அந்த இதயங்கள்… எங்கே ….?


2015 டிசம்பரில் சென்னை பெருவெள்ளத்தில் மூழ்கியபோது,
துடித்தெழுந்த அந்த இதயங்கள், அவற்றின் சொந்தக்காரர்கள் எல்லாம்
இப்போது எங்கே போனார்கள்…? தாங்கள் வசிக்கும் இடங்களில் பிரச்சினை வந்தால் மட்டும் தான் அவர்கள் கிளர்ந்தெழுவார்களா…?

பாதிக்கப்பட்ட இடங்களில் இதுவரை ஒரு தொண்டு நிறுவனத்தைக்கூட
கண்ணில் காண முடியவில்லையே – ஏன்…?

முன்பு துடித்தெழுந்தது எல்லாம் சுயநலத்திற்காகத் தானா…?
தங்கள் இடம் வெள்ளத்தில் சிக்கி விட்டதே… தங்களுக்கு மின்வசதி தடைபட்டு விட்டதே… தங்களுக்கு தொலை தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டு விட்டதே என்கிற சுயநலம் தான் – தொண்டுள்ளங்கள் போல் வேடம் பூண்டு வெளிவந்தனவா…?

வெட்கப்படுகிறேன்… நானும் அந்த சமுதாயத்தில் ஒருவனாக
இருப்பதற்கு…! ஆனால்… உடலளவில் எதுவும் செய்ய தகுதி இல்லாத,
கையாலாகாதவன் நான். எனவே தான் இந்த இடுகை….

2,49,000 (இரண்டு லட்சத்து நாற்பத்தி ஒன்பதாயிரம் பேர்) தற்காலிக
தங்குமிடங்களில் தஞ்சம்…ஒவ்வொரு நாளும் 3 வேளைகளும் அவர்களுக்கு உணவு (சமைத்து) பங்கிட வேண்டிய சுமை… அதற்கு தேவையான உணவு, எரிபொருள், காய்கறி -க்கான தேவை…

சுமார் 50,000 மின் கம்பங்கள் சாய்ந்ததால், கடந்த 3 நாட்களாக,
முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் –

50,000 தென்னை மரங்கள்,
பல்லாயிரக்கணக்கான சாலையோர மரங்கள்
வேரோடு சாய்ந்து விழுந்ததால்,
துண்டிக்கப்பட்ட சாலைகள் –

சாலைகள் துண்டிக்கப்பட்டதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை,
உணவுப்பொருட்களும், நிவாரண உதவிகளும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை…

கடந்த 3 நாட்களாக மக்கள் படும் அவதிகளை தொலைக்காட்சிகளில்
பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த கேள்வி எழுகிறது…

..

..


————–

அரசாங்கம் மட்டும் இந்த பிரச்சினையை தீர்த்து விட முடியாது…
அதற்கு நீண்ட நாட்கள் பிடிக்கும்…

அங்கே முக்கியமாக, உடனடியாக நடக்க வேண்டியது –

சாலைகளில் விழுந்து விட்ட மரங்களை அகற்றி,
போக்கு வரத்துக்கு வழி செய்தல்;
மண்ணெண்ணை, பால்பொருட்கள், குடிநீர் மற்றும்
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அங்கே கொண்டு செல்ல
வழி ஏற்படுத்தி தருதல்… துண்டிக்கப்பட மின் இணைப்பை சரி செய்தல், ஆகியவை தான்…

அங்குள்ள மக்கள் பொறுமையை இழந்து வன்முறையில் இறங்குகின்ற
மனப்போக்கில் இருக்கிறார்கள்… அவர்களையும்
பெரிதாக குறை சொல்ல முடியாது… நிஜமாகவே துன்பத்திலும், வேதனையிலும் உழல்பவர்கள்….

சில ஆலோசனைகள் –

பெரிய பெரிய நிறுவனங்கள் சென்னையில் இருக்கின்றன..
ஒவ்வொரு நிறுவனமும் – தங்கள் ஊழியர்கள் பொதுப்பணிக்கு
செல்லும் நாட்கள் பணிநாட்களாக கருதப்பட்டு அவர்களுக்கு ஊதியம்
வழங்கப்படும் என்று அறிவித்து –

உதவிக்கு முன்வர தங்கள் ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டால்
அந்தந்த நிறுவனத்திலிருந்து
நிறைய இளையோர் முன்வருவார்கள்.

தங்கள் நிறுவன வாகனங்கள் சிலவற்றை இதற்காக ஒதுக்கி, கூடுமான
வரை உதவிப் பொருட்களை திரட்டி, தாமதமின்றி, அவர்களை
நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதிகளுக்கு அனுப்ப முன்வர வேண்டும்.

ஐடிஐ (Industrial Training Institute), பாலிடெக்னிக் (Polytechnic), பொறிஇயல் கல்லூரிகளில் (Engineering College) – எலெக்ட்ரிகல் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களை 4-5 நாட்களுக்கு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி,

அங்கே துண்டிக்கப்பட்ட மின்இணைப்பை மீட்டுத்தரும் முயற்சியில்
ஈடுபட்டிருக்கும் மின்வாரியத்திற்கு உதவலாம்.

பணச்செலவை அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் –
நீண்ட கால உதவிகளை அரசாங்கம் செய்ய வேண்டும்…

தற்போது, உடனடியாக அங்கே தேவைப்படுவது
மனித ஆற்றல் தான். கூடுதல் பணியாளர்கள் தான்…

எத்தனைக்கெத்தனை அதிகம் பேர் அங்கே நிவாரண உதவிகளில் ஈடுபடுகிறார்களோ, அத்தனைக்கத்தனை அங்கே நிலைமை சீக்கிரம் சீர்படும்.

தொண்டு நிறுவனங்களும், தனியார் தொழில் நிறுவனங்களும்,
உடனடியாக இதில் ஈடுபட வேண்டும்…

என் வேண்டுகோள் நல்லுள்ளங்கள் அத்தனைக்கும் சேர்த்து தான்.
உதவி செய்யக்கூடிய நிலையில் உள்ள, தனிப்பட்ட ஒவ்வொருவரும்
தங்கள் நண்பர்களை துணை சேர்த்துக்கொண்டு ஒரு 3 நாட்கள் சென்று
அல்லல்படும் அந்த மக்களின் துன்பத்தை குறைக்க முன்வர வேண்டும்.

செய்வார்களா…?

எனக்கு நன்றாகவே தெரியும்…
நம் மக்கள் பிறர் படும் துன்பத்தை காணச் சகியாதவர்கள்.
நிச்சயமாக அவர்களில் பலர்
ஏற்கெனவே செயலில் இறங்கி இருப்பார்கள்.
நான் எழுதுவது மற்றவர்களுக்கும் நினைவுபடுத்தவே – என்று எடுத்துக் கொள்ளுங்கள்….!

.
——————————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அந்த இதயங்கள்… எங்கே ….?

  1. Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! // ஐடிஐ (Industrial Training Institute), பாலிடெக்னிக் (Polytechnic), பொறிஇயல் கல்லூரிகளில் (Engineering College) – எலெக்ட்ரிகல் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களை 4-5 நாட்களுக்கு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி,

    அங்கே துண்டிக்கப்பட்ட மின்இணைப்பை மீட்டுத்தரும் முயற்சியில்
    ஈடுபட்டிருக்கும் மின்வாரியத்திற்கு உதவலாம். // அருமையான யாேசனை பயிற்சி பெறவும் … மக்கள் நல பணியில் ஈடுபாடு ஏற்படவும் மாணவர்களுக்கு வழிக்காட்டவும் முடியும் …! மனமிருந்தால் மார்க்கமுண்டு ….!!!

  2. Tamilmani சொல்கிறார்:

    When kerala was in distress tamil people helped them generously i dont know why there is no help from our people to Gaja victims.No point in blaming the govt for every natural disaster.They are not man made and cannot be prevented.Ngos and voluntary assns should help the people for their return to routine life.But in Tamilnadu every thing is politics

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s