பாஜக அரசின் “தனிப் பெருங்கருணை ” ….


திரு.அருண் ஜெட்லி, மிக மிக புத்திசாலியான ஒரு அரசியல்வாதி…
சுப்ரீம் கோர்ட்டில் தொழில் புரியக்கூடிய ஒரு புகழ் பெற்ற,
சீனியர் லாயர்..

பொருளாதார நிபுணர் (என்று நினைக்கப்படுபவர்….)
நீண்ட காலம் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த அனுபவம் கொண்டவர்….மக்களின் துன்பம் அறிந்தவர் (என்று நினைக்கப்படுபவர்……)

அவரே மத்திய அரசில், நிதியமைச்சராக இருக்கும்போது எடுக்கும் முடிவுகள் எப்படிப்பட்டவையாக இருக்கும்…?

எப்படி இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்…?
மக்களுக்கு நன்மை பயக்கக்கூடியதாக, அவர்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறையை சுலபமாக்கக் கூடியதாக – அவர்களின் மீது கருணை காட்டுவதாக இருக்குமென்று எதிர்பார்ப்பது சகஜம் தானே…?

அவரும், இரண்டு நாட்களுக்கு முன் இந்த நாட்டு நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் மீது “பெருங்கருணை” கொண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்….

பெட்ரோல், டீசல் இரண்டின் மீதான கலால் வரியை குறைப்பதன் மூலம் மத்திய அரசு லிட்டருக்கு இரண்டரை ரூபாய் மக்களுக்கு சலுகை வழங்குவதாக….

இந்த அறிவிப்பே முழு உண்மை அல்ல.
உண்மையில், மத்திய அரசு கலால் வரியில்
ஒன்றரை ரூபாய் மட்டும் தான்
குறைத்திருக்கிறது.

மீதி ஒரு ரூபாயை ஆயில் கம்பெனிகள்
தங்கள் விலையில் அட்ஜஸ்ட் செய்து
ஒரு ரூபாய் குறைத்து –

மொத்தமாக இரண்டரை ரூபாய் குறைப்பு என்று
அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலையைப் பொருத்த வரையில், மக்கள் நேரடியாக அதன் விளைவுகளை அனுபவிப்பவர்கள், அவர்களுக்கு அது சுலபமாக புரியும் என்பதால் – நான் விவரமாக குறைகளுக்குள் போக விரும்பவில்லை…

சில புள்ளி விவரங்களை மட்டும் இங்கு தர விரும்புகிறேன்…

சர்வதேச மார்க்கெட்டில் –

1) 2014-ல் ஒரு பேரல் கச்சா எண்ணையின்
இந்திய ரூபாயிலான மதிப்பு – 6,318 ரூபாய்…

2) இன்று, 2018-ல் இதே ஒரு பேரல் கச்சா எண்ணையின்
இந்திய ரூபாயிலான மதிப்பு – 5217 ரூபாய் மட்டுமே.

(இடையில் சில சமயம் இதைவிட படுபாதாளத்திற்கும்
சர்வ தேச சந்தையில் விலை குறைந்தது )

3) ஆக, 2014-ஐ விட இன்று 2018-லும் கூட சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணையின்
விலை 1,111 ரூபாய் – குறைவு…
(குறைவு…குறைவு…. குறைவு….)

ஆனால், இந்த இந்த விலை குறைவின் லாபம்
பொது மக்களுக்கு போய்ச்சேரவில்லை …

இடையில் புகுந்து பாஜக அரசு பிடுங்கிக்கொண்டு போய் விட்டது…

4) கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் குறைந்தபோது,
அந்த விலைக்குறைவை, மத்திய பாஜக அரசு, எக்ஸைஸ் வரியை
உயர்த்துவன் மூலம், தன் வசம் இழுத்துக் கொண்டு போய் விட்டது.

5) 2014-க்கும் 2018-க்கும் இடையே உள்ள காலகட்டத்தில்
பாஜக அரசு மொத்தம் ஒன்பது ( 9 ) முறை எக்சைஸ் வரியை
உயர்த்தியது….

இந்த இடைப்பட்ட காலத்தில் –
பெட்ரோல் விலை மீது எக்சைஸ் வரி லிட்டருக்கு 11.77 ரூபாயும்
டீசல் மீது லிட்டருக்கு 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டது.

நியாயமாக மக்களுக்கு போய்ச் சேர வேண்டிய சர்வதேச
விலைக்குறைப்பின் பயனை அரசு பிடுங்கிக்கொண்டது…

ஆனால், சர்வதேச சந்தையில் விலை மீண்டும் உயரத்துவங்கியபோது, அந்த விலைஉயர்வு மீண்டும் மக்களின் தலையிலேயே சுமத்தப்பட்டது.
( தினசரி விலை அட்ஜஸ்ட்மெண்ட் என்கிற புதிய ஏமாற்றுத் திட்டத்தின் மூலம்….)

ஒன்பது முறை உயர்த்தப்பட்ட எக்ஸைஸ் வரி,
இது வரை, ஒரே ஒரு முறை மட்டுமே (2017 அக்டோபரில்) பெட்ரோல், டீசலுக்கான எக்சைஸ் வரி லிட்டருக்கு 2 ரூபாய் என்கிற அளவில் குறைக்கப்பட்டது.

அடுத்தபடியாக இப்போது ….
ஒன்றரை ரூபாய் நேரடியாக மத்திய அரசின் கலால் வரியிலும்,

( பிறகு மக்களுக்கு தெரியாமலே, மறைமுக daily price -ல் அட்ஜஸ்ட்
செய்துகொள்ள வசதியாக )

ஒரு ரூபாய் எண்ணைக் கம்பெனிகளின்
மூலமும்….

இந்த நாட்டு மக்கள் அப்பாவிகள்… ஆனால் நன்றியுணர்வு மிக்கவர்கள்.
தங்கள் மீது “தனிப்பெருங்கருணை”யை காட்டும் பாஜக அரசுக்கு
மக்கள் நிச்சயம் தங்கள் நன்றியறிதலை, தெரிவித்துக் கொள்வார்கள்.
(அதற்கான, உரிய நேரம் வரும்போது )

.
——————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to பாஜக அரசின் “தனிப் பெருங்கருணை ” ….

 1. அரவிந்தன் சொல்கிறார்:

  // அடுத்தபடியாக இப்போது ….
  ஒன்றரை ரூபாய் நேரடியாக மத்திய அரசின் கலால் வரியிலும்,

  ( பிறகு மக்களுக்கு தெரியாமலே, மறைமுக daily price -ல் அட்ஜஸ்ட்
  செய்துகொள்ள வசதியாக )

  ஒரு ரூபாய் எண்ணைக் கம்பெனிகளின்
  மூலமும்….//

  இந்த விஷயம் பேப்பர்களில் வந்ததாக தெரியவில்லையே சார் ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.