அரேபிய ஷேக் குழுவினர் + விட்டல்தாஸ் மஹராஜ் – ஆச்சரியம்+மகிழ்வு ….!!!


அரேபிய ஷேக் குழுவினர் “ஹரிநாராயண” என்று பாடுவதும்,
விட்டல்தாஸ் மஹராஜ் குழுவினர் புகழ்பெற்ற
நாகூர் ஹனிஃபா அவர்களின் ” இறைவனிடம் கேட்டுப் பாருங்கள் ”
பாடலை இசைப்பதும் –

ஆச்சரியமும் மகிழ்வும் ஒருசேர உருவாக்கும் நிகழ்ச்சிகள்…!!!

எம்மதமும் சம்மதமே என்று
எவ்வளவு தான் நாம் –
எழுதிக் கொண்டிருந்தாலும்,
பேசிக் கொண்டிருந்தாலும்,
நடைமுறையில் இத்தகைய நிகழ்ச்சிகளை காணும்போது
ஏற்படும் மகிழ்ச்சி … விவரிக்க இயலாதது….!

நாம் அனைவரும் வணங்கும் இறைவன் ஒருவரே –
என்ன பெயரிட்டு,
எந்த மொழியில்,
எப்படி அழைத்தாலும் –
அது அவரைச் சென்று சேரும் என்பதை
அனைவரும் உணர்ந்து கொண்டால் –
பெரும்பாலான பிரச்சினைகள் உருவாவதற்கே
வாய்ப்பு இருக்காது….எங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.

இத்தகைய மனப்பாங்கு மேலும் மேலும் அனைவரிடமும்
வர வேண்டும் என்று மனதார விரும்புவோம்.


————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அரேபிய ஷேக் குழுவினர் + விட்டல்தாஸ் மஹராஜ் – ஆச்சரியம்+மகிழ்வு ….!!!

 1. அரவிந்தன் சொல்கிறார்:

  A very good selection.
  I have also seen personally at Puttaparthi, all religions get equal importance.
  People from all religions attend the Prayers.
  As you say there can be only ONE God and any name suits him.
  Nice Article.

 2. Mani சொல்கிறார்:

  யார் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை எல்லாம் பார்க்கணுமோ, அவங்க இதையெல்லாம்
  பார்க்க மாட்டாங்க சார். அவங்க ஜாதி வெறி, மதவெறியேத்தற விஷயங்களை மட்டும் தான் பார்ப்பாங்க. துரத்தி துரத்தி வாட்சப்புல பகிர்ந்துப்பாங்க.
  இங்க ஜனங்களை மாத்தறது ரொம்ப கஷ்டம் சார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.