இதென்ன – அதிகார முறைகேட்டிற்கு கிடைத்த பரிசா…?


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) -வில் 40 ஆண்டுக்காலம்
பணியாற்றி விட்டு, அதன் (Chairman) தலைமைப் பொறுப்பையும் வகித்து விட்டு, கடந்த ஆண்டு பதவி ஓய்வு பெற்ற திருமதி அருந்ததி
பட்டாச்சார்யா அவர்கள் –

அக்டோபர் 17, 2018 முதலான 5 ஆண்டுகளுக்கான காலகட்டத்திற்கு,
திரு.முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கம்பெனிகளின் டைரக்டர்களில்
ஒருவராக நியமனம் பெற்றிருக்கிறார்.

அது குறித்த ஒரு செய்தித்துண்டு கீழே…..


பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ- லிருந்து ஆயிரக்கணக்கான
கோடிகள் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு கடனாக கொடுக்கப்பட்டுள்ளன.
அதில் பல ஆயிரம் கோடிகள் இன்னமும் ‘வாராக் கடன்’ பட்டியலில்
உள்ளது.

இந்த நிலையில், அரசு வங்கியின் தலைமைப் பொறுப்பிலிருந்து
ஓய்வு பெறும் ஒருவர், நேரடியாக ரிலையன்ஸ் நிறுவனத்தில்,
மிக அதிக சம்பளத்திற்கு இப்படி ஒரு பதவியை பெறுவது –

எத்தகைய செய்தியை வெளியனுப்புகிறது….?

எஸ்.பி.ஐ.யிலிருந்து ரிலையன்சுக்கு கிடைத்த
உதவிகளுக்கான கைம்மாறு இது என்பதாகவா…?

தற்போது, வங்கிகளில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும்
அதிகாரிகளுக்கு –
” எங்களை கவனித்துக் கொண்டால்…
பதவி ஓய்விற்கு பிறகு,
உங்களுக்கும் இது போன்ற வரவேற்பு கிடைக்கும் ”

என்று விடுக்கப்படும் செய்தியா…?

இந்த நியமனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறதா..?
எப்படி…?

—————————————–

பின்னுரை –

பொதுத்துறை (அரசு) வங்கியில் பணியாற்றிய உயர் அதிகாரி ஒருவர் பதவி ஓய்விற்கு பின்னர், ஒரு ஆண்டிற்குள்ளாக தனியார் கம்பெனியில் பதவி ஏற்பதாக இருந்தால், மத்திய அரசிடமிருந்து அதற்கான முறையான ஒப்புதலை பெற வேண்டும்…..

இந்த ஒப்புதலைப் பெற மனு போடும்போது, ” ரிடையர் ஆவதற்கு 3 வருடங்கள் முன்பு வரை, தான் புதிதாக பதவியேற்கும் நிறுவனத்துடன், அதிகாரபூர்வமாக தனக்கு எந்தவித அலுவல் ரீதியான தொடர்பும் இருந்தது இல்லை” என்று உறுதிமொழி தர வேண்டும்….

சட்டத்தை வளைக்க – இங்கே மிக புத்திசாலித்தனமாக செயல்பட்டிருக்கிறார்கள்.
இவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றது 2017, அக்டோபர் 6-ந்தேதி.

ரிலையன்சில் புதிய பதவியை ஏற்பது சரியாக ஒரு ஆண்டு கழித்து –
2018, அக்டோபர் 18.

எனவே – அரசின் ஒப்புதலைப்பெற தேவையில்லை…!!!

அரசியல்வாதிகளும் சரி… அதிகாரிகளும் சரி….மிக மிக புத்திசாலிகள்…
கிரிமினல் மூளைகளுக்கு சொந்தக்காரர்கள் ….!!!

நம்மைப் போன்ற சாதாரண மக்கள் தான் –

மடையர்கள்…
முட்டாள்கள்…
இளிச்சவாயர்கள்.

.
——————————————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to இதென்ன – அதிகார முறைகேட்டிற்கு கிடைத்த பரிசா…?

 1. Selvarajan சொல்கிறார்:

  அய்யா ..! ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) – வில் அவர் வாங்கியதை விட — ” அதிக சம்பளமும் ” ரிலையன்ஸ் கம்பெனியில் கிடைக்குமோ என்று நம்மைப் போன்ற …. சாதாரண மக்களான –

  மடையர்கள்…
  முட்டாள்கள்…
  இளிச்சவாயர்கள்…. கேட்க உரிமையாவது உண்டா …?

 2. அரவிந்தன் சொல்கிறார்:

  60 வயதையும் தாண்டிய இந்த முதிர் பெண்மணியை, ரிலையன்ஸில் ஏன் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து உயர் பதவியில் அமர்த்தி அழகு பார்க்கிறார்கள் ?
  ரிசர்வ் வங்கியின் சேர்மனாக சில வருடங்கள் பணி புரிந்தவர்.
  நாடு முழுவதும் உள்ள வங்கிகளின் தலைவர்களுடன் இவருக்கு பரிச்சயம் உண்டு.
  இவரது influence -ஐ ரிலையன்ஸ் நீறுவனம் “உரிய” முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் தானே ?
  “சரியான கிரிமினல் மூளைகள் ” – நீங்கள் சொல்வது மிகச்சரியே.

 3. Karthik சொல்கிறார்:

  Ayya,
  Reliance group RIL -Mukesh Ambani – company is not having any Non performing assets and it did not owe any outstanding interest payments to any banks. Hence appointing former SBI chairman may not be a issue as long as there is no plot to hide. RIL balance sheet is very strong.

  Whereas Relaince group – Anil Ambani – company is having huge non performing assets and they owe huge money to many banks and lot of other suppliers and customers. Relaince communications, Reliance inftastructure, reliance power , reliance home finance, reliance capital, relaince defence (Rafel deal)….etc are owned by Anil. very badly managed.

  thx
  Karthik

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கார்த்திக்,

  நீங்கள் சொல்வது போல், அண்ணன் மீது வாராக்கடன் விவகாரங்கள் இல்லை என்றாலும், அவர் வர்த்தகமும் நேர்மையானது அல்ல.
  அந்த குடும்பத்தின் DNA – விலேயே நேர்மை என்கிற ஒரு குணம் இல்லையோ என்றே தோன்றுகிறது. கோதாவரிப் படுகையில் பெட்ரோல் எடுக்கும் விவகாரத்தில், மோசடியில் ஈடுபட்டதற்காக, பிப்ரவரி 2014-ல் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டது உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.

  அவர்களது தந்தை திருபாய் அம்பானி ரிலையன்ஸ் கம்பெனியை துவங்கி, முன்னெடுத்துச் சென்ற காலத்திலிருந்து அவர்கள் பல சட்டங்களை மீறித்தான் வியாபாரத்தை வளர்த்தார்கள்.

  மிகச்சிறிய வயதிலிருந்தே, ஆங்கில நாளிதழ்கள் படிக்கும் வழக்கம் எனக்கு உண்டு….அந்தக்காலத்தில் (1965-70 ) Indian Express ஆங்கில நாளிதழில் அந்த முறைகேடுகள் குறித்தெல்லாம் மிக பரபரப்பாக செய்திகள் வெளியானது இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது.

  Anyway – அவர் உத்தமர் என்றே வைத்துக்கொண்டாலும் கூட,
  எஸ்.பி.ஐ. சேர்மனை – சரியாக அவர் ரிடையர் ஆகி ஒரு வருடம் வரை காத்திருந்து, பின் ரிலையன்ஸின் ப்ரைவேட் டைரக்டர் பதவியில் அமர்த்தியது நேர்மையான காரணங்களுக்காக அல்ல என்பதை
  பார்த்த மாத்திரத்திலேயே எவரும் புரிந்து கொள்ளலாம் அல்லவா…?

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • Karthik சொல்கிறார்:

   Ayya, if we need to see ethics, the Reliance group ( Anna or Thambi) is far away from ethics line. It is my personal opinion too. SEBI penalized RIL for unethical insider trading. few came out, How many are hidden. As you rightly mentioned, They just do business in any means. Crony capitalism is their tool and they are very good at it.

 5. Ganpat சொல்கிறார்:

  procedurally right may be! but ethically certainly wrong.But ethics? my foot! this is 2018 AD

 6. புதியவன் சொல்கிறார்:

  கண்பத்… உங்க பின்னூட்டம் ஆச்சர்யமா இருக்கு.

  தன் கிளையன்டுக்கிட்ட வேலைக்குப் போறதுக்குப் பதில் (மறைமுக லஞ்சம், கொள்ளையடிக்க வழி சொல்லித்தருவது) பதவி தந்த கோடிகளை எஞ்சாய் பண்ணியிருக்கலாம். இதற்கும் உ.நீ.த.நீதிபதி ரிடையர் ஆனவுடன் கவர்னர் ஆனதற்கும் எனக்கு வேறுபாடு தெரியலை.

  வருகின்ற ஐந்து வருடங்களுக்காக, விளம்பரத்துக்கு 100 கோடி கொடுத்தேன் என்று புரொசீஜர் படி சரியாகச் செய்த களவாணிகளை நாம கண்டிக்கவே முடியாது..

 7. Mani சொல்கிறார்:

  புதியவன்

  அதெப்படி சார் அம்பானிஜி, மோடிஜி எல்லாரையும் கண்டித்து இடுகை வரும்போது நீங்கள் மட்டும் கலைஞரைக் காட்டி நைசா சைடு மாத்தி ஜஸ்டிஃபை பண்றீங்க ?
  இதுல ஹா ஹா ஹா வேற ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.