“இது லேடஸ்ட் – ரஃபேல் ஊழலைக்காட்டிலும் “…..நான் கீழே தந்திருப்பது ஒரு செய்தி மட்டுமே….

‘ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது மோடி அரசின் பயிர்
காப்பீடு திட்டம்’: வேளாண் ஆர்வலர் சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு –
Published : 07 Nov 2018 21:25 IST

—————–

மத்தியில் ஆளும் மோடி அரசு விவசாயிகளுக்காகச்
செயல்படுத்தி வரும் பயிர் காப்பீடு திட்டம்,
ரஃபேல் போர்விமானக் கொள்முதல் ஊழலைக் காட்டிலும்
மிகப்பெரியது என்று மூத்த பத்திரிகையாளரும், வேளாண்
ஆர்வலருமான பி.சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.மும்பையில், கடந்த 3 நாட்களாக கிசான் சுவராஜ் சம்மேளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்று வேளாண் ஆர்வலர் பி.சாய்நாத் பேசியதாவது:

”மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கொள்கைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிரானது. குறிப்பாகப் பிரதமர் பிமா பசல் யோஜனா திட்டம் என்பது ரஃபேல் போர்விமானக் கொள்முதல் ஊழலைக் காட்டிலும் மிகப்பெரியது.

குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார் ஆகிய நிறுவனங்கள் நன்றாகச் சம்பாதிக்கும் நோக்கில் இந்தக் காப்பீடு அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உதாரணமாக,

மகாராஷ்டிராவில் 2.80 லட்சம் விவசாயிகள் சோயா பயிரிட்டுள்ளனர்.

ஒரு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள்
காப்பீடு தொகையாக ரூ.19.20 கோடியைக் காப்பீடு
நிறுவனத்திடம் செலுத்துகிறார்கள்.

மத்திய அரசும், மாநில அரசும் தனித்தனியாக
தலா ரூ.77 கோடி செலுத்துகிறார்கள்.
ஒட்டுமொத்தமாக
ரிலையன்ஸ் காப்பீடு நிறுவனத்துக்கு
ரூ.173 கோடி கிடைக்கிறது.

ஒட்டுமொத்த பயிரும் மழையில்லாமல் கருகிப்போனால் கூட காப்பீடு நிறுவனம் ரூ.30 கோடி மட்டுமே இழப்பீடாகத் தரும்.

ஆனால், எந்தவிதமான முதலீடும் செய்யாமல் காப்பீடு நிறுவனம்
ரூ.143 கோடி எடுத்துக்கொள்ளும். இது ஒரு மாவட்டத்துக்கான பணம், இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இதுபோன்றுதான் நடந்து வருகிறது.

https://tamil.thehindu.com/india/article25438763.ece?utm_source=HP-
RT&utm_medium=hprt-most-read

.
————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.