டாக்டர் சு.சுவாமியின் திருவிளையாடல்கள் – ஊழல் விஷயத்தை ஏன் திசை திருப்புகிறார்….?நேற்று முன்தினம் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது தமிழக ஆளுநர் – பரபரப்பான ஒரு விஷயத்தைப்பற்றி பேசினார்….

தமிழக பல்கலைக்கழகங்களில் “துணைவேந்தர்களின் நியமனத்”தில்
கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியது பற்றி வருத்தமும் வேதனையும்
தெரிவித்திருந்தார்.

ஆளுநர் அந்த நிகழ்ச்சியில் பேசியதாக, உடனடியாக செய்தி ஊடகங்களில் வெளிவந்த செய்தி வருமாறு –
( இது அதிகாரபூர்வமான செய்தி அறிக்கை ராஜ்பவனிலிருந்து
கிடைக்கும் முன்னரே, விழாவில் நேரடியாக கலந்துகொண்ட
செய்தியாளர்களால் வெளியிடப்பட்டது…)

“I became sad after coming to Tamil Nadu because I heard that crores had changed hands in the appointment of vice-chancellors. What I heard was that the posts of vice-chancellors were being given to the highest bidders. I could not believe that. Then I decided things have to be changed,” said Purohit.

The Governor said since assuming charge of Raj Bhavan in Chennai, he has appointed nine vice-chancellors till date. “All were appointed purely on merit.
Nobody has found any faults in these appointments,” said the Governor.

வழக்கமாக ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் அவர் பேசியது, அவரது ராஜ்பவன் உதவியாளர்களால் – அதிகாரபூர்வமாக செய்தி அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, மீடியாக்களுக்கு அனுப்பப்படும். அதே போல், மேற்கண்ட விழா உரையும் அவரது பேச்சுக்கு பிறகு அனுப்பப்பட்டிருக்கிறது.

ஆனால், அந்த அறிக்கையில் –
மேற்கண்ட நிகழ்ச்சியில் ஆளுநர், ‘துணைவேந்தர்களின் நியமனத்தில் நிலவும் லஞ்ச ஊழல்’ பற்றி பேசியது பற்றி ஒன்றுமே கூறப்படவில்லையாம்… அந்த பகுதி முழுவதுமாக விடுபட்டிருக்கிறதாம்…!

டாக்டர் சு.சுவாமி தனது ட்விட்டர் மூலம் கேட்கிறார்…

// Is Tamil Nadu Governor a prisoner of
Raj Bhavan staff? Are speeches being censored? //

நமக்கு வேறு மாதிரி சந்தேகம் வருகிறது…
ஆளுநர் உரையை வேறு யாராவது தணிக்கை செய்வது
என்பது நடக்கக்கூடிய காரியமா என்ன…?

ஆளுநர் உரையை அதிகாரபூர்வமாக மீடியாக்களுக்கு அனுப்பும் முன்னர், அவரிடம் காட்டி, ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்கிற நியதி ராஜ்பவனில் இல்லாமலா இருக்கும்……?

அப்படி ஒரு நியதி இல்லையென்றால்… அது யார் தவறு…?

அப்படி ஒரு நியதி இருந்தால், இந்த பகுதி விடுபட்டுப் போனதற்கு
யார் பொறுப்பு…?

ஒருவேளை மீடியாக்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில்
அந்த வாசகங்கள் இடம் பெறாததற்கு, ஆளுநரே (உரைக்கு பிற்பாடு) எடுத்த வேறு முடிவுகள் எதாவது காரணமாக இருக்குமா…?

திரு.சு.சுவாமி ஏன் வேண்டுமென்றே தவறான கோணத்தில்
கேள்வி எழுப்புகிறார்…?

சில காரணங்கள் இருப்பதாக சந்தேகங்கள் எழுகின்றன –

தமிழகத்தில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் அரசு நிர்வாகத்தின் கீழ்
வருகின்றன…. இவை அனைத்திற்கும், ஆளுநர் தான் வேந்தராக செயல்படுகிறார். இவற்றிற்கான துணைவேந்தர்களை நியமிக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க ஆளுநருக்கானது.

( வெளிப்படையான சட்ட விதிகளின்படி, இதில் ஆளும் கட்சிக்கோ, தமிழக அமைச்சர்களுக்கோ எந்தவித சம்பந்தமும் கிடையாது….ஆனால், நடைமுறை வழக்கப்படி, இதில் ஆளும் கட்சியின் விருப்பம் தான் செல்லுபடியாகிக் கொண்டிருந்தது…..துணைவேந்தர்கள் நியமனத்தில், முந்தைய ஆளுநர்கள் அனைவரும் ஆளும் கட்சியுடன் நெருங்கி, இணைந்து செயல்பட்டனர்… )

தற்போதைய ஆளுநர் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு நடைபெற்ற
9 துணைவேந்தர்களின் நியமனம் நேர்மையான முறையில் நடைபெறுவதை நான் உறுதி செய்திருக்கிறேன் என்று அவர் கூறி இருக்கிறார். அப்படியானால், ஏற்கெனவே, அவரது வருகைக்கு முன் நடைபெற்ற நியமனங்களில் ஊழல் இருந்திருக்கிறது என்பது மறைமுகமாக சொல்லப்படும் ஒரு செய்தி.

துணைவேந்தர்கள் நியமனம் சம்பந்தப்பட்ட கோப்புகள் அனைத்தும்,
ஆளுநர் மாளிகையில், அவரது அலுவலகத்தில் தான் இருக்கும்;
இந்த ஆளுநர் வருகைக்கு முந்தைய நியமனங்கள் குறித்த கோப்புகளும்
தற்போது அவரது கண்காணிப்பில் (custody) தான் இருக்கும்.

தனது வருகைக்கு முன்னதாக நடந்த ஊழல்கள் பற்றி பொது நிகழ்ச்சியில், அவர் கூறியதை, விவரமான ஒரு விசாரணை நடத்தி,

அவரே வெளிக்கொண்டுவர உத்திரவிடலாம். இது அவரது அதிகார வரம்பிற்கு உட்பட்டது தானே…?

ஊழல் நடைபெற்றிருக்கிறது என்று சொல்லும்போது,அதை வெளிக்கொண்டு வர வாய்ப்பும், அதிகாரமும் இருக்கும்போது – அதை பயன்படுத்திக் கொள்வது தானே முறையாக இருக்கும்…?

டாக்டர் சு.சுவாமி, ஆளுநர் முறையான விசாரணை நடத்தி, துணைவேந்தர்கள் நியமனத்தில் இதுவரை நடைபெற்றுள்ள ஊழல்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது தானே நியாயமானதாக, சரியானதாக இருக்கும்…?

அதைவிடுத்து, விஷயத்தை திசைதிருப்புவது,
இதற்கு முன்னால் ராஜ்பவனை அலங்கரித்த
தனது நெருங்கிய நண்பரை திரைபோட்டு
மறைக்கும் முயற்சியா…?

தமிழக ஆளுநர், தனது வருகைக்கு முன்பாக நிகழ்ந்த துணைவேந்தர்கள்
நியமனம் பற்றிய கோப்புகள் அனைத்தையும் ஒருமுறை ஆழமாக பார்வையிட்டு,

ஊழல்கள் நடைபெற்றிருந்தால், யார், எந்த கட்சி சம்பந்தப்பட்டிருந்தாலும்,
அதை பொருட்படுத்தாமல் – அவற்றை வெளிப்படுத்த ஆவன செய்ய
வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக கேட்டுக்கொள்வோம்.

.
—————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to டாக்டர் சு.சுவாமியின் திருவிளையாடல்கள் – ஊழல் விஷயத்தை ஏன் திசை திருப்புகிறார்….?

 1. Mani சொல்கிறார்:

  ……..Rao ?

 2. அரவிந்தன் சொல்கிறார்:

  துணை வேந்தர்கள் நியமனத்தில் பல ஆண்டுகளாக, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
  கோடிகள் கைமாறிய விவகாரம் பேசப்பட்டுக் கொண்டே தான் வந்தது. இதில் இதுவரை உண்மையை கண்டறியவோ, நடவடிக்கை எடுக்கவோ யாரும் முற்படவில்லை. காரணம் அந்தந்த சமயத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளே.
  கவர்னர் உண்மையிலேயே ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று
  நினைத்தால், பழைய நியமனங்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளை தானே நேரடியாக
  பரிசீலித்து, சந்தேகம் எழும் நியமனங்களில் எல்லாம் விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.
  ஊழல் ஊழல் என்று சொல்லிக்கொண்டிருந்தால் பத்தாது. அதிகாரத்தை கையில்
  வைத்துக் கொண்டிருக்கும் கவர்னர் உடனடியாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.