வெட்கங்கெட்ட மந்திரிகள் ….


ஏற்கெனவே மத்திய கேபினட் அமைச்சர் ஒருவர்
( மோடிஜியின் விவசாய அமைச்சர் ராதாமோகன் சிங்….! )
சென்ற வருடம் “கையும்” களவுமாக
பிடிபட்டார்…. செய்தி ஏஜென்சிகளுக்கு
பெருத்த விளம்பரம் கிடைத்தது….


அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இன்னொரு ராஜஸ்தான் கேபினட் அமைச்சர்
( இவர் ராஜஸ்தானின் சுகாதார அமைச்சர் …!!! டாக்டருக்கு படித்தவர் – காளிசரண் சரஃப் ) சூட்-கோட் போட்டுக்கொண்டே இத்தகைய காரியத்தைச் செய்து விளம்பரம் பெற்றார்….

தற்போது, நேற்று மோடிஜி தேர்தல் பிரச்சாரம் நடத்திய ராஜஸ்தானில், முதலமைச்சர் திருமதி வசுந்தரா ராஜே அவர்களின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மந்திரி ஒருவர் ( சம்புசிங் கடேசர் ) கொடுத்த போஸ் இது….

அருகிலேயே ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில் இருக்கும்
மோடிஜியின் படம் கூட – அவரை உறுத்தவில்லை….

இந்த வெட்கங்கெட்ட மனிதரிடம், “ஸ்வச்ச பாரத்” விளம்பரத்திற்காக கோடி கோடியாக விளம்பரம் செய்யும் அரசின் அங்கமாகிய அமைச்சராகிய நீங்களே இப்படிச் செய்யலாமா என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் –

“கண்ணுக்கெட்டிய” தூரம் வரை டாய்லெட் எதுவும் தென்படவில்லை.
அதற்காக இயற்கையை அடக்க முடியுமா…? ”

( ஸ்வச்ச பாரத் காலத்தில் – கண்ணுக்கெட்டிய தூரம் வரை டாய்லெட் தென்படவில்லை….!!! )

கடைசியாக கிளம்பிய இடத்தில் இந்த காரியத்தை முடித்திருக்கலாம். அல்லது பக்கத்தில் டாய்லெட் எங்கே இருக்கிறது என்று கேட்டு தெரிந்துகொண்டு அங்கே போயிருக்கலாம்… அமைச்சரிடம் இல்லாத வாகனமா…? இரண்டையும் செய்யவில்லை… சுகமாக, சுலபமாக – நடுவழியில் “உட்கார்ந்து” விட்டார்….

“அலட்சியம்” – தானே காரணம்…..?
“உபதேசம் எல்லாம் ஊருக்குத்தான்… நமக்கல்ல”
என்கிற நினைப்பு தானே காரணம்…?

இந்த வெட்கங்கெட்ட மந்திரிகளை இன்னமும் தொடர்ந்து கூடவே
வைத்துக்கொண்டு, மோடிஜி ஊருக்கு உபதேசம் செய்வதில் அர்த்தம் எதாவது இருக்கிறதா ..?

முதலில் இவர்களை துரத்த வேண்டாமா…?

.
——————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to வெட்கங்கெட்ட மந்திரிகள் ….

 1. Selvarajan சொல்கிறார்:

  ஆமா .. ஏன் அந்த போஸ்டர் மட்டும் நேரா இல்லாமல் இப்படி கிடக்கு … போஸ்டருக்கே வெட்கமாகி போச்சா …?

 2. அரவிந்தன் சொல்கிறார்:

  இந்த வடக்கத்திய மாநிலங்களோடு ஒப்பிடும்போது தான் தமிழகம்
  எத்தன ஒசத்தி என்பது பலருக்கும் புரியும்.

 3. தமிழன் சொல்கிறார்:

  Apart from these wrong doings or not setting proper example, பல சமயங்களில் அவசரத்தில் ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு புறப்பட பலர் மறந்துவிடுகின்றனர். டயபடீஸ் ஆக இருந்தாலோ இல்லை தேவைக்கு அதிகமான தண்ணீர் குடித்துவிட்டுக் கிளம்பியிருந்தாலோ, அல்லது பேச்சு வாக்கில் மறந்திருந்திருந்தாலோ, நெடும் பயணத்தில் இத்தகைய அவசரங்கள், இடம் பொருள் ஏவல் பார்க்க அனுமதிப்பதில்லை. இடத்தைவிட்டுக் கிளம்பும்போது நிச்சயம் டாய்லெட் வேலைகளை முடித்துவிட்டுத்தான் கிளம்பவேண்டும். இந்த லட்சணத்தில் ஒரு டாக்டர் வேறு…… இந்தியா இந்த லட்சணத்தில்தான் இன்னும் இருக்கு….

  (கல்ஃபில் பொது டாய்லட் வசதிகள் ஓரளவு இருக்கின்றன. மால்கள் எல்லாவற்றிலும் மிக அதிகமான வசதிகள் இருக்கின்றன. பிலிப்பைன்ஸில், பெட்ரோல் பங்குகள் எல்லாவற்றிலும் டாய்லெட் வசதி இருக்கிறது-சுமாராக இருந்தாலும். நான் பாரிசில், தெருவுக்கு ஒரு பொது டாய்லட் வசதி-அதிலும் 4-5 சேர்ந்து இருக்கும், இருந்தபோதிலும், ரோடில் சிறுநீர் கழித்தவரைப் பார்த்தேன். புகைப்படம் எடுக்க மறந்துட்டேன்..ஹாஹா. இந்தியர்கள், குறிப்பாக வட நாட்டவர்கள், லண்டன் கவுண்டிகளில், தெருக்களில் புகையிலைச் சாற்றைத் துப்புவது சர்வ சாதாரணம். நான் ஈஸ்ட் ஹேமில் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டில், இவர் அவர் என்று சொல்லவே வேண்டாம், எல்லோரும் சர்வ சாதாரணமாக ரோட்டின் ஓரத்தில் பைப்பைத் திறந்துவிடுகிறார்கள்-போலீஸ், பெரிய மனிதர்கள் உள்பட ஹாஹா)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.