சுப்ரீம் கோர்ட் முன்பு 2 முக்கிய குஜராத் வழக்குகள் விசாரணைக்கு வந்துள்ளன …!!!


கீழே தரப்பட்டிருப்பது செய்தி மட்டுமே –

சுப்ரீம் கோர்ட் 2 முக்கிய குஜராத் வழக்குகளை விசாரணைக்கு
ஏற்றிருக்கிறது… இரண்டும் திரு.நரேந்திர மோடி அவர்கள் குஜராத்
முதலமைச்சராக பணியாற்றிய காலம் சம்பந்தப்பட்டது.

ஒரு வழக்கு டிசம்பர் 12-ந்தேதியிலும், மற்றொரு வழக்கு ஜனவரி
3-வது வாரத்திற்கும் விசாரணைக்கு தேதி குறிக்கப்பட்டிருக்கிறது.

முதல் வழக்கை கிறிஸ்துமஸ் விடுமுறை முடியும் வரை
தள்ளிப்போட, அரசு தலைமை வழக்கறிஞரால் விடுக்கப்பட்ட
வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்கவில்லை…

வழக்கு விவரங்கள் வெளியிடப்படக்கூடாது என்று கூட, அரசு
வழக்கறிஞரால் வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்குகளைப்பற்றிய செய்திகளை இங்கு தருவதன் காரணம் –

இதிலெல்லாம் உடனடியாக தீர்ப்புகள் வந்து விடும்
என்பதற்காக அல்ல… என்ன இப்போது 2018 தானே நடக்கிறது –
2002 வழக்குக்கு அதற்குள் என்ன அவசரம்..
இவை முடிவிற்கு வர இன்னும் 10 ஆண்டுகள் கூட ஆகலாம்…

இந்த மாதிரி சில வழக்குகள் இன்னமும் உயிரோடு இருக்கின்றன என்று
வாசக நண்பர்களுக்கு தெரியப்படுத்த தான் …..

—————————————————————

22 போலி என்கவுண்டர் வழக்கை
விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்..

மோடிக்கு நெருக்கடி! Monday, December 3, 2018, 20:19

22 போலி என்கவுண்டர் வழக்கை
விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்-
குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது
நடைபெற்ற 22 போலி என்கவுண்டர் வழக்குகளை
உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

மூத்த பத்திரிகையாளர் பி.ஜி.வர்கீஸ் மற்றும் பாடலாசிரியர்
ஜாவித் அக்தர் ஆகியோர் இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கை
உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளதால் அரசியலில்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2007ம் ஆண்டில் மனுதாரர்கள், வர்கீஸ் மற்றும் ஜாவித் அக்தர் ஆகிய இருவரும், இந்த மனுவை தாக்கல் செய்தனர். 2002 மற்றும் 2006ம்
ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் குஜராத்தில் 22 போலி என்கவுண்டர்கள் நடைபெற்றதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

21 போலி என்கவுண்டர்கள் என மனுவில்
குறிப்பிட்டிருந்தார் வர்கீஸ்.
2014ல் வர்கீஸ் மரணமடைந்த நிலையில்,
ஜாவித் அக்தர், அந்த மனுவில் தன்னையும் இணைத்துக்கொண்டு,
22 போலி என்கவுண்டர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

2012ம் ஆண்டு, முன்னாள் நீதிபதி ஹெச்.எஸ்.பேடி தலைமையில், இதுகுறித்து ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் ஒரு குழுவை அமைத்தது.

அந்த குழு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை
தாக்கல் செய்துவிட்ட நிலையில், இன்று தலைமை நீதிபதி
ரஞ்சன் கோகாய் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷ்கர் மேத்தா, குறுக்கிட்டு, பேடி வழங்கிய அறிக்கை அம்சங்களை பொது வெளியில் வெளியிட கூடாது என கேட்டுக்கொண்டார். இந்த வழக்கை கிறிஸ்துமஸ் விடுமுறைமுடிந்த பிறகு எடுத்துக்கொள்ளவும் கோரிக்கைவிடுத்தார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கை டிசம்பர்
12ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதற்குள்ளாக, பேடியின் அறிக்கை தொடர்பாக மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். போலி என்கவுண்டர்கள் நடைபெற்றதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள காலகட்டத்தில் குஜராத்தில், நரேந்திர மோடி முதல்வராக பதவி வகித்து வந்தார் என்பதால் இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும், முக்கியத்துவம் பெறுகிறது.

( https://tamil.oneindia.com/news/delhi/sc-hear-pleas-on-22-fake-encounters-gujarat-when-modi-was-cm-335628.html )

————————————————————————-

மாலை 7, திங்கள், 3 டிச 2018
கோத்ரா கலவரம்: ஜனவரியில் விசாரணை!

கோத்ரா கலவரத்திற்கும் நரேந்திர மோடிக்கும் தொடர்பிருப்பதாக
தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

2002ஆம் ஆண்டில் நடந்த கோத்ரா கலவரத்திற்கும் அப்போதைய
குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும் தொடர்பில்லை
என சிறப்பு விசாரணைக் குழு வழங்கியிருந்த நற்சான்றிதழை எதிர்த்து
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்த விசாரணையை
ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்திற்கு உச்ச நீதிமன்றம்
ஒத்திவைத்துள்ளது.

இந்த மனுவை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான எஹ்சன் ஜஃப்ரியின் மனைவியான ஜகியா ஜஃப்ரி தாக்கல் செய்துள்ளார்.
கோத்ரா கலவரத்தில் உயிரிழந்த 69 நபர்களில் எஹ்சன் ஜஃப்ரியும் ஒருவராவார்.

இந்த மனுவில், 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும், 2002 மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் பெரியளவில் சதித்திட்டம் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறப்பு விசாரணைக் குழுவின் தீர்மானத்தை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்து பிறப்பித்த உத்தரவையும் அவர் தனது மனுவில் எதிர்த்துள்ளார்.

2002ஆம் ஆண்டில் நடந்த கலவரத்திற்கும் நரேந்திர மோடி உட்பட 58 நபர்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. ஜகியா மனுவில் குற்றம்சாட்டியிருப்பது போல கலவரத்தின் பின்னணியில் பெரிய சதித் திட்டம் ஏதும் இல்லை எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

எனினும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு நீதிபதி சோனியா கொகானி அனுமதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

( https://minnambalam.com/k/2018/12/03/65 )

.
——————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to சுப்ரீம் கோர்ட் முன்பு 2 முக்கிய குஜராத் வழக்குகள் விசாரணைக்கு வந்துள்ளன …!!!

 1. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! மேடம் ஜெயலலிதா இன்று இல்லை அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் வரப்போகிறது — என்னடா இவன் இதையெல்லாம் இப்போ ” கிறுக்கிக்கிட்டு ” என்று கூட தாங்கள் நினைக்கலாம் — ஆனால் இன்றைய இடுகைக்கு பொருந்தும் என்று எண்ணி பழைய பதிவு ஒன்று ஞாபகத்திற்கு வந்தது … அதில் விலாவாரியா பல விவரங்கள் அலசி ஆராயப்பட்டு இருந்தன … அதில் மேடம் ஜெயலலிதா பற்றியும் இருந்ததால் … அது : —- // மாயா கோட்னானியை -விடுதலை செய்தது ஏன்..? நேர்மைத் துணிவிருந்தால் தமிழக பாஜக கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்…….//
  Posted on ஒக்ரோபர் 6, 2014 by vimarisanam – kavirimainthan https://vimarisanam.wordpress.com/2014/10/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/ .. மாயா … மாயா … ? உங்க டயலாக் தான் ….!!!

  • புதியவன் சொல்கிறார்:

   செல்வராஜு சார்… இதனை இப்போதுதான் படித்தேன். பழைய இடுகைகள் மூலம் ஒருவரது கன்சிஸ்டெண்ட் ஸ்டாண்ட் தெரியவரும்.

   தமிழக பாஜக வை நினைவுபடுத்தி எனக்கு டென்ஷன் உண்டாக்கிவிட்டீர்கள். அவங்களுக்கு தமிழக நலன் என்று ஒன்று கிடையவே கிடையாது. அவங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தங்கள் தங்கள் பதவிகளைக் காத்துக்கொள்ள ‘ஜால்ரா’ அடிப்பதுதான்.

 2. புதியவன் சொல்கிறார்:

  முழுவதும் தெரியாத விஷயத்தில் கருத்துச் சொல்வது சரியா வராது. ஆனால் நீதி நிலைநாட்டப்படணும். உண்மையாகவே தவறுகள் நடந்திருந்தால், அந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் (சட்டத்தை ஏமாற்றினாலும் இயற்கையை ஏமாற்றமுடியாது.)

 3. அறிவழகு சொல்கிறார்:

  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மாறிய பிறகு இதுவெல்லாம் நடக்கிறது. இவர் மாறும் வரை இழுத்தடித்து பிறகு ஒன்று இல்லாமல் செய்ய எல்லா வித்தைகளையும் கற்றவர்கள் அவர்கள். இதில் அவர்கள் கவலை படவோ நாம் சந்தோஷப்படவோ ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.

  • அறிவழகு சொல்கிறார்:

   தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களிடம் யாராவது ஒரு விசயத்தை எச்சரிக்கையாக சொல்லி வைத்தால் நல்லது.

   “திருமணம் கிருமணம் என்று யாராவது அழைத்தால் போய் விடாதீர்கள் ஐயா”

   நீண்ட காலம் நீங்கள் நல்லாயிருக்கனும் ஐயா.

 4. Mani சொல்கிறார்:

  அறிவழகு அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன் –

  //தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களிடம் யாராவது ஒரு விசயத்தை எச்சரிக்கையாக சொல்லி வைத்தால் நல்லது.

  “திருமணம் கிருமணம் என்று யாராவது அழைத்தால் போய் விடாதீர்கள் ஐயா”

  நீண்ட காலம் நீங்கள் நல்லாயிருக்கனும் ஐயா.//

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.