir will lead all of you in this journey

  • புதியவன் சொல்கிறார்:

   நீங்க ஸ்டோன் ஏஜ் என்று சொல்வது காமராசர் முதலமைச்சராக இருந்தாரே அந்தக் காலத்தையா இல்லை மொரார்ஜி பிரதமராக இருந்தாரே அவர் காலத்தையா? அவர்கள் ஊழல் செய்யவில்லை என்பதற்காக அவர்களை கற்காலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லலாமா? இது நியாயமா வெங்கட் அவர்களே…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.