ரஃபேலுக்கு நெருக்கமானவர்கள்…. தொடரும் பொய்கள்… விதிமீறல்கள்.. மறுப்புகள்…


ரஃபேல் என்கிற பெயரைத் தொட்டாலே –
பொய்யும், புரட்டும், சட்டமீறலும் ஒட்டிக் கொள்ளும் போலிருக்கிறது.

(இந்த புகைப்படத்தில் இருப்பது நாக்பூர் அருகே புதிய தொழிற்சாலைக்கான துவக்க விழாவில் கலந்து கொண்டவர்கள்..)

(அ வ் வ ள வு நெ ரு க் க மா க் கு ம் …!!!  – புகைப்படத்தில் பார்ப்பது – சின்ன அம்பானியின் ஒரு கரம் மஹாராஷ்டிர முதலமைச்சர் பட்னவிஸ் அவர்களின் தோள்களின் மீது,  இன்னொரு கரம் மத்திய அமைச்சர் கட்கரிஜி அவர்களின் தோள்களின்  மீது….அந்த அளவு நெருங்கிய சிநேகிதம்…. பணம் பணம் பணம் –  பணம் இருந்தால் யாருடைய தோள்களிலும் கை போடலாம்…!!! )

———————————————————–

நேற்றிரவு வெளிவந்த செய்தி பலருக்கும் தெரிந்திருக்கும்…

இந்திய அரசின் சொல்படி அம்பானி கம்பெனியுடன் பார்ட்னராகச்
சேர்ந்தால் மட்டுமே அவர்கள் விமான காண்டிராக்டை உறுதி
செய்வார்கள்…. எனவே, நாம் அம்பானி கம்பெனியுடனான உறவை
உறுதியாக செயல்படுத்தியே ஆக வேண்டும் என்று ரஃபேல் விமானத்தை தயாரிக்கும் ஃப்ரென்ச் நிறுவனமான டசால்ட், தனது
ஊழியர்கள், அதிகாரிகளிடையே நடந்த ஒரு உள்ளரங்கில் பேசி
ஆவணப்படுத்தியது வெளிவந்திருக்கிறது.

news report – // At Dassault Aviation, according to a document obtained by Mediapart, the alliance with Ambani was indeed presented as a ‘trade-off’ for the Rafale contract of sales. Dassault Aviation’s deputy chief executive officer Loïk Segalen said this clearly on May 11, 2017 during a presentation of the joint venture ‘Dassault Reliance Aerospace’ to staff representatives:

“It is imperative and obligatory for Dassault Aviation to accept this [trade-off/counterpart] to obtain the export contract (for?) Rafale India,” declared the number 2 of the group, according to a report prepared by staff personnel.//

இதனை மறுத்து டசால்ட் நிறுவனம் அறிக்கை வெளியிட இதற்குள்ளாக  ஏற்பாடுகள் நடந்திருக்கும்…

( latest news – நடந்து விட்டது…)

……………

( இந்த புகைப்படத்தில் இருப்பது –  சின்ன அம்பானி … அவரது கரம் தொங்கிக்கொண்டிருப்பது, ஃப்ரென்ச் பாதுகாப்பு அமைச்சரது
தோள்களில்…அந்த அளவிற்கு நெருக்கமான சிநேகிதம்…!!!
பணம், பணம், பணம் –  பணம் படுத்தும் பாடு…! )

…………………………………………………

இது ஒரு பக்கமிருக்க –

டசால்ட்-அம்பானி கூட்டு விமான நிறுவனம் உருவாக்கப்பட்டதில் கூட
சில சட்ட மீறல்கள் நடைபெற்றிருப்பது குறித்த தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

ஒன்று – Reliance Aerostructure Limited -க்கு லைசென்ஸ் கொடுக்கப்பட்டிருப்பது குஜராத் மாநிலத்திலுள்ள அம்ரேலி என்னும் இடத்தில் தொழிற்சாலை கட்டவும்,

இரண்டு -for Manufacture of Items under Defence Industries

ஆனால், தற்பொது தொழிற்சாலை துவங்கப்பட்டிருப்பது, மஹாராஷ்டிரா மாநிலத்தில் – நாக்பூர் அருகே.

தயாரிக்கப் போவது, ரஃபேல் போர் விமானங்களுக்கான பாகங்கள்….

இவர்களைப் பொருத்த வரையில்,
இது ஒரு பெரிய விஷயமில்லை தான்….
எப்போது வேண்டுமானாலும், மத்திய அரசுக்கு விண்ணப்பித்து
திருத்தங்கள் கோரலாம்… எந்தவித பிரச்சினையுமின்றி
தன்னால் கிடைத்து விடும்.

( news report – As of July 2018 – in a section titled “Industrial Licences Issued for Manufacture of Items under Defence Industries – the DIPP’s website states that the licence given to Reliance Aerostructure Limited is for “Amreli in the state of Gujarat” and for Reliance Aerostructure Limited

“R.A.L. has evidently failed to comply with the licensing requirements stipulated by the DIPP by [a] changing location of manufacturing without due amendment in license & [b] by starting process of manufacturing a ‘new article’ i.e. civilian Falcon aircrafts as opposed to “Manufacture and Upgrade of Airplanes and Helicopters Specially Designed for Military Application” )

………………

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் ரஃபேல் விமான
விவகாரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன… இன்னும்
என்னென்ன விவகாரங்கள் வெளிவரப்போகின்றனவோ – தெரியவில்லை…..

.
———————————————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to ரஃபேலுக்கு நெருக்கமானவர்கள்…. தொடரும் பொய்கள்… விதிமீறல்கள்.. மறுப்புகள்…

 1. Selvarajan சொல்கிறார்:

  // மாண்புமிகு நிதின் கட்காரிஜி’ யின் முன்னாள் விவகாரங்கள் ……
  Posted on மே 24, 2015 by vimarisanam – //

  https://vimarisanam.wordpress.com/2015/05/24/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/ சும்மா — அப்பப்ப சில முந்தைய இடுகைகளை படிப்பதும் ” நல்ல மனிதர்களை ” பற்றி அறிந்து கொள்வதும் — ஒரு ஆர்வத்தில் தான் … வேறு எந்த காரணமும் இல்லை

 2. புதியவன் சொல்கிறார்:

  நள்ளிரவில் சூரியனைத் தேடுவதுபோல் நாம் அரசியல்வாதிகளில் நல்லவரைத் தேடுவது ஆயிற்றே… எல்லோருக்கும் எரிச்சல் வரவைப்பதில் கா.மை சாருக்கு அவ்வளவு சந்தோஷம்……

 3. Mani சொல்கிறார்:

  பொறுக்கிகளும், திருடர்களும் தலைவர்களாகவும், மந்திரிகளாகவும் ஆக்கப்படுவதை ஆதரிப்பவர்கள் இருக்கும் வரை காவிரிமைந்தன் சார் அவசியம் எழுத வேண்டும்.
  காவிரிமைந்தன் சார் இத்தனை உண்மைகளை தேடியெடுத்து எல்லாரும் படிக்க – இங்கே எழுதுவதற்கு அவருக்கு நன்றி சொல்வதை விட்டு விட்டு, குறை சொல்வது ஏன் ?

  • புதியவன் சொல்கிறார்:

   மணி… அது குறை இல்லை. வஞ்சப் புகழ்ச்சி போல, குறை சொல்வதுபோல் புகழ்வது. எத்தனை அயோக்கியர்கள் நல்லவர் வேடம் போட்டுக்கொண்டு வருகிறார்கள் என்பது. ஒரு தொழிலதிபருக்கு அரசியலமைப்பில் முக்கியப் பதவிகளில் உள்ளவர் மீது அஃபீஷியல் இடங்களில் தோள் மீது கை போடும் துணிச்சல் வருவதைப் பார்த்து ஆதங்கம்/எரிச்சல். அந்த அந்தப் பதவிக்கு என்று ஒரு மரியாதை உண்டு. எப்போது ஒருவரிடத்தில் (நம்மைவிட பதவியில் பெரிய இடத்தில் இல்லாதபோது) பணிவோம்? அவர் வயதில் அல்லது அனுபவத்தில் அல்லது தனக்கு மூத்தவராக சமுதாயத்தில் இருந்தால், அவரிடம் பணியலாம். பணம் இருக்கிறது என்பதற்காக யார் பணிவார்கள்? அவரிடம் காசு வாங்குபவர்களைத் தவிர?

   முன்பு, கருணாநிதி, உட்கார்ந்துகொண்டே பிரணாப் முகர்ஜிக்கு (அப்போ அவர் நிதி அமைச்சர் என்று ஞாபகம்) கை கொடுத்தாரா இல்லை ஏதேனும் பேப்பர் கொடுத்தாரா என்று ஞாபகம் இல்லை, அப்போது பிரணாப்பும் கருணாநிதியை எரிச்சல் படுத்தும் விதமாக உட்கார்ந்தே இருந்தார். பிரணாப் செய்தது apt ஆகத் தோன்றியது அப்போது.

   • R.Gopalakrishnan சொல்கிறார்:

    Sir,
    Supposing had there been a coalition Govt. in the center with BJP as the single party majority, pl. write an article fully satiricle.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     கோபாலகிருஷ்ணன்,

     இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுங்களேன்..
     மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் தேர்தல்கள் முடியட்டுமே…!

     அதற்குள்ளாக நிறைய விளையாட்டுகள் நடக்கும்.
     அவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்… 🙂 🙂

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நன்றி Sharron,

  நடப்பதை நேற்றிலிருந்தே கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
  உச்சகட்ட அதிகார துஷ்பிரயோகம்.
  ஆனால், மீடியா -க்கள் கையது கொண்டு, வாயது பொத்தி மௌனமாக
  வேடிக்கை பார்க்கின்றன.

  பயம்… பயம்… பயம்…எல்லாருக்கும் பயம்.

  நாளை தனியாக ஒரு இடுகையுடன் வருகிறேன்.
  ( இந்த லிங்க்கை எனக்கு அனுப்பியதற்கு மிக்க நன்றி… இதே போல் முக்கியமான
  செய்திகளை பார்த்தால், அவசியம் இதேபோல் எனக்கு தெரியப்படுத்துங்கள்…)

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 5. Selvarajan சொல்கிறார்:

  பாதுகாப்பு அமைச்சர் அங்கே சென்ற பின் பல்டி அடித்த டசால்ட் …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.