மோடிஜி+அத்வானிஜி – விசித்திரமான காட்சிகள்….ரொம்ப நாட்கள் முந்தியல்ல….
JUST – 6 மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது இது –
மேடையில் அமர்ந்திருந்த அத்வானிஜி,
மோடிஜி வந்ததும் எழுந்து நின்று,
பிரதமர் என்கிற மரியாதைக்காக -கைகூப்பி நிற்கிறார்…

மேடையில் இருக்கும் மீதி அத்தனை பேரையும்,
வணங்கி விசாரித்து விட்டுச் செல்லும் மோடிஜி –

அத்வானிஜியை மட்டும் – கண்டுகொள்ளாமலே அகந்தையுடன்
அவரை அலட்சியப்படுத்தி விட்டு –
கடந்து போகிறார்….

அத்வானிஜி அறிமுகப்படுத்திய அவரது சொந்த சீடர்….

…..

…..

நேற்று, அத்வானிஜியின் பிறந்த நாள் ….
அவர் வீட்டிற்கு சென்ற மோடிஜி –
எந்த அளவிற்கு வளைந்து குனிய முடியுமோ –
அந்த அளவிற்கு குனிந்து கும்பிடுகிறார்….

திடீரென்று ஏனிந்த மாற்றம்…
ஒதுக்கித்தள்ளி ஓரங்கட்டியவரிடம் – குனிய வேண்டிய அவசியம்
இப்போது ஏன் வந்தது…..?

இந்த புதிய கோலத்திற்கான காரணம் …. புரிகிறதா..?
யூகிக்கக்கூடியவர்கள் – பின்னூட்டத்தில் எழுதுங்களேன்…

( கடந்த 4 வருட பிறந்த நாட்களின் போதெல்லாம் இந்த வளைவு, குனிவு -இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது….!!! )

.
———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to மோடிஜி+அத்வானிஜி – விசித்திரமான காட்சிகள்….

 1. Ganesh, New Delhi சொல்கிறார்:

  Election….!!!!

 2. Selvarajan சொல்கிறார்:

  தேர்தல் நெருங்குது … பிரதமர் வேட்பாளர் பாேட்டி … ஆர்எஸ்எஸ் ஆதரவு … அதனால ” குருவே பாேற்றி ..குருவாய நமஹா பாேற்றி…குருவே சரணம் ” …?

 3. அரவிந்தன் சொல்கிறார்:

  “கடந்த நாலரை ஆண்டுகளாக மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்காக, நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ” என்று அத்வானிஜி ஒருவேளை சொல்லி விடுவாரோ என்று பயம் ?

 4. Mani சொல்கிறார்:

  தனியாக இருந்திருந்தால், காலிலேயே விழுந்திருப்பார் போல.
  கூட மற்றவர்கள் இருந்ததால் – ” இந்த கையையே காலாக நினைத்து வேண்டிக்கொள்கிறேன் 🙂 🙂 “

 5. bandhu சொல்கிறார்:

  அடுத்த தேர்தலில் பிஜேபி பிரதமர் வேட்பாளர் அத்வானி?

 6. புதியவன் சொல்கிறார்:

  அரசியலில் இது ஜகஜம். கணவனைக் கொன்றதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என எல்லோராலும் நம்பப்பட்ட கருணாநிதியின் அழைத்த குரலுக்கெல்லாம் சோனியா காந்தி அவர்கள் ஏவலாளாக வந்து நிற்கவில்லையா? காங்கிரசை இந்திராவை மிக்க் கேவலமாக வசைபாடிவிட்டு பிறகு அவர்களுடன் நெருக்கமான கூட்டு, நேருவின் மகளே என்றெல்லாம் சொன்ன கருணாநிதி நினைவுக்கு வரவில்லையா? ஸ்டாலினை வசைபாடி, திமுகவுக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டு, கரிபூசிய முகத்துடன் ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று வை கோ அவர்கள் முழங்கிக் கண்ணீர் விடவில்லையா? அரசியல்வாதிகளுக்கு எப்போது கண்கள் பனிக்கும், இதயம் இனிக்கும் என்று அவர்களைப் படைத்த ஆண்டவனாலேயே சொல்லமுடியாதே.. அதனால் இது ஜ க ஜ ம் தான். ஹாஹாஹா

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   உங்கள் பின்னூட்டங்கள் எந்தவித அர்த்தத்தை தருகின்றன என்பதை நீங்கள் உணர்ந்து தான் எழுதுகிறீர்களா ?
   உங்கள் கருத்து – மறைமுகமாக தவறுகளை நியாயப்படுத்த முயல்கின்றன …
   அது தான் உங்கள் நிலை என்றால் … எனக்கு கூற வேறு ஒன்றுமில்லை.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. Mani சொல்கிறார்:

  புதியவன்

  அதெப்படி சார் அம்பானிஜி, மோடிஜி எல்லாரையும் கண்டித்து இடுகை வரும்போது நீங்கள் மட்டும் அவரையும் இவரையும் காட்டி நைசா சைடு மாத்தி ஜஸ்டிஃபை பண்றீங்க ?
  இதுல ஹா ஹா ஹா வேற. ஆதரிக்கணும்னா ஸ்டிரெயிட்டா ஆதரிக்க வேண்டியது தானே ? ஏன் இந்த மறைமுக ஜால்ரா ?

 8. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  மோடி அத்வானியின் வீட்டிற்கு பிறந்த நாள் என்று சென்று இருக்கிறார் .
  “வாழ்த்த வயதில்லை , வணங்குகிறேன் ” என்று
  பவ்வியமாக போட்டோவிற்கு போஸ் கொடுக்கப்பட்டுள்ளது .

  மற்றப்படி வேறொன்றும் இல்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.