என்னதான் ஏஸி, குஷன் சீட், DOLBY சவுண்ட் multiplex என்றாலும் கூட…..


ஆயிரம் தான் சொல்லுங்களேன் –
என்னதான் ஏஸி, குஷன் சீட்,
அல்ட்ரா சவுண்ட் multiplex என்றாலும் கூட…..

விரும்பிய நண்பர்களுடன் –
மணலை இஷ்டம் போல் குவித்து வைத்துக்கொண்டு,
கால்களை நீட்டி அமர்ந்து கொண்டும்,
வசதியாக முழங்கைகளை தலைக்கு மடித்து வைத்து –
படுத்துக் கொண்டும் –
சமயத்தில் எழுந்து பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டும் –
அரட்டை அடித்துக்கொண்டும் –
சத்தம் போட்டு கலாட்டா செய்துகொண்டும் –

கடலை மிட்டாய்,
தேங்காய் பர்ஃபி,
முறுக்கு,
தட்டை – கொறித்துக் கொண்டும் –

குறைந்த பட்சம் 2 இண்டர்வெல்….
இடைவேளையில் சப்தமாக ஸ்பீக்கரில் பாட்டு சத்தம்
கேட்டுக்கொண்டும்…..

இந்த மாதிரி நம்ம ஊர் டூரிங் தியேட்டரில்
சினிமா பார்த்த சந்தோஷம் வருமா… 🙂 🙂 🙂

பின் குறிப்பு –

இன்றைக்கு 46 வருடங்களுக்கு முன்பு,

1972-ல் – இந்தியாவிலேயே பெரிய –
ஒரே சமயத்தில் சுமார் 10,000 பேர் அமர்ந்து சினிமா பார்க்கக்கூடிய
ஒரு திறந்தவெளி திரையரங்கத்தை –

ஒரு சமூக சேவையாக, வடிவமைத்து, உருவாக்கி,
– நிர்வகித்த சந்தோஷமும், பெருமையும்
எனக்கு உண்டு என்றால் நம்புவீர்களா…?

முழுக்கதையையும் சொல்ல வேண்டுமானால்,
அத்தனையையும் மீண்டும் மனதில் கொண்டு வந்து,
அனுபவித்து, விஸ்தாரமாகச் சொல்ல வேண்டும்….
அதற்கான நேரம் – எப்போதாவது வரும்…
அப்போது சொல்கிறேன்…!!!

.
——————————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to என்னதான் ஏஸி, குஷன் சீட், DOLBY சவுண்ட் multiplex என்றாலும் கூட…..

  1. kausikan1967 சொல்கிறார்:

    Yes, In many occasions he boosting himself with comparing KAVIARASU KANNADASAN !!!!

  2. Surya சொல்கிறார்:

    அந்த அனுபவத்தை நீங்கள் எழுதும் காலத்திற்காகக் காத்திருக்கின்றேன். நீண்ட நேரம் காக்க வைக்காதீர்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.