ராகுல்ஜியை இந்த அளவிற்கு வளர்த்து ஆளாக்கியது யார் ..!!!சத்தீஸ்கரில் நவம்பர் 20-ந்தேதியன்று இரண்டாம்கட்ட தேர்தல்.
தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,
ராகுல் காந்தி நேற்று (நவம்பர் 18) அம்பிகாபுரில் செய்தியாளர்களுக்குப்
பேட்டியளித்திருக்கிறார்…

அங்கே மோடிஜிக்கு சவால் விட்டிருக்கிறார் ராகுல்ஜி….

” பதினைந்தே (15) நிமிடங்கள் போதும்….
15 நிமிடங்களுக்கு மட்டும் என்னை பேச விட்டு –
ரஃபேல் விமான பேரம் பற்றி நான்
நேருக்கு நேர் கேட்கும் கேள்விகளுக்கு
மோடிஜியால் பதில் சொல்ல முடியுமா…?

எங்கே, எந்த இடத்தில் – யார் முன்னிலையில் என்பதையெல்லாம்
மோடிஜியே தீர்மானிக்கட்டும்.

என்ன பேசுவேன் என்பதையும் முன் கூட்டியே இப்போதே
கூறி விடுகிறேன்… எப்படி வேண்டுமானாலும் தயார் செய்துகொண்டு
வரட்டும்…

இந்த விவாதத்தின்போது, அனில் அம்பானி, பிரான்ஸ் அதிபர்,
ஹெச்ஏஎல் ஆகியவை குறித்த சின்ன சின்ன கேள்விகளை வைத்து
மட்டுமே விவாதிக்கப்படும்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, பதில் சொல்ல மோடிஜி தயாரா…?”

– ராகுல்ஜி செய்தியாளர்களை வைத்துக்கொண்டு மோடிஜிக்கு
சவால் விடுத்திருக்கிறார்…

என்ன செய்யப்போகிறார் மோடிஜி…?
சவாலை ஏற்பாரா…?

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி –
” கடந்த 15 ஆண்டுகளாக என்னைக் கவனித்தவர்களுக்கு நன்றாக
தெரிந்திருக்கும்…நான் எப்போதுமே – மோடிஜியை போல்
பொய்யான வாக்குறுதிகளை தந்ததில்லை” என்றார்.

தொடர்ந்து ” விவசாயிகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய
வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் –

மோடிஜி – அம்பானிகள், அடானிகள் – போன்ற பணக்கார
தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்கிறார்…

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அடுத்த
பத்தே (10 ) நாட்களில் விவசாயிகளின் ஒட்டு மொத்த கடன்களும்
தள்ளுபடி செய்யப்படும்….

– 15 லட்சம் ரூபாய் ஒவ்வொரு குடிமகனின் பாக்கெட்டிலும்
போடப்படும் என்கிற மாதிரி இது காற்றில் பறக்கும்
பொய் வாக்குறுதி இல்லை…

———————————–

ராகுல்ஜியின் சவால்களை நேரில் பார்த்த செய்தியாளர்களும் சரி,
இதை ஒளிபரப்பிய ஒன்றிரண்டு தொலைக்காட்சி சேனல்களில் பார்த்த
பொதுமக்களும் சரி, ஆச்சரியத்தில் திறந்த வாயை இன்னமும்
மூடவில்லையாம்…!!!

2014 தேர்தலின்போது – அர்னாப் கோஸ்வாமியின் பேட்டியில் –
சமர்த்தாக அம்மா சொன்னதை அப்படியே ஒப்புவித்துக் கொண்டிருந்த
ராகுல் என்னும் குழந்தையை நம்மால் இன்னும் மறக்கமுடியவில்லை…!!!

அப்படிப்பட்டவரை இப்படிப்பட்டவர் ஆக்கிய பெருமை –
மோடிஜிக்கே சவால் விடும் அளவிற்கு –
வளர்த்து ஆளாக்கிய பெருமை – உண்மையில் யாரைச் சாரும்…?

என்ன செய்தார் நாலரை ஆண்டுகளில்…?
மோடிஜி கிழித்தது எதை…? என்று கேட்பவர்களுக்கு
இதோ கண்ணெதிரே நிற்கின்ற இந்த சான்று போதாதா…?

மோடிஜியின் நாலரை ஆண்டுக்கால ஆட்சி –
ராகுல் காந்தி போன்ற ஒன்றுமறியாத அப்பாவிக் குழந்தையைக் கூட
சவால் விட்டு விவாதத்திற்கு அழைக்க வைத்து விட்டதே ..


– இது போதாதா …? –

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ராகுல்ஜியை இந்த அளவிற்கு வளர்த்து ஆளாக்கியது யார் ..!!!

 1. R.Gopalakrishnan சொல்கிறார்:

  KAI PUNNUKU KANNADI THEVAIYA?

 2. அறிவழகு சொல்கிறார்:

  ‘கை’குழந்தை கூடவெல்லாம் நாங்க வச்சிக்க மாட்டோம். எங்களுக்கு இருக்கவே இருக்கு ம‌ங்கிபாத் ச்சே.. மன்கிபாத்.

  ஹி…ஹி…

 3. Ravichandran சொல்கிறார்:

  Rahul Gandhi is the country’s ‘biggest buffoon’: K Chandrasekhar Rao

  https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/rahul-gandhi-is-the-countrys-biggest-buffoon-k-chandrasekhar-rao/articleshow/65708223.cms

  Let us not take this buffoon seriously. May be like KCR, we all can have a sound lough at his expense for some minutes and carry on with our work!! Thats all.

 4. Mani சொல்கிறார்:

  Ravichandran

  the Biggest Baffooon of the day is Mr.K Chandrasekhar Rao HIMSELF and
  those who admire him LIKE YOU. ONLY FOOLS will like KCR’s talk.

 5. புரட்சி தமிழன் சொல்கிறார்:

  புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு யாருக்கு தெரியும். கடைசியில் ராகுல் காந்தியெல்லாம் மிரட்டும் அளவுக்கு ஆயி போச்சு.

 6. அறிவழகு சொல்கிறார்:

  ராகுலின் சவால் சாதாரண‌மாக கடந்து சென்றுவிடக் கூடியதல்ல..

  அவர் ரஃபேல் விமான பேரம் பற்றி மட்டும் நேருக்கு நேர் பெச அழைக்கவில்லை.

  இந்த நாட்டின் பிரதமர் அவர்களை ‘பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்’ என்று கூறியது மட்டுமல்லாமல் கடந்த 15 ஆண்டுகளாக தான் எப்போதுமே பிரதமர் போல் பொய்யான வாக்குறுதிகளை தந்ததில்லை என்றும் சொல்லியுள்ளார்.

  இதற்கு, 18 ந் தேதி விடுத்த அறைகூவலுக்கு இன்று வரை 56 இஞ்ச் மார்பளவு கொண்ட எம் தலைவர் அடங்கி ஒடுங்கி கிடப்பது….

  இந்த மாதரி விஷயங்கள் ஊடகங்களை மிரட்டி வெளிவராமல் செய்துவிட்டால் அதிகம் பேசப்படாமல் செய்துவிட்டால் போதுமானது என்று கருதினால்….

  பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று கருதிக் கொள்வதற்கு ஒப்பானது.

  2019 பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க மக்களின் அதிருப்தியும் கோபமும் தெரியவரும் பொழுது சில ஊடகங்களாவது நடு நிலை வேஷம் போட முன் வரக்கூடும். அப்போது எல்லா வண்டவாளங்களும் வெளிவரக்கூடும்.

  பார்க்கலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.