மத்திய BJP மந்திரி – “எங்க பேச்சை நாங்களே நம்பலையே – நீங்க ஏன் நம்பினீங்க… ” …???

பிரபல ஹிந்தி நடிகர் நானா படேகருடன்,
மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரி –
உரையாடும் காட்சி ஒன்று கலர்ஸ்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருக்கிறது…. இருவரும் மராத்தியர்கள்… எனவே மராத்தி மொழியில் உரையாடுகிறார்கள்…

உரையாடலின் நடுவே கட்கரிஜி சொல்கிறார் –

// We were very confident that we can
never come to the power. So our people
suggested us just to make tall promises.
Now people remind us of our promises…
Now we just laugh and move on” //

(2014 பாராளுமன்ற தேர்தலில் ) நாங்கள் நிச்சயமாக ஆட்சிக்கு வர முடியாது என்று தான் நினைத்தோம்… எனவே கன்னாபின்னாவென்று (நிறைவேற்றவே முடியாத) பெரிய பெரிய வாக்குறுதிகளை கொடுத்தோம்…. ஆட்சிக்கு வந்தால் தானே நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்…?

ஆனால், எதிர்பாராதவிதமாக நாங்கள் ஜெயித்து, ஆட்சியையும் பிடித்து விட்டோம். இப்போது மக்கள் எங்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை சொல்லி, இன்னின்ன தேதியில் இந்த இந்த வாக்குறுதியை கொடுத்தீர்களே என்று நினைவுபடுத்துகிறார்கள்…

– நாங்கள் என்ன செய்யமுடியும்….? சிரித்துக் கொண்டே நழுவிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறோம்….

( https://www.nationalheraldindia.com/politics/watch-modi-government-was-built-on-false-promises-says-union-minister-nitin-gadkari )

….

மக்களை தாங்கள் முட்டாள்களாக்கிய விஷயத்தை
இவ்வளவு சகஜமாக – ஏளனமாக
சிரித்துக் கொண்டே சொல்வது கோபத்தை தந்தாலும் –

ஒருவிதத்தில், அப்பட்டமாக உண்மையை ஒப்புக்கொண்டதற்காக நிதின் கட்கரிஜியை பாராட்டவே வேண்டும்.

கண்களை மூடிக்கொண்டு ” பாஜக பஜனை ” செய்யும் பக்தர்கள் இப்போதாவது, நிதரிசனத்தை தரிசனம் செய்வார்கள் என்று நம்புவோமாக.

.
————————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to மத்திய BJP மந்திரி – “எங்க பேச்சை நாங்களே நம்பலையே – நீங்க ஏன் நம்பினீங்க… ” …???

 1. moththumess சொல்கிறார்:

  bjp’la modi’kku aappu ready panraanga ..athukku inthaal thaan capable..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நண்பரே,

   நீங்கள் உங்கள் கருத்தை சொல்லும்போது, இன்னும் கொஞ்சம் நாகரிகமான வார்த்தைகளை
   பயன்படுத்துவது அவசியம்.

   இல்லையேல், உங்கள் பின்னூட்டங்கள் இங்கே இடம் பெறாது என்பதை அறியவும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Sir, the above friend is a little bit over zealous.Don’t be angry. Cool,

 3. அரவிந்தன் சொல்கிறார்:

  உங்கள் இடுகையையே இன்றைய தலைப்புச் செய்தியாக எடுத்துக் கொண்டிருக்கிறது பிபிசி தமிழ் :

  ” நிதின் கட்கரி: ‘ஏமாற்றியதற்காக திட்டுவதா, உண்மையை சொன்னதற்காக பாராட்டுவதா?’ “

 4. Bose சொல்கிறார்:

  Hi Sir,
  Please check this article too…
  http://www.nisaptham.com/2018/10/blog-post_10.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   Bose,

   படித்தேன். இதற்கு முன் மந்திரி உளறியதையும் படித்தேன்.

   பொதுமக்களிடம் கருத்து கேட்பதனால், திட்டங்கள் தாமதப்படுகின்றன, அதனால் செலவினங்கள் அதிகரிக்கின்றன என்பது உண்மையானால், நடைமுறையை வேறுமாதிரி மாற்றி விடலாமே…

   டெண்டர் விட்ட பிறகு – கருத்து கேட்பதை விட்டு விட்டு –
   பொதுமக்களிடம் கருத்து கேட்பதை முதலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
   பிரச்சினை இல்லை என்று தெரிந்த பிறகு, அல்லது அவர்கள் கூறும் பிரச்சினைகளை முடித்து வைத்த பிறகு,
   டெண்டர் கோருவது என்று நடைமுறையை மாற்றி விடலாமே…?

   அமைச்சர் ஆலோசனையை துவக்கத்திலேயே முடக்குவது நல்லது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. Mercy சொல்கிறார்:

  KM Sir please read this soon. Sometimes they remove news like this very quickly.
  https://tamil.oneindia.com/news/tamilnadu/the-washington-post-writes-article-on-nakkheeran-gopal-arrest-331746.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   படித்தேன். நன்றி மெர்சி.
   தமிழ்நாட்டில் சில நீதிபதிகள் பாராட்டத்தக்க வகையில் – மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
   இது அடிக்கடி தீர்ப்புகளில் தெரிய வருகிறது.

   அந்த அளவில் திருப்தி பெறுவோம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.