மோடிஜி திட்டம் …எப்படி மோசடி…ஜி திட்டம் ஆனது …?இந்த ஃப்ராடு லெட்டரை பெற 1000 + ரூபாய் மோசடியாக வசூலிக்கிறது ஒரு குஜராத் கம்பெனி….

சாதரண மனிதர் செய்தால் மோசடி…
ஆனால், ஒரு பெரிய மனிதர் செய்தால்…?
அதற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டுமே …
அதான் மோசடி…………..ஜி…!!!

அதிசயம்…. ஆனால் உண்மை.
மோடிஜி கொண்டு வந்திருக்கும் ஒரு திட்டத்தில்
உள்ள மோசடிகளை –
தினமலர் வலைத்தளமே
வீடியோ மூலம் வெளிப்படுத்துகிறது….

நமக்கு வேலை மிச்சம்…
கஷ்டப்பட்டு கட்டுரை எழுத வேண்டாம்…
மிக விவரமாக, மோடிஜியின் 59 நிமிட லோனில் உள்ள
மோசடியைப்பற்றி விளக்குகிறது இந்த வீடியோ….

மோடிஜியின் திட்டத்தில் மோசடிகள் இருப்பதில் நமக்கு
வியப்பு ஏதும் ஏற்படவில்லை…

ஆனால், இதை தினமலர் வலைத்தளம்
expose செய்வது தான் –
வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

வாழ்க அவர்களது சமூக ஸேவை….!!!

….

.
———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to மோடிஜி திட்டம் …எப்படி மோசடி…ஜி திட்டம் ஆனது …?

 1. அரவிந்தன் சொல்கிறார்:

  எதிர்க்கட்சிகள் இதை எப்படி கவனிக்காமல் விட்டன ?
  மிகப்பெரிய மோசடித்திட்டம் இது.
  தொலைக்காட்சிகள் எல்லாம் bjp பாக்கெட்டுக்குள் போய் விட்டன.
  இல்லையென்றால் இவ்வளவு பெரிய மோசடியைப்பற்றி
  பெரிய அளவில் விவாதிக்காமல் இருக்குமா?

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! காதுல பூ …? இதென்ன பிரமாதம் … இதை விட பெருசான ஒன்று இருக்குது — வங்கியில் சென்று ‘ஐயா.. நான் ஒரு விவசாயி பயிர் செய்ய வெறும் 2 லட்சம் கடன் வேண்டும்’ என்று கேட்டுப்பாருங்கள். என்னவோ, அந்த மேலாளரின் சம்பளத்தைக் கேட்பதைப் போல எரிந்து விழுவார். விவசாயக் கடன் வாங்குவது என்பது நம் ஊர் வங்கிகளில் ஒரு அவமானகரமான செயலாக வங்கிகள் நினைப்பது , எரிந்து விழுவது பல முறை அலைய விடுவது , , இழுத்தடிப்புகளைக் கடந்து வேறு வகை புரிதல்களுக்கு பின் கணக்கில் கடன் தொகை வரவு வைக்கப்படும் . … என்பது தான் நடைமுறை இயல்பு …. !

  ஆனால் — நம்புங்கள். கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும், இந்தியா முழுவதும் ஒரு ‘’விவசாயி’க்கு 95 கோடி ரூபாய் வீதம் 58,561 கோடி ரூபாயை ” விவசாய கடனாக வழங்கியிருக்கின்றன இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்….. இந்த மாபெரும் தொகையை ” 615 விவசாயிகள் ” விவசாயக் கடனாக பெற்றிருக்கிறார்கள். ’திவயர்’ இணையதளம், இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்ற தகவல்கள் இதை வெளிப்படுத்துகின்றன…..

  இந்த 95 கோடி ரூபாய் கடன் வாங்குகிற ஒருவர் விவசாயியா என்பது தான் நாம் யோசிக்க வேண்டிய அடிப்படையான கேள்வி…. ! அம்மாம் பெரிய தொகையை கடனாக பெறுபவர் எத்தனை ஏக்கருக்கு சொந்தக்காரராக இருக்கணும் — ஒரு சாதாரண விவசாயி ஒரு லட்சம் கடனையே திருப்பி செலுத்த முடியாமல் ” ஜப்தி ” போன்ற அடாவடி நடவடிக்கைகளுக்கு பயந்து தற்கொலை என்கிற நிலையில் — இந்த 95 லட்சம் விவசாய கடனாக பெற்ற விவசாயிகள் திருப்பி செலுத்துவார்களா … ? என்பதை கேட்டல் — யார் அவர்கள் என்று — வினா எழுப்பினால் — தேச விரோதி — மோடிஜி எதிர்ப்பாளர் என்று முத்திரைக் குத்துவது சர்வசாதாரண மாகிவிட்டது — அப்படித்தானே …? 95 லட்சம் கடன் பெற்ற விவசாயிகள் வாழ்க …!!!

  // Exclusive: Agricultural Loans Worth Rs 59,000 Crore Went to 615 Accounts in One Year // https://thewire.in/agriculture/modi-govt-gave-agricultural-loans-worth-rs-59000-crore-to-615-accounts-in-one-year ஏதோ நல்லது நடந்தால் சரி …. ! சிறு குறு தொழில் கடன் பற்றி —
  { 59 நிமிடத்தில் கடன் பெறலாம் என்று தமிழிசை கூறியது போல } விலாவாரியா விளக்கிய தினமலருக்கு நன்றி ….!!!

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இங்கேயும் பலன் பெற்ற முதல் விவசாயி Reliance Fresh தான்.
  திருட்டுப்பயல்கள்….
  நான் எழுதி எழுதி அலுத்து விட்டேன்.
  நாலரை வருட ஆட்சிக்கு பிறகு ரிப்போர்ட் கார்டுடன் மக்கள் முன் வருவேன் என்று
  வாக்குறுதி கொடுத்திருந்தார். அந்த ரிப்போர்ட் கார்டில் இதெல்லாம் சேருமா …?

 4. புதியவன் சொல்கிறார்:

  நம்ம நாட்டுக்கு ஸ்டிராங் ஆன இரண்டு தேசியக் கட்சிகள் இல்லைனா மூன்று கட்சிகள் தேவை. இல்லைனா, நாடு மிக மோசமான நிலைமைக்குப் போய்விடும். இந்த நிலைமை வந்ததற்கு மக்கள்தான் முழு முதற் காரணம். எப்போ அவங்க காங்கிரசை விட்டு விலகி மாநிலக் கட்சிகளை ஆதரிக்க ஆரம்பித்தாங்களோ அப்போவே நாடு மோசமான பாதையை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது. அதன் பிறகு தடி எடுத்த மாநிலக் கட்சிகள் எல்லாம் தண்டல்காரனாக மாறி கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டன.

  ராகுல் காந்தியை ‘குழந்தை’ என்று எழுதுபவர்கள், நாட்டுக்கு மிகுந்த தீமை செய்கிறார்கள். காங்கிரசை பலவீனப்படுத்தினால், நாடு சரி செய்ய முடியாத அளவு மோசமாகிவிடும்.

  1 மணி நேரத்தில் வங்கிக்கடன் போன்ற எத்தனை எத்தனை கொள்ளையடிக்கும் திட்டங்கள் இருக்கிறதோ. இன்னொன்று, ‘விவசாயி’ என்ற முறையில் வருமான வரிக்குக் கணக்குக் காண்பிப்பவர்கள் அனைவரும் (இதில் 90% காசு சேர்ப்பவர்கள் சரத்பவார், அமிதாப்பச்சன் போன்ற அரசியல்வாதிகள்தான்) ப்ராசக்யூட் செய்யப்படவேண்டும். கருணாநிதியின் சகோதரர்களான சரத்பவார், சந்திரபாபு நாயுடு, லாலு பிரசாத் யாதவ் போன்றோரெல்லாம் நாட்டிற்குப் பிடித்த கேடு.

  ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டுடன் வரட்டும். அப்போது அவர்கள் தெரிந்துகொள்வார்கள், யாருக்காக ஆட்சி நடத்தினோம் என்று.

 5. அரவிந்தன் சொல்கிறார்:

  ப்ராக்ரஸ் ரிப்போர்ட்’டில் இதெல்லாம் வராதே சார். அதானே பிரச்சினை.
  தேர்தல் நேரத்தில் ராமர் கோயில், பாகிஸ்தான் அத்து மீறல் வகையறா வகையறா தானே முன்னிறுத்தப்படும் ?

  • புதியவன் சொல்கிறார்:

   ராமர் கோவிலா? இதை நான் 1989லிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். அப்போ, 3 செங்கல் தானமாகத் தாரீர் (3ரூபாய்னு ஞாபகம் தவறாவும் இருக்கலாம். செங்கலாத் தாங்கன்னு லாரிகள் வந்தது) அப்படீன்னு முழக்கம். அதுக்கப்புறம் ஏகப்பட்ட நிகழ்வுகள்.

   இனிமேலும் ‘ராமர் கோவில்’ என்று சொன்னா, அவங்க கூட மேடையிலேயே இருக்கறவங்க சிரிக்காம இருந்தாச் சரிதான்.

 6. Selvarajan சொல்கிறார்:

  அய்யா .. ! இந்த ஆண்டு // பட்ஜெட் ஓட்டைகள்… தினமணி தலையங்கம்…. !!! //
  Posted on பிப்ரவரி 5, 2018 by vimarisanam – kavirimainthan https://vimarisanam.wordpress.com/2018/02/05/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/ —- என்று ஒரு இடுகை தளத்தில் வந்தது — ஓட்டைகள் கொஞ்சமாவது அடைக்கப் பட்டிருக்கிறதா ? — உங்கள் பார்வையில் — !!!

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  செல்வராஜன்,

  ஆக்கப்பொறுத்தது…. ஆறப்பொறுப்போம்.
  இதோ – ஜனவரி 1-ந்தேதி, அருண் ஜெட்லிஜி பாஜகவின்
  5-வது – தேர்தலுக்கு முந்திய கடைசி – பட்ஜெட்டை
  சமர்ப்பிக்கப்போகிறார்.

  அதில் எத்தனை சாதனை விவரங்கள் வெளிவருகின்றன என்று பொறுத்து பார்ப்போமே….ஏகப்பட்ட ரிக்கார்டுகள் படைத்து விட்டதாக புள்ளி விவரங்களை அள்ளிவீசுவார். 10 வருடத்திற்கான பழைய GDP -யையே
  மாற்றியமைத்து சாதனை புரிந்திருக்கிறார்களே…!

  ஆனால் -ஜெட்லிஜியின் பட்ஜெட் சாதனைகளைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், டாக்டர் சு.சுவாமியின் விமரிசனத்திற்கு காத்திருக்க வேண்டும்… 🙂 🙂

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 8. R.Srinivasan சொல்கிறார்:

  This must be reviewed after 1 year to find out who got loans and how much returned and how much not returned and how much NPA after some years. who got benefits and how much.

 9. அறிவழகு சொல்கிறார்:

  “நானும் துண்ண மாட்டேன். யாரையும் துண்ணவுட மாட்டேன்”

  இந்த மாதிரி கோசமெல்லாம் இப்ப நடந்து கொண்டிருக்கின்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் காணவே காணோம்.

  காங்கிரஸ்….காங்கிரஸ்….காங்கிரஸ்…தான்.

  வேறு எதுவும் பேச வழி இல்லை.

  2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் ரொம்ப கஷ்டம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.