அமீத்’ஜீ …இந்த தடவை அநியாயத்துக்கு ஏமாந்துட்டாருங்க …!!


தன்னைப்பத்தி எப்போ, எந்த வழக்கு, எந்த கோர்ட்டுக்கு வந்தாலும்,
முன்னேற்பாடா, உடனடியா, கோர்ட்டுலேந்தே தடையுத்தரவு
வாங்கிடுவாருங்க…அந்த நியூசைக்கூட போடக்கூடாதுன்னு…

எப்படியோ ஏமாந்துட்டாரு… நேத்து ஒரு முக்கியமான கேசு…
மும்பை சிபிஐ கோர்ட்ல….

2005-ல், குஜராத், காந்தி நகரில் போலீஸ் சூப்பிரென்டென்டாக
பணியாற்றியவரும், ஷோராபுதீன் fake encounter வழக்கின் தலைமை
புலனாய்வு அதிகாரியாக பொறுப்பேற்றிருந்தவருமான
அமிதாப் தாக்கூர், என்னும் போலீஸ் அதிகாரி –

நேற்று மும்பை சிபிஐ நீதிமன்றத்தில், அமீத் ஷா அவர்களுக்கு எதிராக
சாட்சியம் அளித்தார்.

எப்போதும், இத்தகைய செய்திகளை பத்திரிகைகளில் வெளியிட முன் ஜாக்கிரதையாக தடையுத்தரவு பெற்று விடும் அமீத்ஜீயின் வக்கீல்கள் எப்படியோ இந்த தடவை ஏமாந்து விட்டனர்.

இதுவரை தடையுத்தரவு எதுவும் வரவில்லை…ஆனாலும் கூட (பயம்
காரணமாக…? ) பெரும்பாலான மீடியாக்கள் இந்த செய்தியை வெளியிடவில்லை….

நாம மட்டுமென்ன பைத்தியக்காரங்களா… இதைப்பத்தி எதையாவது
எழுதிவிட்டு கோர்ட்டுல போய் நிக்க….

மாட்டோம்… நாமளா எதையுமே எழுதி மாட்டிக்க மாட்டோமே…!
ஜஸ்ட், ஆங்கில ஹிந்து செய்தித்தாளில் வெளிவந்த செய்தியை மட்டும் தான் இங்கே கொடுக்கிறோம்….அதுவும் தடையுத்தரவு எதுவும் இன்னும்
வெளிவராத நிலையில தான்…!!!

புடிச்சுக்கிட்டா… போய் அந்த ஹிந்து’வை புடிச்சுக்கட்டும்…!!!

இனி கீழே ஹிந்து செய்தியிலிருந்து சில பகுதிகள் –

( https://www.thehindu.com/news/national/amit-shah-benefited-from-sohrabuddin-case-former-cbi-officer-deposes/article25541662.ece )

——————

CBI officer deposes on fake encounter –

Amitabh Thakur, former Superintendent of Police in the CBI, Gandhinagar, and
chief investigating officer in the alleged fake encounter of Sohrabuddin Sheikh in November 2005, said then Gujarat Home Minister Amit Shah had benefited
politically and monetarily from the case. Mr Thakur was deposing before a CBI
court here on Monday.

He said Mr. Shah benefited financially as he was paid ₹70 lakh
by the Patel brothers, owners of Popular Builders in Ahmedabad.

They were warned that if they did not pay the money, there would be dire
consequences. He said Mr. Vanzara benefited monetarily as well, as he was paid
₹60 lakhs by the Patel brothers.

He also said that none of the police officers facing trial in the case had any
“political or monetary benefit from the encounter.” He also agreed that there were no political motives for the current accused to kill Sohrabuddin.

He also mentioned that all the 20 accused were acting under the directions of
their superiors Mr. Vanzara, Mr. Pandiyan, Mr. Dinesh and Mr Chudasma, and all
of these had been discharged in the case.

Mr. Thakur denied that he was asked by the Director of CBI Ashwani Kumar to
implicate all the 22 accused in the case. Mr. Thakur also denied that he and his
superior DIG P Khantaswamy, was asked by Mr Kumar, to implicate all the 20
accused in the case for political mileage.

He said that no material existed about the 92 currency notes allegedly found on
Sohrabuddin’s body and no investigation was conducted regarding it.

He also said there was no evidence against accused Balkrishnan Chaubey,
former police sub-inspector of ATS Ahmedabad to file a charge-sheet.

He rebutted the testimony of Sohrabuddin’s brother Rubabuddin that eight bullet
marks were found on his brother’s body and said only one bullet was found on
the body.

He added that around two to three bullets had gone through the body, but
neither the bullets nor the empty shells were located, even after the Special
Investigation Team visited the spot after five years and recreated the whole
scene.

On being questioned whether they had any eye witness of the fake encounter,
he said they had none. He also said Sohrabuddin was not murdered at Disha
farms in Ahmedabad.

.
————————————————————————————————–

எனது பின் குறிப்பு – இந்த தளத்தில், தொடர்ந்து சீரியஸான அரசியல்
கட்டுரைகளை எழுதி, எனக்கும், உங்களுக்கும் டென்ஷன் ஏற்படுத்திக்
கொள்வதை தவிர்க்க மாற்று வழி என்ன என்று கொஞ்ச நாட்களாகவே யோசித்து வந்தேன்…

சரி அரசியல் கட்டுரைகளை குறைத்துக் கொண்டு, மற்ற விஷயங்களைப்பற்றி எழுதுவோம் என்று துவங்கினேன்…

விளைவு – எதைப்பற்றி வேண்டுமானலும் கூடுதலாக எழுதிக்கொள்…
ஆனால் அரசியலைப்பற்றி எழுதுவதை குறைத்துக் கொண்டாயோ
தெரிந்தது சங்கதி…. என்று சொல்கிறது எனக்கு கிடைத்திருக்கும் சர்வே
ரிப்போர்ட்… வாசக நண்பர்கள் தானே என் பலமே…!!!

மீண்டும் யோசித்தேன்…
சரி அரசியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதுவோம்…. ஆனால், தொடர்ந்து சீரியஸாக எழுதிக்கொண்டிருப்பதை விட –
நகைச்சுவை உணர்வை துணைக்கு அழைத்துக் கொண்டு கொஞ்சம் மென்மையாக, எழுதலாமென்று தோன்றியது….

என் சொந்த விருப்பு, வெறுப்பு – கடினமான மனநிலை ஆகியவற்றை
கொஞ்சம் தூரமாகத் தள்ளி வைத்து விட்டு, இலேசான மனநிலையோடு,

அரசியல் சங்கதிகளை அலசலாமே என்று தோன்றியது…. கூடவே மாநில அரசியலையும் கொஞ்சம் அதிகம் விவாதிக்கலாம் என்றும் தோன்றியது….

இந்த யோசனைகளை, அடுத்து வரும் நாட்களில்,
கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்தலாமென்று நினைக்கிறேன்…
வரும் நாட்களில் என் எழுத்தின் போக்கு கொஞ்சம் மாறி இருக்கும்…
புதிய பாணி எனக்கு பிடிபடும்வரை
கொஞ்சம் இப்படி அப்படித்தான் இருக்கும்… நண்பர்கள்
பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்…

வாசக நண்பர்களுக்கு இது குறித்து எதாவது கருத்து தோன்றினால் –
பின்னூட்டங்களில் சொல்லலாம்… நான் மாற்றங்களுக்கு உட்பட்டவன்
தான்.

ஆனால், நான் எதைப்பற்றி எழுதினாலும், எப்படி எழுதினாலும் –
அடிப்படையில் – உண்மை, தரம், நேர்மை ஆகியவற்றிலிருந்து எப்போதும் நழுவ மாட்டேன் – இது இந்த வலைத்தளத்தை துவங்கிய நாளிலேயே எனக்கு நானே எடுத்துக்கொண்ட உறுதிமொழி….. இதனை தொடர்ந்து காப்பாற்ற முயற்சி செய்வேன்….

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
20, நவம்பர் 2018

————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to அமீத்’ஜீ …இந்த தடவை அநியாயத்துக்கு ஏமாந்துட்டாருங்க …!!

 1. Mani சொல்கிறார்:

  எத்தனையெத்தனை வழக்குகள் முளைத்து வந்தாலென்ன ?
  இதுவரை தலீவர் பார்க்காத கேசா ?
  எங்கள் அமீத் அத்தனையையும் ஊதித்தள்ளி விடுவார்;
  இதுவும் போகும் இடம் புல்முளைத்து விடும் பாருங்கள்.

 2. Giri Alathur சொல்கிறார்:

  நாம மட்டுமென்ன பைத்தியக்காரங்களா… இதைப்பத்தி எதையாவது
  எழுதிவிட்டு கோர்ட்டுல போய் நிக்க….மாட்டோம்…ஹா ஹா ஹா ..

 3. Selvarajan சொல்கிறார்:

  // அடிப்படையில் – உண்மை, தரம், நேர்மை ஆகியவற்றிலிருந்து எப்போதும் நழுவ மாட்டேன் – // இந்த வெளிப்படையான தன்மைக்கு தானே … நீங்கள் குறிப்பிடும் இவர்களின் ஆதரவு … // வாசக நண்பர்கள் தானே என் பலமே…!!! // நகைச்சுவை உணர்வும் கைக்கூடும் உங்களுக்கு ….!!!

 4. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Mr.KM, We all know about State politics very well as they are figuring in everyday print media.
  I am only interested in Central politics as they are muted in the print media or partially coming.
  So, pl. write about the same.,

 5. Selvarajan சொல்கிறார்:

  தமிழில் : — // போலி என்கவுன்டர்: அமித் ஷாவுக்கு லஞ்சம்! // https://www.minnambalam.com/k/2018/11/20/97 … புடிச்சுக்கிட்டா… போய் அந்த ” மின்னம்பலம் ” காம் — ஐ புடிச்சுக்கட்டும்…!!!

 6. அறிவழகு சொல்கிறார்:

  ‘மின்னம்பலம்’ blocked.

  தமிழ் இந்து கிடைக்கிறது.

  https://tamil.thehindu.com/india/article25550117.ece

  • Selvarajan சொல்கிறார்:

   நண்பரே …! மின்னம்பலத்தில் இருக்கிறது …பிளாக் ஆகவில்லை …!

   • அறிவழகு சொல்கிறார்:

    ஆமாம்…இரவு முழுவதும் அது திற‌க்கவே இல்லை. இப்பொது சரியாகிவிட்டது.

    நன்றி நன்பரே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.